Thursday, October 11, 2007

அம்மணீஸ் Unleashed ....


நம்ம ப்ரெண்டு ஒருத்தன் நம்மகிட்டே வந்து ‘ ஏண்டா பாண்டி இந்த பொண்ணுகளைப் புரிஞ்சுக்கவே முடிலைடா. சிரிக்குறாளுவளேன்னு நானும் சிரிச்சா “போதுண்டா ஒவரா வழியாதேங்கறாளுக “சரி ஏதோ கொஞ்சம் பேசுறாளுவளேன்னு நானும் கொஞ்சம் பேச்சுத்தொணைக்கு கம்பெனி கொடுத்தா “ டேய் ரொம்ப மொக்கயப்போடாதே!’ ன்னு சொல்லிபுட்டு கெக்கே பிக்கேன்னு சிரிச்சு நம்மளை உசுப்பேத்திவிட்டு வெறுப்பேத்தறதே பொழப்பா வச்சு இருக்காளுக. எப்படிடா நாம பொண்ணுகளைப் புரிஞ்சுக்கறது? நீதான் ஒரு எழுத்தாளன்னு அடிக்கடி பீத்திக்கிறியே!’ ன்னு அப்படியே நம்ம தன்மானத்தை லேசா உரசி ஏதோ நம்மளையும் ஒரு சாமியாரு ரேஞ்சுக்கு வச்சு கேள்விய கேட்டுப்புட்டான். அட பாவிபயபுள்ள தனியா சொல்லி இருந்தாலாச்சும் ஏதாசும் சொல்லி ஒப்பேத்தி இருக்கலாம் இப்படி சபையிலே வச்சு கேட்டுபுட்டானே ஏதாசும் சொல்லித்தொலையனுமேன்னு எடுத்துவுட்ட சரக்குதாங்க இது !!


நம்ம அம்மணிகளை மொதல்ல புரிஞ்சுக்கனும்னு நெனகறதே தப்புங்க. எப்படீன்னா பொண்ணுங்க எல்லாம் 50 Kg தாஜ்மகால் மாதிரி. தாஜ்மகாலைப்பார்க்கறீங்கனு வைங்க அதைய அப்படியே நின்னு ரசிப்பிங்களா இல்லை எப்படி இந்த தாஜ்மகாலை கட்டி இருப்பாய்ங்க ன்னு ஒரு ஆர்க்கிடெக்ட் ரேஞ்சுக்கு திங்க் பண்ணுவீங்களா? எப்படி கட்டுனாங்கங்கறதெல்லாம் நம்ம தாஜ்மகாலோடா ஆர்கிடெக்ட்ஸ்சான அவிய அப்பா அம்மாவோட கவலைங்க. நம்ம பணி இந்த நடமாடும் தாஜ்மகால்களை ரசித்துக்கிடப்பதேன்னு இருந்தீங்கன்னாதான் வாழ்க்கையிலே நிம்மதியா கலர் கலரா நெனப்புகளை போட்டோ எடுத்துக்க முடியும் என்னா?

அப்புறம் இந்த பேச்சு. நம்ம அம்மணீஸ் எல்லாம் ஒரு நடமாடும் FM ரேடியோ மாதிரிங்க. ரேடியோன்னாலே எதையப்பத்தியாச்சும் என்னவாச்சும் எப்பவும் சொல்லிகிட்டே இருக்கனும் இல்லையா? பேசாதா ரேடியோ நல்லாவா இருக்கும்? சொல்லுங்கப்பூ! சரி பேசிட்டு போவட்டும்னு நீங்க பாட்டுக்கேட்கறதோட நிறுத்திகிடனும். அதை விட்டுட்டு நீங்கபாட்டுக்கு ப்ரேக்ராமை சேஞ்ச் பண்றேன் finetune பண்ணறேன்னு கெளப்புனீங்கன்னா அவ்ளோதான் சும்மா இருக்குற கொளவிக்கூட்டை எடுத்து காதுகுள்ள உட்டுகிட்ட கதை மாதிரி காதெல்லாம் அம்மணி வார்தையாலயே உங்களை வகுந்து புடுவாக வகுந்து !! அப்புறம் காது கிழியுது ரத்தம் வழியுதுன்னு தேவையில்லாம கதறப்பிடாது !! . இந்த ரேடியோவை Off பண்ண முடியாது ஆனா வேற ஸ்டேசனை வேணா மாத்திகிட்டு வேற பாட்டைக் கேக்கமுடியும் !!

CBI FBI எல்லாம் நம்ம அம்மணிகளோட துப்பறியும் தெறமைக்கு முன்னாடி பிச்சை வாங்கனுங்க. அதுவும் நீங்க அம்மணியோட ஹஸ்பண்டாவோ இல்லை அம்மணியை லவ்விகிட்டோ இருந்தீங்கன்னா நீங்க அவுகளோட ஸ்பெசல் செக்யூரிட்டிக்குள்ள ஆட்டோமேடிக்கா வந்துருவீங்க. நீங்க வாயக்கூட தொறந்து பேச வேணாங்கப்பூ உங்களோட முழிய வச்சே நம்ம அம்மணிக நீங்க பக்கத்து வீட்டு பைங்கிளிக்கு கேப்புல ட்ராக் உடுறீங்களா? இல்லை பசங்களோட பேசுற மாதிரி என்னதான் நீங்க சிவாஜியையும் கமலையும் கலந்துகட்டி உங்க நடிகவேள் திறமையகாட்டி போன்ல பேசுனாலும் நீங்க உண்மையிலேலே உங்க ஆபீஸ்ல புதுசா சேர்ந்து இருக்குற ஜில்லு பிகர் ரிசப்ஷனிஸ்டோட பிட்டைப் போடுறீங்கங்கறதை சும்மா அசால்டா கண்டுபுடிக்கிற தனித்தெறமை இருக்கங்கறதை நீங்க மறந்துடக்கூடாதுங்கப்பூ !!!

துணிக்கடையிலே மூச்சு தெனறத் தெனற சும்மா பத்தாயிரம் கலர்ல சேலைகளை சேல்ஸ்மேன் நாக்கு வெளிய தள்ள அம்மணிகளுக்கு எடுத்துக்காட்டி இருந்தாலும் இதுல எல்லாம் இல்லாத பத்தாயிரத்து ஒண்ணாவது கலர்ல சேலை இருக்கான்னு அசால்ட்டா இல்லாத கலரைக் கேட்டு சேல்ஸ்மேன்களை தெனற அடிக்கரதோட இல்லாம பார்த்தீயாளா என் தெறமைய ன்னு கூட நிக்குற அப்பாவி ஆம்பிளைகளை பாக்குறது வேற இவுகளுக்கு ஒரு ஆனந்தமான ஹாபிங்க !! இதுலே நீங்க இவுக கூடவே நின்னுகிட்டு அந்தப்பக்கம் நின்னுகிட்டு சேலையப் தேடிகிட்டு இருக்குற பக்கத்துல நிக்குற பிகரை கண்ணாலையே முழம்போட்டுகிட்டு இந்த அப்பாவி நயமா இருக்குற நேரத்துல திடீர்னு ‘ ஏங்க இந்த கலர்ல சேலை என்கிட்டே இருக்குதில்ல? ன்னு கேட்டு உங்களை இப்படி சந்தோசமா பொழுது போக்க விடாம பண்ணறதுல ஒரு அலாதி ஆனந்தம் இவுகளுக்கு !!

சரி இதுக்கும் மேலயும் நம்ம அம்மணிகளைப்பத்தி பத்தி பத்தியா எழுதினா அவ்வளவுதான் அப்புறம் அம்மணிக எல்லாம் சேர்ந்து நம்மள ரவுண்டு கட்டி பொளந்துடுவாங்க !! ஆஹா தூரத்திலே ஏதோ சுரிதார் போட்ட சுந்தரி ஹை-ஹீல்ஸ்சோட வர்ற மாதிரி தெரியுது !! சரி சரி எல்லாரும் சங்கத்தை கலைங்கப்பூ !!

33 பேர் வளைச்சு வளச்சு ஜொள்ளிருக்காங்க:

said...

துணிக்கடை மேட்டரு சூப்பரு..

said...

ROTFL......செம காமெடி அந்த துணிகடை மேட்டர்,
ஒரு பொண்ணு கூட 'saree shopping'போன அனுபவஸ்த்தன் ரேஞ்சுக்கு இருக்கு.......என்ன மேட்டர் பாண்டி??

\இந்த ரேடியோவை Off பண்ண முடியாது ஆனா வேற ஸ்டேசனை வேணா மாத்திகிட்டு வேற பாட்டைக் கேக்கமுடியும் !! \


ஸ்டேஷன மாத்தனுமா, இல்ல ரேடியோவையே மாத்தனுமா???

ஏன் இந்த டவுடுன்னா?
நீங்க program changing and fine tuning எல்லாம் பண்ணக்கூடாதுன்னு சொல்லியிருக்கிறீங்க....so விளக்கமா சொல்லுங்க,
எதை மாத்தனும்???


\\ நீங்கபாட்டுக்கு ப்ரேக்ராமை சேஞ்ச் பண்றேன் finetune பண்ணறேன்னு கெளப்புனீங்கன்னா அவ்ளோதான் சும்மா இருக்குற கொளவிக்கூட்டை \\

said...

@ இளா

//துணிக்கடை மேட்டரு சூப்பரு..//

அனுபவஸ்தர் சொன்னா சரியாத்தான் இருக்கும் :-)

said...

உங்க கதையும் நல்லாருக்குது. படமும் நல்லா இருக்குது. வீட்டுல இந்த கூட்டற வேலையேல்லாம் நீங்க தான் போல இருக்கே.

said...

செல்லம்...FM...கலக்கல் ;)))

said...

ha ha! super uvamaikal. appadiye aankalai pathi "AADAVAR unleased" ezhutha imsai arasi/my friend/aruntha vaalu enRU yaaravathu munaraveeNdum enRum kettukkoLkiren!

said...

//ILA(a)இளா said...
துணிக்கடை மேட்டரு சூப்பரு..//

வாங்க இளா :))
எப்படியோ நீங்க சொன்னா சரிதாங்கண்ணா :)))))

said...

//Divya said...
ROTFL......செம காமெடி அந்த துணிகடை மேட்டர்,
ஒரு பொண்ணு கூட 'saree shopping'போன அனுபவஸ்த்தன் ரேஞ்சுக்கு இருக்கு.......என்ன மேட்டர் பாண்டி?? //

வாங்க திவ்யா :)))))
ஆஹா திவ்யா ஏன் இப்படி என்னை மாட்டிவிடறீங்க? எல்லாம் நம்ம மக்கள் சொன்ன அனுபவம் தாங்கோ !! :))))

\இந்த ரேடியோவை Off பண்ண முடியாது ஆனா வேற ஸ்டேசனை வேணா மாத்திகிட்டு வேற பாட்டைக் கேக்கமுடியும் !! \


//ஸ்டேஷன மாத்தனுமா, இல்ல ரேடியோவையே மாத்தனுமா???

ஏன் இந்த டவுடுன்னா?
நீங்க program changing and fine tuning எல்லாம் பண்ணக்கூடாதுன்னு சொல்லியிருக்கிறீங்க....so விளக்கமா சொல்லுங்க,
எதை மாத்தனும்???//

ஐயோ திவ்யா நான் ப்ரொக்ராமைத்தான் மாத்தனும்னு சொன்னேன் . ரேடியோவையே மாத்தறதா?? அபச்சாரம் அபசாரம் :))))


\\ நீங்கபாட்டுக்கு ப்ரேக்ராமை சேஞ்ச் பண்றேன் finetune பண்ணறேன்னு கெளப்புனீங்கன்னா அவ்ளோதான் சும்மா இருக்குற கொளவிக்கூட்டை \\

:))) என்னா நான் சொல்லறது சரிதானே திவ்யா ?? :)))

said...

தெய்வமே...எங்கயோ போயிட்டீங்க :))))

said...

//Appaavi said...
@ இளா

//துணிக்கடை மேட்டரு சூப்பரு..//

அனுபவஸ்தர் சொன்னா சரியாத்தான் இருக்கும் :-)//

வாங்க அப்பாவி :)))
அட உங்க கருத்தை சொல்லுங்களேன் :)))

said...

//சின்ன அம்மிணி said...
உங்க கதையும் நல்லாருக்குது. படமும் நல்லா இருக்குது. வீட்டுல இந்த கூட்டற வேலையேல்லாம் நீங்க தான் போல இருக்கே.//

வாங்க சின்ன அம்மிணி :)))
( பேரே நல்லா இருக்கே!!) அட ஆமாங்க அம்மிணி கரெட்டா கண்டுபிடிச்சுட்டீங்க?? :)))) பேச்சுலர் வாழ்கையிலே கூட்டல் பெருக்கல் எல்லாம் நானேதானே செய்யனும் ??:)))))

said...

//கோபிநாத் said...
செல்லம்...FM...கலக்கல் ;)))//

வாங்க கோபி :)))
அட நீங்க சொல்லறீங்கன்னா அதிலே ஒரு அர்த்தம் இருக்குமே !! ;)))))

said...

வடிவா தெரிஞ்சு வைச்சுக்கிட்டு துடப்பத்தாலை விளாசோ விளாசெண்டு விளாசிஐமாச்சிட்டீங்ங்க அண்ணாத்தை.

நிறைய சிரிச்சாச்சு.

said...

//OSAI Chella said...
ha ha! super uvamaikal. appadiye aankalai pathi "AADAVAR unleased" ezhutha imsai arasi/my friend/aruntha vaalu enRU yaaravathu munaraveeNdum enRum kettukkoLkiren!//

வாங்க செல்லா :))))
அட ஆண்களைப்பத்தி போன பதிவுல நானே சொல்லி இருக்கேனே !! ஆண்GAL னு ஒரு பதிவு எழுதினதால அட ஆண்குல துரோகின்னு பசங்க நம்மளைப்போட்டு பொளந்துட்டாங்கல்ல??
:)))

said...

//நளாயினி said...
வடிவா தெரிஞ்சு வைச்சுக்கிட்டு துடப்பத்தாலை விளாசோ விளாசெண்டு விளாசிஐமாச்சிட்டீங்ங்க அண்ணாத்தை.

நிறைய சிரிச்சாச்சு.//

வாங்க நளாயினி :)))))
ஆஹா அழகா இருக்கே உங்க தமிழ் !! எனக்கும் கொஞ்சம் கத்துக்கொடுங்க ப்ளீஸ் !!

அட நான் துடைபதாலயே விளாசிட்டேனா??? :)) வெளிய சொல்லிடாதீங்க அப்புறம் என்னைய வெளாசிட போறாங்க :))))))))

said...

:)))))

Innum entha Ammaneesum unleash aagala :)))

said...

பாண்டிண்ணே,

சூப்பரு.... கலக்கலா இருக்கு இந்த பதிவு.... :))/இந்த ரேடியோவை Off பண்ண முடியாது ஆனா வேற ஸ்டேசனை வேணா மாத்திகிட்டு வேற பாட்டைக் கேக்கமுடியும் !! //


//துணிக்கடையிலே மூச்சு தெனறத் தெனற சும்மா பத்தாயிரம் கலர்ல சேலைகளை சேல்ஸ்மேன் நாக்கு வெளிய தள்ள அம்மணிகளுக்கு எடுத்துக்காட்டி இருந்தாலும் இதுல எல்லாம் இல்லாத பத்தாயிரத்து ஒண்ணாவது கலர்ல சேலை இருக்கான்னு அசால்ட்டா இல்லாத கலரைக் கேட்டு சேல்ஸ்மேன்களை தெனற அடிக்கரதோட இல்லாம பார்த்தீயாளா என் தெறமைய ன்ன//


சூப்பரு...... LOL

said...

//நம்ம பணி இந்த நடமாடும் தாஜ்மகால்களை ரசித்துக்கிடப்பதேன்னு இருந்தீங்கன்னாதான் வாழ்க்கையிலே நிம்மதியா கலர் கலரா நெனப்புகளை போட்டோ எடுத்துக்க முடியும் என்னா?
//

adada...ennama thinking...engeyoo poiyitinga jollu sir

said...

//உண்மையிலேலே உங்க ஆபீஸ்ல புதுசா சேர்ந்து இருக்குற ஜில்லு பிகர் ரிசப்ஷனிஸ்டோட பிட்டைப் போடுறீங்கங்கறதை சும்மா அசால்டா கண்டுபுடிக்கிற தனித்தெறமை இருக்கங்கறதை நீங்க மறந்துடக்கூடாதுங்கப்பூ !!!

//

yenugo mr JP ithu ellam unga sontha experience ah?appadiye puthu puthu vaikuringale...

said...

//
துணிக்கடையிலே மூச்சு தெனறத் தெனற சும்மா பத்தாயிரம் கலர்ல சேலைகளை சேல்ஸ்மேன் நாக்கு வெளிய தள்ள அம்மணிகளுக்கு எடுத்துக்காட்டி இருந்தாலும் இதுல எல்லாம் இல்லாத பத்தாயிரத்து ஒண்ணாவது கலர்ல சேலை இருக்கான்னு அசால்ட்டா இல்லாத கலரைக் கேட்டு சேல்ஸ்மேன்களை தெனற அடிக்கரதோட
//
நான் என் சிஸ்டர் மேரேஜ் டேக்கு ஒரு புடவை (ஜஸ்ட் 5 மினிட்ல எடுத்துட்டேன் அது வேற விசயம்).

கொண்டு போய் குடுத்தா சாரி கலர் டிசைன்லாம் நல்லா இருக்கு ஆனா இந்த புடவைக்கு இவ்ளோ விலை உன்னை தவிர யாரும் குடுக்கமாட்டான்னு சொன்னா.

அப்ப நினைச்சேன் ஒரு லோக்கல் கால் போட்டு விஷ் பண்ணிருந்திருக்கலாமோன்னு.

said...

//ஜி said...
:)))))

Innum entha Ammaneesum unleash aagala :)))//

வாங்க ஜி :)))
அட நீங்களே இப்படி சொன்ன எப்படி?? நாங்க நம்பீடோம்ல?? ;)))))

said...

//இராம்/Raam said...
பாண்டிண்ணே,

சூப்பரு.... கலக்கலா இருக்கு இந்த பதிவு.... :))//

வாங்க ராம் :)))
அட உங்களுக்கும் இதே மாதிரி பல பல அனுபவ அறிவு இருக்கும் போல தெரியுதே ;)))) அப்படியே சொல்லிட்டு போனா என்னவாம் ?? ;)))))

said...

//துர்கா|thurgah said...
//நம்ம பணி இந்த நடமாடும் தாஜ்மகால்களை ரசித்துக்கிடப்பதேன்னு இருந்தீங்கன்னாதான் வாழ்க்கையிலே நிம்மதியா கலர் கலரா நெனப்புகளை போட்டோ எடுத்துக்க முடியும் என்னா?
//

adada...ennama thinking...engeyoo poiyitinga jollu sir//

வாங்க துர்கா :)))
எல்லாம் உங்க ஆசீர்வதம்தாங்க :))

said...

//துர்கா|thurgah said...
//உண்மையிலேலே உங்க ஆபீஸ்ல புதுசா சேர்ந்து இருக்குற ஜில்லு பிகர் ரிசப்ஷனிஸ்டோட பிட்டைப் போடுறீங்கங்கறதை சும்மா அசால்டா கண்டுபுடிக்கிற தனித்தெறமை இருக்கங்கறதை நீங்க மறந்துடக்கூடாதுங்கப்பூ !!!

//

yenugo mr JP ithu ellam unga sontha experience ah?appadiye puthu puthu vaikuringale...//

அட அப்படியெல்லாம் இல்லீங்க துர்கா :))) எல்லாம் அனுபவஸ்தர்கள் சொல்லி கேட்டதுதாங்க நமக்குன்னு ஒன்னும் இல்லீங்க :)))

said...

//மங்களூர் சிவா said...
//
துணிக்கடையிலே மூச்சு தெனறத் தெனற சும்மா பத்தாயிரம் கலர்ல சேலைகளை சேல்ஸ்மேன் நாக்கு வெளிய தள்ள அம்மணிகளுக்கு எடுத்துக்காட்டி இருந்தாலும் இதுல எல்லாம் இல்லாத பத்தாயிரத்து ஒண்ணாவது கலர்ல சேலை இருக்கான்னு அசால்ட்டா இல்லாத கலரைக் கேட்டு சேல்ஸ்மேன்களை தெனற அடிக்கரதோட
//
நான் என் சிஸ்டர் மேரேஜ் டேக்கு ஒரு புடவை (ஜஸ்ட் 5 மினிட்ல எடுத்துட்டேன் அது வேற விசயம்).

கொண்டு போய் குடுத்தா சாரி கலர் டிசைன்லாம் நல்லா இருக்கு ஆனா இந்த புடவைக்கு இவ்ளோ விலை உன்னை தவிர யாரும் குடுக்கமாட்டான்னு சொன்னா.

அப்ப நினைச்சேன் ஒரு லோக்கல் கால் போட்டு விஷ் பண்ணிருந்திருக்கலாமோன்னு.//

வாங்க சிவா :))))))

அட உடன்பிறப்புன்னாலே நம்மளை கொஞ்சம் எக்ஸ்ரா கலாய்கரதுதானே பொழப்பே:)) உங்களுகும் இப்படி ஒரு இன்பியலான சம்பவம் இருக்கா?? :))) கால் போட்டு விஷ் பண்ணி இருந்தா அப்புறம் தெரிஞ்சிருக்கும் சிவா :))))))

said...

சரி,சாப்பிடுவதற்கு முன்பு படித்து வயிறு வலிக்க சிரிச்சா..வயிறு ரொம்பின மாதிரி ஆயிடப்போவுதே என்று சாப்பிட்டு விட்டு வந்து படித்தால்!!!
சிரிச்சு சிரிச்சி திரும்ப பசி எடுக்க ஆரம்பித்துவிட்டது. இப்ப போய் சமையல் அறையில் என்ன இருக்கு என்று பார்க்கவேண்டும். :-))

said...

//வடுவூர் குமார் said...
சரி,சாப்பிடுவதற்கு முன்பு படித்து வயிறு வலிக்க சிரிச்சா..வயிறு ரொம்பின மாதிரி ஆயிடப்போவுதே என்று சாப்பிட்டு விட்டு வந்து படித்தால்!!!
சிரிச்சு சிரிச்சி திரும்ப பசி எடுக்க ஆரம்பித்துவிட்டது. இப்ப போய் சமையல் அறையில் என்ன இருக்கு என்று பார்க்கவேண்டும். :-))//

வாங்க குமார் :)))
ஆஹா கேக்கவே சந்தோசமா இருக்கே :)))) இப்படி அடிக்கடி சிரிச்சு பசியெடுக்க வாழ்த்துக்கள் :))))

said...

எனக்கு ரொம்ம்பப் பிடிச்சது துணிக் கடை சமாச்சாரம் தாங்க - அதென்னங்க எல்லா அம்மிணிகளும் அப்ப்டித்தானா ?

said...

//cheena (சீனா) said...
எனக்கு ரொம்ம்பப் பிடிச்சது துணிக் கடை சமாச்சாரம் தாங்க - அதென்னங்க எல்லா அம்மிணிகளும் அப்ப்டித்தானா ?/

வாங்க சீனா சார்:))
எப்படி இருக்கீங்க? அட எல்லாம் அம்மணீகளும் அப்படித்தானான்னு எனக்கு தெரியாதுங்க. எல்லாம் உங்கள மாதிரி அனுபவஸ்தர்கள் சொல்றதை வச்சு எழுதினதுதாங்க :))))

said...

என்னா ஜொள்ளு

முட்டிக்கு முட்டி பின்னி உள்ள தள்ளிட்டாங்களா! கொஞ்ச நாளா blog பக்கமே காணோம்

said...

//Sridhar said...
என்னா ஜொள்ளு

முட்டிக்கு முட்டி பின்னி உள்ள தள்ளிட்டாங்களா! கொஞ்ச நாளா blog பக்கமே காணோம்//

வாங்க ஸ்ரீதர் :))
என்னாங்க என் மேல என்ன இவ்ளோ கோவம் ??? :))) இப்படி ஒரு ஆசையா?? ஹஹஹ முட்டிக்கு முட்டி தட்டி ஆபீஸ்ல வேலை வாங்கறாங்க ஸ்ரீதர் அதான் :)))) இதோ நாளைக்கே ஒரு போஸ்ட் போட்டுடறேன் :)))))

said...

// இந்த ரேடியோவை Off பண்ண முடியாது ஆனா வேற ஸ்டேசனை வேணா மாத்திகிட்டு வேற பாட்டைக் கேக்கமுடியும் !!//

ஆஹா..ஏன்ன ஒரு கண்டுபிடிப்பு...ஹிஹி...
நல்லாயிருக்கு..மாமு..

said...

//ரசிகன் said...
// இந்த ரேடியோவை Off பண்ண முடியாது ஆனா வேற ஸ்டேசனை வேணா மாத்திகிட்டு வேற பாட்டைக் கேக்கமுடியும் !!//

ஆஹா..ஏன்ன ஒரு கண்டுபிடிப்பு...ஹிஹி...
நல்லாயிருக்கு..மாமு..//

வாங்க ரசிகன் :))
( எதைய ரசிப்பீங்கண்ணு சொல்லுவேயில்லீங்களேன்னா;)) அட கண்டுபிடிப்பூனு சொல்லி நம்ம்ளை எடிசன் ரேஞ்சுக்கெல்லாம் புகழாதீங்கப்பூ:))) நெம்ம டேங்ஸ் ரசிகன் :)))