Monday, February 11, 2008

ஏய்... ஓடிப்போலாமா...?
இந்த பிப்ரவரி மாசம் வந்தாலே நம்ம பசங்க தொல்லை தாங்காதுங்க.. சாதாரண நாள்லயே இந்த காதல் Gadafi க எல்லாம் ச்சும்மா பீச்சு... ஐநாக்ஸ்.. சத்யம் னு தரையிலே காலு படாமா sச்சும்மா சுத்தி சுத்தி ' பல்சர்' ' அப்பாச்சி' ன்னு பிகரோட பிளிறிகிட்டு இருக்காவ.. இதிலே பாவமா இன்னமும் தங்களுக்குன்னு ஒரு ஆளு செட்டாகம இருக்குற பட்டிணத்தார் கோஷ்டி எல்லாம் இவுக கெளப்புற ரவுசைப் பார்த்து இந்தக் காதல் புழுதிய நாமளும் இந்த மாசமாச்சும் கெளப்ப மாட்டமான்னு உள்ளுக்குள்ள ஏக்கத்தோட பார்த்து புழுங்கிட்டு இருக்குறது ஜொள்ளுப்பாண்டியோட மனச போட்டு புழிஞ்சு எடுத்துடுச்சு... பாவம் பசங்க .. வேலண்டைன்ஸ் டே னாலே எல்லாரும் கையிலே ரோஜா பூவோட ஒரு கார்ட்டும் எடுத்துகிட்டு ஏதாச்சும் ஒரு பொண்ணைத் தேத்தறதே வாழ்வின் லட்சியமா சுத்திகிட்டு இருக்காவ.. கமான் காம்ரேட்ஸ்...

முதல்ல இந்த வேலண்டைன்ஸ் டேங்கறதே ஒரு நினைவு நாள் தாங்கோ.. நம்ம ஆளுங்க அன்னிக்கு ரோசா கொடுத்தா பொண்ணு கண்டிப்பா வாங்கி வச்சுபான்னு ஒரு தப்பான அபிப்பிராயத்திலே ஆசையா போய் மானாவாரியா அல்வா வாங்கிகிட்டு சொல்லவும் முடியாம வாங்கின அல்வாவை மெல்லவும் முடியாம சுத்திகிட்டு இருக்காவ..

அப்பூ முதல்ல என்ன பண்ணுங்கோ நீங்க ஒரு பொண்ண பாக்குறியன்னு வைங்க... ஒடனே காதல் பத்திக்குமா என்ன..? அதெல்லாம் நம்ம கிழிஞ்சல்கள், டிராஜேந்தர் பட கால கட்டங்கோ.. இப்போ இருக்குற இந்த ‘ லோரைஸ் லோலாக்கு ’ குட்டிக கிட்டே எல்லாம் இந்த பார்த்த உடனே எல்லாம் காதல் தீய பந்தம் வச்செல்லாம் கொளுத்தவே முடியாதுங்கோ.. முதல்ல அவுக கிட்டே போய் பேசுங்க.. நம்ம சூப்பர் ஸ்டார் ஸ்டைல்ல பழகி பாருங்க... அப்போதானே நீங்க எப்படின்னு அவியளுக்கும் அவிய எப்படின்னு உங்களுக்கும் தெரியுவரும்..?

இப்படி முன்ன பின்ன தெரியாத (பார்த்தா தெரியரது இல்லீங்க கண்ணுகளா..!!! ) பொண்ணுககிட்டே போய் பொசுக்குன்னு நீங்க கார்டையோ ரோஜாவையோ எடுத்து நீட்டுனா ஆஹா கெடச்சுதுடா நமக்கு ஒரு அழகான ரோஜானு வாங்கிக் ஹேண்ட் பேக்கிலே வெச்சுகிட்டு ரோசா கொடுத்த ராசா யாருன்னு தெரியாம எஸ்ஸாய்டும்.. இப்படித்தான் போன வேலண்டைண்ச் டேக்கு நம்ம தோழி வந்து என்கிட்டே ஒரு டசன் ரோஜாவை எடுத்து காட்டி இவ்வளவும் வீடிலே இருந்து இங்கே வர்றதுக்குள்ள கெடச்சுதுடா பாண்டின்னு சொல்லுச்சு.. ஏம்மா எவன்னே தெரியாதே எதுக்கு வாங்கினேன்னு கேட்டா.. அட ரோசா எவ்ளோ அழகா இருக்கு பாவம் பய இந்த ஒரு நாளாச்சும் சந்தோசமா இருக்கட்டும்னு அசால்டா சொல்லுது.. நம்ம பசங்க மட்டும் என்ன இளிச்ச வாயங்களா என்ன.. ஆளாலுக்கு ஒரு டசன் ரோஜா வையும் பேர் எழுதாத கார்டுடையும் ஸ்பேர் பார்ட்ஸ் மாதிரி வாங்கி வச்சுகிட்டு போற வர்ற பொண்ணுக கிட்டே எல்லாம் ஏதோ பிட் நேட்டீஸ் கொடுக்கர ரேஞ்சுக்கு கொடுகறதே வேலைன்னு வெளுத்து வாங்கிகிட்டு இருக்காவ..

அட எப்படியோ காதல் தீ கண்ண பின்னானு பத்திகிட்டு கொழுந்துவிட்டு எரிய ஆரம்பிச்சுடுச்சு ... என்ன பண்ணலாம்..? எப்படி மடக்கலாம்..? ன்னு கேட்குறீயளா..? மடக்கிபோட அவுக என்ன பைக் சைடு ஸ்டேண்டா என்ன? முதல்ல இந்த வேலண்டைஸ் டேக்கு தான் ப்ரபோஸ் பண்ணுவேன்னு அல்ப தனமா நெனச்சுகிட்டு இருகாதீகப்பு.. தீபாவளி அன்னிக்கு ரிலீஸ் பண்ண இது சூப்பர் ஸ்டார் படமா என்ன..? தவிற அன்னிக்கு ஏராளமா படம் ரிலீஸ் ஆகறதிலே உங்க படம் எதுன்னு தனியா தெரியாம போய்டுங்கோ.. சோ முதல்ல ப்ரொபோஸ் பண்ணரதுக்கு முன்ன கொஞ்சமாச்சும் அவுக கிட்டே பேசிப்பழகுங்க... எடுத்த உடனே கார்ட் எடுத்து நீட்டுனன அவ்ளோதான் ஓஓஒ இவன் ஏதோ ‘ துள்ளுவதோ இளமை ‘ கோஷ்டின்னு பிகர் ஹேர்பேண்ட்டை பிச்சுகிட்டு ஓடக்கூடிய சான்ஸ் ப்ரகசமா இருக்கு பார்த்துக்குங்க... நீங்க என்னமோ தெய்வீக காதல்ல தஜ்மகாலையே உங்க மனசிலே சொமந்துகிட்டுதான் இருப்பீக ஆனா அது உங்க காதல்கிளிக்கு தெரியாது இல்லையா...?? அதான் கொஞ்ச நஞ்சமாச்சும் அவுக மனசிலே என்ன இருக்குன்னு தெரிஞ்சுகிட்டு கியரைப் போடுங்கப்பு.. இல்லாட்டி வண்டி வீலிங் ஆகி ஆரம்ப கட்டத்திலேயே கவுந்துரும் ஜாக்கிரதை... அப்புறம் வுழுந்து வாறிகிட்டு முட்டி பேந்துருச்சு மனசு ஒடஞ்சிருச்சுன்னு குவாட்டர் தாடியோட டயலாக் வுட்டு,கிட்டு இருக்குறதுல அர்த்தமே இல்லை...

" அட இவ்ளோ சொல்லிகிட்டு இருக்கேன் எங்கே ஓடுறீய..? "

...........................................................................................
" என்ன உங்க ஆளு வந்துட்டடளா.. அவளைப் பார்க்க ஓடுறீயளா..? "

............................................................................................................
" அட அந்த ரோசாப்பூவ வச்சுட்டு போங்கப்பூ... "

...........................................................................................................
" என்ன வச்சுட்டு போன நான் எடுத்துக் கொடுத்து தேத்தீடுவேனா..?
அடங்கொக்க மக்கா இதெல்லாம் நெம்ம ஓவரு... "

..........................................................................................................
" சரி அப்போ ‘ பேண்ட்’ டையாச்சும் போட்டுகிட்டு போங்கப்பூ.. இப்படி
பெர்முடாஸோட ஓடுனா எப்படி..? "ஐய்யய்யோ........ திருத்தவே முடியாது போல இருக்கே...!!!!
23 பேர் வளைச்சு வளச்சு ஜொள்ளிருக்காங்க:

said...

எங்கடா... Feb14 வருதே ஆளையே காங்கலையேனு பாத்தேன்.

said...

பாண்டிண்ணே.... வழக்கம்போலே கலக்கல்... :)

said...

பாண்டிண்ணே...

எப்படிண்ணே..இப்படி எல்லாம் சூப்பர்ண்ணே ;)

said...

Niraya BULB vangina experience irukum pola irukuuuu Mr.JollZ

said...

\\" என்ன வச்சுட்டு போன நான் எடுத்துக் கொடுத்து தேத்தீடுவேனா..?
அடங்கொக்க மக்கா இதெல்லாம் நெம்ம ஓவரு... "\\

இம்புட்டு சொல்றியளே....நீங்க இந்த V-day க்கு ஏதும் தேத்தீடுவிகளா , பாண்டியண்ணே????

said...

கலக்கல் பாண்டிண்ணே.

said...

//இனியவன் said...
எங்கடா... Feb14 வருதே ஆளையே காங்கலையேனு பாத்தேன்.//

வாங்க இனியவன் :)))
அட என்னாங்க இப்படி சொல்லிபுட்ட்டீக... நமக்கும் அதுக்கும் என்ன சம்பந்தம் ;)))))

said...

// இராம்/Raam said...
பாண்டிண்ணே.... வழக்கம்போலே கலக்கல்... :)//

வாங்கண்ணா ராம் :)))
ஆமா ஏதோ விசேசம்னு கேள்விபட்டேன்.. என்ன விசயம் :)))))

said...

//" அட இவ்ளோ சொல்லிகிட்டு இருக்கேன் எங்கே ஓடுறீய..? "

...........................................................................................
" என்ன உங்க ஆளு வந்துட்டடளா.. அவளைப் பார்க்க ஓடுறீயளா..? "

............................................................................................................
" அட அந்த ரோசாப்பூவ வச்சுட்டு போங்கப்பூ... "

...........................................................................................................
" என்ன வச்சுட்டு போன நான் எடுத்துக் கொடுத்து தேத்தீடுவேனா..?
அடங்கொக்க மக்கா இதெல்லாம் நெம்ம ஓவரு... "

..........................................................................................................
" சரி அப்போ ‘ பேண்ட்’ டையாச்சும் போட்டுகிட்டு போங்கப்பூ.. இப்படி
பெர்முடாஸோட ஓடுனா எப்படி..? "ஐய்யய்யோ........ திருத்தவே முடியாது போல இருக்கே...!!!!//

ஹா..ஹா.. கலக்கலா இருக்கு மாம்ஸ்.. சூப்பரு..:))

said...

ரோஸாப்பூ சின்ன ரோஸாப்பூ!!!!

ஜொல்ஸ்! நாம ரோஸாப்பூ கொடுத்த அங்க இருந்து இன்னொறு பூ வருது.... செருப்பு!!!!!!!!!! என்ன பன்றதுன்னு கொஞ்சம் சொல்லுங்கண்ணே!

said...

ennada io thethi akidiche pandiya kanamenu parthom.arumayana araichi.aaaaaallndha karuthukal.
-isthri potti

said...

// கோபிநாத் said...
பாண்டிண்ணே...

எப்படிண்ணே..இப்படி எல்லாம் சூப்பர்ண்ணே ;)//

வாங்க கோபி :))

அட இப்படியெல்லாம் வரதுக்கு உங்க ஆசீர்வதம் தாங்கோ காரணம்... ;)))))

said...

//subha said...
Niraya BULB vangina experience irukum pola irukuuuu Mr.JollZ//

வாங்க சுபா :)))
நிறைய பல்ப் வாங்கணுன்னு எல்லாம் தேவை இல்லையே... வாங்குனவுக கூட இருந்தா கூட போதும்ல..;))))

said...

//Divya said...
\\" என்ன வச்சுட்டு போன நான் எடுத்துக் கொடுத்து தேத்தீடுவேனா..?
அடங்கொக்க மக்கா இதெல்லாம் நெம்ம ஓவரு... "\\

இம்புட்டு சொல்றியளே....நீங்க இந்த V-day க்கு ஏதும் தேத்தீடுவிகளா , பாண்டியண்ணே????//

அட ஏன் திவ்யா ...
நம்ம நல்ல மனசு யாருக்கு புரியப்போகுது .... :)))))))

said...

ரசிகன் said...
ஹா..ஹா.. கலக்கலா இருக்கு மாம்ஸ்.. சூப்பரு..:))

வாங்க ரசிகன்....

சூப்பருக்கு நன்றி :))))))

said...

//J K said...
கலக்கல் பாண்டிண்ணே.//

வாங்க ஜேகே :))
நீங்க எப்போ கலக்க போறீக ரோசா பூவோட..;))))

said...

//ksk_rect said...
ரோஸாப்பூ சின்ன ரோஸாப்பூ!!!!

ஜொல்ஸ்! நாம ரோஸாப்பூ கொடுத்த அங்க இருந்து இன்னொறு பூ வருது.... செருப்பு!!!!!!!!!! என்ன பன்றதுன்னு கொஞ்சம் சொல்லுங்கண்ணே!//

வாங்க் கேஎஸ்கே :)))))
ஆஹா செருப்பு வருதா... அப்படியே கேட்ச் பண்ணி அப்படியே வேற பொண்ணுக்கு பார்சல் பண்ணுங்கப்பு.... எதாச்சும் சிக்கும் :))))))

said...

ஜொள்ஸ்,
இன்னிக்கு ஒரு ரோஸ் விலை என்ன தெரியுமா 50ரூபாய்:)0

உங்களுக்கும் இந்த காதலர்தின வாழ்த்துகள்.

said...

//Anonymous said...
ennada io thethi akidiche pandiya kanamenu parthom.arumayana araichi.aaaaaallndha karuthukal.
-isthri potti//

வாங்க இஸ்திரிபொட்டி :))))
பேரு ஜூப்பருங்கண்ணா!!! அதெல்லாம் தேதி பார்த்து ஜோரா வந்துடுவோம்ல... :)))))

said...

//வல்லிசிம்ஹன் said...
ஜொள்ஸ்,
இன்னிக்கு ஒரு ரோஸ் விலை என்ன தெரியுமா 50ரூபாய்:)0

உங்களுக்கும் இந்த காதலர்தின வாழ்த்துகள்.//

வாங்க வல்லிசிம்ஹன் :)))))
உங்களுக்கும் வாழ்த்துக்கள் !!!
ஆஹா 50 ரூவாயா..?? அட என்ன இது அநியாயமா இருக்கு..?? பேசாமா பொண்ணு கிட்டே போய்
" நீயே ஒரு ரோஸ் உனக்கெதுக்கு ரோஸ் " ன்னு மொக்கை டயலாகி வுட்டு பார்க்க வேண்டியதுதான் போலருக்கே..:)))))))

said...

:))))

said...

// ஜி said...
:))))
//

வாங்க ஜி :))
சிரிச்சுட்டீங்க ... அது போதுங்க.. ;))))

said...

உங்களோட பெரிய ப்ளஸ் பாயிண்டே உங்க வட்டாரத் தமிழ்தாண்ணே.

அசத்திப்புட்டீங்க போங்க.

அட நாமளும் இது மாதிரி எதையாவது கிறுக்கி தொலையாலாம்ன்னுட்டு ஒண்ண போட்டு வெச்சிருக்கேங்கண்ணே. பார்த்து படிச்சி பாராட்டிப்புட்டு (சிறியவங்கள் பெரியவங்க வாழ்த்தினாத்தானே) போற வழிக்கு புண்ணியத்த சேர்த்துக்கோங்க...இதுக்கு மேலே நாகரிகமா பின்னூட்டப் பிச்சை கேட்க முடியாது...பார்த்து செய்யுங்க..