Thursday, June 19, 2008

Smart ஜொள்ளு - Basics....
அட யாருங்க இந்த காலத்திலே ஜொள்ளுவிடாம இருக்கறா..? இதுல பசங்க என்ன பொண்ணுங்க என்ன எல்லாரும் ஒருத்தருக்கொருத்தர் சளைச்சவுகளா என்ன..? No.. Never.. ஆனா பாருங்க ஜொள்ளு வுட்டு நம்ம பசங்கதான் பச்சையா மாட்டிக்கிறாய்ங்க.. பொண்ணுங்க இந்த விசயத்திலே கொஞ்சம் சூட்டிகைதானுங்கோ... அவுக எப்போ எப்படி யாரைப் பார்த்து ஜொள்ளுவுடுராகன்னு அவ்ளோ சீக்கிரம் கண்டே பிடிக்க முடியாதுங்கோ... இப்படி நம்ம ஆண்குலங்கள் பச்சையா ஜொள்ளுவிட்டு அடிக்கடி ஜொள்ளுவாயோட மாட்டிகிறதை பார்க்க பார்க்க பாண்டியோட மனசு படற வேதனை கொஞ்ச நஞ்சமில்லீங்கோ... பாவம் அறியாத வயசு புரியாத சைஸ்ல நம்ம பசங்க கொஞ்சம் ஊட்டமும் வாட்டமுமா ஆரையாச்சும் பாத்தா கொஞ்சம் slip ஆகி ஆட்டோமேடிக்கா tongue வெளிய தள்ளி கொஞ்சம் கோக்குமாக்கா ஆய்ட்றாங்க... அட இதெல்லாம் பசங்க வேணும்னேவா பண்ணறாங்க..? அவுகளுக்கு ஆராச்சும் கொஞ்சம் சொல்லித்தந்தா தானே அக்கம் பக்கம் பார்த்து இடம் பொரும் ஏவல் உணர்ந்து சூதானமா ஜொள்ளு விடுவாக.? ஓகே Lions.. நாக்கு மூக்கா ஸ்டைல்ல அல்லாரும் கவனமா படிச்சு நல்லபடியா மாட்டிக்காம ஜொள்ளுவிட்டு பட்டைய கெளப்புங்கப்பு..

கண்ணுகளா நீங்க மானாவாரியா ஜொள்ளுவுட்டு போறவுக வரவுக அல்லாரும் வழுக்கி வுழுற அளவுக்கு ஜொள்ளணையின் கொள்ளளவு மீறி வழியற இடம் எதுன்னு பார்த்தீகன்னா இந்த ஷாப்பிங்க் மால்ஸ் தான்.. அதுவும் ஒரு சில பர்ஸை பதம் பார்க்கற மால்ஸ்ல வந்து போற அல்ட்றா மார்டன் அம்மணீஸ் பார்த்தீகண்னா ஏதோ FTV ல இருந்து direct ஆ import ஆன மாதிரி ட்ரெஸ் போட்டும் போடாம இப்பவோ அப்பவோ அவுந்துடுமோங்கர ரேஞ்சுல ட்ரெஸ்சை போட்டுகிட்டு ஃபேஷன்ல ஃபரேடு கெளப்பிகிட்டு நம்ம ஆண்குலங்கள் கண்ணை கன்னாபின்னானு கதறடிச்சுகிட்டு சுத்திகிட்டு இருப்பாக. இங்கதான் பசங்களா சூதானமா இருக்கணும். இப்படி அமெரிக்கன் corn மாதிரி ஊட்டமா சுத்திகிட்டு இருக்குறவுகளைப் பார்த்தா நாக்கு உங்களை மீறி 'டண்டனக்கா' னு துள்ளும். ஆனா இந்த மாதிரி சமயத்திலே ஆழமா மூச்சை இழுத்து வுடீங்கன்னா உங்க மனசு கொஞ்ச சாந்தம் ஆகும் அப்படியே அந்த அம்மணி போட்டிருக்கற செண்ட் டை மோப்பம் புடிச்ச மாதிரியும் இருக்கும்.. ஹிஹிஹிஹி... எப்படி..???


அடுத்த வகையறா எப்படீன்னா உங்க ஆபீஸிலேயே இருக்கற அல்லு சில்லு கெளப்புற பொண்ணுங்க.. இவுக பேசறப்போ பார்த்தீகன்னா அப்படியே ஏதோ இப்போத்தான் UKG ல இருந்து அள்ளிகிட்டு வந்து ஆபீஸ்ல வுட்ட மாதிரி கொஞ்சி கொஞ்சி மழலைத்தமிழ் பேசி உங்க நெஞ்சை கொள்ளை அடிப்பாக. இவுக கிட்டே பேசறப்போ உங்களை அறியாமலே வாயில இருந்து ஜலம் வழிய ஆரம்பிச்சுடும்.. உங்களால உணரவே முடியாதுங்க.. உங்களுக்கு என்னவோ நீங்க ஸ்டடியா பேசிகிட்டு இருக்கற மாதிரிதான் தெரியும் ஆனா உங்ககூட வேலை செய்யுற சக normal அம்மணீஸ் முகத்தைப் பார்த்தே நீங்க ரெண்டு பேரும் பேசிகிட்டு இருக்கற climatic conditions ஐ மோப்பம் பிடிக்கலாம்.. இந்த வகை ஆளுக கிட்டே நீங்க பேசறப்போ கொஞ்சம் நிதானமா மத்தவங்களுக்கு அதிகம் கேட்காத மாதிரி பேசுங்கப்பூ.. பேசற விசயம் ‘சப்பை’ மேட்டரா இருந்தாக் கூட ‘ என்ன காந்திய சுட்டுட்டாங்களா..? “ ங்கற மாதிரி மூஞ்சில ஒரு RED ரியாக்சனை வச்சுகிட்டு பேசுனீங்கன்னா ஏதோ நீங்க ரெண்டு பேரும் project delivery பத்தி deep டிஸ்கசன்ல இருக்கறதா நெனச்சுக்குவாக ... ஒகேவா.?


சில சமயம் எசகு பிசகா உங்க சம்சாரம் கூடவோ இல்லை சம்சாரம் ஆகப்போற அம்மணிக கூடவோ அவுகளுக்கு துணியோ இல்லை கழுத்துல காதுல போட்டுக்கற மணியோ வாங்க போறப்போ அங்கன வாங்க வர்ற சக அம்மணீஸ் சிலபேரு உங்க நாக்கோட நீளத்தை இஞ்ச் டேப் வைக்காக கொறறயா சோதிப்பாக. கொஞ்சம் ஏமாந்து நீங்க அவுக அழகுலே லயிச்சு லேசா லோகத்தை மறந்தீங்கன்னு வைங்க... அந்த சமயத்திலே உங்க அம்மணி எசகுபிசக்கா நீங்க பார்க்கிறதை பார்த்துட்டாகன்னு வைங்க அவ்ளோ தான் .. உங்க இமேஜ் சொல்லாம கொள்ளாம ' பப்பரக்கா' னு டேமேஜ் தான்.. இந்த மாதிரி சமயத்திலேதான் நீங்க பாண்டியோட " கொல கொலயா முந்திரிகா " formula வை follow பண்ணனும். எப்படீன்னா.. உங்க அம்மணிகிட்டே எடுக்கற பொருளும் நீங்க பார்க்கற பிகரும் ஒரே ஆங்கிள்ள இருக்கர இடமா கொஞ்சம் மெனகெட்டு தேடி புடிச்சு நின்னுகிட்டு அப்ப அப்ப அம்மணி கேட்கற " நல்லாருக்கா..? " கேள்விக்கு " இது கலர் சரி இல்லை.. இது அது நல்லா இல்லை.. இருக்கு.." இப்படி ramdom ஆ மாத்தி மாத்தி பதில் சொல்லிகிட்டே இருந்தீங்கனா போதும். எப்படியும் அவுக நீங்க சொல்லுறதை வாங்கப்போறது கெடையாது... ஆனாலும் உங்க கருத்து வேணும்... அதனால நீங்க பேசிகிட்டே உங்க வேலையையும் பார்த்துக்கலாம்.. நல்ல பேரும் side ல வாங்கிகிட்டு உங்க மனசுக்கு புடிச்ச ' வல்லிய ' ஜொள்ளும் மானாவாரியா விடலாம்... !!! எப்படி..?


என்னா சிங்கங்களே அசிங்கப்படாம ஜொள்ளுவுடுறது எப்படின்னு ஏதோ என்னோட சிற்றறிவுக்கு தெரிஞ்ச விசயத்தை சொல்லி இருக்கேன்.. அல்லாரும் சத்தம் காட்டாம படிச்சுபுட்டு practicals க்கு கெளம்புங்கப்பூ...

அப்படியே போற போக்கிலே உங்களுக்கு தெரிஞ்ச டிப்ஸையும் அள்ளி வீசிட்டு போங்கப்பூ... சரியா..?

Sunday, June 08, 2008

Fitness tips for அம்மணீஸ்....
என்ன பண்ணுனாலும் இந்த உடம்பை கொறைக்கவே முடியலை பாண்டி . இத்தனைக்கும் நான் காலையிலே சாப்புடறதே இல்லை.. ன்னு ஒரு அவலக்குரல் நம்ம ப்ரெண்ட் அம்மணிகிட்டே இருந்து வந்துச்சு... அட இத்தனைக்கும் அம்மணிக்கு ரொம்ப கம்மியான வயசுதாங்க... இப்போ எல்லாம் பீஸா பர்கர்னு கண்டதையும் சாப்ட்டுட்டு பாப்பாக்கள் கூட பீப்பாக்களா மாறி சுத்திகிட்டு இருக்குதுக.. உடம்பைக் குறைக்க என்ன வழின்னு தெரியாம பல அம்மணிகள் கவலையோட பீச்சுலயும் பிஸ்ஸா கார்னர்லயும் சுத்திகிட்டு இருக்குறாவன்னு நம்ம பேட்டையில வந்து பல அம்மணிகளும் சில பசங்களும் பொலம்பிகிட்டு இருக்காவ.. அதைக் கேட்டு பாண்டி மனசு பட்ட பாடு கொஞ்ச நஞ்சமில்லீங்கோ... இதோ சில ஜில் ஜில் ஐடியாக்களோட சிங்கம் சிங்கிளா கர்லாக் கட்டையோட களம் இறங்கிடுச்சு இல்ல..

மொதல்ல why பாப்பாஸ் become பீப்பாஸ் னு பார்ப்போமா..?

நம்ம அம்மணிக எல்லாம் சுண்டெலி மாதிரிங்க... ஒரு நிமிஷம் சும்மாவே இருக்க மாட்டாக... FM ரேடியோ கணக்கா ஏதாச்சும் பேசிகிட்டே இருக்குறது...அப்படி பேசறதுக்கு ஏதும் இல்லைன்னா ஏதையாச்சும் கொறிச்சுகிட்டே இருக்குறது... ஒரு நிமிஷம் வாய சும்மாவே இருக்க விடுறது இல்லை...

நம்ம அம்மணீஸ் பலபேரு தங்களோட வாய ஒரு மிக்ஸின்னு நெனச்சுக்குறாங்க.. கிடைக்கறது எதுன்னாலும் அது சாப்பிடற ஐட்டமானாலும் இல்லை ஏதாச்சும் அப்பாவி ஹஸ்பண்டு இல்லை பாய்ப்ரெண்டு ஏதுனாலும் ச்சும்மா கொய்ய்ய்ய்ன்னு அரைச்சு எடுத்துட வேண்டியது...

சரி சரி அம்மணீஸ் காது சூடாகுறது இப்போவே என்னால உணர முடியுது... கூல் டவுன் அம்மணீஸ்.. இப்போ கொஞ்சம் வஞ்சமில்லாம வளர்ந்துட உடம்பை எப்படி தாஜா பண்ணி கொறைக்கலாம்னு பார்க்கலாமா..?

தினமும் கொஞ்சூண்டு தூரமாச்சும் நடையக் கட்டுங்க.. நடக்கறப்போ யாரோ ஒரு நாயோ இல்லை ரோமியோவோ உங்களை follow பண்ணுறான்னு ஒரு imagination ஐ ஓடவிட்டீங்கன்னா போதுங்க... அப்புறம் நீங்க PT உஷாவுக்கே டஃப் காம்படிஷன் கொடுப்பீங்க .. அப்புறம் நீங்க 2 வருஷதுக்கு முன்ன இருந்த சிம்ரன் மாதிரி ‘சிக்’ குன்னு மாறலைன்னா என்னைக் கேளுங்க....

ஜிம்முக்கு போறது கூட ஒரு நல்ல ஐடியாதான்.. அங்கன போய் அங்கன வர சக சைஸ்சான அம்மணீஸ் கிட்டே எப்படி அவுக இப்படி ஆனாகன்னு லேசா பிட்டைப் போட்டு வாங்கி அப்படியே பல்ஸ் பார்த்து பேச ஆரம்பிச்சாங்கன்னா அப்புற எங்கன எக்ஸர்சைஸ் பண்ணுறது..? வழக்கம் போல இவுக வாய் மட்டும் தான் வேலை செய்யும்.. அதுனால அப்போ மட்டும் கொஞ்சம் கஷ்டப்பட்டாவது வாயத்தெறக்காம
( கொஞ்சம் கஷ்டம் தான்... இருந்தாலும் try பண்ணுங்களேன்..) எக்ஸர்சைஸ் பண்ணுங்களேன்.. அப்புறம் பாருங்க ஸ்ரேயா எல்லாம் உங்ககிட்டே வந்து பிட்னெஸ் டிப்ஸ் கேட்கமாட்டாக..??

உடம்பைக் கொறைக்கறேன்னு ஒரு வேளை மட்டும் சாப்பிடறதுன்னு ஒரு வேளை மட்டும் சாப்பிடாம இருக்குறதுன்னு இருந்தீங்கன்னா ஒண்ணுமே குறையாதுங்கோ.. அப்புறம் இந்த ஸ்லிம் மாத்திரை சாப்டா இப்படி ஆகலாம்னு ஏஞ்சலினா ஜோலி மாதிரி ஒரு ஃபிகர் வந்து டிவி ல அளந்து உட்டுட்டு போகுதேன்னு வாங்கி சாப்டீங்கன்னா நீங்க இளைக்க மாட்டீக.. உங்க பர்ஸ்ஸுதான் இளைச்சு போகும் பார்த்துக்கோங்க...

என்ன அம்மணீஸ் டிப்ஸ் இப்போதைக்கு போதும்னு நெனைக்கறேன்.. இன்னும் ஏதாச்சும் வேணும்னா கூச்சப்படாம கேளுங்க... உங்களுக்கு டிப்ஸ் அள்ளித்தெளிக்கதானே நாங்க இங்க இருக்கோம்..
Tuesday, May 27, 2008

ஸ்கூட்டி Beauty...


நீங்க அப்படியே பைக்ல நிதானமா ட்ராபிக்கை நொந்துகிட்டே போய்க்கிட்டு இருக்கீங்க.. எவ்வளவு நேரந்தான் இப்படி இத்துப்போன ட்ராபிக்ல மனசு நொந்து போய் க்ளச்சைப் புடுச்சு கியரை மாத்திகிட்டு இருப்பீக..? ஒரு சுவாரஸ்யம் வேணாமா..? அப்படியே குதிரைக்கு சேணம் கட்டின மாதிரி ரோட்டை மட்டும் பார்க்காம அப்படியே பைக் ‘கேப்’ புல பார்த்தீங்கன்னா சும்மா கூந்தல் அலைபாய ஒரு ஸ்கூட்டியோ இல்லை ஹோண்டா ஆக்டிவாவோ உங்க முன்னாடியோ சைட்லயோ நிக்கும்.. பார்த்த உடனே மனசு ‘சல்சா” ஆடிகிட்டு இருக்கும்.. அப்படியே அந்த வண்டிய நீங்க Follow பண்ணுனீங்கன்னு வைங்க அப்புறம் ரோட்டிலே உங்க பைக் பயணம் உய்யலாலா தான்... அடிக்கற வெயி்லு ட்ராபிக்கு எல்லாம் மறந்து போய் ' "குய்ய்யோ " னு ஒரு feel பண்ணுவீங்க பாருங்க.. ஆஹா... அதெல்லாம் அனுபவிச்சாத்தான் தெரியும்..

ஆனா திடுதுப்புன்னு ஒரே நாள்ல நீங்க இந்த வித்தைய கத்துகிட முடியாதுங்கோவ்.. சில டெக்னிக்ஸ் இருக்கு.. அதைய அனுபவப்பூர்வமா பல பேருகிட்டே இருந்து கஷ்ட்டப்படு கத்துகிட்டு உங்களுக்கு tips களை அள்ளித்தெளிப்பது உங்கள் பாண்டி... ( கேப்ல நாங்களும் பிட்டை போடுவோம்ல..)

இந்த ஸ்கூட்டி குட்டிக இருக்காவளே அவிய எல்லாம் நம்ம நரேன் கார்த்திகேயன் தங்கச்சி ரேஞ்சுக்கு சும்மா ஆக்ஸிலேட்டரை முறுக்கி புடுச்சாங்கன்னா கூட வர்ற வண்டிகள எல்லாம் பிரிச்சு பின்னாடி தள்ளிட்டு ராக்கெட்டு கணக்கா பின்னாடி வர்ற உங்க முகத்திலே புகைஅடிச்சுட்டு "அல்பமே" னு ஒரு லுக்கோட உங்களை ரியர் வ்யூ மிரர்ல நக்கலு விக்கலோட பார்ப்பாங்க பாருங்க.. அப்போ நீங்க மனசு ஒடஞ்சு போய் ஒரமா 3ட் கியர்ல வண்டில வாக்கிங் போகக்கூடாது கண்ணுகளா.. வரணும்... வீரம் வரணும்!!!! கொஞ்சமாச்சும் வண்டில படம் போடனும் Boss... எப்படின்னு கேட்க்குறீயளா..? அதுக்கு முன்ன உங்க வண்டி கண்டிஷனா இருக்கானு பார்த்துகறது நெம்ப முக்கியம்... உங்க வண்டிய பேரிச்சம் பழக்காரங்க எல்லாம் காதலோட சுத்தி சுத்தி வர ரேஞ்சுக்கு இருந்தா இந்த ஸ்கூட்டி சேஸிங்கை இப்போவே மறந்துட்டு ஓரமா நின்னு எளநியோ ஜிங்ஞ்சர் பீர் ரோ குடிச்சுட்டு நடையக்கட்டுங்கப்பூ...

நம்ம பொண்ணுக எல்லாம் சரியான வெவரங்க.. ஏதோ ஒரு பையன் ஃபாலோ பண்ணறான்னு தெரிஞ்சா போதும்.. ஓவர் ஸ்பீடுல பொளந்து கட்டுவாக.. நீங்களும் மாட்டு வாலைப் புடிச்சு திருகி ரேக்லா ரேஸ்ல ஒட்டுற மாதிரி உங்க பைக்கோட ஆக்ஸிலரேட்டரைத் திருகி அய்யோ அம்மானு பைக் கதறக் கதற உயிரக் கொடுத்து ஒட்டிகிட்டு இருப்பீக.. அப்போதான் நம்ம அம்மணிக தங்களோட 7th sense ஐ பயன் படுத்தி நீங்க பக்கத்திலே வர்றப்போ ஸ்குட்டியோட ஸ்பீடை கபால்னு ரொம்ப கம்மி பண்ணுடுவாங்க.. நீங்க உடனே உங்க பைக்கை நிறுத்த முடியாம அவுகளை முந்திகிட்டு போய்டுவிகளா..? அப்புறம் அவ்ளோதான்.. நீங்க வண்டிய நிறுத்தி உருட்டிகிட்டு போனாலும் உங்க கண்ணுல சிக்க மாட்டாவ. மறந்து கூட உங்க வண்டிய ஓவர் டேக் பண்ண மாட்டாகளே!!!

அதுக்குத்தான் ஒரு நிதானமான வேகம் இருக்கணும் உங்ககிட்டே.. உணர்ச்சி வசப்பட்டு வண்டிய முறுக்கினா இப்படி பிகரை கோட்டை விட்டுட்டு “அடடா வடை போச்சே “ னு வடிவேலு கணக்கா ஓரமா நின்னு புலம்பலை போட்டுகிட்டு இருக்கணும் .. இல்லை நம்ம ட்ராபிக் சார்ஜெண்ட் கிட்டே ஓவர் ஸ்பீடுன்னு தெண்டம் கட்டணும் பார்த்துக்கோங்க.. ஆனா இந்த சார்ஜெண்டுகளுக்கு நம்ம பசங்க இப்படி ‘பிய்ய்யோ’ னு வண்டி ஓட்டுறது தாங்க கண்ண உறுத்துது.. ஆனா இந்த பொண்ணுங்க வாலண்டினா ரேஞ்சுக்கு ரோட்டுல ராக்கெட் வேகத்துக்கு வண்டிய ஓட்டுனா ஏதோ இவுக சானியா மிர்சா அக்கா ரேஞ்சுக்கு ரசிச்சு பார்க்க வேண்டியது.... அதுகளை நம்ம சார்ஜெண்டுக புடிச்சா கூட “ சாரி சார் “ னு ஹஸ்கி வாஸ்ய்ல நம்ம சார்ஜெண்டுகளோட மனச க்ளீண் போல்ட் ஆக்கிட்டு அப்பீட் ஆய்டுறாங்க..என்ன பண்ண? எல்லாம் ஜொள்ளு மயம்...

ஆனா பார்த்துக்கோங்கப்பூ இதெல்லாம் நீங்க ஆபீஸ் போறதுக்குள்ள ஒரு சின்ன குஜால்ஸுக்குத்தான்... அப்படியே பார்த்தமா பதமா ஃபாலோ பண்ணுனமா ஆபீஸை ரீச் பண்ணுனமான்னு நல்ல புள்ளைகளா இருக்கணும் இந்த சுவாரஸ்யத்திலே உங்க வேலைய மறந்து போய்டாதீக...

இப்படித்தாங்க ஒருதடவை நான் பாட்டுக்கு தேமேனு வண்டிய ஓட்டிகிட்டு இருந்தேன்.. திடீர்னு பின்னாடி ஒக்கார்ந்துகிட்டு இருந்த என் ப்ரெண்டு “டேய் மச்சான் சீக்கிரம் அந்த பஸ்ஸ follow பண்ணுடா அதுல உகார்ந்துகிட்டு இருக்குறது என் ஆளு மாதிரி தெரியுதுடானு “ அடித்தொண்டையிலே இருந்து FM ஜாக்கி மாதிரி அலர்றான்.. நமக்குத்தான் இந்த காதல் பொறா வா இருக்குறது ஒரு வீக்னெச் ஆச்சே.. உடனே நம்ம வண்டிய அப்படியே கியரை டவுன் பண்ணி ஆஃப் க்ளச் புடுச்சி ஒரு முறுக்கு முறுக்கி ‘வீலிங்’ பண்ணிட்டு கஷ்ட்டப்பட்டு பஸ்சைப் புடிச்சிட்டு அப்படியே அவன் ஆளு இருக்குர பக்கமா வண்டிய புஃல் ‘த்ராட்டில் ‘ல விரட்டிகிட்டு போறேன். திடீர்னு எங்கயோ இருந்து வந்த வில்லப்பய வண்டி நம்ம வண்டியிலே வந்து மோதி ‘ பப்பரக்கா’ னு ரெண்டு பேரும் ரோட்டிலே விழுந்து சில்லறை பொறுக்கிட்டு இருக்கோம்,.. நம்ம பய அப்பத்தான் சொல்லறான் ‘ மச்சான் அது என் ஆளு இல்லைடா.. ஆனா நாம விழுகறதைப் பார்த்து ரெண்டு கன்னத்திலையும் கைய வச்சு அய்யோனு ஒரு பார்வை பார்த்தா பாரு... அஹா சூப்பருடா.. !! “ இவனையெல்லாம் என்ன பண்ண சொல்லுங்கப்பூ...???!!!!

Monday, March 03, 2008

1000 தான் இருந்தாலும் பொண்ணுங்கன்னா..

சில விசயம் எல்லாம் சிலவங்க தாங்க பண்ணனும். ஒரு உதாரணத்துக்கு நம்மள க்ராஸ் பண்ணற ஸ்கூட்டின்னாலே அதை ஓட்டரது ஒரு cute பெண்குட்டின்னாலே ஒரு ‘கிக்’ குத்தான் இல்லையா..? அதே ஸ்கூட்டிய ஒரு பையன் ஒட்டுனா காண சகிக்காது. ஏன்னா அப்படி ஆகிப்போச்சு. என்னதான் புல்லட்டை ஒரு அம்மணி ஒட்டுனாலும் அதையவே ஒரு பையன் ஓட்டுனாத்தேன் ‘கிக்’ னு பாக்குற நம்ம அம்மணிக எல்லாம் நம்மள மாதிரியே பொலம்பராங்கப்பு... ‘ காளை ’ சிம்பு கணக்கா
முடிய வளர்த்துகிட்டு ஹேர் போண்ட் எல்லாம் போட்டுகிட்டு சில பசங்க ‘ டோனி’’ ரேஞ்சுக்கு சீனைக் கொடுத்தாலும் நம்ம அம்மணிக போடுற ‘ போனி ’ ஸ்டைலுகுக்கு முன்னால நிக்க முடியுமா. என்ன..?

அதே மாதிரி பசங்க அரைக்கால் பேண்ட் கால் கால்பேண்ட் போட்டுகிட்டு இல்லை வெறும் சட்டைய மட்டும் போட்டுகிட்டு வந்தாலும் எவன் கண்டுப்பான் சொல்லுங்க? நம்ம சூப்பர் ஸ்டாரா இருந்த்தாலும் அது காமெடி சீன்னா தான் காட்டுவாக ..ஆனா அதுவே நம்ம நமீதா ஒரே ஒரு ஸ்வெர்ட்டரைப் போட்டுகிட்டு லேசா கீழே இழுத்து மட்டும் வுட்டுகிட்டு ( பாவம் அவுகளுக்கு பாவாடை வாங்க காசே இல்லை போல) மஸ்த்தானா மஸ்தானாவுக்கு வந்து பிஸ்த்து கெளப்புனா அதையப்பத்தி பத்திரிக்கையிலே பத்தி பத்தியா எழுதுவாய்ங்க... ம்ம்ம் எல்லாம் அம்மணிக உலகம் ஆகிப்போச்சு என்ன பண்ண..? ஏண்டா பாண்டி இப்படி பொலம்பரேண்ணு கேக்குறீயளா..? என்ன சொல்ல..? பாருங்கப்பு பொண்ணுங்க புடிச்ச இடத்துக்கு பக்கத்துல கூட என்னதான் முக்கி முனகினாலும் இந்த ஆம்பிளைங்க நெருங்க முடியாதுங்கோ...என்ன பார்த்தீயளா...?? என்ன சொல்லுறீய..?

Monday, February 11, 2008

ஏய்... ஓடிப்போலாமா...?
இந்த பிப்ரவரி மாசம் வந்தாலே நம்ம பசங்க தொல்லை தாங்காதுங்க.. சாதாரண நாள்லயே இந்த காதல் Gadafi க எல்லாம் ச்சும்மா பீச்சு... ஐநாக்ஸ்.. சத்யம் னு தரையிலே காலு படாமா sச்சும்மா சுத்தி சுத்தி ' பல்சர்' ' அப்பாச்சி' ன்னு பிகரோட பிளிறிகிட்டு இருக்காவ.. இதிலே பாவமா இன்னமும் தங்களுக்குன்னு ஒரு ஆளு செட்டாகம இருக்குற பட்டிணத்தார் கோஷ்டி எல்லாம் இவுக கெளப்புற ரவுசைப் பார்த்து இந்தக் காதல் புழுதிய நாமளும் இந்த மாசமாச்சும் கெளப்ப மாட்டமான்னு உள்ளுக்குள்ள ஏக்கத்தோட பார்த்து புழுங்கிட்டு இருக்குறது ஜொள்ளுப்பாண்டியோட மனச போட்டு புழிஞ்சு எடுத்துடுச்சு... பாவம் பசங்க .. வேலண்டைன்ஸ் டே னாலே எல்லாரும் கையிலே ரோஜா பூவோட ஒரு கார்ட்டும் எடுத்துகிட்டு ஏதாச்சும் ஒரு பொண்ணைத் தேத்தறதே வாழ்வின் லட்சியமா சுத்திகிட்டு இருக்காவ.. கமான் காம்ரேட்ஸ்...

முதல்ல இந்த வேலண்டைன்ஸ் டேங்கறதே ஒரு நினைவு நாள் தாங்கோ.. நம்ம ஆளுங்க அன்னிக்கு ரோசா கொடுத்தா பொண்ணு கண்டிப்பா வாங்கி வச்சுபான்னு ஒரு தப்பான அபிப்பிராயத்திலே ஆசையா போய் மானாவாரியா அல்வா வாங்கிகிட்டு சொல்லவும் முடியாம வாங்கின அல்வாவை மெல்லவும் முடியாம சுத்திகிட்டு இருக்காவ..

அப்பூ முதல்ல என்ன பண்ணுங்கோ நீங்க ஒரு பொண்ண பாக்குறியன்னு வைங்க... ஒடனே காதல் பத்திக்குமா என்ன..? அதெல்லாம் நம்ம கிழிஞ்சல்கள், டிராஜேந்தர் பட கால கட்டங்கோ.. இப்போ இருக்குற இந்த ‘ லோரைஸ் லோலாக்கு ’ குட்டிக கிட்டே எல்லாம் இந்த பார்த்த உடனே எல்லாம் காதல் தீய பந்தம் வச்செல்லாம் கொளுத்தவே முடியாதுங்கோ.. முதல்ல அவுக கிட்டே போய் பேசுங்க.. நம்ம சூப்பர் ஸ்டார் ஸ்டைல்ல பழகி பாருங்க... அப்போதானே நீங்க எப்படின்னு அவியளுக்கும் அவிய எப்படின்னு உங்களுக்கும் தெரியுவரும்..?

இப்படி முன்ன பின்ன தெரியாத (பார்த்தா தெரியரது இல்லீங்க கண்ணுகளா..!!! ) பொண்ணுககிட்டே போய் பொசுக்குன்னு நீங்க கார்டையோ ரோஜாவையோ எடுத்து நீட்டுனா ஆஹா கெடச்சுதுடா நமக்கு ஒரு அழகான ரோஜானு வாங்கிக் ஹேண்ட் பேக்கிலே வெச்சுகிட்டு ரோசா கொடுத்த ராசா யாருன்னு தெரியாம எஸ்ஸாய்டும்.. இப்படித்தான் போன வேலண்டைண்ச் டேக்கு நம்ம தோழி வந்து என்கிட்டே ஒரு டசன் ரோஜாவை எடுத்து காட்டி இவ்வளவும் வீடிலே இருந்து இங்கே வர்றதுக்குள்ள கெடச்சுதுடா பாண்டின்னு சொல்லுச்சு.. ஏம்மா எவன்னே தெரியாதே எதுக்கு வாங்கினேன்னு கேட்டா.. அட ரோசா எவ்ளோ அழகா இருக்கு பாவம் பய இந்த ஒரு நாளாச்சும் சந்தோசமா இருக்கட்டும்னு அசால்டா சொல்லுது.. நம்ம பசங்க மட்டும் என்ன இளிச்ச வாயங்களா என்ன.. ஆளாலுக்கு ஒரு டசன் ரோஜா வையும் பேர் எழுதாத கார்டுடையும் ஸ்பேர் பார்ட்ஸ் மாதிரி வாங்கி வச்சுகிட்டு போற வர்ற பொண்ணுக கிட்டே எல்லாம் ஏதோ பிட் நேட்டீஸ் கொடுக்கர ரேஞ்சுக்கு கொடுகறதே வேலைன்னு வெளுத்து வாங்கிகிட்டு இருக்காவ..

அட எப்படியோ காதல் தீ கண்ண பின்னானு பத்திகிட்டு கொழுந்துவிட்டு எரிய ஆரம்பிச்சுடுச்சு ... என்ன பண்ணலாம்..? எப்படி மடக்கலாம்..? ன்னு கேட்குறீயளா..? மடக்கிபோட அவுக என்ன பைக் சைடு ஸ்டேண்டா என்ன? முதல்ல இந்த வேலண்டைஸ் டேக்கு தான் ப்ரபோஸ் பண்ணுவேன்னு அல்ப தனமா நெனச்சுகிட்டு இருகாதீகப்பு.. தீபாவளி அன்னிக்கு ரிலீஸ் பண்ண இது சூப்பர் ஸ்டார் படமா என்ன..? தவிற அன்னிக்கு ஏராளமா படம் ரிலீஸ் ஆகறதிலே உங்க படம் எதுன்னு தனியா தெரியாம போய்டுங்கோ.. சோ முதல்ல ப்ரொபோஸ் பண்ணரதுக்கு முன்ன கொஞ்சமாச்சும் அவுக கிட்டே பேசிப்பழகுங்க... எடுத்த உடனே கார்ட் எடுத்து நீட்டுனன அவ்ளோதான் ஓஓஒ இவன் ஏதோ ‘ துள்ளுவதோ இளமை ‘ கோஷ்டின்னு பிகர் ஹேர்பேண்ட்டை பிச்சுகிட்டு ஓடக்கூடிய சான்ஸ் ப்ரகசமா இருக்கு பார்த்துக்குங்க... நீங்க என்னமோ தெய்வீக காதல்ல தஜ்மகாலையே உங்க மனசிலே சொமந்துகிட்டுதான் இருப்பீக ஆனா அது உங்க காதல்கிளிக்கு தெரியாது இல்லையா...?? அதான் கொஞ்ச நஞ்சமாச்சும் அவுக மனசிலே என்ன இருக்குன்னு தெரிஞ்சுகிட்டு கியரைப் போடுங்கப்பு.. இல்லாட்டி வண்டி வீலிங் ஆகி ஆரம்ப கட்டத்திலேயே கவுந்துரும் ஜாக்கிரதை... அப்புறம் வுழுந்து வாறிகிட்டு முட்டி பேந்துருச்சு மனசு ஒடஞ்சிருச்சுன்னு குவாட்டர் தாடியோட டயலாக் வுட்டு,கிட்டு இருக்குறதுல அர்த்தமே இல்லை...

" அட இவ்ளோ சொல்லிகிட்டு இருக்கேன் எங்கே ஓடுறீய..? "

...........................................................................................
" என்ன உங்க ஆளு வந்துட்டடளா.. அவளைப் பார்க்க ஓடுறீயளா..? "

............................................................................................................
" அட அந்த ரோசாப்பூவ வச்சுட்டு போங்கப்பூ... "

...........................................................................................................
" என்ன வச்சுட்டு போன நான் எடுத்துக் கொடுத்து தேத்தீடுவேனா..?
அடங்கொக்க மக்கா இதெல்லாம் நெம்ம ஓவரு... "

..........................................................................................................
" சரி அப்போ ‘ பேண்ட்’ டையாச்சும் போட்டுகிட்டு போங்கப்பூ.. இப்படி
பெர்முடாஸோட ஓடுனா எப்படி..? "ஐய்யய்யோ........ திருத்தவே முடியாது போல இருக்கே...!!!!
Thursday, January 24, 2008

ஃபேஷன் Passion ஸ்ஸ்....


லேட்டஸ்ட் ஃபேஷன் லேட்டஸ்ட் ஃபேஷன்னு சொல்லுறாவுளே அப்படீன்னா என்னான்னு எனக்கு நெம்ம நாளாவே சந்தேகங்க. பேஷன் மாறி போச்சுன்னு யராச்சும் சொன்னா என்னடா மாறிப்போச்சுன்னு நானும் கண்ணுல வெளக்கெண்ணைய வுட்டுகிட்டு தேடுறேன் ஒன்னுமே புரிய மாட்டீங்குது. இதுலே வேற சென்னை ஒரு orthodox ஊரு அதனால பெங்களூரு தான் பேஷனுக்கு மதர்லேண்ட் ன்னு நம்ம ப்ரெண்ட் ஒருத்தன் நெம்ம சிலாகிச்சு சொல்லிகிட்டு இருந்தான். என்னடா சொல்லறே நமக்கு முக்கி முக்கி போட்டாலும் இந்த பேண்ட் சட்டைய தவிற என்னாத்த போட்டுக்க முடியுது..? இதுலே என்னடா மார்டர்ன் பேஷன்னு சொல்லிகிட்டு அலையுறேன்னு ஏதோ தெரியம கேட்டுபுட்டேன். அட அல்பையேன்னு ஒரு இளக்கார லுக் கு உட்டான் பாருங்க .. சே இதுகூட தெரியாம நீயெல்லாம் ஜொள்ளுபாண்டின்னு பெருசா பேரை வெச்சுகிடு அலப்பரை வுட்டுகிட்டு இருக்காதேன்னு மூஞ்சில அறஞ்ச மாதிரி சொல்லிட்டு போய்ட்டான்.

ஆஹா ஜொள்ளுபாண்டியோட திறமையபத்தி இப்படி ஒருத்தன் காரிதுப்பாத கொறையா சொல்லிட்டு போய்ட்டானேன்னு உடனே நமக்குள்ள தூங்கிட்டு இருந்த சிங்கம் சிங்கிளா தெறிச்சி ஓடி ஆராய்ச்சி பண்ணிச்சு. இதோ ஒரு சிட்டியோட மார்டனிட்டிய எப்படியா தீர்மானிக்கிராய்ங்க ங்கர அளப்பறியா உண்மைகளை குற்றம் நடந்தது என்ன பாணியில் பல இன்னல்களுக்கு மத்தியில் உங்க முன்னாடி சொல்லிகிடறேன். என்னடா புண்ணாக்கு இன்னல்னு நீங்க கேட்கறது கேட்குது.உங்களுக்கு என்ன தெரியும்..? ரெண்டே ரெண்டு கண்ணை வச்சுகிட்டு நான் இந்த ஆராய்சிய பண்ண எவ்ளோ கஷ்டப்பட்டேன்னு உங்களுக்கு தெரியாதுங்கோவ்.பெண்கள் நாட்டின் கண்கள் ன்னு பெரியவுக எந்த அர்த்தத்திலே சொன்னாகளோ எனக்கு தெரியாதுங்க. ஆனா பொண்ணுகள வச்சித்தான் ஒரு ஊரோட மார்ட்டனிடிய தீர்மானிக்கறாங்க தெரியுமா..? அட என்ன பாக்குறவுக ? ஆமாங்க. நம்ம பொண்ணுங்க இருக்காவளே ஒரு காலத்திலே பாவாடை சட்டை அப்புறம் தாவணி அப்புறம் சேலைன்னு படிப்படியா வயசுக்கு தகுந்த மாதிரி கட்டிகிட்டு இருந்தாக !
என்ன அப்படியான்னு எல்லாரும் வாயப்பொளந்துகிட்டு படிக்காதீக. இதெல்லாம் போன நூற்றாண்டின் மத்திய காலத்தில் நடந்த ஒரு ஹாரப்பா மொஹஞ்சதாரோ ல இருந்த சிந்துச்சமவெளி நாகரிகம் மாதிரி ஒரு புதைஞ்சு போன கலாச்சரங்க. இந்த சமயத்திலே நம்ம பசங்க எல்லாம் பேண்ட் போட்டு சட்டைய பேண்டுக்குள்ள விட்டுகிட்டு சுத்திகிட்டு இருப்பாய்ங்க.


இந்த நேரத்திலே தான் திடீர்னு கைபர் கனவாய் வழியா நுழைஞ்ச கஜினி மாதிரி நம்ம பொண்ணுங்க மனசிலே இருந்த தவணியையும் ஜாக்கெட்டையும் கொத்தோட சூறையாடிகிட்டு போய் சுரிதார்ன்னு ஒரு ட்ரெஸ் அவுக மனசை கொள்ளை அடிச்சிட்டு போய்டுச்சு. இதைய வச்சிகிட்டே நம்ம அம்மணிக பேஷனோட அடுத்த தலைமுறைக்கு வந்துடாக. நம்ம அம்மணிக அவ்ளோ சீக்கிரம் திருப்தி அடைஞ்சுடுவகளா.? மீன் குஞ்சுக்கு நீச்சல் கத்துக்கொடுக்கணுமா என்ன? நம்ம அம்மணிக எல்லாம் பேஷனுக்கே பேண்டு தச்சு போடுரவுகளாச்சே.. சுடிதார்ல லோ ’கட்’ , ஹை ‘கட்’, மினிசுடி, பேகி சுடி ன்னு சும்மா கதறக் கதற கைய வெட்டு கால ஒட்டுன்னு சும்மா பேஷன் கோடங்கிகளா மாறி பிரிச்சு மேய்ஞ்சுகிட்டு சிட்டியோட மார்டனிட்டிய ஹை வோட்டேஜ்ல வச்சிகிட்டு இருந்தாக. இப்பவும் நம்ம பசங்க பேண்ட்டு சட்டைய போட்டுகிட்டு இன் பண்ணி கொஞ்ச பேரு சட்டைய வெளிய வுட்டிகிட்டு கொஞ்ச பேரு ன்னு பரிதபமா சுத்திகிட்டு இருந்தாக.

இப்படியேக்கா கொஞ்ச வருசத்தை பல்லை கடிச்சிகிட்டு நம்ம அம்மணிக ஓட்டிகிட்டு இருந்தாவளா ? அப்போதான் பார்த்தாக. எத்தனை நாளைக்குதான் இந்த சுரிதார் கருமாந்தரத்தை இப்படியே போட்டுகிட்டு இருக்கிறதுன்னு என்ன பண்ணலாம்னு?? அதான் மூக்கு சிந்த கைல கர்சீப் இருக்கு இதிலே எதுக்குடா இவ்ளோ பெரிய துப்பட்டான்னு திடீனு போதி மரத்தடியிலே புத்தருக்கு ஞானோதயம் வந்த மாதிரி நம்ம அம்மணிகளுக்கு வந்து தூக்கி கடாசீட்டாங்க துப்பட்டாவை. இன்னும் எவ்ளோ நாளைக்கு தான் இந்த இத்துப்போன துணியிலே சுரிதாருக்கு பேண்டை போடுறதுன்னு பார்த்தங்க. அட இந்த பசங்க எல்லாம் சும்ம கோணித்துணியிலே ஜீன்ஸ் சை போட்டுகிட்டு தானே நம்ம கிட்டே பெரிய சீனைப் போருறாவ உருவுடா அவனுக ஜீன்ஸை ன்னு நம்ம அம்மணிக ரகசிய தீர்மானம் நிறைவேத்தி இந்த ஜீன்ஸை மட்டுமே வச்சு ஆட்டம் போட்டுகிட்டு இருந்த பசங்க பேட்டரிய ப்யூஸ் புடுங்கிட்டாங்க. இந்த கால கட்டத்திலேயும் நம்ம பசங்க பேண்ட்டை போட்டு சட்டைய இன் பண்ணிகிட்டுதான் சுத்திகிட்டு இருக்கானுவ. கொஞ்சம் பேரு வெளிய சட்டைய விட்டுகிட்டு இருக்காணுவ.இப்படி பசங்க கிட்டே இருந்து ஜீண்ஸை தங்களோட உரிமையா உறுவிகிட்டு வந்ததோட திருப்தி அடையாம அவுகளோட shirt , Tshirt, short kurtha, ன்னு மனசாட்சியே இல்லாம எதையுமே விட்டு வைக்காம உருவிகிட்டு ஒடிவந்துடாக. கேட்டா இதுதாண்டா எங்க பேஷ்ன்னு தெலுங்கு ராஜசேகர் பட டைட்டில் கணக்கா நம்ம கிட்டே உருமிகிட்டு போறாக. இதிலே நம்ம அம்மணிக பார்த்தீகண்னா பழசையெல்லாம் அவ்ளோ சீக்கிரம் மறக்க மாட்டாக. தாவணி . சேலைன்னு கற்கால பேஷன் எல்லாம் இவுகளுக்கு திடீர் திடீர்னு ஞாபகம் வந்து எங்கினயாச்சும் அவுக display பண்ணற மாதிரி ஒரு கல்யாணமோ ஆபிஸ் ஃபங்ஷனோ வந்தா போதும் கட்டத்தெரியாம கட்டிகிட்டு வந்து பரிதாபமா இருக்குற பசங்க உசுரை எடுக்கிறதுல இவுகளுக்கு ஒரு அலாதி ப்ரியம் போங்க. இதிலே பசங்களோட முண்டா பனியன் கூட்ட தப்பலைங்க.. அதைய மட்டுமே போட்டுகிட்டு நம்ம அம்மணிக ஸ்லீவ்லெஸ் பனியன்னு அலப்பறை வுடுகிட்டு இருக்காவ,, அது மட்டுமா ஸ்கூல பசங்களோட டவுசரைக்கூட விடலையே.... அதையும் போட்டுகிட்டு விடலைப் பசங்க மனச கன்னா பின்னானு அலைபாயவிடுறாக...

என்னதான் சொல்லுங்க முக்கி முக்கி தேடி போட்டாலும் இந்த பசங்களுக்கு பேகி, பெல் பாட்டம் தவிர என்ன இருக்குங்க..? நம்ம அம்மணிகள பாருங்க..? இப்போ சொல்லுங்க ஒரு ஊரு மார்ட்டனா இருக்குரதும் இல்லாததும் நம்ம அம்மணிககிட்டே தான் இருக்கு இல்ல..?

Sunday, January 20, 2008

ஒன்றே ஒன்று - எழுதியதில் பிடித்தது

அயராத களப்பணிகளில் இருந்து கொஞ்ச நாள் ஓய்வெடுத்துக்கலாம்னு அப்படியேக்கா கண்ணை மூடிகிட்டு சுத்திகிட்டு இருந்தேனா..? அப்போதான் திடீர்னு நம்ம தலையிலே ஒரு குட்டு விழுந்துச்சு.. யாருடா அது .. நம்மளை இவ்ளோ உரிமையோட போட்டுத்தாக்குறதுன்னு பார்த்தா.. அட நம்ம கதாசிரியை திவ்யா.. என்னாங்க திவ்யா உங்க கதைக்கு நான் ஏதாச்சும் ஹெல்ப் பண்ணனுமா..? No. No.. எனக்கு பல வேலை இருக்கு .. யாரோ பின்லேடனாம் அவனை புடிக்கணும்னு புஷ் போன் பண்ணி கெஞ்சறார்.. இந்த தீபிகா படிகோன் வேற டிஸ்கோதே வா டிஸ்கோதே வான்னு போனைப் போட்டுக் கெஞ்சுது ... so plz don’t disturb me ! ன்னு சொல்லி வாய மூடுல.. திரும்ப அம்மணிகிட்டே இருந்து ஒரு குட்டு.. டேய் பாண்டி ஒவரா பேசாதே போன வருசம் நீ என்னாத்தை எழுதி கிழிச்சே ? போ போய் அதிலே உனக்குப் பிடிச்ச பதிவு எது ன்னு சொல்லுடா.. எதுவும் தேறாதுன்னு எனக்குத்தெரியும். இருந்தாலும் சொல்லிட்டு போ.. கேட்டுத்தொலைக்கறோம் ன்னு சொல்லிட்டு போய்ட்டாக...

அப்புறம் சும்மா இருக்க முடியுமா..? சரி நாம என்னதான் எழுதினோம். அதிலே எதுடா நமக்கு புடிச்சதுன்னு பார்த்தேன்.. எல்லாமே எனக்குப் புடிச்சுதாங்க எழுதினேன் புடிக்காம எதுவுமே எழுதினது இல்லை. இருந்தாலும் எல்லா பொண்ணுங்களை சைட் அடிச்சாலும் ஒண்ணே ஒன்னு மேல ஒரு தனி பாசம் இருக்கும்ல. அது மாதிரி போன வருஷம் நான் எழுதினதுல ரொம்ப புடிச்ச பதிவு

ரயில் மயில்

ஏண்டா இந்தப் பதிவு ரொம்ப புடிச்சதுன்னு கேட்டீங்கன்னா என்ன சொல்றது ? அது ஒரு ரகசியம்.. ரகசியம்னு சொல்லிட்டேன் ஆரும் கேள்வி கேட்காம திரும்ப படிங்கப்பூ.. சரியா ??

சரி நம்மள மாதிரியே இன்னும் யாரை இழுத்து விடறது..? அதான் இருக்கவுளே நம்ம மக்கள்ஸ்... நீங்களும் கொஞ்சம் சொல்லிட்டு போங்கப்பூ...

இம்சைஅரசி
நாமக்கல் சிபி
ஜி
மை ப்ரெண்ட்
துர்கா