Thursday, January 24, 2008

ஃபேஷன் Passion ஸ்ஸ்....


லேட்டஸ்ட் ஃபேஷன் லேட்டஸ்ட் ஃபேஷன்னு சொல்லுறாவுளே அப்படீன்னா என்னான்னு எனக்கு நெம்ம நாளாவே சந்தேகங்க. பேஷன் மாறி போச்சுன்னு யராச்சும் சொன்னா என்னடா மாறிப்போச்சுன்னு நானும் கண்ணுல வெளக்கெண்ணைய வுட்டுகிட்டு தேடுறேன் ஒன்னுமே புரிய மாட்டீங்குது. இதுலே வேற சென்னை ஒரு orthodox ஊரு அதனால பெங்களூரு தான் பேஷனுக்கு மதர்லேண்ட் ன்னு நம்ம ப்ரெண்ட் ஒருத்தன் நெம்ம சிலாகிச்சு சொல்லிகிட்டு இருந்தான். என்னடா சொல்லறே நமக்கு முக்கி முக்கி போட்டாலும் இந்த பேண்ட் சட்டைய தவிற என்னாத்த போட்டுக்க முடியுது..? இதுலே என்னடா மார்டர்ன் பேஷன்னு சொல்லிகிட்டு அலையுறேன்னு ஏதோ தெரியம கேட்டுபுட்டேன். அட அல்பையேன்னு ஒரு இளக்கார லுக் கு உட்டான் பாருங்க .. சே இதுகூட தெரியாம நீயெல்லாம் ஜொள்ளுபாண்டின்னு பெருசா பேரை வெச்சுகிடு அலப்பரை வுட்டுகிட்டு இருக்காதேன்னு மூஞ்சில அறஞ்ச மாதிரி சொல்லிட்டு போய்ட்டான்.

ஆஹா ஜொள்ளுபாண்டியோட திறமையபத்தி இப்படி ஒருத்தன் காரிதுப்பாத கொறையா சொல்லிட்டு போய்ட்டானேன்னு உடனே நமக்குள்ள தூங்கிட்டு இருந்த சிங்கம் சிங்கிளா தெறிச்சி ஓடி ஆராய்ச்சி பண்ணிச்சு. இதோ ஒரு சிட்டியோட மார்டனிட்டிய எப்படியா தீர்மானிக்கிராய்ங்க ங்கர அளப்பறியா உண்மைகளை குற்றம் நடந்தது என்ன பாணியில் பல இன்னல்களுக்கு மத்தியில் உங்க முன்னாடி சொல்லிகிடறேன். என்னடா புண்ணாக்கு இன்னல்னு நீங்க கேட்கறது கேட்குது.உங்களுக்கு என்ன தெரியும்..? ரெண்டே ரெண்டு கண்ணை வச்சுகிட்டு நான் இந்த ஆராய்சிய பண்ண எவ்ளோ கஷ்டப்பட்டேன்னு உங்களுக்கு தெரியாதுங்கோவ்.பெண்கள் நாட்டின் கண்கள் ன்னு பெரியவுக எந்த அர்த்தத்திலே சொன்னாகளோ எனக்கு தெரியாதுங்க. ஆனா பொண்ணுகள வச்சித்தான் ஒரு ஊரோட மார்ட்டனிடிய தீர்மானிக்கறாங்க தெரியுமா..? அட என்ன பாக்குறவுக ? ஆமாங்க. நம்ம பொண்ணுங்க இருக்காவளே ஒரு காலத்திலே பாவாடை சட்டை அப்புறம் தாவணி அப்புறம் சேலைன்னு படிப்படியா வயசுக்கு தகுந்த மாதிரி கட்டிகிட்டு இருந்தாக !
என்ன அப்படியான்னு எல்லாரும் வாயப்பொளந்துகிட்டு படிக்காதீக. இதெல்லாம் போன நூற்றாண்டின் மத்திய காலத்தில் நடந்த ஒரு ஹாரப்பா மொஹஞ்சதாரோ ல இருந்த சிந்துச்சமவெளி நாகரிகம் மாதிரி ஒரு புதைஞ்சு போன கலாச்சரங்க. இந்த சமயத்திலே நம்ம பசங்க எல்லாம் பேண்ட் போட்டு சட்டைய பேண்டுக்குள்ள விட்டுகிட்டு சுத்திகிட்டு இருப்பாய்ங்க.


இந்த நேரத்திலே தான் திடீர்னு கைபர் கனவாய் வழியா நுழைஞ்ச கஜினி மாதிரி நம்ம பொண்ணுங்க மனசிலே இருந்த தவணியையும் ஜாக்கெட்டையும் கொத்தோட சூறையாடிகிட்டு போய் சுரிதார்ன்னு ஒரு ட்ரெஸ் அவுக மனசை கொள்ளை அடிச்சிட்டு போய்டுச்சு. இதைய வச்சிகிட்டே நம்ம அம்மணிக பேஷனோட அடுத்த தலைமுறைக்கு வந்துடாக. நம்ம அம்மணிக அவ்ளோ சீக்கிரம் திருப்தி அடைஞ்சுடுவகளா.? மீன் குஞ்சுக்கு நீச்சல் கத்துக்கொடுக்கணுமா என்ன? நம்ம அம்மணிக எல்லாம் பேஷனுக்கே பேண்டு தச்சு போடுரவுகளாச்சே.. சுடிதார்ல லோ ’கட்’ , ஹை ‘கட்’, மினிசுடி, பேகி சுடி ன்னு சும்மா கதறக் கதற கைய வெட்டு கால ஒட்டுன்னு சும்மா பேஷன் கோடங்கிகளா மாறி பிரிச்சு மேய்ஞ்சுகிட்டு சிட்டியோட மார்டனிட்டிய ஹை வோட்டேஜ்ல வச்சிகிட்டு இருந்தாக. இப்பவும் நம்ம பசங்க பேண்ட்டு சட்டைய போட்டுகிட்டு இன் பண்ணி கொஞ்ச பேரு சட்டைய வெளிய வுட்டிகிட்டு கொஞ்ச பேரு ன்னு பரிதபமா சுத்திகிட்டு இருந்தாக.

இப்படியேக்கா கொஞ்ச வருசத்தை பல்லை கடிச்சிகிட்டு நம்ம அம்மணிக ஓட்டிகிட்டு இருந்தாவளா ? அப்போதான் பார்த்தாக. எத்தனை நாளைக்குதான் இந்த சுரிதார் கருமாந்தரத்தை இப்படியே போட்டுகிட்டு இருக்கிறதுன்னு என்ன பண்ணலாம்னு?? அதான் மூக்கு சிந்த கைல கர்சீப் இருக்கு இதிலே எதுக்குடா இவ்ளோ பெரிய துப்பட்டான்னு திடீனு போதி மரத்தடியிலே புத்தருக்கு ஞானோதயம் வந்த மாதிரி நம்ம அம்மணிகளுக்கு வந்து தூக்கி கடாசீட்டாங்க துப்பட்டாவை. இன்னும் எவ்ளோ நாளைக்கு தான் இந்த இத்துப்போன துணியிலே சுரிதாருக்கு பேண்டை போடுறதுன்னு பார்த்தங்க. அட இந்த பசங்க எல்லாம் சும்ம கோணித்துணியிலே ஜீன்ஸ் சை போட்டுகிட்டு தானே நம்ம கிட்டே பெரிய சீனைப் போருறாவ உருவுடா அவனுக ஜீன்ஸை ன்னு நம்ம அம்மணிக ரகசிய தீர்மானம் நிறைவேத்தி இந்த ஜீன்ஸை மட்டுமே வச்சு ஆட்டம் போட்டுகிட்டு இருந்த பசங்க பேட்டரிய ப்யூஸ் புடுங்கிட்டாங்க. இந்த கால கட்டத்திலேயும் நம்ம பசங்க பேண்ட்டை போட்டு சட்டைய இன் பண்ணிகிட்டுதான் சுத்திகிட்டு இருக்கானுவ. கொஞ்சம் பேரு வெளிய சட்டைய விட்டுகிட்டு இருக்காணுவ.இப்படி பசங்க கிட்டே இருந்து ஜீண்ஸை தங்களோட உரிமையா உறுவிகிட்டு வந்ததோட திருப்தி அடையாம அவுகளோட shirt , Tshirt, short kurtha, ன்னு மனசாட்சியே இல்லாம எதையுமே விட்டு வைக்காம உருவிகிட்டு ஒடிவந்துடாக. கேட்டா இதுதாண்டா எங்க பேஷ்ன்னு தெலுங்கு ராஜசேகர் பட டைட்டில் கணக்கா நம்ம கிட்டே உருமிகிட்டு போறாக. இதிலே நம்ம அம்மணிக பார்த்தீகண்னா பழசையெல்லாம் அவ்ளோ சீக்கிரம் மறக்க மாட்டாக. தாவணி . சேலைன்னு கற்கால பேஷன் எல்லாம் இவுகளுக்கு திடீர் திடீர்னு ஞாபகம் வந்து எங்கினயாச்சும் அவுக display பண்ணற மாதிரி ஒரு கல்யாணமோ ஆபிஸ் ஃபங்ஷனோ வந்தா போதும் கட்டத்தெரியாம கட்டிகிட்டு வந்து பரிதாபமா இருக்குற பசங்க உசுரை எடுக்கிறதுல இவுகளுக்கு ஒரு அலாதி ப்ரியம் போங்க. இதிலே பசங்களோட முண்டா பனியன் கூட்ட தப்பலைங்க.. அதைய மட்டுமே போட்டுகிட்டு நம்ம அம்மணிக ஸ்லீவ்லெஸ் பனியன்னு அலப்பறை வுடுகிட்டு இருக்காவ,, அது மட்டுமா ஸ்கூல பசங்களோட டவுசரைக்கூட விடலையே.... அதையும் போட்டுகிட்டு விடலைப் பசங்க மனச கன்னா பின்னானு அலைபாயவிடுறாக...

என்னதான் சொல்லுங்க முக்கி முக்கி தேடி போட்டாலும் இந்த பசங்களுக்கு பேகி, பெல் பாட்டம் தவிர என்ன இருக்குங்க..? நம்ம அம்மணிகள பாருங்க..? இப்போ சொல்லுங்க ஒரு ஊரு மார்ட்டனா இருக்குரதும் இல்லாததும் நம்ம அம்மணிககிட்டே தான் இருக்கு இல்ல..?

Sunday, January 20, 2008

ஒன்றே ஒன்று - எழுதியதில் பிடித்தது

அயராத களப்பணிகளில் இருந்து கொஞ்ச நாள் ஓய்வெடுத்துக்கலாம்னு அப்படியேக்கா கண்ணை மூடிகிட்டு சுத்திகிட்டு இருந்தேனா..? அப்போதான் திடீர்னு நம்ம தலையிலே ஒரு குட்டு விழுந்துச்சு.. யாருடா அது .. நம்மளை இவ்ளோ உரிமையோட போட்டுத்தாக்குறதுன்னு பார்த்தா.. அட நம்ம கதாசிரியை திவ்யா.. என்னாங்க திவ்யா உங்க கதைக்கு நான் ஏதாச்சும் ஹெல்ப் பண்ணனுமா..? No. No.. எனக்கு பல வேலை இருக்கு .. யாரோ பின்லேடனாம் அவனை புடிக்கணும்னு புஷ் போன் பண்ணி கெஞ்சறார்.. இந்த தீபிகா படிகோன் வேற டிஸ்கோதே வா டிஸ்கோதே வான்னு போனைப் போட்டுக் கெஞ்சுது ... so plz don’t disturb me ! ன்னு சொல்லி வாய மூடுல.. திரும்ப அம்மணிகிட்டே இருந்து ஒரு குட்டு.. டேய் பாண்டி ஒவரா பேசாதே போன வருசம் நீ என்னாத்தை எழுதி கிழிச்சே ? போ போய் அதிலே உனக்குப் பிடிச்ச பதிவு எது ன்னு சொல்லுடா.. எதுவும் தேறாதுன்னு எனக்குத்தெரியும். இருந்தாலும் சொல்லிட்டு போ.. கேட்டுத்தொலைக்கறோம் ன்னு சொல்லிட்டு போய்ட்டாக...

அப்புறம் சும்மா இருக்க முடியுமா..? சரி நாம என்னதான் எழுதினோம். அதிலே எதுடா நமக்கு புடிச்சதுன்னு பார்த்தேன்.. எல்லாமே எனக்குப் புடிச்சுதாங்க எழுதினேன் புடிக்காம எதுவுமே எழுதினது இல்லை. இருந்தாலும் எல்லா பொண்ணுங்களை சைட் அடிச்சாலும் ஒண்ணே ஒன்னு மேல ஒரு தனி பாசம் இருக்கும்ல. அது மாதிரி போன வருஷம் நான் எழுதினதுல ரொம்ப புடிச்ச பதிவு

ரயில் மயில்

ஏண்டா இந்தப் பதிவு ரொம்ப புடிச்சதுன்னு கேட்டீங்கன்னா என்ன சொல்றது ? அது ஒரு ரகசியம்.. ரகசியம்னு சொல்லிட்டேன் ஆரும் கேள்வி கேட்காம திரும்ப படிங்கப்பூ.. சரியா ??

சரி நம்மள மாதிரியே இன்னும் யாரை இழுத்து விடறது..? அதான் இருக்கவுளே நம்ம மக்கள்ஸ்... நீங்களும் கொஞ்சம் சொல்லிட்டு போங்கப்பூ...

இம்சைஅரசி
நாமக்கல் சிபி
ஜி
மை ப்ரெண்ட்
துர்கா