Thursday, January 24, 2008

ஃபேஷன் Passion ஸ்ஸ்....


லேட்டஸ்ட் ஃபேஷன் லேட்டஸ்ட் ஃபேஷன்னு சொல்லுறாவுளே அப்படீன்னா என்னான்னு எனக்கு நெம்ம நாளாவே சந்தேகங்க. பேஷன் மாறி போச்சுன்னு யராச்சும் சொன்னா என்னடா மாறிப்போச்சுன்னு நானும் கண்ணுல வெளக்கெண்ணைய வுட்டுகிட்டு தேடுறேன் ஒன்னுமே புரிய மாட்டீங்குது. இதுலே வேற சென்னை ஒரு orthodox ஊரு அதனால பெங்களூரு தான் பேஷனுக்கு மதர்லேண்ட் ன்னு நம்ம ப்ரெண்ட் ஒருத்தன் நெம்ம சிலாகிச்சு சொல்லிகிட்டு இருந்தான். என்னடா சொல்லறே நமக்கு முக்கி முக்கி போட்டாலும் இந்த பேண்ட் சட்டைய தவிற என்னாத்த போட்டுக்க முடியுது..? இதுலே என்னடா மார்டர்ன் பேஷன்னு சொல்லிகிட்டு அலையுறேன்னு ஏதோ தெரியம கேட்டுபுட்டேன். அட அல்பையேன்னு ஒரு இளக்கார லுக் கு உட்டான் பாருங்க .. சே இதுகூட தெரியாம நீயெல்லாம் ஜொள்ளுபாண்டின்னு பெருசா பேரை வெச்சுகிடு அலப்பரை வுட்டுகிட்டு இருக்காதேன்னு மூஞ்சில அறஞ்ச மாதிரி சொல்லிட்டு போய்ட்டான்.

ஆஹா ஜொள்ளுபாண்டியோட திறமையபத்தி இப்படி ஒருத்தன் காரிதுப்பாத கொறையா சொல்லிட்டு போய்ட்டானேன்னு உடனே நமக்குள்ள தூங்கிட்டு இருந்த சிங்கம் சிங்கிளா தெறிச்சி ஓடி ஆராய்ச்சி பண்ணிச்சு. இதோ ஒரு சிட்டியோட மார்டனிட்டிய எப்படியா தீர்மானிக்கிராய்ங்க ங்கர அளப்பறியா உண்மைகளை குற்றம் நடந்தது என்ன பாணியில் பல இன்னல்களுக்கு மத்தியில் உங்க முன்னாடி சொல்லிகிடறேன். என்னடா புண்ணாக்கு இன்னல்னு நீங்க கேட்கறது கேட்குது.உங்களுக்கு என்ன தெரியும்..? ரெண்டே ரெண்டு கண்ணை வச்சுகிட்டு நான் இந்த ஆராய்சிய பண்ண எவ்ளோ கஷ்டப்பட்டேன்னு உங்களுக்கு தெரியாதுங்கோவ்.பெண்கள் நாட்டின் கண்கள் ன்னு பெரியவுக எந்த அர்த்தத்திலே சொன்னாகளோ எனக்கு தெரியாதுங்க. ஆனா பொண்ணுகள வச்சித்தான் ஒரு ஊரோட மார்ட்டனிடிய தீர்மானிக்கறாங்க தெரியுமா..? அட என்ன பாக்குறவுக ? ஆமாங்க. நம்ம பொண்ணுங்க இருக்காவளே ஒரு காலத்திலே பாவாடை சட்டை அப்புறம் தாவணி அப்புறம் சேலைன்னு படிப்படியா வயசுக்கு தகுந்த மாதிரி கட்டிகிட்டு இருந்தாக !
என்ன அப்படியான்னு எல்லாரும் வாயப்பொளந்துகிட்டு படிக்காதீக. இதெல்லாம் போன நூற்றாண்டின் மத்திய காலத்தில் நடந்த ஒரு ஹாரப்பா மொஹஞ்சதாரோ ல இருந்த சிந்துச்சமவெளி நாகரிகம் மாதிரி ஒரு புதைஞ்சு போன கலாச்சரங்க. இந்த சமயத்திலே நம்ம பசங்க எல்லாம் பேண்ட் போட்டு சட்டைய பேண்டுக்குள்ள விட்டுகிட்டு சுத்திகிட்டு இருப்பாய்ங்க.


இந்த நேரத்திலே தான் திடீர்னு கைபர் கனவாய் வழியா நுழைஞ்ச கஜினி மாதிரி நம்ம பொண்ணுங்க மனசிலே இருந்த தவணியையும் ஜாக்கெட்டையும் கொத்தோட சூறையாடிகிட்டு போய் சுரிதார்ன்னு ஒரு ட்ரெஸ் அவுக மனசை கொள்ளை அடிச்சிட்டு போய்டுச்சு. இதைய வச்சிகிட்டே நம்ம அம்மணிக பேஷனோட அடுத்த தலைமுறைக்கு வந்துடாக. நம்ம அம்மணிக அவ்ளோ சீக்கிரம் திருப்தி அடைஞ்சுடுவகளா.? மீன் குஞ்சுக்கு நீச்சல் கத்துக்கொடுக்கணுமா என்ன? நம்ம அம்மணிக எல்லாம் பேஷனுக்கே பேண்டு தச்சு போடுரவுகளாச்சே.. சுடிதார்ல லோ ’கட்’ , ஹை ‘கட்’, மினிசுடி, பேகி சுடி ன்னு சும்மா கதறக் கதற கைய வெட்டு கால ஒட்டுன்னு சும்மா பேஷன் கோடங்கிகளா மாறி பிரிச்சு மேய்ஞ்சுகிட்டு சிட்டியோட மார்டனிட்டிய ஹை வோட்டேஜ்ல வச்சிகிட்டு இருந்தாக. இப்பவும் நம்ம பசங்க பேண்ட்டு சட்டைய போட்டுகிட்டு இன் பண்ணி கொஞ்ச பேரு சட்டைய வெளிய வுட்டிகிட்டு கொஞ்ச பேரு ன்னு பரிதபமா சுத்திகிட்டு இருந்தாக.

இப்படியேக்கா கொஞ்ச வருசத்தை பல்லை கடிச்சிகிட்டு நம்ம அம்மணிக ஓட்டிகிட்டு இருந்தாவளா ? அப்போதான் பார்த்தாக. எத்தனை நாளைக்குதான் இந்த சுரிதார் கருமாந்தரத்தை இப்படியே போட்டுகிட்டு இருக்கிறதுன்னு என்ன பண்ணலாம்னு?? அதான் மூக்கு சிந்த கைல கர்சீப் இருக்கு இதிலே எதுக்குடா இவ்ளோ பெரிய துப்பட்டான்னு திடீனு போதி மரத்தடியிலே புத்தருக்கு ஞானோதயம் வந்த மாதிரி நம்ம அம்மணிகளுக்கு வந்து தூக்கி கடாசீட்டாங்க துப்பட்டாவை. இன்னும் எவ்ளோ நாளைக்கு தான் இந்த இத்துப்போன துணியிலே சுரிதாருக்கு பேண்டை போடுறதுன்னு பார்த்தங்க. அட இந்த பசங்க எல்லாம் சும்ம கோணித்துணியிலே ஜீன்ஸ் சை போட்டுகிட்டு தானே நம்ம கிட்டே பெரிய சீனைப் போருறாவ உருவுடா அவனுக ஜீன்ஸை ன்னு நம்ம அம்மணிக ரகசிய தீர்மானம் நிறைவேத்தி இந்த ஜீன்ஸை மட்டுமே வச்சு ஆட்டம் போட்டுகிட்டு இருந்த பசங்க பேட்டரிய ப்யூஸ் புடுங்கிட்டாங்க. இந்த கால கட்டத்திலேயும் நம்ம பசங்க பேண்ட்டை போட்டு சட்டைய இன் பண்ணிகிட்டுதான் சுத்திகிட்டு இருக்கானுவ. கொஞ்சம் பேரு வெளிய சட்டைய விட்டுகிட்டு இருக்காணுவ.இப்படி பசங்க கிட்டே இருந்து ஜீண்ஸை தங்களோட உரிமையா உறுவிகிட்டு வந்ததோட திருப்தி அடையாம அவுகளோட shirt , Tshirt, short kurtha, ன்னு மனசாட்சியே இல்லாம எதையுமே விட்டு வைக்காம உருவிகிட்டு ஒடிவந்துடாக. கேட்டா இதுதாண்டா எங்க பேஷ்ன்னு தெலுங்கு ராஜசேகர் பட டைட்டில் கணக்கா நம்ம கிட்டே உருமிகிட்டு போறாக. இதிலே நம்ம அம்மணிக பார்த்தீகண்னா பழசையெல்லாம் அவ்ளோ சீக்கிரம் மறக்க மாட்டாக. தாவணி . சேலைன்னு கற்கால பேஷன் எல்லாம் இவுகளுக்கு திடீர் திடீர்னு ஞாபகம் வந்து எங்கினயாச்சும் அவுக display பண்ணற மாதிரி ஒரு கல்யாணமோ ஆபிஸ் ஃபங்ஷனோ வந்தா போதும் கட்டத்தெரியாம கட்டிகிட்டு வந்து பரிதாபமா இருக்குற பசங்க உசுரை எடுக்கிறதுல இவுகளுக்கு ஒரு அலாதி ப்ரியம் போங்க. இதிலே பசங்களோட முண்டா பனியன் கூட்ட தப்பலைங்க.. அதைய மட்டுமே போட்டுகிட்டு நம்ம அம்மணிக ஸ்லீவ்லெஸ் பனியன்னு அலப்பறை வுடுகிட்டு இருக்காவ,, அது மட்டுமா ஸ்கூல பசங்களோட டவுசரைக்கூட விடலையே.... அதையும் போட்டுகிட்டு விடலைப் பசங்க மனச கன்னா பின்னானு அலைபாயவிடுறாக...

என்னதான் சொல்லுங்க முக்கி முக்கி தேடி போட்டாலும் இந்த பசங்களுக்கு பேகி, பெல் பாட்டம் தவிர என்ன இருக்குங்க..? நம்ம அம்மணிகள பாருங்க..? இப்போ சொல்லுங்க ஒரு ஊரு மார்ட்டனா இருக்குரதும் இல்லாததும் நம்ம அம்மணிககிட்டே தான் இருக்கு இல்ல..?

35 பேர் வளைச்சு வளச்சு ஜொள்ளிருக்காங்க:

said...

//என்னதான் சொல்லுங்க முக்கி முக்கி தேடி போட்டாலும் இந்த பசங்களுக்கு பேகி, பெல் பாட்டம் தவிர என்ன இருக்குங்க..? நம்ம அம்மணிகள பாருங்க..? இப்போ சொல்லுங்க ஒரு ஊரு மார்ட்டனா இருக்குரதும் இல்லாததும் நம்ம அம்மணிககிட்டே தான் இருக்கு இல்ல..? //

ரைக்க்ட்டூ.. :-))))

said...

பாண்டி வந்தாச்சா ? இப்படி ஒரு ஆராய்ச்சியா? அம்மாடியோவ்..

said...

//.:: மை ஃபிரண்ட் ::. said...
//என்னதான் சொல்லுங்க முக்கி முக்கி தேடி போட்டாலும் இந்த பசங்களுக்கு பேகி, பெல் பாட்டம் தவிர என்ன இருக்குங்க..? நம்ம அம்மணிகள பாருங்க..? இப்போ சொல்லுங்க ஒரு ஊரு மார்ட்டனா இருக்குரதும் இல்லாததும் நம்ம அம்மணிககிட்டே தான் இருக்கு இல்ல..? //

ரைக்க்ட்டூ.. :-))))//

வாங்க மைப்ரெண்ட் :)))
ஆஹா இதுகெல்லாம் கரெட்டா சொல்லுவீயளே :)))) ரொம்ப டேங்ஸ்..:)))

said...

//Anonymous said...
பாண்டி வந்தாச்சா ? இப்படி ஒரு ஆராய்ச்சியா? அம்மாடியோவ்..//

வாங்க அனானி :)))
வந்தாச்சுங்கோவ்...:))) என்ன இது இந்த ஆராய்சிக்கே இப்படி இருந்தா எப்படி..? ;)))) இன்னும் இருக்குங்கோவ்...

said...

என்னாத்த சொல்ல!!

இன்னும் முழு பேண்ட் போட்டு சட்டைய பாதி நாள் பேண்டுக்குள்ள விட்டுகிட்டு, பாதிநாள் வெளில விட்டுகிட்டுதான் திரியுறேன்!!

இந்த புள்ளைக பேண்ட் , ஜீன்ஸையும் முக்கா கால்ல கிழிச்சிகிட்டு திரியறாளுவளே!!

ஒண்ணும் பிரியலை எதுக்குன்னு!!!!

:(

said...

என்ன பாண்டிணே,
இம்புட்டு ஆராய்ச்சி பண்ணிட்டு, நமக்கு எந்த தீர்வும் கிடைக்கலையா?

said...

Pondy.. hillarious..
- vimal

said...

// மங்களூர் சிவா said...
என்னாத்த சொல்ல!!

இன்னும் முழு பேண்ட் போட்டு சட்டைய பாதி நாள் பேண்டுக்குள்ள விட்டுகிட்டு, பாதிநாள் வெளில விட்டுகிட்டுதான் திரியுறேன்!!

இந்த புள்ளைக பேண்ட் , ஜீன்ஸையும் முக்கா கால்ல கிழிச்சிகிட்டு திரியறாளுவளே!!

ஒண்ணும் பிரியலை எதுக்குன்னு!!!!//

வாங்க சிவா :))))
அட ஜீன்ஸை முக்கா காலுக்கு போட்டு இருக்காகளா...?? கால் காலுக்குத்தானே போடுகிட்டு இருக்காக சில ஷாப்பிங் காம்ளெக்ஸ்ல... பார்த்ததில்லையா ...??? ;)))))

said...

// J K said...
என்ன பாண்டிணே,
இம்புட்டு ஆராய்ச்சி பண்ணிட்டு, நமக்கு எந்த தீர்வும் கிடைக்கலையா? //

வாங்க JK
அட என்னா கெடச்சு என்ன பண்ண போங்க... தீர்வு என்னானா... ( இருங்க யாரோ ஒரு அம்மாயி அங்கன மினிசுடியோட வர மாதிரி தெரியுது வாங்க பார்த்துட்டு வரலாம்..;)))))

said...

// Anonymous said...
Pondy.. hillarious..
- vimal //

வாங்க விமல் :)))
அப்படியா ..?? நல்லா மனசுவிட்டு சிரிங்கப்பூ....:))))

said...

//ஜீன்ஸை மட்டுமே வச்சு ஆட்டம் போட்டுகிட்டு இருந்த பசங்க பேட்டரிய ப்யூஸ் புடுங்கிட்டாங்க//

ஹாஹா

said...

ஆண்களுக்கு சில ஐடியாக்கள்:

1. 80களில் நடிகர் மோகன் போன்றோர் ஒருவித சட்டை போட்டிருந்தாங்க சினிமால - சட்டை பொத்தான்கள் அருகில் டிசைனா ப்ரிண்ட் அல்லது embroidery இருக்கும். அதாவது பெண்களின் சுடிதார் neck pattern மாதிரி. சட்டையிலேயே கொஞ்சம் வித்தியாசமான சட்டை. அதைப் போட்டுக்குங்களேன் ;-)

2. அதுக்கும் முன்பு சுமார் 70களில் ஆண்களின் பேண்டில் முக்கோண வடிவில் வேறு நிறத்தில் இருக்கும். ஸ்பைடர்மேனா சூப்பர்மேனா, அந்த மாதிரி. அதை ட்ரை பண்ணலாமே சூப்பரா இருக்கும் ;-)

3. ஆண்களும்தான் விஜய் ஸ்டைல் தல ஸ்டைல் விக்ரம் ஸ்டைல்னு பொத்தான்களே இல்லாத சட்டை போடறீங்களே அப்புறமென்ன?

இப்படியெல்லாம் வித்தியாசமா பண்ணிப் பார்க்காம சும்மா பொலம்பாதீங்க வந்து :-D

said...

நாங்கள் விஜய் ஸ்டைல் அஜித் ஸ்டைலில் உடை அணிய தயார் ஆனால் பெண்கள் அதற்கு முன்பே ஷ்ரேயா, நயன்தாரா ஸ்டைலில் வந்து பசங்களை சேது ரேஞ்சில் அலைய விடலாமா. பாண்டியண்ணா உஙக ஆராய்ச்சி எந்த மாலில் நடந்ததுனு சொல்லுங்க, நாங்களும் தேவி தரிசனத்துக்கு போவோமில்ல

said...

veshti,lungi than ippo wrapper on skirt.vittutinkale thalaivare
-isthripotti

said...

// சேதுக்கரசி said...
//ஜீன்ஸை மட்டுமே வச்சு ஆட்டம் போட்டுகிட்டு இருந்த பசங்க பேட்டரிய ப்யூஸ் புடுங்கிட்டாங்க//

ஹாஹா..//

வாங்க சேதுக்கரசி :)))
ஆஹா ஆம்பளைங்க கஷ்டப்படறதிலே எம்பூட்டு சந்தோசம் உங்களுக்கு... ?? ஆத்தாடி... :))))

said...

//சேதுக்கரசி said...
ஆண்களுக்கு சில ஐடியாக்கள்://

அட அட அட .. சேதுக்கரசி
இப்படி பல பேஷன் ஐடியாக்களை அள்ளித்தெளிச்சிருக்கீயளே...:))))

//1. 80களில் நடிகர் மோகன் போன்றோர் ஒருவித சட்டை போட்டிருந்தாங்க சினிமால - சட்டை பொத்தான்கள் அருகில் டிசைனா ப்ரிண்ட் அல்லது embroidery இருக்கும். அதாவது பெண்களின் சுடிதார் neck pattern மாதிரி. சட்டையிலேயே கொஞ்சம் வித்தியாசமான சட்டை. அதைப் போட்டுக்குங்களேன் ;-)//

அட போட்டுக்கலாம் தான் ஆனா அது கொஞ்சம் பசங்களை Girlishஆ காட்டுமேங்க.... சிங்கிளா வர்ற சிங்கங்களுக்கு அது சரிபட்டு வருங்கறீங்க...???? ;)))

//2. அதுக்கும் முன்பு சுமார் 70களில் ஆண்களின் பேண்டில் முக்கோண வடிவில் வேறு நிறத்தில் இருக்கும். ஸ்பைடர்மேனா சூப்பர்மேனா, அந்த மாதிரி. அதை ட்ரை பண்ணலாமே சூப்பரா இருக்கும் ;-)//

பாத்தீயளா 'கேப்' ல கிச்சு கிச்சு மூட்டறீயளே !!! சுப்பர்மேன் மாதிரி ட்ரெச் போட்டா அவ்ளோ தாங்கோ..பொண்ணுங்க எல்லாம் சுத்தி சுத்தி வந்து " கொல கொலயா முந்திரிகா" பாடி பிண்ணிடுவாங்கல்ல... ;

//3. ஆண்களும்தான் விஜய் ஸ்டைல் தல ஸ்டைல் விக்ரம் ஸ்டைல்னு பொத்தான்களே இல்லாத சட்டை போடறீங்களே அப்புறமென்ன?

இப்படியெல்லாம் வித்தியாசமா பண்ணிப் பார்க்காம சும்மா பொலம்பாதீங்க வந்து :-D //

அட வித்தியாசமா ட்ரை பண்ணி பார்காமலா இருக்கோம்... என்ன இருந்தாலும் Basic Dress பேண்ட் சட்டைய தவிர என்ன ஒருக்குங்கறேன்..?? ;)))))

said...

// சரவணன் said...
நாங்கள் விஜய் ஸ்டைல் அஜித் ஸ்டைலில் உடை அணிய தயார் ஆனால் பெண்கள் அதற்கு முன்பே ஷ்ரேயா, நயன்தாரா ஸ்டைலில் வந்து பசங்களை சேது ரேஞ்சில் அலைய விடலாமா. பாண்டியண்ணா உஙக ஆராய்ச்சி எந்த மாலில் நடந்ததுனு சொல்லுங்க, நாங்களும் தேவி தரிசனத்துக்கு போவோமில்ல//

வாங்க சரவணன் :))))
ஆஹா இப்படி அண்ணாமலை ரஜினி ஸ்டைலில் தொடை தட்டி சவால் விடுறீயளே :)))) நெம்ப பெருமையா இருக்குங்கண்ணா !!! :)))

அட ஆராயச்சி எந்த மாலிலா..?? இது வேற வேணுமா ?? ஹஹஹஹ சரி கேட்டுகோங்க... சனி ஞாயிறு மட்டும் தான்.. chennai citi center , Spencers, Besant Nagar Beach... Sathayam Complex... Ishpahani center, coffeday... Globus... இப்படி சில வரலாற்று சிறப்பு மிக்க இடங்களில் தான்.. ;))))
போதுங்களா.. சரவணன் .. திருப்தியா ?? :))))

said...

//அட போட்டுக்கலாம் தான் ஆனா அது கொஞ்சம் பசங்களை Girlishஆ காட்டுமேங்க//

பாவமே போனாப்போகுதுன்னு ஐடியா கொடுத்தா........ girlish, boyish-னு அதுல குறை வேற கண்டுபிடிக்கிறீங்களாக்கும்! :-D

said...

// Anonymous said...
veshti,lungi than ippo wrapper on skirt.vittutinkale thalaivare
-isthripotti //

வாங்கண்ணா இஸ்திரிபொட்டி :)))

பேரே சும்மா வெள்ளாவில வெச்ச வேட்டி மாதிரி வெரப்பா இருக்குதே :))))

ஆஹா லுங்கியக் கூட உறுவிட்டாகளா..?? வேட்டியையும் வுட்டு வைக்கலையா..?? ஐய்யகோ.. ஆண்குலமே.... என்னே உனக்கு சோதனை.. !!! ஆப்ட்ரால் லுங்கியகூடவா...?? இஸ்திரி என்ன பண்ணலாம் இதுக்கு...? கொஞ்சம் சொல்லிட்டு போங்கப்பூ...:))))

said...

ஹாய் பாண்டியண்ணே,

போஸ்ட்ல படம் எல்லாம் தூள் பறக்குது!சூப்பர்!!


வழக்கமான உங்க 'லொள்ளு'&'ஜொள்ளு' இந்த பதிவிலும் ரசித்தேன்!

said...

\\சுடிதார்ல லோ ’கட்’ , ஹை ‘கட்’, மினிசுடி, பேகி சுடி ன்னு \\

ஜெயச்சந்திரன் டெக்ஸ்டைல்ஸ்ல சுடிதார் செக்ஷன்ல வேலை பார்த்தியாப்பா பாண்டி??
இப்படி புட்டு புட்டு வைக்கிறே??

said...

என்னமோ ஆண்கள் எல்லாம் நம் நாட்டு கலாச்சார உடையான 'வேஷ்டி' உடுத்துக்கிறாப்ல,
பெண்கள் மட்டும் தான் என்னமோ 'தாவணி' சேலை' எல்லாம் மறந்துட்டாப்ல பேசுறே??

சேலை & தாவணி யை விட அழகான, அம்சாமான உடைதான் சுடிதாரும்,
அதுவும் வடக்கத்திய இந்திய உடைதான் சுடிதார். ஸோ சுடிதாருக்கு பெண்கள் மாறிட்டாங்க, தாவணி கட்டிக்கிறதில்லன்னு, 'தாவணி'ப்பெண்களை ஜொள்ளு விடும் எண்ணத்தை இன்னியோடு விட்டுறு.

said...

லுங்கி கூட இப்போ உள்ள இளவயது ஆண்கள் வீட்டில் அணிவதில்லை,
முட்டி தெரிய 'பேர்முடாஸ்' போட்டுக்கிட்டு என்னமோ ஸ்கூல் பையன் மாதிரி இளமை மாறாம இருக்கிறாப்ல நினைச்சுட்டு அரைகால் சட்டையில் உலாவரானுங்க!

பொண்ணுங்க மட்டும் அரை குறையா உடை உடுத்திக்கிட்டு திரியிறாங்கன்னு பேசாதே இனிமே.

said...

//இப்படி பசங்க கிட்டே இருந்து ஜீண்ஸை தங்களோட உரிமையா உறுவிகிட்டு வந்ததோட திருப்தி அடையாம அவுகளோட shirt , Tshirt, short kurtha, ன்னு மனசாட்சியே இல்லாம எதையுமே விட்டு வைக்காம உருவிகிட்டு ஒடிவந்துடாக. கேட்டா இதுதாண்டா எங்க பேஷ்ன்னு தெலுங்கு ராஜசேகர் பட டைட்டில் கணக்கா நம்ம கிட்டே உருமிகிட்டு போறாக//

வீர பெண்குலம் வாழ்க!

ஆமா தில் இருந்தா நீங்க பாவாடை, சுடிதார் எல்லாம் போட்டு உருமிகாட்டுங்க அண்ணே.

குந்தவை

said...

// சேதுக்கரசி said...
//அட போட்டுக்கலாம் தான் ஆனா அது கொஞ்சம் பசங்களை Girlishஆ காட்டுமேங்க//

பாவமே போனாப்போகுதுன்னு ஐடியா கொடுத்தா........ girlish, boyish-னு அதுல குறை வேற கண்டுபிடிக்கிறீங்களாக்கும்! :-D//

வாங்க சேதுக்கரசி :)))

அட என்னா இது கோச்சுக்கறீய..?? :))) ஏதோ என் கருத்தைச் சொன்னேன்... தப்புங்களா..?? ;)))))

said...

//Divya said...
ஹாய் பாண்டியண்ணே,

போஸ்ட்ல படம் எல்லாம் தூள் பறக்குது!சூப்பர்!!


வழக்கமான உங்க 'லொள்ளு'&'ஜொள்ளு' இந்த பதிவிலும் ரசித்தேன்!//

வாம்மா திவ்யா :)))
எங்க ஆளையே காணோம்..?? உங்க அளவுக்கெல்லாம் தூள் பறக்கலைங்கோ... சும்மா தூசிதான் பறக்குது... ஹிஹிஹி... ஜொள்ளும் லொள்ளும் ரசிச்சீயளா..?? உங்க லொள்ளுக்கு அளவே இல்லாம போச்சு போங்க... :))))))

said...

//Anonymous said...
\\சுடிதார்ல லோ ’கட்’ , ஹை ‘கட்’, மினிசுடி, பேகி சுடி ன்னு \\

ஜெயச்சந்திரன் டெக்ஸ்டைல்ஸ்ல சுடிதார் செக்ஷன்ல வேலை பார்த்தியாப்பா பாண்டி??
இப்படி புட்டு புட்டு வைக்கிறே??//

வாங்க அனானி..:)))
ஆஹா கெளப்பீட்டீயளா..?? :))) அட ஜெயசந்திரன்ல நாங்க எல்லாம் சுரிதார் விக்கலைங்கோ.... சுரிதார் போட்ட சுந்தரிகளைப் பார்க்கதாங்கோ நாங்க போவோமாகும்....

என்னைய உங்க ' கொலீக்' கோன்னு நெனச்சுட்டீயளோ?? ;)))))

said...

//Anonymous said...
என்னமோ ஆண்கள் எல்லாம் நம் நாட்டு கலாச்சார உடையான 'வேஷ்டி' உடுத்துக்கிறாப்ல,
பெண்கள் மட்டும் தான் என்னமோ 'தாவணி' சேலை' எல்லாம் மறந்துட்டாப்ல பேசுறே??//

அனானி :)))
வாங்க வாங்க.. ஒரு முடிவோட தான் இருப்பிய போல.... வேஷ்டி கட்டினா நாங்க பைக் கில் போகமுடியாத ஒரே காரணத்தினால் காரில் போகும் போது மட்டும் கட்டுவோம்ல...

//சேலை & தாவணி யை விட அழகான, அம்சாமான உடைதான் சுடிதாரும்,
அதுவும் வடக்கத்திய இந்திய உடைதான் சுடிதார்.//

தாவணியை விட சுரிதார் அம்சமான உடை என்று நீங்க சொன்னதை வன்மையாக கண்ணடிக்கிறேன்... சாரி கண்டிக்கிறேன்.... வடகத்திய ஹீரோயின்கள் வேனா அம்சமா இருக்கலாம்.... ;))) ஆனா தாவணிக்கு முன்னால் எதுவும் நிக்க முடியாது (ஆண்கள் உட்பட) என நான் ஆணித்தரமாக இங்கேகூறிக்கொள்ள விரும்புகிறேன்... ;)))))

// ஸோ சுடிதாருக்கு பெண்கள் மாறிட்டாங்க, தாவணி கட்டிக்கிறதில்லன்னு, 'தாவணி'ப்பெண்களை ஜொள்ளு விடும் எண்ணத்தை இன்னியோடு விட்டுறு.//

இதெனாங்க அட்டூழியமா இருக்கு..?? தாவணி எங்க கட்டுறாங்களோ அங்கே போய் நாங்க ஜொள்ளு விட்டுட்டு போறோம்... ஹஹஹஹ்ஹ.. :))))

said...

//Anonymous said...
லுங்கி கூட இப்போ உள்ள இளவயது ஆண்கள் வீட்டில் அணிவதில்லை,
முட்டி தெரிய 'பேர்முடாஸ்' போட்டுக்கிட்டு என்னமோ ஸ்கூல் பையன் மாதிரி இளமை மாறாம இருக்கிறாப்ல நினைச்சுட்டு அரைகால் சட்டையில் உலாவரானுங்க!//

வாங்க அனானி :)))
ஏங்க லுங்கி யாரு கட்டறது இல்லை...?? எங்க ஓட்டு லுங்கிக்கே... :))) ஆமா பெர்முடாஸ் போட்டா ஸ்கூல பையன் யாரும் நெனச்சுக்கலைங்கோ.... நீங்களே அப்படி நெனச்சுகிட்டா என்ன பண்ணறதுங்கோ... ??

//பொண்ணுங்க மட்டும் அரை குறையா உடை உடுத்திக்கிட்டு திரியிறாங்கன்னு பேசாதே இனிமே.//

இங்க தான் இருக்கு... ஆம்பிளைங்க பெர்முடாஸ்ல திரிஞ்சா ஒரு பய சீந்த மாட்டாங்ய்க.... இதே ஒரு பொண்ணுன்னா ரோட்டிலே ஒரு பய நேரா ரோட்ட பார்த்து நடப்பாய்ங்கங்கறீங்க... ?? அப்படியே காந்தம் மாதிரி பார்வைய சுண்டி இழுத்துறுவீயளே... என்ன பண்ணும் பாவம் ஆண்குலம்.. ??? அதனால பெரியமனசு பண்ணி அப்படி இருக்காதீக...;)))))

said...

//Anonymous said...
//இப்படி பசங்க கிட்டே இருந்து ஜீண்ஸை தங்களோட உரிமையா உறுவிகிட்டு வந்ததோட திருப்தி அடையாம அவுகளோட shirt , Tshirt, short kurtha, ன்னு மனசாட்சியே இல்லாம எதையுமே விட்டு வைக்காம உருவிகிட்டு ஒடிவந்துடாக. கேட்டா இதுதாண்டா எங்க பேஷ்ன்னு தெலுங்கு ராஜசேகர் பட டைட்டில் கணக்கா நம்ம கிட்டே உருமிகிட்டு போறாக//

வீர பெண்குலம் வாழ்க!

ஆமா தில் இருந்தா நீங்க பாவாடை, சுடிதார் எல்லாம் போட்டு உருமிகாட்டுங்க அண்ணே.

குந்தவை//

வாங்க குந்தவை :))))
அட அட அட வீரகுல பெண்களா.. ?? :)))))
அட ஆம்பிளைக எல்லாம் இந்தியா மாதிரிங்கோ... நாங்க யாரோட இடத்தையும் ஆக்கிரமிக்க மாட்டோம்... போனா போவுதுன்னு பெரிய மனசு பண்ணி பொண்ணுங்களே இந்த சிரிதார் பாவாடையெல்லாம் போட்டுகிடட்டும்னு விடு கொடுத்துட்டோம்.. தெரியதா குந்தவை உங்களுக்கு...?? ;)))))))

உருமி காட்டனுமாம்ல.. ;))))))

said...

சரவணன் said...
// லுங்கி கூட இப்போ உள்ள ஆண்கள் அணிவதில்லை //

எதுக்கு அணியறதில்லை தெரியுமா... அடுத்த வரியிலயே நீயே பதில் கொடுத்திருக்கீங்க பாருங்க

// பொண்ணுங்க மட்டும் அரை குறையா உடை உடுத்திக்கிட்டு திரியிறாங்கன்னு பேசாதே இனிமே.//

ஏன்மா நீங்க அரை குறையா உடுத்தினா நாங்க எங்க லுங்கி கட்டறது....ரொம்ப கஷ்டம்னு சொல்லு பாண்டி.. அதனால்தான் இந்த கருமாந்திரம் புடிச்ச 3/4 த் எல்லாம் போடறோம்

சரவணன்

said...

//Anonymous said...
சரவணன் said...
// லுங்கி கூட இப்போ உள்ள ஆண்கள் அணிவதில்லை //

எதுக்கு அணியறதில்லை தெரியுமா... அடுத்த வரியிலயே நீயே பதில் கொடுத்திருக்கீங்க பாருங்க

// பொண்ணுங்க மட்டும் அரை குறையா உடை உடுத்திக்கிட்டு திரியிறாங்கன்னு பேசாதே இனிமே.//

ஏன்மா நீங்க அரை குறையா உடுத்தினா நாங்க எங்க லுங்கி கட்டறது....ரொம்ப கஷ்டம்னு சொல்லு பாண்டி.. அதனால்தான் இந்த கருமாந்திரம் புடிச்ச 3/4 த் எல்லாம் போடறோம்

சரவணன்//

வாங்க சரவணன்.. :)))
ஒகே ஓகே... உணர்ச்சிவசப்படாதீங்கப்பூ... பேசித்தீர்த்துக்கிடலாம்... ;)))))

said...

en page pakkam vanthu etti parthathukku oru thanks solikirein..

appaala......'gummunu' oru commentum potuteeya..athukum oru thanks:))

said...

//அட ஆம்பிளைக எல்லாம் இந்தியா மாதிரிங்கோ... நாங்க யாரோட இடத்தையும் ஆக்கிரமிக்க மாட்டோம்... போனா போவுதுன்னு பெரிய மனசு பண்ணி பொண்ணுங்களே இந்த சிரிதார் பாவாடையெல்லாம் போட்டுகிடட்டும்னு விடு கொடுத்துட்டோம்.//

ஆஹா!! இப்படியெல்லாம் கூட உங்களுக்கு நினைப்புயிருக்காக்கும்.

நாங்கயெல்லாம் அனுபவிக்க பொரந்தவுங்க. உங்களமாதிரி பொறாமைபடமாட்டோம்.

குந்தவை

said...

//இப்போ சொல்லுங்க ஒரு ஊரு மார்ட்டனா இருக்குரதும் இல்லாததும் நம்ம அம்மணிககிட்டே தான் இருக்கு இல்ல..?//

வழிமொழிகிறேன்..:)

போட்டோல்லாம் சொம்மா நச்சின்னு இருக்கு மாமேய்... ஹிஹி...