Wednesday, October 31, 2007

DEEPA ’ வலி ’


உங்க பக்கத்து வீட்டிலே ஒரு அழகான பொண்ணு குடிவந்துச்சுன்னா எப்படி இருக்கும்? அதுவும் காலேஜ் படிக்கும்போது பசங்க எல்லாம் சேர்ந்து வீடு எடுத்து தங்கி இருந்த வீட்டுக்கு பக்கதிலேன்ன கேக்கவா வேணும் ? எங்க பக்கத்து வீட்டுக்கு தீபா வந்தப்ப அப்படித்தான் ஆகிபோச்சு.

புதுசா அந்த வீட்டுக்கு அவங்க குடிவந்தப்போ நாங்க எல்லாம் தீபாவளி லீவுக்கு ஊருக்கு போய் இருந்ததால யார் வந்து இருக்கான்னு தெரியலை. லீவுமுடிஞ்சு திரும்பி வந்தபோதான் தெரிஞ்சது அந்த வீட்டிலே “ பால் போல 16ல் ஒரு girlfriend” அனாமத்தா போனி டெய்ல் போட்டுகிட்டு பொஸுக்கு பொஸுக்குன்னு நடந்து பேஷன் பரேட் நடத்திகிட்டு சல்லைய கொடுத்துகிட்டு இருக்குது !! அதுவும் பசங்க பாக்குறானுவன்னு இந்த பொண்ணுங்களுக்கு தெரிஞ்சு போச்சுன்னா அதுக வுடுர அலப்பறை இருக்கே !!! யப்பா.... நமக்கு தான் சும்மா சைட் அடிக்கறதோட திருப்தி அடைஞ்சிட்டு போறது வழக்கமாச்சே !! அப்படியே வீட்டிலே இருந்து கடைக்கு போறப்போ காலேஜ் முடிஞ்சு வர்றப்போன்னு வெளிய வர்ரப்போ எல்லாம் ஏதோ கோயில்ல நடை தொறந்திருக்கான்னு பாக்குர மாதிரி அவ வீட்டை பார்த்துக்கிட்டு கன்னத்திலே போட்டுகிட்டு போறதே வழக்கமாய்டுச்சு.

இப்படியே கொஞ்சநாள் நாங்களும் கண்ணாலயே தீபாவ பார்த்து நெய்ய ஊத்திகிட்டு இருக்குரப்போதான் திடீர்னு நம்ம க்ளோஸ் ப்ரெண்டு மணி ஒரு நாள் நானும் அவனும் வாக்கிங் போறப்போ ‘ டேய் பாண்டி எனக்கு இப்போ எல்லாம் சாப்பிட முடியலை தூங்க முடியலை ஏன் படிக்கவே முடியலை ( அதுக்கு முன்னாடி என்னவோ 24 மணி நேரமும் படிச்சான்னானு கேக்காதீங்கப்பு ) ன்னு ஒரே பீலிங்ஸ் பயலுக்கு, “ டேய் மணி நல்லாதானடா இருந்தே என்ன ஆச்சு உனக்கு? ன்னு அக்கரையா பயகிட்டே கேட்டா லேசா லூசு மாதிரி இளிச்சுகிட்டே “ தீபாமேல எனக்கு கண்ணபின்னான்னு காதல் வந்துருச்சுடா!! னு சொல்லிட்டு பையன் பாயபொராண்டுர பூனை மாதிரி ஆக்க்ஷன் கொடுக்கறான் !!. “அடக் கருமமே உனக்கும் வந்துடுச்சா? என்னடா இது? சரி ஏன் அவ உன்னைய பார்த்து சிரிச்சாளா இல்லை பேசினியா? “இல்லடா பாண்டி அவ வழக்கம் போல எனக்கென்னான்னு தெணாவெட்டா நடந்தே என் உசுரை எடுக்கறாடா. அவளை மடக்க நான் பல ப்ளான் ரெடி பண்ணிவச்சு இருக்கேன். நீ மட்டும் நம்ம பசங்க யாரும் எனக்கு போட்டியா வராம பார்த்துக்கோ” ன்னு சொல்லி பய தீபவுக்கு துண்டைப் போட்டுட்டான்.

டேய் பார்த்துகுங்க இன்னில இருந்து நம்ம தீபா நமக்கெல்லாம் அண்ணி (சக ப்ரெண்டோட சைட் டுன்னாலே default டா அண்ணி முறை தானே எல்லாரும் கூப்பிடனும் ? ) மணிப்பயலுக்கு ஒரே சந்தோசம். ஒரு வாரம் கழிச்சு மணி என்கிட்டே ஒரு பேப்பரோட வந்தான். ‘என்னடா செமஸ்டருக்கு இன்னும் ரெண்டு மாசம் இருக்குதே இப்போவே பசங்ககிட்டே நேட்ஸ் வாங்க ஆரம்பிச்சியாடன்னு அதிர்ச்சியோட கேட்டா பய நக்கலா சிரிக்கிறான். “பாண்டி ஏண்டா இப்படி என்மேல அபாண்டமா சந்தேகப்படுறே?! ன்னு சொலிட்டு கொடுத்தான், பேப்பர்ல பார்த்தா அட தீபாவோட வரலாறு !!! தீபாவுக்கு ஒரு தம்பி அம்மா அப்பா அவ எந்த ஸ்கூல் எந்த வழியா போறான்னு பட்டியல் அவ எந்த கடையில ஹேர்பேண்ட் வாங்கறாங்கற சும்மா google ரேஞ்சுக்கு பயபுள்ள தகவல்களை அள்ளி தெளிச்சி எடுத்துவச்சுருக்கான் !!!. ஆஹா போற போக்கிலே பய தீபாவோட தீபாவளிகொண்டாடிவான் போல இருக்கே !!! “ பாண்டி இனிமேதாண்டா எனனோட ஆக்க்ஷன் ப்ளான் பார்த்துகிட்டே இருடா தீபாவோட சேர்ந்து பக்கத்து பேக்கரில ஆப்பிள் கேக் சாப்பிடும் நாள் வெகுதூரத்தில் இல்லை !! ” சும்மா அண்ணாமலை ரஜினி கணக்கா தொடைதட்டி பையன் ‘பிட்’ டை ஓட்டறான்!!

ரெண்டுநாள் கழிச்சு வழக்கமா நாங்க ஷட்டில் கார்க் வெளையாடுர க்ரெளண்ட்ல புதுசா ஒரு பொடியன் மணி கூட வெளையாடிகிட்டு இருந்தான். அட வழக்கமா இப்படி பொடியனுங்க வந்தா மணிப்பயதானே அடிச்சி பத்திவிடுவான் இப்போ என்னடான்னா இப்படி மாறிட்டானேன்னு ஆச்சரியமா மணிப்பயலப் பார்த்தேன். “ டேய் பாண்டி கொஞ்சம் நேரம் ஓரமா ஒக்காருடா பொடியன் யாரு தெரியும்ல? நம்ம தீபாவோட தம்பி தாண்டா !! “ என்னோட ஆக்சன் ப்ளான்ல முதல் டார்கெட் இவந்தான் . அப்படியே இவனை வச்சே தீபாவோட மனசிலே ஒரு ‘பஞ்ச்’ வைக்கிறேன் பாரு !! ப்ளீஸ் இப்பொ கொஞ்சம் இடத்தை vacate பண்ணுடா மாப்ளே !! னு கொஞ்சம் decent ஆ நம்மளை கழட்டி விட்டுடான். அடப்பாவி இந்த பசங்களோட இதாங்க பெரிய தொல்லைங்க. கொஞ்சம் ஏமாந்தா நம்மளை ஊறுகாய் ஆக்கிடுவாய்ங்க! என்ன பண்ணுறது ?

ரெண்டு வாரம் கழிச்சு பார்த்தா மணிப்பய தீபாவோட வீட்டுல இருந்து வெளிய வந்துகிட்டு இருக்கான். பய கில்லாடியா இருப்பான் போல! தம்பியப் புடிச்சே பொண்ணு மனசில வீட்டுக்கு போற ரேஞ்சுக்கு பஞ்ச் வச்சுட்டான் போல இருக்கேன்னு நெனச்சிகிட்டே “ டேய் மணி என்னடா கண்ணா இவ்ளோ வேகமா இருக்கே என்ன அவங்க வீட்டில இருந்து வார்றே, தீபாவ பார்துட்டா? “ “ அட இல்லைடா பாண்டி ஆண்ட்டி ( தீபாவோட அம்மாவாம் !! )நம்ம பால்காரனை அவங்க வீட்டுக்கும் பால் போட சொல்லமுடியுமான்னு கூப்ட்டு கேட்டாங்க. சான்ஸை விடலாமா? நாளைக்கு பாரேன் அவங்க வீட்டு பாலையும் நம்ம வீட்டிலயே வாங்கி நானே கொண்டுபோய் டெலிவரி பண்ணி ஆண்ட்டிகிட்டயும் நல்ல பேரை வாங்கி என்னோட லவ்வையும் தீபாகிட்டே டெலிவரி பண்றேண்டா !!”. ஏண்டா வழக்கமா மொதல்ல பொண்ண கரெட் பண்ணி அப்புறம் தானேட இப்படி அல்லைடு சொந்த பந்தங்களை கரெட் பண்ணனும் நீ என்னடா ரிவஸ்ல பேறேன்னு கேட்டா பய “ கண்ணா அது ordinary பசங்க பண்ணுர லொடுக்கு காதல்டா! என் வழி தனி வழி !!! “ ன்னு பையன் கைய ஆட்டி சலம்பறான் !!!

இப்படியா தீபா வீட்டுக்கு ப்ரீ லேபரா சுத்திகிட்டு இருந்த மணி திடீர்னு ஒருநாள் கண்ணீரும் கம்பலையுமா எங்ககிட்டே வந்தான். “ டேய் மாப்ளே மணி என்னடா ஆச்சு ஊர்ல பாட்டி கீட்டி யாராச்சும் டிக்கெட் வாங்க்கிடாங்களா?” ன்னு கேட்டா “ பாண்டி அதெல்லாம் இல்லைடா இனிக்குதான் நான் தீபாகிட்டே என் மனசை கஷ்டப்பட்டு ஓபன் பண்ணினேன். உடனே என்னைய ரிஜக்ட் பண்ணிட்டாடா. அவளுக்கு ஏற்கனவே இருந்த வீட்டு பக்கத்திலே நம்மள மாதிரியே எவனோ ஒருத்தன் ரிசர்வ் பண்ணிட்டானாம். சாரிங்க அண்ணானு சொலிட்டாடா. என்னாடா அவ தம்பியக் கரெட் பண்ணிட்டேன் அவ அம்மாவையும் கரெட் பண்ணிடேன் ஆனா மெயின் மேட்டரான பொண்ணக் கரெட் பண்ண முடியலையேடா !!! “ ன்னு கே கொள்ளேன்னு பய ஒப்பாரி வைக்கிறான் !! என்னத்த சொல்றது ? இனிமேலாச்சும் யார் வீட்டுக்காச்சும் ப்ரீ லேபரா ஆகரதுக்கு முன்னாடி pitch report பார்த்து batting பண்ணுங்கப்பு !!!

38 பேர் வளைச்சு வளச்சு ஜொள்ளிருக்காங்க:

said...

//
நான் தீபாகிட்டே என் மனசை கஷ்டப்பட்டு ஓபன் பண்ணினேன். உடனே என்னைய ரிஜக்ட் பண்ணிட்டாடா. அவளுக்கு ஏற்கனவே இருந்த வீட்டு பக்கத்திலே நம்மள மாதிரியே எவனோ ஒருத்தன் ரிசர்வ் பண்ணிட்டானாம். சாரிங்க அண்ணானு சொலிட்டாடா. என்னாடா அவ தம்பியக் கரெட் பண்ணிட்டேன் அவ அம்மாவையும் கரெட் பண்ணிடேன் ஆனா மெயின் மேட்டரான பொண்ணக் கரெட் பண்ண முடியலையேடா !!!
//
ஆரிய கூத்தாடினாலும் காரியத்தில கண்ணா இருக்கனும்!!

//
இனிமேலாச்சும் யார் வீட்டுக்காச்சும் ப்ரீ லேபரா ஆகரதுக்கு முன்னாடி pitch report பார்த்து batting பண்ணுங்கப்பு !!!
//

:-))

said...

இந்த பொண்ணுங்களே இப்படித்தாண்டா மணி. சரி சரி அடுத்த பிட்சுலயாச்சும் ரிப்போர்ட பாத்துட்டு பேட்டிங் பண்ணு.

பெட்டர் லக் நெக்ஸ் டைம்.

said...

//இனிமேலாச்சும் யார் வீட்டுக்காச்சும் ப்ரீ லேபரா ஆகரதுக்கு முன்னாடி pitch report பார்த்து batting பண்ணுங்கப்பு !!!//

சூப்பரு பாண்டிண்ணே... :)

said...

{;;;}

said...

//மங்களூர் சிவா said...
ஆரிய கூத்தாடினாலும் காரியத்தில கண்ணா இருக்கனும்!!

//
இனிமேலாச்சும் யார் வீட்டுக்காச்சும் ப்ரீ லேபரா ஆகரதுக்கு முன்னாடி pitch report பார்த்து batting பண்ணுங்கப்பு !!!
//

:-))//

வாங்க சிவா :)))
அதென்னாங்க கூத்து :))) ரொம்ப தேங்ஸ்ங்க சிவா :)))

said...

//தம்பி said...
இந்த பொண்ணுங்களே இப்படித்தாண்டா மணி. சரி சரி அடுத்த பிட்சுலயாச்சும் ரிப்போர்ட பாத்துட்டு பேட்டிங் பண்ணு.

பெட்டர் லக் நெக்ஸ் டைம்.//

வாங்க தம்பி :)))
அட மணிப்பயலுக்கு எப்பவுமே இபடிதான் ஆகிப்போகுதுங்க என்ன பண்றது?? ;)))))

said...

//இராம்/Raam said...
//இனிமேலாச்சும் யார் வீட்டுக்காச்சும் ப்ரீ லேபரா ஆகரதுக்கு முன்னாடி pitch report பார்த்து batting பண்ணுங்கப்பு !!!//

சூப்பரு பாண்டிண்ணே... :)//

வாங்க ராம் :))
கூவுரதைப் பார்த்தா நெறையா பேட்டிங் தில்லாலங்கடியா இருப்பீங்க போல இருக்கே :))))))) ச்சும்மா கோச்சுகாதீங்க சரியா?? :))))))

said...

\\தீபாவுக்கு ஒரு தம்பி அம்மா அப்பா அவ எந்த ஸ்கூல் எந்த வழியா போறான்னு பட்டியல் அவ எந்த கடையில ஹேர்பேண்ட் வாங்கறாங்கற சும்மா google ரேஞ்சுக்கு பயபுள்ள தகவல்களை அள்ளி தெளிச்சி எடுத்துவச்சுருக்கான் !!!. \\

தீபா வை பற்றி இவ்வளவு விபரம் சேகரிச்ச மணி, அவ ஏற்கெனவே ரிசர்வட்டான்னு தெரிஞ்சுக்காம போய்ட்டாரா? வேஸ்ட் googlemani!!

said...

\\.... நமக்கு தான் சும்மா சைட் அடிக்கறதோட திருப்தி அடைஞ்சிட்டு போறது வழக்கமாச்சே !! \\

வழக்கம் மட்டுமில்ல.......அவ்வளவு தான் உங்க கொடுப்பினை,
அதுவே ஜாஸ்தி தான்!!

said...

\\அடப்பாவி இந்த பசங்களோட இதாங்க பெரிய தொல்லைங்க. கொஞ்சம் ஏமாந்தா நம்மளை ஊறுகாய் ஆக்கிடுவாய்ங்க! என்ன பண்ணுறது ?\\

நிறைய பேரு உங்களை ஊறுகாய் போட்டுருப்பாங்க போலிருக்கு?

said...

\\நாளைக்கு பாரேன் அவங்க வீட்டு பாலையும் நம்ம வீட்டிலயே வாங்கி நானே கொண்டுபோய் டெலிவரி பண்ணி ஆண்ட்டிகிட்டயும் நல்ல பேரை வாங்கி என்னோட லவ்வையும் தீபாகிட்டே டெலிவரி பண்றேண்டா !!”. \\

மணி பாக்கியராஜ் படம் பார்த்து இப்படி ஆகிட்டாரா? பாவம்!!

said...

\\இனிமேலாச்சும் யார் வீட்டுக்காச்சும் ப்ரீ லேபரா ஆகரதுக்கு முன்னாடி pitch report பார்த்து batting பண்ணுங்கப்பு !!!\\

கரெக்ட்டா சொன்னேபா பாண்டி!!

said...

ஜொள்ளு, சூப்பர இக்குதுபா, ஆமா இந்த ஆப்பிள் கேக்க எப்பிடி செய்றாங்கன்னு தெரீமா?. பேக்கரி கிச்சன்ல எல்லாத்தையும் செஞ்ச பின்னாடி மிச்சம் மீதி இருக்கற தூளையெல்லாம் அங்க வேலை செய்றவங்க (அவிங்க எப்ப குளிப்பாய்ங்கன்னு எனக்கு தெரியாது) உருட்டி உருட்டி செய்றதுதாம் ஆப்பிள் கேக்.

said...

Ela Jollupaandi,

Mani payalukku theriyuma indha blog pathi.....

said...

///தம்பி said...
இந்த பொண்ணுங்களே இப்படித்தாண்டா மணி. சரி சரி அடுத்த பிட்சுலயாச்சும் ரிப்போர்ட பாத்துட்டு பேட்டிங் பண்ணு.//

அடப்பாவி தம்பி.... இப்படி மொத்த பெண்ணினத்தையும் தாக்குதியே... அம்புட்டு தைரியமா உனக்கு?? இத கேக்க யாருமே இல்லையா???

said...

என்னுடைய அனுதாபத்த மணிப்பயக்கிட்ட சொல்லிடுங்க பாண்டி...

said...

//Anonymous said...
{;;;}//

வாங்க அனானி அண்ணே:))
இப்படி போட்டா என்ன அர்த்தங்கறேன் :)))

said...

//Divya said...
\\தீபாவுக்கு ஒரு தம்பி அம்மா அப்பா அவ எந்த ஸ்கூல் எந்த வழியா போறான்னு பட்டியல் அவ எந்த கடையில ஹேர்பேண்ட் வாங்கறாங்கற சும்மா google ரேஞ்சுக்கு பயபுள்ள தகவல்களை அள்ளி தெளிச்சி எடுத்துவச்சுருக்கான் !!!. \\

தீபா வை பற்றி இவ்வளவு விபரம் சேகரிச்ச மணி, அவ ஏற்கெனவே ரிசர்வட்டான்னு தெரிஞ்சுக்காம போய்ட்டாரா? வேஸ்ட் googlemani!!//

வாங்க் திவ்யா :)))
அட என்னாங்க பொஸுக்குன்ன்னு மணி வேஸ்ட்ன்னு சொல்லுபோட்டீங்க?? :)))) அட ஆனைக்கும் அடி சறுக்கும்லா?? :)))))

said...

//Anonymous said...
\\.... நமக்கு தான் சும்மா சைட் அடிக்கறதோட திருப்தி அடைஞ்சிட்டு போறது வழக்கமாச்சே !! \\

வழக்கம் மட்டுமில்ல.......அவ்வளவு தான் உங்க கொடுப்பினை,
அதுவே ஜாஸ்தி தான்!!//

ஹலோ யாரது??
இப்படி பப்ளிக்கா ராணுவ ரகசியத்தை எல்லாம் புட்டு புட்டு வைக்கிறது ?? ;)))))) உங்களுக்கு இப்படி ஒரு சந்தோசமா ?? ;))))ம்ம்ம்...

said...

//Divya said...
\\அடப்பாவி இந்த பசங்களோட இதாங்க பெரிய தொல்லைங்க. கொஞ்சம் ஏமாந்தா நம்மளை ஊறுகாய் ஆக்கிடுவாய்ங்க! என்ன பண்ணுறது ?\\

நிறைய பேரு உங்களை ஊறுகாய் போட்டுருப்பாங்க போலிருக்கு?//

அட ஆமாங்க திவ்யா :)))
என்னதான் நாம உஷாரா இருந்தாலும் ஏமாந்த நேரத்திலே முதுகுல உப்பைத் தடவி காயப்போட்ருவாய்ங்க என்ன பண்றது?? ;))))))

said...

//Anonymous said...
\\நாளைக்கு பாரேன் அவங்க வீட்டு பாலையும் நம்ம வீட்டிலயே வாங்கி நானே கொண்டுபோய் டெலிவரி பண்ணி ஆண்ட்டிகிட்டயும் நல்ல பேரை வாங்கி என்னோட லவ்வையும் தீபாகிட்டே டெலிவரி பண்றேண்டா !!”. \\

மணி பாக்கியராஜ் படம் பார்த்து இப்படி ஆகிட்டாரா? பாவம்!!//

என்னாங்க அனானி
அப்படியா தெரியுது மணிய பார்த்தா?? :))) ஆவரு எஸ்ஜே சூர்யா படம் பார்கலைன்னு சந்தோசப்படுங்க !! ;)))))

said...

//மடையன் said...
ஜொள்ளு, சூப்பர இக்குதுபா, ஆமா இந்த ஆப்பிள் கேக்க எப்பிடி செய்றாங்கன்னு தெரீமா?. பேக்கரி கிச்சன்ல எல்லாத்தையும் செஞ்ச பின்னாடி மிச்சம் மீதி இருக்கற தூளையெல்லாம் அங்க வேலை செய்றவங்க (அவிங்க எப்ப குளிப்பாய்ங்கன்னு எனக்கு தெரியாது) உருட்டி உருட்டி செய்றதுதாம் ஆப்பிள் கேக்.//

வாங்க மடையன் :)))
( என்னாங்க இப்படி பேரு வச்சு என்னைய சொல்ற மாதிரியே இருக்கே !! ) ஆஹா ஆப்பிள் கேக்குல நீங்க நீந்தி கரைகண்டவெரு போல தெரியுதே ;)))) என்னா விசயம் ?? ;))))))

said...

//Gopi said...
Ela Jollupaandi,

Mani payalukku theriyuma indha blog pathi.....//

வாடா கோபி கண்ணா :)))
அட பயபுள்ள சத்தமே போடாமல்ல இருக்கான் ?? புடிக்கிறேன் பயல... ;))))0

said...

//ஜி said...
///தம்பி said...
இந்த பொண்ணுங்களே இப்படித்தாண்டா மணி. சரி சரி அடுத்த பிட்சுலயாச்சும் ரிப்போர்ட பாத்துட்டு பேட்டிங் பண்ணு.//

அடப்பாவி தம்பி.... இப்படி மொத்த பெண்ணினத்தையும் தாக்குதியே... அம்புட்டு தைரியமா உனக்கு?? இத கேக்க யாருமே இல்லையா???//

வாங்க ஜி :))
இப்படி தம்பியக் கோர்த்து வாங்குறீயளே ஏன் ?? ;))))

said...

வாழ்த்துக்கள் பாண்டி ;))

இந்த வாரம் ஆனந்த விகடனில் நீங்க தான் ;))

said...

//கோபிநாத் said...
வாழ்த்துக்கள் பாண்டி ;))

இந்த வாரம் ஆனந்த விகடனில் நீங்க தான் ;))//

வாங்க கோபி :))
அட ஆமாங்க நம்ம ப்ளாக் தோழர்கள் சொல்லித்தான் எனக்குத் தெரியும். மிக்க நன்றி கோபி :)))

said...

//அதுவும் பசங்க பாக்குறானுவன்னு இந்த பொண்ணுங்களுக்கு தெரிஞ்சு போச்சுன்னா அதுக வுடுர அலப்பறை இருக்கே !!! யப்பா.... //

ஒவர் சல்லைய கொடுப்பாங்க... :)

//இனிமேலாச்சும் யார் வீட்டுக்காச்சும் ப்ரீ லேபரா ஆகரதுக்கு முன்னாடி pitch report பார்த்து batting பண்ணுங்கப்பு !!!//

:))))

said...

விகடனுக்கு வாழ்த்துக்கள் அதுவும் "தீபா"வளி ஸ்பேஷலில் வந்ததுக்கு டபுள் வாழ்த்துக்கள்.

said...

//நாகை சிவா said...
//அதுவும் பசங்க பாக்குறானுவன்னு இந்த பொண்ணுங்களுக்கு தெரிஞ்சு போச்சுன்னா அதுக வுடுர அலப்பறை இருக்கே !!! யப்பா.... //

ஒவர் சல்லைய கொடுப்பாங்க... :)//

வாங்க சிவா :))
ஆஹா சல்லைய தொல்லை தாங்காமத்தேன் சூடானுகே ஓடிபோய்ட்டீயளா?/ ;)))))

//இனிமேலாச்சும் யார் வீட்டுக்காச்சும் ப்ரீ லேபரா ஆகரதுக்கு முன்னாடி pitch report பார்த்து batting பண்ணுங்கப்பு !!!//

:))))//

சிரிப்பை பார்த்தா பாட்டிங் பார்ட்டி போல இருக்கே :)))))

said...

//நாகை சிவா said...
விகடனுக்கு வாழ்த்துக்கள் அதுவும் "தீபா"வளி ஸ்பேஷலில் வந்ததுக்கு டபுள் வாழ்த்துக்கள்.//

ரொம்ப தேங்ஸ் சிவா :))
ஆஹா எப்படி இப்படியெல்லாம் தீபாவுக்கு நன்ணி பறையனும் போல இருக்கே ;))))))

said...

என்ன ஜொள்ளண்ணே சொல்லக்கூடாதா மணிப்பயலுக்கு! இத்தனை பொருமை காத்தவனுக்கு இன்னும் கொஞ்சம் புத்திசாலித்தனம் வேண்டாம. தீபாகிட்ட RAC இல்லேன்னா waiting List ல யாவது போடவேண்டியதுதானே. யாருக்கு எப்ப அதிர்ஷ்டம் அடிக்கும்னு யார் கண்டது

said...

// இனிமேலாச்சும் யார் வீட்டுக்காச்சும் ப்ரீ லேபரா ஆகரதுக்கு முன்னாடி pitch report பார்த்து batting பண்ணுங்கப்பு !!!//
ஹா...ஹா...
உங்களுக்கும் ,குடும்பத்தாருக்கும். எனது அன்பு கலந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
என்றும் அன்புடன் உங்கள் ரசிகன்.

said...

அதுசரி, மணிப்பயல் சொல்ற 'யாரோ ஒருத்தன்' நீங்க இல்லையே?? :)

ஹ்ம்ம்ம்...ஊத்துங்க! (நீங்கதான் 'ஜொள்ளு' ப் பாண்டியாச்சே!)

said...

//Sridhar said...
என்ன ஜொள்ளண்ணே சொல்லக்கூடாதா மணிப்பயலுக்கு! இத்தனை பொருமை காத்தவனுக்கு இன்னும் கொஞ்சம் புத்திசாலித்தனம் வேண்டாம. தீபாகிட்ட RAC இல்லேன்னா waiting List ல யாவது போடவேண்டியதுதானே. யாருக்கு எப்ப அதிர்ஷ்டம் அடிக்கும்னு யார் கண்டது//

வாங்க ஸ்ரீதர் :)))
என்னாங்க பண்றது காதலிக்கவும் செய்யனும் புத்திசாலித்தனமாவும் இருகனும்னு நெனச்சா எப்படி ?? ;)))))))

said...

//ரசிகன் said...
// இனிமேலாச்சும் யார் வீட்டுக்காச்சும் ப்ரீ லேபரா ஆகரதுக்கு முன்னாடி pitch report பார்த்து batting பண்ணுங்கப்பு !!!//
ஹா...ஹா...
உங்களுக்கும் ,குடும்பத்தாருக்கும். எனது அன்பு கலந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
என்றும் அன்புடன் உங்கள் ரசிகன்.//

வாங்க ரசிகன் :))
ரொம்ப ரசனைக்காரவுகளா நீங்க ?? ;))))) மிக்க மகிழ்ச்சி !! உங்களுக்கும் எனது அன்புகலந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள் !!! :)))

said...

//தஞ்சாவூரான் said...
அதுசரி, மணிப்பயல் சொல்ற 'யாரோ ஒருத்தன்' நீங்க இல்லையே?? :)

ஹ்ம்ம்ம்...ஊத்துங்க! (நீங்கதான் 'ஜொள்ளு' ப் பாண்டியாச்சே!)//

வாங்க தஞ்சாவூரான் :)))
ஆஹா என்னாங்க லேசா நம்ம காலை வார்றீங்க ?? ;))))) நண்பனுக்கு துரோகம் செய்வேனா ?? ;))))))

said...

Hai Jollu

உங்களை இந்த விளையாட்டில் கோர்த்து விட்டிருக்கேன், டைம் கிடைக்கும் போது அப்படியே கண்டினியூ பண்ணுங்க.

http://appaavi.hikanyakumari.com/?p=110

said...

நீங்க ரொம்ப பெரிய ஆளுண்ணே ஏலுமுன்னா என் பேர கண்டுபிடி