Monday, September 10, 2007

ஆண் GAL
ஆயிரம் தான் சொல்லுங்க இந்த பொண்ணுகளுக்கு இருக்குற மவுசு இந்த பசங்களுக்கு கெடையவே கெடையாதுங்க. பாவங்க இந்த பசங்க. என்னதான் ரவுசு பண்ணிகிட்டு டோல்லடிச்சுகிட்டு லோலாக்கை பார்த்துகிட்டு அலைஞ்சாலும் ஒரு பொண்ணுக்கு இருக்குர influence ஒரு பையனுக்கு கெடைகிறது இல்லை ! படிக்கிற இடத்திலே இருந்து வேலை செய்யுர இடத்திலே வரைக்கும் பையனா பொறந்தா என்ன கஷ்டம் என்னா கஷ்டம் ??

அதுக்கு காரணம் இந்த பசங்களே தாங்க. உங்களுக்கு கோடிங்ல ஏதோ கொஞ்சம் டவுட்டுன்னு இந்த பசங்களை போய் கேக்கறீங்கன்னு வைங்க. “ அட இது தெரியாதா? போடா போய் இந்த டாக்குமெண்டைப்ப படின்னு பொத்தாம் பொதுவா ஒரு மார்கமா உங்களுக்கு ஒரு national higway ய காட்டிட்டு போய்டுவாய்ங்க. டேய் இதை நீதான் படிச்சிட்டயேடா சொல்லி கொடுக்க ஒரு 5 நிமிசம் ஆகுமான்னு மனசுக்குள்ளேயே குமுறிகிட்டு அலைய வேண்டியதுதான். இதே கேள்விய ஒரு பொண்ணு வந்து “ இந்த கோடிங்க கொஞ்சம் சொல்லிக் கொடுங்களேன் ப்ளீஸ்! “ ன்னு ஹஸ்கி வாய்ல treble ஏத்தி கேட்டுச்சுன்னு வைங்க அவ்ளோதான் நம்ம ஆளு சும்மா ரம்மு குடிச்ச குதிரை குட்டி கணக்கா இருக்குற firewall ஐ எல்லாம் பேத்துகிட்டு கூகுள், அல்டாவிஸ்டான்னு சும்மா அலாஸ்காவுக்கே போய் ‘கோடிங்’க எடுத்துடுவாய்ங்க. ஏம்பா கண்ணுகளா இப்படி வாழமட்டையிலே கால் வச்ச மாதிரி தொபுக்கடீர்னு இந்த பொண்ணுங்க சிரிப்ப பார்த்து பல்ட்டி அடிக்கறீங்க? அட இதையே ஒரு பையன் கேட்டா மட்டும் ஏண்பா இப்படி வெளகெண்னைய லிட்டர் லிட்டரா குடிச்சவன் மாதிரி மூஞ்சை வச்சுக்கறீங்க ?

அப்புறம் இந்தப் பொறந்தநாள் கலாட்டா இருக்கே !! ஒரு பொணுக்கு பொறந்த நாளுன்னா போதும். சும்மா ஆளாளுக்கு முந்துன நாளுல இருந்தே சும்மா கரகாட்டம் ஒயிலாட்டம்னு சலங்கைய கட்டிகிட்டு சும்மா மாங்குயிலே பூங்குயில்லேன்னு ஜல்லு ஜல்லுன்னு குத்தைப்போட்டாய்ங்கன்னா சும்மா நாளுநாளைக்கு வாழ்த்தறேன்னு தேத்தறேன்னு சும்மா வளைஞ்சு நெளிஞ்சு குத்தைப்போடுவாய்ங்க பாருங்க ஆஹா என்னா ஒரு வேகம் என்னா ஒரு அக்கரை தெரியும் தெரியுமா?? பயபுள்ளைங்க ஓடிப்போயி கேக்கு வாங்கி வெட்டறது என்னா? ஆள் சைஸுக்கு க்ரீட்ங்ஸ் கார்ட் வாங்கி கொடுக்கறது என்னா? சும்மா கெடாவெட்டி பொங்கல வச்சு பொண்ணுங்க மனசுல பட்டறையப்போட சும்மா பொலபொலன்னு இந்த பசங்க பண்ணுற கலாட்டா இருக்கே என்னத்தை சொல்ல? இதுவே ஒரு பையனுக்கு பொறந்த நாளுன்னா டேய் மாப்ளே ஹாப்பி பர்த்டேடான்னு கைய மட்டும் கொடுத்துட்டு எங்கடா குவாட்டர்ன்னு காலைல இருந்தே மெதக்க ஆரம்பிச்சுசுடுவாய்ங்க ! சாயங்காலம் வந்துச்சோ இல்லையோன்னு சும்ம ஊத்து ஊத்துன்னு உத்திகிட்டு திரும்ப மப்பிலே தங்களோட மன்மதலீலைகளை அரங்கேத்தி விடுர அலப்பரை இருக்கே ??? ஏம்பா கண்ணுகளா இந்த பொண்ணுங்கன்னா மட்டும் கேக்கை தூக்கிகிட்டு பேக்கு மாதிரி காவடி எடுக்குறீயளே அதையே பசங்கன்னா மட்டும் அவனுகளை ஊத்தி ஊத்தி கொடுக்கற ‘பார்டெண்டரா’ பக்குறீயளே ஏன்பா??

சரி ஏண்டா நம்ம ஆண்குலங்கள் எல்லாம் இப்படி பொண்ணுங்க முன்னாடி மண்ணைப் பொராண்டிகிட்டே இருக்காய்கன்னு நானும் இருக்குற கொஞ்சம் நஞ்ச மூளைய கசக்கிட்டு ரோசணை பண்ணிப்பார்த்தா..

டிரிங் டிரிங் டிரிங் ...
அட என் மொபைல் கூப்பிடர சத்தம் உங்களுக்கு கேக்குதில்ல? யாரு??...

அட இருங்கப்பூ நம்ம ப்ரெண்டு ஜென்சி பேசுது. மத்தியானம் பேசுனது, பாருங்க முக்கியமான விசயத்தை பத்தி எழுதிகிட்டு இருக்குறப்போ இந்த லூசு வேற போனைப்போட்டு உயிரை எடுக்குது, பேசாட்டி அது வேற கோச்சுக்கும். அப்புறம் அதுக்கு கேட்பரீஸ் வாங்கித்தந்து மாளாது. இருங்க பேசிட்டு வாரேன் சரியா ?? ஹிஹிஹிஹிஹி....

" சொல்லுடா என்ன விசயம்? "
.................................

" அட ஒண்ணும் முக்கியமான வேலை ஒண்ணும் பண்ணலைம்மா நீ பேசு "

40 பேர் வளைச்சு வளச்சு ஜொள்ளிருக்காங்க:

said...

I am the firstuu...

said...

one important work has come so I will read the post later bye bye...

said...

//" அட ஒண்ணும் முக்கியமான வேலை ஒண்ணும் பண்ணலைம்மா நீ பேசு //

நம் இனமடா நீ!

ஒரு முக்கியமான வேலை இருக்கு முடிச்சுட்டு வரேன்..இல்லனா போன் பண்ணி சமாதானம் பண்ணனும். ....

;-))))

said...

இப்படி அக்குவேற ஆணிவேறயா பிரிச்சு மேஞ்சுப்புட்டீங்களேண்ணே :)))

said...

I enjoyed it very much. You are 100% correct.That is a life I guess.

Excellent.

Ravi

said...

முடிஞ்சா அந்த போன் நம்பர நம்மளுக்கும் குடுக்கிறது :-)

said...

அதுக்குப்பேருதாங்க வயசுக்கோளாறு. தப்பில்ல‌

said...

சிம்பு இல்லை என்கிற தைரியம் தான் இந்த தனுசுக்கு. போட்டோவை பார்க்கவும்.

said...

எல்லாம் விதி :(

said...

அருமையா சொல்லியிருக்கீங்க :))

தேசிபண்டிட்ல இணைத்துள்ளேன் நன்றி

http://www.desipundit.com/2007/09/11/aangal/

said...

//நம் இனமடா நீ!

ஒரு முக்கியமான வேலை இருக்கு முடிச்சுட்டு வரேன்..இல்லனா போன் பண்ணி சமாதானம் பண்ணனும். ....//

ரிபீட்...டேய்

மங்களூர் சிவா

said...

// இம்சை said...
I am the firstuu... //

வாங்க இம்சை:))) சீக்கிரம் வாங்க !! :))

said...

// நாகை சிவா said...
//" அட ஒண்ணும் முக்கியமான வேலை ஒண்ணும் பண்ணலைம்மா நீ பேசு //

நம் இனமடா நீ!

ஒரு முக்கியமான வேலை இருக்கு முடிச்சுட்டு வரேன்..இல்லனா போன் பண்ணி சமாதானம் பண்ணனும். ....

;-)))) //

சிவா வா! மொபைலோடு வா! வேலைய முடிச்சிட்டு வா ! சமாதன்னப்புறாவை பறக்கவிட்டு வா !! :)))

said...

// கப்பி பய said...
இப்படி அக்குவேற ஆணிவேறயா பிரிச்சு மேஞ்சுப்புட்டீங்களேண்ணே :))) //

வாங்கண்ணா கப்பி :))))
அட இப்படியெல்லாம் சூடேத்திவிடாதிங்கப்பூ :)))))

said...

//I enjoyed it very much. You are 100% correct.That is a life I guess.

Excellent.

Ravi //

வாங்க ரவி :)))
ரொம்ப தேங்ஸுங்கோ பேட்டைபக்கம் வந்ததுக்கு :)))

said...

//Appaavi said...
முடிஞ்சா அந்த போன் நம்பர நம்மளுக்கும் குடுக்கிறது :-) //

ஆஹா அப்பாவின்னு பேரை வெச்சுகிட்டு பேச்சைப்பார்த்தா அடப்பாவி ரேஞ்சுக்கு இருக்குதேங்கண்ணா :))))

said...

//சின்ன அம்மிணி said...
அதுக்குப்பேருதாங்க வயசுக்கோளாறு. தப்பில்ல‌ //

வாங்க சின்ன அம்மிணி :))))
அட என்னாங்க இது வித்தியாசமா ஒரு பேரு !!! வயசுக்கோளாருன்னா சொல்லுறீய?? ஆனா என்ன வயசு ஆனாலும் இந்த கோளாரு இருக்குங்களே அம்மிணி என்ன சொல்லறீங்க அதைப்பத்தி?? ;))))))

said...

//Dubukku said...
அருமையா சொல்லியிருக்கீங்க :))

தேசிபண்டிட்ல இணைத்துள்ளேன் நன்றி

http://www.desipundit.com/2007/09/11/aangal/ //

ஆஹா வாங்க டுபுக்கு வாங்க :))))
அட இப்பயெல்லாம் நம்மளை பத்டி சொல்லி ஆனந்த கண்ணீரை தாரை தாரையா விட வைக்கிறியளே :)))) நன்றி !!

said...

//Anonymous said...
சிம்பு இல்லை என்கிற தைரியம் தான் இந்த தனுசுக்கு. போட்டோவை பார்க்கவும். //

அட என்னாங்க அதன் முடிஞ்சு போயி அம்மணி இப்போ எந்த கமிட்மெண்டும் இல்லாமதானெ இருக்குறாவ?? விடுங்க பார்த்துட்டு போவட்டும் :)))

said...

//கோபிநாத் said...
எல்லாம் விதி :( //

வாங்க கோபி :)))
என்னா இப்படி சொல்லிபுட்டு சோகத்தை புழியறீங்க?? ;)))))

said...

//mglrssr said...
//நம் இனமடா நீ!

ஒரு முக்கியமான வேலை இருக்கு முடிச்சுட்டு வரேன்..இல்லனா போன் பண்ணி சமாதானம் பண்ணனும். ....//

ரிபீட்...டேய்

மங்களூர் சிவா //

வாங்க சிவா :)))
ஆஹா நீங்களும் நம்மாளுதானா?? ;))))) கலக்குங்க :)))

said...

:P

said...

:))

said...

:)

said...

பாண்டிண்ணே,

எப்பிடிண்ணே இப்பிடியெல்லாம்???


அந்த ஜென்ஸி நம்பரை நமக்கும் FWD பண்ணுறது.... ஹி ஹி

said...

:)))

said...

// இராம் said...
பாண்டிண்ணே,

எப்பிடிண்ணே இப்பிடியெல்லாம்???


அந்த ஜென்ஸி நம்பரை நமக்கும் FWD பண்ணுறது.... ஹி ஹி //

வாங்க ராம் :)))
அட எல்லம் அப்படிதாங்க ராம் ;))) அட மொதல்ல உங்க லிஸ்ட்ல உள்ள ஜென்ஸிகளைப்பாருங்கப்பூ :))))

said...

// துர்கா|thurgah said...
:P //

வாங்க துர்கா :))
ஆமா இதென்னாங்க சிம்பல்?? ;))

said...

//இலவசக்கொத்தனார் said...
:)) //

வாங்க கொத்ஸ் :)))
ஹைய சிரிச்சுட்டாரு கொத்ஸ் :)))

said...

//Anonymous said...
:))) //

வாங்க யாருங்க நீங்க??;)))

said...

//வாங்க கொத்ஸ் :)))
ஹைய சிரிச்சுட்டாரு கொத்ஸ் :)))//

யோவ் இதெல்லாம் ஓவராத் தெரியலை. சும்மாவே பல்லைக் காட்டிக்கிட்டு இருக்கிற நான் சிரிக்கிறதை எல்லாம் என்னமோ மோனாலிசா வாய் விட்டு சிரிக்கிற ரேஞ்சுக்கு எழுதிக்கிட்டு....

said...

அய்யா ஜொள்ளுப்பாண்டி, தலைவரே

பாருங்க எத்தன பேரு அந்த ஜென்ஸி நம்பரை கேக்குராங்க... நான் அப்படி கேக்கல. மீன் குடுக்கரதுக்குப் பதிலா மீன் பிடிக்க கத்துக்கொடுங்க.

அது எப்படிங்க ஜென்ஸி-ய Phone பன்ன வச்சீங்க? அதமட்டும் கத்து கொடுங்க. அவுத்து விடுங்க உங்க சரக்க எங்களுக்கும். மக்க நாங்களும் பொழச்சுப்போரோம்

said...

//Poov said...
அய்யா ஜொள்ளுப்பாண்டி, தலைவரே

பாருங்க எத்தன பேரு அந்த ஜென்ஸி நம்பரை கேக்குராங்க... நான் அப்படி கேக்கல. மீன் குடுக்கரதுக்குப் பதிலா மீன் பிடிக்க கத்துக்கொடுங்க. //

வாங்கண்ணா பூவேந்திரன் :)))
அட அட அட என்ன ஒரு வித்தியாசமான ஒரு கேள்வி :)))) அட என்ன நீங்க இப்படி கேட்டுபுட்டீங்க. இட்துக்கு ஒரு தனி பதிவில்ல போடனும் ?? :))))

//அது எப்படிங்க ஜென்ஸி-ய Phone பன்ன வச்சீங்க? அதமட்டும் கத்து கொடுங்க. அவுத்து விடுங்க உங்க சரக்க எங்களுக்கும். மக்க நாங்களும் பொழச்சுப்போரோம்//

ஹையோ இப்படி ராணுவ ரகசியத்தை எப்படி சொல்லுவேன்??;)))))) பேட்டை விஸிட்டுக்கு ரொம்ப டேங்ஸுங்கோ !! :)))

said...

//இலவசக்கொத்தனார் said...
//வாங்க கொத்ஸ் :)))
ஹைய சிரிச்சுட்டாரு கொத்ஸ் :)))//

யோவ் இதெல்லாம் ஓவராத் தெரியலை. சும்மாவே பல்லைக் காட்டிக்கிட்டு இருக்கிற நான் சிரிக்கிறதை எல்லாம் என்னமோ மோனாலிசா வாய் விட்டு சிரிக்கிற ரேஞ்சுக்கு எழுதிக்கிட்டு....//

என்னாங்க கொத்ஸ் ஏதோ கொஞ்சம் பில்ட்டப் கொடுத்தா இப்படி திருப்பிபோட்டு தாக்குறீயளே :)))) அட நீங்களும் எப்பவுமே சிரிச்சுகிட்டு இருக்குற நம்ம கேட்டகரி ஆள் தானா?? கேட்கவே ரொம்ப சந்தோசமா இருக்குங்க கொத்ஸ் :))))))

said...

Hai Pandy the post is so hillarious. I have never come across such humorous posts! I just cant stop laughing ! keep it up ! - Jhansi

said...

பாண்டி ரொம்ப நல்லா எழுதறீங்க ! :-)

- Kumar

said...

என்னமோ நம்ம குலத்த நாமே வாரி உட்டுக்குறது. ஹ்ம்ம்ம் உங்கள மாதிரி ஆளுங்களாள தான்....

ஒன் நிமிட் வெயிட். போன் ரிங்கிங்.ஹிஹி...

சூப்பர‌ப்பூ!

said...

//Anonymous said...
Hai Pandy the post is so hillarious. I have never come across such humorous posts! I just cant stop laughing ! keep it up ! - Jhansi//

வாங்க ஜான்சி :)))
ரொம்ப சந்தோசங்க ஜான்சி நல்லா வாய்விட்டு சிரிங்க :)))

said...

//Anonymous said...
பாண்டி ரொம்ப நல்லா எழுதறீங்க ! :-)

- Kumar//

வாங்கண்ணா குமார் :)))
ரொம்ப டேங்ஸ்ங்க !!!

said...

//மீட்டர்பாலா said...
என்னமோ நம்ம குலத்த நாமே வாரி உட்டுக்குறது. ஹ்ம்ம்ம் உங்கள மாதிரி ஆளுங்களாள தான்....

ஒன் நிமிட் வெயிட். போன் ரிங்கிங்.ஹிஹி...

சூப்பர‌ப்பூ!//

வாங்க மீட்டர் பாலா:)))

அட நம்ம குலம்விளங்கதானே இந்தப்பதிவே?? அட உங்களுக்கும் ரிங்கிடுச்சா?? :))))))