F 14

என்னாடா இது தலைப்புன்னு பார்க்குறீங்களா ?? என்னாங்க பண்றது. வேலண்டைன்ஸ் டே க்கு இன்னும் ஒரு மாசந்தேன் இருக்கு. பிகர் இருக்குறவுக எல்லாம் இப்போ இருந்தே ரெடியாகபோறேன் கொடிபிடிக்கபோறேன் அப்படீன்னு பிஸ்த்து கெளப்பிகிட்டு ஜீன்ஸுபேண்டும் முண்டா பனியனுமா கலவரமா சுத்திகிட்டு இருக்காங்க. பிக்கப்பு பேக்கப்புன்னு அவனவன் அலப்பறை உட்டுகிட்டு டாப் கியர்ல எகிறிகிட்டு இருக்கானுக. ஆனா பிகரே இல்லாம இன்னமும் மானிட்டரையே (டாஸ்மார்க் சரக்கு இல்லீங்கண்ணா) மொரைச்சி மொரைச்சு பார்துகிட்டு பிஸ்ஸாவும் பர்கருமா கிரைண்டர் கணக்கா அரைச்சுகிட்டு சோலோவா இன்னமும் பசங்களோட மட்டும் சினிமா பார்த்துகிட்டு சுத்திகிட்டு இருக்குற நம்ம சாப்ட்வேர் சங்கரபாண்டியனெல்லாம் என்ன பண்ணுவாய்ங்க?
இதுலே நம்ம க்ளோஸ் ப்ரெண்ட் ஒருத்தர் கிட்டே கேட்டேன் ‘என்னாபா பண்ணபோறே வேலண்ட்டைன்ஸ் டே க்குன்னு?’ அவ்ளோதான் ஒரே அழுகாச்சி. “பாண்டி !நான் இதுவரைக்கும் ஒரு பொண்ணுகிட்டே கூட பேசுனதே இல்ல !! நானும் ஏதாச்சும் ஒரு 'ராங் கால்' லாச்சும் பொண்ணுங்க கிட்டே இருந்து வந்துராதான்னு பார்த்துகிட்டு காத்துகெடக்கேன். ஆனா எனக்கு அந்தக்கொடுப்பினை கூட இல்லடா! . எப்போவாச்சும் எந்த பயலுக்காச்சும் 'போன்' னப் போட்டா “the subscriber cannot be reached at the moment” ன்னு மட்டும் ஏதோ ஒரு பொண்ணு உசுர கொடுத்துகிட்டு சொல்லும். இதுவே BSNL Phoneஆ இருந்தா அதையவே கர்ணகொடூரமா ஒரு ஆளு சொல்லுவான்! என்ன பண்றது பாண்டி? வேலண்டைன்ஸ் டே அன்னிக்கி ஊர்ல இருக்குற பொக்கைவாயனெல்லாம் ‘பொக்கே’ யோட அந்தகால தெலுங்கு ஹீரோ ரேஞ்சுக்கு சிகப்பு பேண்ட்டு பச்சை சட்டைன்னு பிளிறிகிட்டு அலைவானுங்க. நான் மட்டும் ‘பெக்’ அடிச்சுட்டு கவுந்தர வேண்டியதுதானா ? எல்லாம் என் தலையெழுத்து !! கல்யாணம் ஆனதுக்கப்புறம் பொண்டாட்டியோட மட்டும்தான் வேலண்டைன்ஸ் டே கொண்டாடனும்னுங்கற அவலநிலைக்கு தள்ளப்பட்டுட்டேனே!!” ன்னு பூத்து பூத்துன்னு ஒரே அழுவாச்சி !!
சரி சரின்னு அவனை ஆசுவாசப்படுத்தி ஓரமா ஒக்காரவச்சு சிச்சுவேசனை சீரணிக்கறதுக்கு ஓமத்திரவகம் கொடுத்துட்டு யோசிச்சேன். நம்ம ப்ரெண்டுக்கு மட்டுமா இந்த ப்ராப்ளம்? வேலெண்டைன்ஸ் டே கொண்டாடுற 'ட்ரெண்டு ' வந்ததிலிருந்தே இந்த பிரச்சனை தானேன்னு. பேசாமா எல்லாரும் சந்தோசமா பிகரோட பிளிறிகிட்டு வேலண்டைன்ஸ் டே கொண்டாட ஜொள்ளுபேட்டையில இருந்து சில ஐடியாகளை அள்ளித்தெளிச்சா என்னானு தோணுச்சு. இதோ தெளிக்க ஆரம்பிச்சிட்டேன். அல்லாரும் வந்து நனைஞ்சிட்டு போங்கப்பூ !!
நீங்க பிகரை பார்க்கறது இருக்கட்டும் . பிகர் உங்களைப் பார்க்குதான்னு பார்க்கனுமில்லே ? கண்ணாடி முன்னாடி நின்னு பாருங்க. உங்களுக்கு முன்னாடியே உங்க தொப்பை உலககோப்பை கணக்கா ‘கோல்’ அடிக்குதா? உடனே உங்க ஷூவை எடுத்து மாட்டிகிட்டு தீப்புடிச்ச மாதிரி தெனமும் ஓட ஆரம்பிங்க. தொப்பையும் குறையும் அப்படியேக்கா எக்குதப்பா ஏதாச்சும் பிகர் மாட்டுச்சுன்னா ஓடிப்போய் (பொண்டாட்டிய வுட்டுட்டு இல்லீங்க ) கல்யாணம் பண்ணிக்கவும் முடியும்!! எப்படி மல்ட்டி பர்பஸ் ஐடியா ?
எப்பவும் கோடிங்கு ப்ராஜெக்டுன்னு கொலவெறியோட யோசுசிகிட்டு இருக்காம இப்போ இருந்தே ஏதாச்சும் உங்களுக்கு சிக்குற மாதிரி 'அம்மாயி ஒஸ்தாரா 'ன்னு தலைக்கு மேலே சுத்திக்கிட்டு இருக்குற ‘ஸ்பைகேமரா’ மாதிரி மண்டையை கேபினுக்கு மேலே வுட்டு அடிக்கடி பார்த்துகிட்டே இருங்க. ஏதாசும் பிகர்சின்னம் தென்மேற்கு திசையிலயோ வடகிழக்கு திசையிலயோ உருவாகறமாதிரி தெரிஞ்சா உடனே மத்தவனுக அலர்ட் ஆகறதுக்குள்ள நீங்க பிகருக்கு குடை பிடிக்க ஆரம்பிச்சுடுங்க. கோடிங் எழுதவே மத்தவனுக கிட்டே கும்மியடிக்கவேண்டிய அவலநிலைமையிலே நீங்க இருந்தாலும் நீங்கதான் ‘கோடிங் குரு’ ன்னு ஒரு பிட்டை நல்லா ஸ்ராங்கா போடுங்க. யாருகண்டா ? உங்க அறிவபார்த்து காதல்மழை வானத்தை பொத்துகிட்டு ஊத்தரதுக்கு பிரகாசமான சான்ஸ் இருக்கு !!
இப்போ இருந்தே ரெண்டு மூணு Format ல லவ் லெட்டர்களை ரெடிபண்ணுங்க. எழுதறப்போ அப்படியேக்கா அங்கங்கே சுட்ட சுடாத காதல் கவிதைகளை லெட்டர் முச்சூடும் அள்ளி தெளிச்சுக்குங்க. அதுக்குன்னு “ என் எல்லா காதலுமே முதல் காதல்தான்!! - அந்தந்த பெண்களிடம்!! ன்னு அபத்தமா இருக்குறதையெல்லாம் போட்டா அவ்ளோதான் அப்புறம் பிகர்கிட்டே பினாயில், குடிக்க வேண்டியதுதான் . ஜாக்கிரதை ! வழக்கமான உங்க சாப்ட்வேர் புத்தியிலே லவ் லெட்ட்ர் மேலே ‘To Whomsoever it may concern” ன்லாம் எழுதிபுடாதீங்க. அப்புறம் வாழ்க்கையிலே நீங்க பொண்டாடியோட மட்டும்தான் வேலண்டைன்ஸ் டே கொண்டாடுறது கன்பார்ம் ஆய்டும்! அப்புறம் ஆதங்கப்பட்டு ஆகப்போறது ஒண்ணுமில்லே !!
இப்போல்லாம் பல பிகருக இன்ஸ்டண்ட் அல்வா பாக்கெட்டோட அமைதியா சுத்திகிட்டு இருக்குறதா பேட்டையிலே இருந்து ரகசிய தகவல் ஒரு அல்வா வாயன்கிட்டே இருந்து வந்துச்சு. இப்படிபட்ட அல்வா பார்ட்டிக கிட்டே கீது லவ்லெட்டர் கொடுத்து கோக்கு மாக்கா மாட்டிகிட்டீங்கன்னு வைங்க வேற வழியே இல்லை !! பேசாம வடிவேலு கணக்கா “நான் இதுவரை லவ்வே பண்ணுனது இல்லை ! வேணாம் விட்டுடு! வலிக்குது !! “ ன்லாம் சொல்லி பாருங்க . இல்லாட்டி இருக்கவே இருக்கு முதுகு !! அடிக்கிற வரைக்கு அடிச்சிக்கோன்னு குனிஞ்சு நின்னுகிட்டு ஒண்ணு.. ரெண்டு.. ன்னு எண்ண ஆரம்பிச்சுடுங்க. உங்க பரிதாப நிலைமைய பார்த்து பிகர் மனசுகுள்ளே காதல் கரகாட்டம் சலங்கைய கட்டிகிட்டு கண்டபடி ஆடாதா என்ன?
சரி சரி இப்போதைக்கு இது போதும். அல்லாரும் போய் ‘Pitch; ஐ ரெடி பண்ணுங்கப்பு. ஆமா என்னாடா அது F 14 ? எல்லாம் February 14, ஐதான் அப்படி சுருக்கி சுருக்கி எழுதி இருக்கேன் ஹிஹிஹிஹி. F 14 வர்ற வரைக்கும் அப்பப்போ இப்படிபட்ட ஐடியாக்களை அள்ளிதெளிக்கலாம்னு இருக்கேன் என்ன சொல்லுறீக கண்ணுகளா ?


