DEEPA ’ வலி ’

உங்க பக்கத்து வீட்டிலே ஒரு அழகான பொண்ணு குடிவந்துச்சுன்னா எப்படி இருக்கும்? அதுவும் காலேஜ் படிக்கும்போது பசங்க எல்லாம் சேர்ந்து வீடு எடுத்து தங்கி இருந்த வீட்டுக்கு பக்கதிலேன்ன கேக்கவா வேணும் ? எங்க பக்கத்து வீட்டுக்கு தீபா வந்தப்ப அப்படித்தான் ஆகிபோச்சு.
புதுசா அந்த வீட்டுக்கு அவங்க குடிவந்தப்போ நாங்க எல்லாம் தீபாவளி லீவுக்கு ஊருக்கு போய் இருந்ததால யார் வந்து இருக்கான்னு தெரியலை. லீவுமுடிஞ்சு திரும்பி வந்தபோதான் தெரிஞ்சது அந்த வீட்டிலே “ பால் போல 16ல் ஒரு girlfriend” அனாமத்தா போனி டெய்ல் போட்டுகிட்டு பொஸுக்கு பொஸுக்குன்னு நடந்து பேஷன் பரேட் நடத்திகிட்டு சல்லைய கொடுத்துகிட்டு இருக்குது !! அதுவும் பசங்க பாக்குறானுவன்னு இந்த பொண்ணுங்களுக்கு தெரிஞ்சு போச்சுன்னா அதுக வுடுர அலப்பறை இருக்கே !!! யப்பா.... நமக்கு தான் சும்மா சைட் அடிக்கறதோட திருப்தி அடைஞ்சிட்டு போறது வழக்கமாச்சே !! அப்படியே வீட்டிலே இருந்து கடைக்கு போறப்போ காலேஜ் முடிஞ்சு வர்றப்போன்னு வெளிய வர்ரப்போ எல்லாம் ஏதோ கோயில்ல நடை தொறந்திருக்கான்னு பாக்குர மாதிரி அவ வீட்டை பார்த்துக்கிட்டு கன்னத்திலே போட்டுகிட்டு போறதே வழக்கமாய்டுச்சு.
இப்படியே கொஞ்சநாள் நாங்களும் கண்ணாலயே தீபாவ பார்த்து நெய்ய ஊத்திகிட்டு இருக்குரப்போதான் திடீர்னு நம்ம க்ளோஸ் ப்ரெண்டு மணி ஒரு நாள் நானும் அவனும் வாக்கிங் போறப்போ ‘ டேய் பாண்டி எனக்கு இப்போ எல்லாம் சாப்பிட முடியலை தூங்க முடியலை ஏன் படிக்கவே முடியலை ( அதுக்கு முன்னாடி என்னவோ 24 மணி நேரமும் படிச்சான்னானு கேக்காதீங்கப்பு ) ன்னு ஒரே பீலிங்ஸ் பயலுக்கு, “ டேய் மணி நல்லாதானடா இருந்தே என்ன ஆச்சு உனக்கு? ன்னு அக்கரையா பயகிட்டே கேட்டா லேசா லூசு மாதிரி இளிச்சுகிட்டே “ தீபாமேல எனக்கு கண்ணபின்னான்னு காதல் வந்துருச்சுடா!! னு சொல்லிட்டு பையன் பாயபொராண்டுர பூனை மாதிரி ஆக்க்ஷன் கொடுக்கறான் !!. “அடக் கருமமே உனக்கும் வந்துடுச்சா? என்னடா இது? சரி ஏன் அவ உன்னைய பார்த்து சிரிச்சாளா இல்லை பேசினியா? “இல்லடா பாண்டி அவ வழக்கம் போல எனக்கென்னான்னு தெணாவெட்டா நடந்தே என் உசுரை எடுக்கறாடா. அவளை மடக்க நான் பல ப்ளான் ரெடி பண்ணிவச்சு இருக்கேன். நீ மட்டும் நம்ம பசங்க யாரும் எனக்கு போட்டியா வராம பார்த்துக்கோ” ன்னு சொல்லி பய தீபவுக்கு துண்டைப் போட்டுட்டான்.
டேய் பார்த்துகுங்க இன்னில இருந்து நம்ம தீபா நமக்கெல்லாம் அண்ணி (சக ப்ரெண்டோட சைட் டுன்னாலே default டா அண்ணி முறை தானே எல்லாரும் கூப்பிடனும் ? ) மணிப்பயலுக்கு ஒரே சந்தோசம். ஒரு வாரம் கழிச்சு மணி என்கிட்டே ஒரு பேப்பரோட வந்தான். ‘என்னடா செமஸ்டருக்கு இன்னும் ரெண்டு மாசம் இருக்குதே இப்போவே பசங்ககிட்டே நேட்ஸ் வாங்க ஆரம்பிச்சியாடன்னு அதிர்ச்சியோட கேட்டா பய நக்கலா சிரிக்கிறான். “பாண்டி ஏண்டா இப்படி என்மேல அபாண்டமா சந்தேகப்படுறே?! ன்னு சொலிட்டு கொடுத்தான், பேப்பர்ல பார்த்தா அட தீபாவோட வரலாறு !!! தீபாவுக்கு ஒரு தம்பி அம்மா அப்பா அவ எந்த ஸ்கூல் எந்த வழியா போறான்னு பட்டியல் அவ எந்த கடையில ஹேர்பேண்ட் வாங்கறாங்கற சும்மா google ரேஞ்சுக்கு பயபுள்ள தகவல்களை அள்ளி தெளிச்சி எடுத்துவச்சுருக்கான் !!!. ஆஹா போற போக்கிலே பய தீபாவோட தீபாவளிகொண்டாடிவான் போல இருக்கே !!! “ பாண்டி இனிமேதாண்டா எனனோட ஆக்க்ஷன் ப்ளான் பார்த்துகிட்டே இருடா தீபாவோட சேர்ந்து பக்கத்து பேக்கரில ஆப்பிள் கேக் சாப்பிடும் நாள் வெகுதூரத்தில் இல்லை !! ” சும்மா அண்ணாமலை ரஜினி கணக்கா தொடைதட்டி பையன் ‘பிட்’ டை ஓட்டறான்!!
ரெண்டுநாள் கழிச்சு வழக்கமா நாங்க ஷட்டில் கார்க் வெளையாடுர க்ரெளண்ட்ல புதுசா ஒரு பொடியன் மணி கூட வெளையாடிகிட்டு இருந்தான். அட வழக்கமா இப்படி பொடியனுங்க வந்தா மணிப்பயதானே அடிச்சி பத்திவிடுவான் இப்போ என்னடான்னா இப்படி மாறிட்டானேன்னு ஆச்சரியமா மணிப்பயலப் பார்த்தேன். “ டேய் பாண்டி கொஞ்சம் நேரம் ஓரமா ஒக்காருடா பொடியன் யாரு தெரியும்ல? நம்ம தீபாவோட தம்பி தாண்டா !! “ என்னோட ஆக்சன் ப்ளான்ல முதல் டார்கெட் இவந்தான் . அப்படியே இவனை வச்சே தீபாவோட மனசிலே ஒரு ‘பஞ்ச்’ வைக்கிறேன் பாரு !! ப்ளீஸ் இப்பொ கொஞ்சம் இடத்தை vacate பண்ணுடா மாப்ளே !! னு கொஞ்சம் decent ஆ நம்மளை கழட்டி விட்டுடான். அடப்பாவி இந்த பசங்களோட இதாங்க பெரிய தொல்லைங்க. கொஞ்சம் ஏமாந்தா நம்மளை ஊறுகாய் ஆக்கிடுவாய்ங்க! என்ன பண்ணுறது ?
ரெண்டு வாரம் கழிச்சு பார்த்தா மணிப்பய தீபாவோட வீட்டுல இருந்து வெளிய வந்துகிட்டு இருக்கான். பய கில்லாடியா இருப்பான் போல! தம்பியப் புடிச்சே பொண்ணு மனசில வீட்டுக்கு போற ரேஞ்சுக்கு பஞ்ச் வச்சுட்டான் போல இருக்கேன்னு நெனச்சிகிட்டே “ டேய் மணி என்னடா கண்ணா இவ்ளோ வேகமா இருக்கே என்ன அவங்க வீட்டில இருந்து வார்றே, தீபாவ பார்துட்டா? “ “ அட இல்லைடா பாண்டி ஆண்ட்டி ( தீபாவோட அம்மாவாம் !! )நம்ம பால்காரனை அவங்க வீட்டுக்கும் பால் போட சொல்லமுடியுமான்னு கூப்ட்டு கேட்டாங்க. சான்ஸை விடலாமா? நாளைக்கு பாரேன் அவங்க வீட்டு பாலையும் நம்ம வீட்டிலயே வாங்கி நானே கொண்டுபோய் டெலிவரி பண்ணி ஆண்ட்டிகிட்டயும் நல்ல பேரை வாங்கி என்னோட லவ்வையும் தீபாகிட்டே டெலிவரி பண்றேண்டா !!”. ஏண்டா வழக்கமா மொதல்ல பொண்ண கரெட் பண்ணி அப்புறம் தானேட இப்படி அல்லைடு சொந்த பந்தங்களை கரெட் பண்ணனும் நீ என்னடா ரிவஸ்ல பேறேன்னு கேட்டா பய “ கண்ணா அது ordinary பசங்க பண்ணுர லொடுக்கு காதல்டா! என் வழி தனி வழி !!! “ ன்னு பையன் கைய ஆட்டி சலம்பறான் !!!
இப்படியா தீபா வீட்டுக்கு ப்ரீ லேபரா சுத்திகிட்டு இருந்த மணி திடீர்னு ஒருநாள் கண்ணீரும் கம்பலையுமா எங்ககிட்டே வந்தான். “ டேய் மாப்ளே மணி என்னடா ஆச்சு ஊர்ல பாட்டி கீட்டி யாராச்சும் டிக்கெட் வாங்க்கிடாங்களா?” ன்னு கேட்டா “ பாண்டி அதெல்லாம் இல்லைடா இனிக்குதான் நான் தீபாகிட்டே என் மனசை கஷ்டப்பட்டு ஓபன் பண்ணினேன். உடனே என்னைய ரிஜக்ட் பண்ணிட்டாடா. அவளுக்கு ஏற்கனவே இருந்த வீட்டு பக்கத்திலே நம்மள மாதிரியே எவனோ ஒருத்தன் ரிசர்வ் பண்ணிட்டானாம். சாரிங்க அண்ணானு சொலிட்டாடா. என்னாடா அவ தம்பியக் கரெட் பண்ணிட்டேன் அவ அம்மாவையும் கரெட் பண்ணிடேன் ஆனா மெயின் மேட்டரான பொண்ணக் கரெட் பண்ண முடியலையேடா !!! “ ன்னு கே கொள்ளேன்னு பய ஒப்பாரி வைக்கிறான் !! என்னத்த சொல்றது ? இனிமேலாச்சும் யார் வீட்டுக்காச்சும் ப்ரீ லேபரா ஆகரதுக்கு முன்னாடி pitch report பார்த்து batting பண்ணுங்கப்பு !!!


