Tuesday, November 13, 2007

‘சைட்’ அடிக்கலாம் வாங்க !

நம்ம பசங்களும் சரி பொண்ணுங்களும் வாழ்க்கையிலே பல சுவாரசியமான விஷயங்களை miss பண்ணிடறாங்க. வாழக்கைய சுவாரசியமா மாத்திக்கறது நம்ம கையிலே இல்லீங்க!!! ஆனா நம்ம கண்ணுலதான் இருக்குன்னு நான் சொன்னா நம்புவீயளா ?? அட ஆமாங்க. அப்படியேக்கா நடந்து போய்கிட்டு இருக்கீங்க. ரோட்டோரமா ஒரு அழகான பூச்செடியப் பார்க்கறீங்க. ஆஹா இந்த பூ அழகா இருக்கேன்னு பார்த்து ஒரு குட்டி சந்தோஷத்தோட அப்படியே கடந்து போறீங்க இல்லியா? இதே மாதிரி தாங்க ‘சைட்’ டும். நீங்க அப்படியேக்கா நடந்து போய்கிட்டு இருக்கீங்க. எதிர்ல ஒரு அழகான பொண்ணு ஒண்ணு உங்களுக்கு புடிச்ச மாதிரி மினி ஸ்கர்ட் போட்ட நமீதா மாதிரி உங்க கண்ணை கன்னாபின்னானு கவர்ந்துகிட்டு வருதுன்னு வைங்க உடனே உங்க மண்டைகுள்ள ஒரு 100 வாட்ஸ் பல்பு ‘குய்யோ’ னு எரியும் பாருங்க அதுதான். அப்படியேக்கா வெளிய வரத்துடிக்கிற உங்க நாக்கை கொஞ்சம் கஷ்டப்பட்டு வாய்குள்ளாரவே நாலா மடக்கி வச்சுகிட்டு அந்த பொண்ணொட அழகை மட்டும் போறபோக்கிலே ஒரு 10 செகண்ட் ரசிச்சீங்கன்னா மனசுக்குள்ள அப்படியே ஒரு தெய்வீக சந்தோசம் வந்து சேர் போட்டு குந்திக்குமே அதை அனுபவச்சிருக்கீயளா ? ( இதே நீங்க பொண்ணுன்னா ஸ்மார்டான பையன்னு மாத்திகுங்க அம்மணீஸ் ஓகேவா ? )

நெறைய பேரு ‘ சைட்’ அடிக்கிறதுன்னா ரொம்ப தப்பா நெனசுக்கறாங்க. அதெல்லாம் ‘சைட் சைக்காலஜி ‘ பத்தி தெரியாதவங்க சொல்லுற அல்பதனமான argument. சைட் அடிக்கறதுங்கரது ஒரு கலை தெரியுங்களா? என்னடா இது கேவலம் சைட் எப்படி கலையாகும்னு நீங்க எல்லாம் வாயப்பொளக்கறது எனக்குத்தெரியுது !! door close plz. ஏன்னா இந்த கலையையும் கத்துக்கனும். ‘ சைட் டெக்னாலஜி' பத்தி சொல்லத்தானே நான் இருக்கேன் !!!

முதல்ல சைட் அடிக்கிறது ஒன்வே ட்ராபிக் மாதிரி இருக்கனும் எதிராளிக்கு கூடுமானவரை தெரியக்கூடாது. ( தெரிஞ்சா ஒண்ணும் இல்லீங்க அப்புறம் அந்த பொண்ணோ/ பையனோ பண்ணுர அழிச்சாட்டியம் தாங்காது அதான் ! ) சைட் அடிகிறப்போ அப்படியே பிச்சக்காரன் பிச்சகோழி வறுவலை பார்க்கர மாதிரி ஆன்னு பார்க்க கூடாது. அப்படியே ஏதோ நீங்க வயிறு முட்ட சாப்டுட்டு அப்பாலைக்கா வர்ற ‘டெஸர்ட்’ டை பார்க்கிற மாதிரி வெறுப்பாவும் இல்லாம ஆய் ஆய்னும் இல்லாம ஒரு குத்தாம்போக்கிலே ஜெண்டிலா பார்க்கணும் . ‘சைட்’ அடிக்கறதோட நேரத்தை பொறுத்து அது ஜொள்ளுன்னு பெயர் மாற்றம் அடையக்கூடிய அபாயம் இருக்குங்கரதையும் நீங்க மறந்துடக்கூடாதுங்கண்ணா.

எப்போலாம் சைட் அடிக்கலாம்னு இப்போ பார்க்கலாமா? இந்த சைட் அடிக்கறதோட ‘ப்யூட்டி’ யே இதுக்கு நேரம் காலம் இடம் பொருள் ஏவல் ஒவல் இப்படி எந்த கருமாந்தரமும் இல்லாததுதான் . நீங்க நடக்கறப்போ, ஓடுறப்போ, ( நாய் தொரத்தரப்போ வேணாம் ப்ளீஸ் ! ) ஆபிஸிலே உட்கார்ந்துகிட்டு இருக்குரப்போ, ஷாப்பிங் போறப்போ, வண்டியிலே போறப்போ ( ஓரமா மெதுவா போறப்போ மட்டும் ) இப்படி எப்போவேணாலும் எங்கயும் . ஆனா இதெல்லாம் beginners in ‘சைட்’ டிங்குகளுக்குத்தான். கொஞ்சம் நம்மள மாதிரி எக்ஸ்பிரியன்ஸ் gain பண்ணிட்டீங்கன்னா எவ்ளோ வேகமா வண்டியிலே போனாலும் எவ்ளோ அவசரமா flight/ train ஐ பிடிக்க தலைதெரிக்க ஓடிகிட்டு இருந்தாலும் கெடைக்கிர ஒரு செகண்ட் gap பைகூட வீணாக்காம சைட் அடிக்க சான்ஸ் கெடைச்சா ச்சும்மா கண்ணாலயே ரவுண்டு கட்டி மனசுக்கு charge ஏத்திகிட்டு பட்டையக் கெளப்பலாங்கோ !!

சரி இனி சைட் அடிக்கறதோட நன்மைகள் என்னென்னானு பார்க்கலாமா?

'சைட்' அடிக்கிறது உங்களோட bloodpressure ஐ குறைக்குதுங்க. (சில லோக்கல் நமீதாக்களைப் பார்க்கறப்போ மட்டும் கொஞ்சம் ரிவஸ் ப்ராஸஸ் ஆய்டும் ஓகே? )

மனசுக்குள்ள அப்படியே ஒரு தெய்வீக அமைதி உண்டாவதை உணருவீங்க ( அடுத்த தெய்வீக அமைதி எங்கே கிடைக்கும்னு ஒரு தேடல் இருந்துகிட்டே இருக்கனும் சரியா ? )

சைட் அடிச்சா நமக்கும் சந்தோசம் நம்மளால சைட் அடிக்கப்படுறவுகளுக்கும் கொள்ளை சந்தோசம். ( அது உங்க மனைவிக்கு/ காதலிக்கு தெரிஞ்சா நீங்க உங்க dentist கிட்டே ஒரு emergency appoinment வாங்கவேண்டி இருந்தாலும் இருக்கலாம்!! ஜாக்கிரதை )

தேவையில்லாம காதல் கத்தரிக்காய்னு சாம்பார் வைக்கவேண்டிய அவசியம் எல்லாம் சைட் ல கெடையாதுங்க ( திரும்ப திரும்ப ஒரே ஆளை சைட் அடிக்காத வரைக்கும்தான் இது ஒர்க் அவுட் ஆகும் ஓகே ? )

அழகா இல்லாட்டியும் அவங்க மனசு புண்படக்கூடாதேன்னு நீங்க ஒரு லேசா ஒரு ‘லுக்’ கைபோட்டு சைட் உட்டீங்கண்ணா அவுக மனசு கூட கொஞ்சம் சந்தோசமாகுமில்ல? அடுத்தவுக மனசை சந்தோசப் படுத்தின ஒரு திருப்தியும் கெடைக்கும் உங்களுக்கு ( அப்புறம் அவுக கூடவே ஓடியார ரிஸ்க்கும் இருக்கு இதிலே !! ரிஸ்க் எடுக்கரது நமக்கெல்லாம் ரஸ்க்கு சாப்புடர மாதிரின்னா வேணா ரிஸ்க் எடுங்க!! பின்விளைவுகளுக்கு நான் பொறுப்பில்லை )

ஓகே கண்ணுகளா அல்லாரும் நான் சொன்ன சொல்லாத டிப்ஸ் சை வச்சு சந்தோஷமா ‘சைட்’ அடிச்சு வாழ்க்கைய கொண்டாடுங்க சரியா ? உங்களுக்கு எதாச்சும் தெரிஞ்ச டிப்ஸ் இருந்தா அப்படியே பறிமாறிட்டுபோங்கப்பூ சரியா ?

67 பேர் வளைச்சு வளச்சு ஜொள்ளிருக்காங்க:

said...

பாண்டி நீங்க 'சைட் டெக்னாலஜி' தான் படிச்சீங்களா?

அதுல PG மட்டுமா? P.hd வர போகுதா?

said...

//J K said...
பாண்டி நீங்க 'சைட் டெக்னாலஜி' தான் படிச்சீங்களா?

அதுல PG மட்டுமா? P.hd வர போகுதா?//

வாங்கண்ணா JK :))
ஆஹா என்ன இது இதெல்லாம் படிக்க வேண்டியதில்லை JK அப்படியே directa ஆ practicals தான் ;)))) இதுகெல்லாம் phd கொடுத்தா நம்மள சவட்டி எடுத்துடுவங்கப்பூ !!!

said...

அருமையான டிப்ஸ். இதுவரை நான் தான் இதுல Phd னு நெனச்சேன். இப்பதான் தெரியுது நான் L.K.G னு
நன்றி

said...

//பொறுக்கி said...
அருமையான டிப்ஸ். இதுவரை நான் தான் இதுல Phd னு நெனச்சேன். இப்பதான் தெரியுது நான் L.K.G னு
நன்றி//

வாங்கண்ணா பொறுக்கி :))
( கொஞ்சம் பேர மாத்துங்கப்பூ) அட நீங்க வேர நம்மளை விடா படா தில்லாலங்கடியெல்லாம் இருக்காவ... :))))

said...

"சைட்டிஸ்ட்" ஜொள்ளுபாண்டி எங்களமாதிரி காஞ்சு போன ஊருல இருப்பவங்களுக்கு?

said...

ஆஹா இதெல்லாம் இருக்கா? இந்த டெக்னாலஜிக்கு டியூசன் இருக்கா?

said...

\\கொஞ்சம் நம்மள மாதிரி எக்ஸ்பிரியன்ஸ் gain பண்ணிட்டீங்கன்னா\\

எத்தனை வருட எக்ஸ்பிரியன்ஸ் உங்களுக்கு????

said...

//குசும்பன் said...
"சைட்டிஸ்ட்" ஜொள்ளுபாண்டி எங்களமாதிரி காஞ்சு போன ஊருல இருப்பவங்களுக்கு?//

வாங்க குசும்பன் அண்ணாத்தே :))))
ஆஹா உங்க ஊரிலே இதுகெல்லாம் முதுகிலே பேரல் கட்டுற ( டின் எல்லாம் நம்ம ஊரூ கொசுங்க! ) பழக்கம் இருக்கறதால பேசாம துபாய்க்கு ட்ரிப் அடிச்சிருங்கப்ப்பூ !!! அங்கதான் ஒன்னும் கெடையாதே!! :))))))

said...

//ILA(a)இளா said...
ஆஹா இதெல்லாம் இருக்கா? இந்த டெக்னாலஜிக்கு டியூசன் இருக்கா?//

வாங்க இளா :))))))))))))
அட இதுகெல்லாம் டுயூசன் என்னால் எடுக்க முடியாதுங்க!!! டெக்னாலஜிய அப்படியே பசுமையான ஏரியல இருக்குற டீக்கடையிலெ நின்னு தானா கத்துக்கவேண்டியதுதான் ;)))))))))))

said...

//Anonymous said...
\\கொஞ்சம் நம்மள மாதிரி எக்ஸ்பிரியன்ஸ் gain பண்ணிட்டீங்கன்னா\\

எத்தனை வருட எக்ஸ்பிரியன்ஸ் உங்களுக்கு????//

வாங்க :)))))
அட இதுக்கெல்லாம் இவ்ளோ வருஷம் எக்ஸ்பிரியன்சுன்னு ரெஸ்யூமா ப்ரிபேர் பண்ணிகிட்டு அலைய முடியும் ?? அட போங்க....;))))))

said...

தெரியாத நண்பர்களுக்கும் பிகருகளுக்கும் சைட்டாளஜி கற்றுக்கொடுத்த ஜொள்ளுப் பாண்டி - வாழ்க - பள்ளி சென்ற காலத்தில் பக்கத்து சீட்டில் இருந்து மனதை அலைக்கழித்த இரட்டைச் சடையை இன்னும் மறக்க முடியவில்லை.

said...

அண்ணாச்சி... கலக்கிப்புட்டிய... இப்படியெல்லாம் சொல்லி ஹோம் சிக் வர வச்சிட்டீங்க :((((


நான் இப்பவே இந்தியா போவனும்... :((((

said...

ஏனுங்க ஜொள்ளூப்பாண்டி மாம்ஸ்..இந்தக்கால பசங்களுக்கு நாம ஜொள்ளுப்பத்தி சொல்லித்தர தேவையில்ல ..ஸ்கூலுலியே.. நம்மல விட எக்ஸ்பர்ட்டாயிருக்காய்ங்கள்ல..ஹிஹி..

// முதல்ல சைட் அடிக்கிறது ஒன்வே ட்ராபிக் மாதிரி இருக்கனும் எதிராளிக்கு கூடுமானவரை தெரியக்கூடாது. ( தெரிஞ்சா ஒண்ணும் இல்லீங்க அப்புறம் அந்த பொண்ணோ/ பையனோ பண்ணுர அழிச்சாட்டியம் தாங்காது அதான் ! ) //
இது சூப்பருங்கோஓஓஓஓஓஓஓ.......ஹா..ஹா...

// நீங்க ஒரு லேசா ஒரு ‘லுக்’ கைபோட்டு சைட் உட்டீங்கண்ணா அவுக மனசு கூட கொஞ்சம் சந்தோசமாகுமில்ல? அடுத்தவுக மனசை சந்தோசப் படுத்தின ஒரு திருப்தியும் கெடைக்கும் உங்களுக்கு//

இந்த பொதுத்தொண்ட நான் கடந்த பத்து வருஷமா தவராம கடைபிடிக்கிறேன்..மாமே....ஹிஹி..

said...

//அழகா இல்லாட்டியும் அவங்க மனசு புண்படக்கூடாதேன்னு நீங்க ஒரு லேசா ஒரு ‘லுக்’ கைபோட்டு சைட் உட்டீங்கண்ணா அவுக மனசு கூட கொஞ்சம் சந்தோசமாகுமில்ல? //

இதுல முற்போக்கான உங்க சமூக சீர்திருத்த சிந்தனை தெரியுதுங்கோ...குழந்தைகளுக்கு ஒரு நேரு மாமா போல ஜொள்ளர்களுக்கு நீங்க ஒரு ஜொள்ளு மாமா...இன்று முதல் பாண்டியாரின் பிறந்த நாள் தினம் "ஜொள்ளு ஜெயந்தி"யாகக் கொண்டாடக் கடவது.
:)

said...

உங்க அலிச்சாட்டியம் தாங்கல பாண்டி!

எங்கேயிருந்து படம் கிடைக்குது உங்க போஸ்டுக்கு, ரொம்ப பொருத்தமா படம் போட்டிருகிறீங்க.....ஸோ அதுக்கு மட்டும் பாராட்டுக்கள்!

said...

ஹலோ பாண்டி, கொஞ்சம் டவுட் க்ளியர் பண்ணுபா...

1.'சைட்' அடிக்க வயது வரம்பு எதுனாச்சும் இருக்கா?

2.இப்போ எல்லாம் எல்லா பொண்ணுங்களும் சுடிதார் போட்டுக்கிறாங்கோ, கல்யாணம் ஆனவங்க யாரு, கல்யாணம் ஆகாத பொண்ணு யாருன்னே தெரிலபா, கழுத்துல தாலி கூட போடுறதில்ல, ஸ்டைலாம்..........எப்படி கண்டுபிடிக்கிறது நாம சைட் அடிக்கிற ஃபிகருக்கு கண்ணாலம் ஆகிடுச்சா ஆகலியான்னு???

said...

பாண்டிண்ணே என்னைய கலாய்க்கலியே??

said...

//
மினி ஸ்கர்ட் போட்ட நமீதா மாதிரி உங்க கண்ணை கன்னாபின்னானு கவர்ந்துகிட்டு வருதுன்னு வைங்க உடனே உங்க மண்டைகுள்ள ஒரு 100 வாட்ஸ் பல்பு ‘குய்யோ’ னு எரியும் பாருங்க
//
கிட்டக்க வர வர 100 வாட் பல்பு 1000 வாட் பல்பா மூளைய கருக்கீருதே பாண்டி இன்னா பன்றது??

said...

//cheena (சீனா) said...
தெரியாத நண்பர்களுக்கும் பிகருகளுக்கும் சைட்டாளஜி கற்றுக்கொடுத்த ஜொள்ளுப் பாண்டி - வாழ்க - பள்ளி சென்ற காலத்தில் பக்கத்து சீட்டில் இருந்து மனதை அலைக்கழித்த இரட்டைச் சடையை இன்னும் மறக்க முடியவில்லை.//

வாங்க சீனா சார்:)))
இப்படியெல்லாம் நம்மள சொல்லி நெளிய வைக்கிறீயளே !! :))) பேசாம ரெட்டை சடை வயசுன்னூ ஒரு போஸ்ட் போட்டுடுங்க :))))

said...

//ஜி said...
அண்ணாச்சி... கலக்கிப்புட்டிய... இப்படியெல்லாம் சொல்லி ஹோம் சிக் வர வச்சிட்டீங்க :((((


நான் இப்பவே இந்தியா போவனும்... :((((//

வாங்க ஜி :)))
அட என்னா இது சின்னப்புள்ளதனமா அழுதுகிட்டு?? :))) எங்க இருந்தா என்னாங்க ஜி அங்கனயே பட்டாசு கொளுத்த வேண்டியதுதானே ?? :)))

said...

//ரசிகன் said...
ஏனுங்க ஜொள்ளூப்பாண்டி மாம்ஸ்..இந்தக்கால பசங்களுக்கு நாம ஜொள்ளுப்பத்தி சொல்லித்தர தேவையில்ல ..ஸ்கூலுலியே.. நம்மல விட எக்ஸ்பர்ட்டாயிருக்காய்ங்கள்ல..ஹிஹி..//

வாங்க ரசிகன் :))))
அட அப்படியா எனக்கு தெரியாதே !!! :))) காதைக் கொடுங்க !!! நானும் ஸ்கூலுல இருக்குறப்போவே கத்துகிட்டதுதான் ஹிஹிஹிஹிஹி:)))))

// முதல்ல சைட் அடிக்கிறது ஒன்வே ட்ராபிக் மாதிரி இருக்கனும் எதிராளிக்கு கூடுமானவரை தெரியக்கூடாது. ( தெரிஞ்சா ஒண்ணும் இல்லீங்க அப்புறம் அந்த பொண்ணோ/ பையனோ பண்ணுர அழிச்சாட்டியம் தாங்காது அதான் ! ) //
இது சூப்பருங்கோஓஓஓஓஓஓஓ.......ஹா..ஹா...

// நீங்க ஒரு லேசா ஒரு ‘லுக்’ கைபோட்டு சைட் உட்டீங்கண்ணா அவுக மனசு கூட கொஞ்சம் சந்தோசமாகுமில்ல? அடுத்தவுக மனசை சந்தோசப் படுத்தின ஒரு திருப்தியும் கெடைக்கும் உங்களுக்கு//

இந்த பொதுத்தொண்ட நான் கடந்த பத்து வருஷமா தவராம கடைபிடிக்கிறேன்..மாமே....ஹிஹி..//

ஆஹா நீங்களும் இப்படி பொது பொட்டுசேவையா சத்தமில்லாம நடத்டிகிட்டு இருகீயளா ??:))) இப்படி தாங்க இருக்கணும் நல்ல மனசு !!! :)))) கலக்குங்க !!

said...

//கைப்புள்ள said...
//அழகா இல்லாட்டியும் அவங்க மனசு புண்படக்கூடாதேன்னு நீங்க ஒரு லேசா ஒரு ‘லுக்’ கைபோட்டு சைட் உட்டீங்கண்ணா அவுக மனசு கூட கொஞ்சம் சந்தோசமாகுமில்ல? //

இதுல முற்போக்கான உங்க சமூக சீர்திருத்த சிந்தனை தெரியுதுங்கோ...குழந்தைகளுக்கு ஒரு நேரு மாமா போல ஜொள்ளர்களுக்கு நீங்க ஒரு ஜொள்ளு மாமா...இன்று முதல் பாண்டியாரின் பிறந்த நாள் தினம் "ஜொள்ளு ஜெயந்தி"யாகக் கொண்டாடக் கடவது.:)//

வாங்க வாங்க தல கைப்பூ :))
நல்லா இருக்கீயளா?/ ரொம்ப நாளா நீங்க இல்லாம பேட்டை தவிச்சு போய்டுச்சு அண்ணாத்தே :))))

அட என்னாங்க கைப்பூ நம்மள நேரு ரேஞ்சுக்கெல்லாம் சொல்லிகிட்டு போங்க.... ரொம்ப வெக்கப்பட்டிங்ஸ் ஜொள்ஸ் ... :))))))

said...

//Divya said...
உங்க அலிச்சாட்டியம் தாங்கல பாண்டி!

எங்கேயிருந்து படம் கிடைக்குது உங்க போஸ்டுக்கு, ரொம்ப பொருத்தமா படம் போட்டிருகிறீங்க.....ஸோ அதுக்கு மட்டும் பாராட்டுக்கள்!//

வாங்க திவ்யா :))))

ஆஹா என்னாங்க இது நல்லவங்களுக்கு காலம் இல்லை !! நானா அழிச்சாட்டியம் பண்றேன்??? மனச தொட்டு சொல்லுங்க??? ;))))))

அட படம் காட்டிதானே வாழ்கையவே ஓட்டிக்கிட்டு இருக்கோம் ?? ;)))))

said...

//Anonymous said...
ஹலோ பாண்டி, கொஞ்சம் டவுட் க்ளியர் பண்ணுபா...//

வாங்க :))
பண்ணிடலாம் :))

//1.'சைட்' அடிக்க வயது வரம்பு எதுனாச்சும் இருக்கா?//

அட இதுகெல்லாம் கெடையவே கெடையாது :))))

//2.இப்போ எல்லாம் எல்லா பொண்ணுங்களும் சுடிதார் போட்டுக்கிறாங்கோ, கல்யாணம் ஆனவங்க யாரு, கல்யாணம் ஆகாத பொண்ணு யாருன்னே தெரிலபா, கழுத்துல தாலி கூட போடுறதில்ல, ஸ்டைலாம்..........எப்படி கண்டுபிடிக்கிறது நாம சைட் அடிக்கிற ஃபிகருக்கு கண்ணாலம் ஆகிடுச்சா ஆகலியான்னு???//

'சைட்டுக்கு உண்டோ அடைக்கும் தாழ்!! ' அப்படீன்னு நம்ம தாத்தா வள்ளுவர் அப்போவே சொல்லி இருக்காரில்லையா ?? ;)))))))

said...

//மங்களூர் சிவா said...
பாண்டிண்ணே என்னைய கலாய்க்கலியே??//

வாங்க சிவா :))))
அட உங்களைபோய் காலாய்ப்பேனா ?? ;))))

said...

// தெரிஞ்சா ஒண்ணும் இல்லீங்க அப்புறம் அந்த பொண்ணோ/ பையனோ பண்ணுர அழிச்சாட்டியம் தாங்காது அதான் //

இதில் பொண்ணுங்க தான் டாப்பு!!!! எப்பா!!!! சும்மா ஒரு பார்வை பாத்துட்டா போதும் அடுத்த நாள்லேந்து போடுற சீன் இருக்கே தாங்காது..பசங்க ரொம்ப பாவம்!!! அப்படியே பல்ல காட்டி இளிக்கரதோட சரி..

பி.கு : என் ஆபிஸில் சைட் அடித்து அலுத்துவிட்டதால் தங்கள் ஆபீஸ் முகவரி தரும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்!!!!

said...

//Kamal said...
// தெரிஞ்சா ஒண்ணும் இல்லீங்க அப்புறம் அந்த பொண்ணோ/ பையனோ பண்ணுர அழிச்சாட்டியம் தாங்காது அதான் //

இதில் பொண்ணுங்க தான் டாப்பு!!!! எப்பா!!!! சும்மா ஒரு பார்வை பாத்துட்டா போதும் அடுத்த நாள்லேந்து போடுற சீன் இருக்கே தாங்காது..பசங்க ரொம்ப பாவம்!!! அப்படியே பல்ல காட்டி இளிக்கரதோட சரி..//

வாங்க கமல் :)))
என்னங்க பல தடவை ஈஈஈ காட்டி நொந்து நூடுல்ஸ் ஆகி இருப்பீங்க போல இருக்கே !!! ;)))) ஓகே ஓகே வரலாற்று ரகசியம் அதெல்லாம் :)))
லூசில விடுங்க...

//பி.கு : என் ஆபிஸில் சைட் அடித்து அலுத்துவிட்டதால் தங்கள் ஆபீஸ் முகவரி தரும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்!!!!//

அட நீங்க வேறங்க கமல் !! நாங்களே காய்ஞ்சு போய் வறக்காட்டுல உக்கார்துகிட்டு இருக்கோம்... :)))) சென்னையல் தானே இருக்கீக? citi center போய் try பண்ணிப்பாருங்களேன் .. ;)))))

said...

குருவே அப்பிடியே சைட் அடிக்கிற figure-ஏ எப்படி pick up பண்ணுறதுன்னு ஒரு போஸ்ட் போட்டிங்கனா ரொம்ப சந்தோசமா follow பண்ணிபோம். புஸ்தகம் எதாச்சும் போடுற ஐடியா இருக்கா?

said...

super! :) gundumama! linkl thantar

said...

// அழகை மட்டும் போறபோக்கிலே ஒரு 10 செகண்ட் ரசிச்சீங்கன்னா மனசுக்குள்ள அப்படியே ஒரு தெய்வீக சந்தோசம் வந்து சேர் போட்டு குந்திக்குமே அதை அனுபவச்சிருக்கீயளா ?//
ஜொல்ளாரே....நீங்க தான் இனிமே என் குரு..
ஜொள்ளாநந்தரே......என்னை சிஷ்யாணாக ஏற்று கொள்ளுங்கள்..ஜொல்ளாரே....

said...

Ungalaladan indha mathiri research lam panna mudiyum jollZZZ...
But unga photo ku bathila vera yarr photo vo potrukengale!!!

said...

//gundumama said...
குருவே அப்பிடியே சைட் அடிக்கிற figure-ஏ எப்படி pick up பண்ணுறதுன்னு ஒரு போஸ்ட் போட்டிங்கனா ரொம்ப சந்தோசமா follow பண்ணிபோம். புஸ்தகம் எதாச்சும் போடுற ஐடியா இருக்கா?//

வாங்க குண்டுமாமா :)))
என்னாங்க இது பேரே ச்சும்மா.. அதிருது... :))) அட நான் குருவா?? என்னைய வச்சு காமெடி ஏதும் பண்ணலையே?? :)))அட அதெல்லாம் கொஞ்சம் பெரியவங்ககிட்டே கேளுங்கப்பூ :)))))

said...

//Raz said...
super! :) gundumama! linkl thantar//

வாங்க ராஸ் :)))
ஆஹா குண்டுமாமா லிங்க் கொடுத்தாரா? பேட்டைப்பக்கம் வந்ததுக்கு ரொம்ப தேங்கஸ்ங்க..:)))))

said...

//ரங்கன் said...
// அழகை மட்டும் போறபோக்கிலே ஒரு 10 செகண்ட் ரசிச்சீங்கன்னா மனசுக்குள்ள அப்படியே ஒரு தெய்வீக சந்தோசம் வந்து சேர் போட்டு குந்திக்குமே அதை அனுபவச்சிருக்கீயளா ?//
ஜொல்ளாரே....நீங்க தான் இனிமே என் குரு..
ஜொள்ளாநந்தரே......என்னை சிஷ்யாணாக ஏற்று கொள்ளுங்கள்..ஜொல்ளாரே....//

வாங்க ரங்கன் வாங்க :))))))
அஹா இனிக்கு பலபேரு என்னையா குரு ஆக்கியே தீர்ரதுன்னு கங்கனம் கட்டிக்கிட்டு இருக்கீக போல இரூக்கே !!! :))) நானெல்லாம் ஆசிரமம் வெச்சா நாடு தாங்காதுங்கப்ப்பூ... :))))

ரங்கன் நீங்களே என்னோட குரு நாமக்கல் சிபிகிட்டே இருகீங்களே... நானே அவரோட சிஷ்யகோடியா இருந்தவன் தானே :))))))))

said...

//( அது உங்க மனைவிக்கு/ காதலிக்கு தெரிஞ்சா நீங்க உங்க டென்டிச்ட் கிட்டே ஒரு எமெர்கென்cய் அப்பொஇன்மென்ட் வாங்கவேண்டி இருந்தாலும் இருக்கலாம்!! ஜாக்கிரதை )//

அப்பிடியே, எந்தெந்த டென்டிஸ்டுங்க எமெர்ஜென்சி கேசுங்களப் பாப்பாங்கன்னும் ஒரு லிஸ்ட் குட்த்தீங்கன்னா நல்லாயிருக்கும் :) ச்சும்மா..ஒரு தற்காப்புக்குதான்..

said...

// ..."நாலு பொண்ணுங்க
சந்தோசப்படறாங்கன்னா
'சைட் ' அடிக்கறதிலே
தப்பே இல்ல !" //

enna oru thathuvam !lesa grass itching

said...

நாமக்கல் சிபி தான் உங்களுக்கும் குருவா அட தெரியாமா போசேய்...
என்ன இருந்தாலும் நீங்க குருவை மிஞ்சின சிஷ்யன் தான் என்பதை எந்த ஜொல்லராலும் ஜொல்லியாலும்
மறுக்க முடியாது...

said...

//தஞ்சாவூரான் said...
//( அது உங்க மனைவிக்கு/ காதலிக்கு தெரிஞ்சா நீங்க உங்க டென்டிச்ட் கிட்டே ஒரு எமெர்கென்cய் அப்பொஇன்மென்ட் வாங்கவேண்டி இருந்தாலும் இருக்கலாம்!! ஜாக்கிரதை )//

அப்பிடியே, எந்தெந்த டென்டிஸ்டுங்க எமெர்ஜென்சி கேசுங்களப் பாப்பாங்கன்னும் ஒரு லிஸ்ட் குட்த்தீங்கன்னா நல்லாயிருக்கும் :) ச்சும்மா..ஒரு தற்காப்புக்குதான்..//

வாங்க தஞ்சாவூரன் :)))
அட இதையும் நானே தான் கொடுக்கணுமா?? ;)))) டெண்டிஸ்ட் கிட்டே போகாம தப்பிக்க தானே ஐடியாவ கொடுத்து இருக்கேன் :)))))

said...

//Anonymous said...
// ..."நாலு பொண்ணுங்க
சந்தோசப்படறாங்கன்னா
'சைட் ' அடிக்கறதிலே
தப்பே இல்ல !" //

enna oru thathuvam !lesa grass itching//

வாங்க அனானி :))))
அஹா புல்லரிக்குதுங்கறதானிப்படி இங்கிலிபிஸிலே சொல்லுறீயளா ?? :)))) நாம்மளால முடிஞ்சது எதோ ... :))))))

said...

//ரங்கன் said...
நாமக்கல் சிபி தான் உங்களுக்கும் குருவா அட தெரியாமா போசேய்...
என்ன இருந்தாலும் நீங்க குருவை மிஞ்சின சிஷ்யன் தான் என்பதை எந்த ஜொல்லராலும் ஜொல்லியாலும்
மறுக்க முடியாது...//

வாங்க ரங்கன் :))))
ஆஹா இப்படியெல்லாம் சொல்லி என் குருவை பெருமைப்பட வைகிறீயளே :)))))) எல்லாம் உங்க ஆதரவு தாங்க... ;)))))

said...

//subha said...
Ungalaladan indha mathiri research lam panna mudiyum jollZZZ...
But unga photo ku bathila vera yarr photo vo potrukengale!!!//

வாங்க சுபா :)))
அட ஏன் இப்படி ?? உங்களாலும் முடியும்.. ;)))))) என் போட்டோ போட்டா அப்புறம் ஆட்டோ இல்ல வரும் ?? ;)))))

said...

\\இந்த சைட் அடிக்கறதோட ‘ப்யூட்டி’ யே இதுக்கு நேரம் காலம் இடம் பொருள் ஏவல் ஒவல் இப்படி எந்த கருமாந்தரமும் இல்லாததுதான் \\

இந்த கருமத்தை பண்றதுக்கு நீ நேரம் காலம் வேற பார்க்கனும்னு சொல்லுவியோன்னு பார்த்தேன்.

said...

//Anonymous said...
\\இந்த சைட் அடிக்கறதோட ‘ப்யூட்டி’ யே இதுக்கு நேரம் காலம் இடம் பொருள் ஏவல் ஒவல் இப்படி எந்த கருமாந்தரமும் இல்லாததுதான் \\

இந்த கருமத்தை பண்றதுக்கு நீ நேரம் காலம் வேற பார்க்கனும்னு சொல்லுவியோன்னு பார்த்தேன்.//

வாங்க அனானி :)))
அட இது கருமமே தான் !! கருமமே கண்ணா இருக்கனும் நேரம் காலம் பார்க்காம... எப்படீங்க இப்படி என்னைய மாதிரியே சிந்திக்கிறீங்க ?? :))))))

said...

Adeengappa! Ninga romba nallavaru Mr Jollu :P And
Gundu maama unga sevai parava link pottu irukanga...

Epdi ivlo nalla ennam? Naama matum illama oorey jollu vidanumna? :P

Nalla irunga!

said...

Any chance do u take part in any community in the name of Jollupandi??? Engayo apdi paatha maari iruku! :>

said...

ஜொள்ளுப்பாண்டி அண்ணே , உங்களது தீபிகா படுகோனே ஜொள்ளல்லை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்

said...

ஜொள்ளுப்பாண்டி,

நவம்பர் மழையில் சென்னையே நச நசன்னு ஈரமாயிருக்கு... இப்படி ஊரையே ஜொள்ளு விடச்சொல்லி இன்னும் வெள்ளக்காடாக்காத ராசா!!

மெய்யான Mouth Watering டாபிக் இதுதான்யா!

இருக்குறதுலேயே பெரிய சந்தோஷம் அடுத்தவங்களை சந்தோஷப் படுத்துறதுன்னு "ஈரமான" பாயிண்ட்டைச் சொன்னதுக்கு... ஏதோ கால்கட்டுன்னு வலையில் வலிந்து மாட்டிக்கிற வரைக்குமாவது இப்படி (அல்ப)சந்தோஷமா இரு!

said...

//Ponnarasi Kothandaraman said...
Adeengappa! Ninga romba nallavaru Mr Jollu :P And
Gundu maama unga sevai parava link pottu irukanga...

Epdi ivlo nalla ennam? Naama matum illama oorey jollu vidanumna? :P

Nalla irunga!//

வாங்க பெண்ணரசி பொன்னரசி :)))
அஹா குண்டுமாமா இப்படியெல்லாம் சமூகசேவை செய்யறாரா? ரொம்ப நல்ல விசயம் தானுங்களேன் ! :))) அட ஊரே சந்தோசமா இருந்தா நல்லதுதானுங்க பொன்னரசி??? !! நாலு பேரு நல்லா இருந்தா நாமளும் நல்லா இருப்போம்ல? அதான் நம்ம பாலிசி !! :))))

said...

//Ponnarasi Kothandaraman said...
Any chance do u take part in any community in the name of Jollupandi??? Engayo apdi paatha maari iruku! :>//

ஆமாங்க பொன்னரசி :)))
நாங்க வருத்தப்படாத வாலிபசங்கத்து சிங்கம்ல?? ;)))) அதிலே பார்த்து இருப்பீகளோ??

said...

//padippavan said...
ஜொள்ளுப்பாண்டி அண்ணே , உங்களது தீபிகா படுகோனே ஜொள்ளல்லை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்//

வாங்க படிப்பவரே :))))
அட யாருங்க அது தீபிகா படுகோனே? அட நம்ம அண்ணாத்தே டோனியோட சைட்டா ?? ஹஹஹஹஹ....

said...

//Hariharan # 03985177737685368452 said...
ஜொள்ளுப்பாண்டி,

நவம்பர் மழையில் சென்னையே நச நசன்னு ஈரமாயிருக்கு... இப்படி ஊரையே ஜொள்ளு விடச்சொல்லி இன்னும் வெள்ளக்காடாக்காத ராசா!!

மெய்யான Mouth Watering டாபிக் இதுதான்யா!//

வாங்க வாங்க ஹரிஹரன் :)))
என்ன நம்ம பேட்டை பகமே வரலையே நீங்க இவ்ளோ நாளா ?? :))) ஆஹா மழையோட மழையா நம்ம ஜொள்ளும் சேரட்டுமேங்க என்ன கெட்டுடும் ?? ;))))

//இருக்குறதுலேயே பெரிய சந்தோஷம் அடுத்தவங்களை சந்தோஷப் படுத்துறதுன்னு "ஈரமான" பாயிண்ட்டைச் சொன்னதுக்கு... ஏதோ கால்கட்டுன்னு வலையில் வலிந்து மாட்டிக்கிற வரைக்குமாவது இப்படி (அல்ப)சந்தோஷமா இரு!//

அட இப்படி தூக்கிவிட்டு தொபுக்கடீர்னு ஒரு அல்பசந்தோச 'பிட்'டைப் போட்டுட்டீங்களே !!!! ஆமா கல்யாணம் அவ்ளோ சந்தோசத்தையும் எடுத்துக்குமா என்ன?? :))))))ஏதோ எக்ஸ்பீரியன்ஸ் ஆளுக சொல்லுறீக... கேட்டுக்கறேன் :))))))

said...

See i was rite! Enoda memory paathu neraya peru kindal panuvanga! Inaku than i have disproved them! :D

http://princessofgold.blogspot.com/2006/03/
varuthapadathavargal-sangam-vs.html#comments

Vettiya irukumbothu paarunga!

http://209.85.173.104/search?q=cache:7UY00fzDFLUJ:princessofgold.blogspot.com/2007/07/
invisible-imaginary-friend.html+varuthapadatha+valibar&hl=en&ct=clnk&cd=9&gl=in

Tata for now... Aprama get me the link that you are talking about pls :D

said...

//ஆமா கல்யாணம் அவ்ளோ சந்தோசத்தையும் எடுத்துக்குமா என்ன?? //

ஜொள்ஸ்,

Shopping மாலில் ஒரு "மால்" தான் போட்டு வந்த T-shirtல் எழுதியிருந்ததை (தங்கமணி கூட இருப்பதை மறந்து) இலக்கியம்/காவியம் ஆட்டோ பயோகிராபி படிக்கும் ஆர்வத்தில் விடாம படிச்சு பொது அறிவை வளர்க்க முயற்சி செய்தது கொலைக்குற்றமா?

நக்கீரர் சிவனின் நெற்றிக்கண்ணில் பொசுங்கினது உண்மைன்னு அன்னிக்கு பீல் பண்ணேன்! ஒரே "பய"கிராபி!

தங்கமணிகளின் திருவிளையாடல் ரங்கமணி ஆனாத்தான் உணர முடியும்!

உன்னை மாதிரி சுதந்திரப்பறவையைப் பார்த்து தருமி நாகேஷ் மாதிரி அனல் மூச்சை விட்டு தேத்திக்க வேண்டியது தான்!

said...

//Ponnarasi Kothandaraman said...
See i was rite! Enoda memory paathu neraya peru kindal panuvanga! Inaku than i have disproved them! :D //

வாங்க பொன்னரசி :))
அட அட அட என்னா ஒரு தன்னடக்கம் :))) எனக்கெல்லாம் RAM தாங்க மெமரி :))) உங்க ரேஞ்சுகெல்லாம் பக்கதிலே கூட ஒதுங்க முடியாது போலிருக்குங்களே !!1 ;))))

//http://princessofgold.blogspot.com/2006/03/
varuthapadathavargal-sangam-vs.html#comments

Vettiya irukumbothu paarunga!

http://209.85.173.104/search?q=cache:7UY00fzDFLUJ:princessofgold.blogspot.com/2007/07/
invisible-imaginary-friend.html+varuthapadatha+valibar&hl=en&ct=clnk&cd=9&gl=in//

அட சூப்பரா எழுதறீங்க !!! அதென்ன வெட்டியா இருக்கும்பொது பார்க்க சொல்லறீங்க?/ கிண்டல் தானே? நாங்க எப்பவுமே அப்படித்தானுங்களே இருக்கோம் ?? ;))))

//Tata for now... Aprama get me the link that you are talking about pls :D//

எதைய சொல்லுறீய?? அட நம்ம வாலிபர் சங்கத்தையா? இந்தாங்க லிங்க். என்சாய்.... :)))

http://vavaasangam.blogspot.com/

said...

//Hariharan # 03985177737685368452 said...
//ஆமா கல்யாணம் அவ்ளோ சந்தோசத்தையும் எடுத்துக்குமா என்ன?? //

ஜொள்ஸ்,

Shopping மாலில் ஒரு "மால்" தான் போட்டு வந்த T-shirtல் எழுதியிருந்ததை (தங்கமணி கூட இருப்பதை மறந்து) இலக்கியம்/காவியம் ஆட்டோ பயோகிராபி படிக்கும் ஆர்வத்தில் விடாம படிச்சு பொது அறிவை வளர்க்க முயற்சி செய்தது கொலைக்குற்றமா?

நக்கீரர் சிவனின் நெற்றிக்கண்ணில் பொசுங்கினது உண்மைன்னு அன்னிக்கு பீல் பண்ணேன்! ஒரே "பய"கிராபி! //

வாங்க ஹரி :))))

அதானே பார்த்தேன் :))) என்ன இது யாருக்கும் பார்க்காம படிக்க தெரியாதா? உங்களுக்கு அப்படி ஒரு டெக்னாலஜிய பத்தி ஒரு பதிவ்போட்டு சொல்லி தரணும் போல..!!! கவைஅய விடுங்க உங்களுக்கு எப்படி மாட்டிக்காம ஜொள்ளரதுன்னு Intensive training course ஜொள்ளுபேட்டையிலே ஏற்பாடு பண்ணிடறேன் :))))))

//தங்கமணிகளின் திருவிளையாடல் ரங்கமணி ஆனாத்தான் உணர முடியும்!

உன்னை மாதிரி சுதந்திரப்பறவையைப் பார்த்து தருமி நாகேஷ் மாதிரி அனல் மூச்சை விட்டு தேத்திக்க வேண்டியது தான்!//

ஆஹா சரி பாவம் பையன்னு விடுங்க என்ன பண்ணறது ?? :)))) கொஞ்ச காலத்துக்கு சந்தோசமா இருந்துட்டுதான் போறேனே !! :)))))

said...

அழகா இல்லாட்டியும் அவங்க மனசு புண்படக்கூடாதேன்னு நீங்க ஒரு லேசா ஒரு ‘லுக்’ கைபோட்டு சைட் உட்டீங்கண்ணா அவுக மனசு கூட கொஞ்சம் சந்தோசமாகுமில்ல? அடுத்தவுக மனசை சந்தோசப் படுத்தின ஒரு திருப்தியும் கெடைக்கும் உங்களுக்கு -- super Dr. Jollu Pandi vaalga :)

said...

ச்சி..ச்சி.. இந்த மாமா தப்பு தப்பா பேசறார்.. ஷேம்..ஷேம்..

said...

// கொஞ்சம் நம்மள மாதிரி எக்ஸ்பிரியன்ஸ் gain பண்ணிட்டீங்கன்னா
//

கொஞ்சம் இல்ல தம்பி... உனக்கு ரொம்பவே எக்ஸ்பிரியன்ஸ் :P

// பாண்டி நீங்க 'சைட் டெக்னாலஜி' தான் படிச்சீங்களா?

அதுல PG மட்டுமா? P.hd வர போகுதா?
//

அவர் டாக்டர் பட்டம் வாங்கி ரொம்ப நாளாச்சுங்க JK ;)

said...

suvami suvami theivame ivvalavu nala unkalai kandukka mudiyalaye eppadiyavathu enakku varam thara vendum...suvami..
(eathavathu akividdal unkalai kai kaddlama)

said...

"எதிர்ல ஒரு அழகான பொண்ணு ஒண்ணு உங்களுக்கு புடிச்ச மாதிரி மினி ஸ்கர்ட் போட்ட நமீதா மாதிரி"

Namithavai enkalaukku pidikkuma allathu unkalukku pidikkuma ethukku intha vilamparam ellam....
(namithavukku tamil padikka theriyatham...)

said...

//அழகா இல்லாட்டியும் அவங்க மனசு புண்படக்கூடாதேன்னு நீங்க ஒரு லேசா ஒரு ‘லுக்’ கைபோட்டு சைட் உட்டீங்கண்ணா அவுக மனசு கூட கொஞ்சம் சந்தோசமாகுமில்ல? அடுத்தவுக மனசை சந்தோசப் படுத்தின ஒரு திருப்தியும் கெடைக்கும் உங்களுக்கு -- super Dr. Jollu Pandi vaalga :)//

வாங்க அனானி:))
அட நம்மளுக்கு Dr பட்டம் எல்லாம் கொடுத்தீங்க ரொம்ப சந்தோசம்... அப்படியே ஒரு நர்ஸ்சும் இருந்தா இன்னும் சந்தோசப்படுவேன்லா... ;))))))))

said...

//~பொடியன்~ said...
ச்சி..ச்சி.. இந்த மாமா தப்பு தப்பா பேசறார்.. ஷேம்..ஷேம்..//

அட பொடியன்லாம் இங்கன வரப்பிடாது செல்லம்... குச்சி மிட்டாயும் குருவி பிஸ்கட்டும் வாங்கி தருவேனாம் அப்படியே ஓரமா சத்தம் போடாம ஒக்கார்துக்குவியாம் சரியா?? ;)))))

said...

//இம்சை அரசி said...
// கொஞ்சம் நம்மள மாதிரி எக்ஸ்பிரியன்ஸ் gain பண்ணிட்டீங்கன்னா
//

கொஞ்சம் இல்ல தம்பி... உனக்கு ரொம்பவே எக்ஸ்பிரியன்ஸ் :P//

வாங்க இம்சைஸ்ஸ்...

அட இதோ பாருடா.... உங்க கூட தானே நான் implant ட்ரெய்னிங் எடுத்துகிட்டேன்... மறந்துபோச்சா?? ;))))

// பாண்டி நீங்க 'சைட் டெக்னாலஜி' தான் படிச்சீங்களா?

அதுல PG மட்டுமா? P.hd வர போகுதா?
//

அவர் டாக்டர் பட்டம் வாங்கி ரொம்ப நாளாச்சுங்க JK ;)//

இதுதானே வேணாங்கரது?? JK கேட்டாரா உங்ககிட்டே?? ;))))) சரி சரி சீக்கிரம் double Dr பட்டம் கொடுங்க.. :))))

said...

//ஜொள்ளுப்பாண்டி has left a new comment on the post "‘சைட்’ அடிக்கலாம் வாங்க !":

//அழகா இல்லாட்டியும் அவங்க மனசு புண்படக்கூடாதேன்னு நீங்க ஒரு லேசா ஒரு ‘லுக்’ கைபோட்டு சைட் உட்டீங்கண்ணா அவுக மனசு கூட கொஞ்சம் சந்தோசமாகுமில்ல? அடுத்தவுக மனசை சந்தோசப் படுத்தின ஒரு திருப்தியும் கெடைக்கும் உங்களுக்கு -- super Dr. Jollu Pandi vaalga :)//

வாங்க அனானி:))
அட நம்மளுக்கு Dr பட்டம் எல்லாம் கொடுத்தீங்க ரொம்ப சந்தோசம்... அப்படியே ஒரு நர்ஸ்சும் இருந்தா இன்னும் சந்தோசப்படுவேன்லா... ;)))))))//

யாரங்கே... ஜொள்ஸ் மாமாக்கு ஒரு சிஸ்டர் பார்சல்... :)

said...

//ஜொள்ளுப்பாண்டி said...

//~பொடியன்~ said...
ச்சி..ச்சி.. இந்த மாமா தப்பு தப்பா பேசறார்.. ஷேம்..ஷேம்..//

அட பொடியன்லாம் இங்கன வரப்பிடாது செல்லம்... குச்சி மிட்டாயும் குருவி பிஸ்கட்டும் வாங்கி தருவேனாம் அப்படியே ஓரமா சத்தம் போடாம ஒக்கார்துக்குவியாம் சரியா?? ;)))))//

ஐயய்யோ.. ஒரு நர்ஸ் கேக்கறார்.. அப்டியே ஓரமா சத்தம் போடாம ஒக்காந்துக்க சொல்றார்.. என்ன பண்ணப் போறார்னு தெரியலியே.. இந்த அங்கிள் போற போக்கே சரி இல்ல.. :((

said...

//~பொடியன்~ said...
வாங்க அனானி:))
அட நம்மளுக்கு Dr பட்டம் எல்லாம் கொடுத்தீங்க ரொம்ப சந்தோசம்... அப்படியே ஒரு நர்ஸ்சும் இருந்தா இன்னும் சந்தோசப்படுவேன்லா... ;)))))))//

யாரங்கே... ஜொள்ஸ் மாமாக்கு ஒரு சிஸ்டர் பார்சல்... :)//

வாப்பா பொடியா :)))
பரவாயில்லையே ந்ர்ஸ் எல்லாம் பார்சல் கட்டுற வேலையா உங்களுக்கு ?? ;))))))


//ஐயய்யோ.. ஒரு நர்ஸ் கேக்கறார்.. அப்டியே ஓரமா சத்தம் போடாம ஒக்காந்துக்க சொல்றார்.. என்ன பண்ணப் போறார்னு தெரியலியே.. இந்த அங்கிள் போற போக்கே சரி இல்ல.. :((//

அட அட அட என்னா ஒரு பரிதாபம் :)))) ஆமா யாரோ மாமா அப்புறம் அங்கிள் ன்னு எல்லாம் சொலுறியே பொடியா யார் அவுக எல்லாம் ?? ;))))))

said...

Very interesting in tamil..hahaha