Monday, March 03, 2008

1000 தான் இருந்தாலும் பொண்ணுங்கன்னா..

சில விசயம் எல்லாம் சிலவங்க தாங்க பண்ணனும். ஒரு உதாரணத்துக்கு நம்மள க்ராஸ் பண்ணற ஸ்கூட்டின்னாலே அதை ஓட்டரது ஒரு cute பெண்குட்டின்னாலே ஒரு ‘கிக்’ குத்தான் இல்லையா..? அதே ஸ்கூட்டிய ஒரு பையன் ஒட்டுனா காண சகிக்காது. ஏன்னா அப்படி ஆகிப்போச்சு. என்னதான் புல்லட்டை ஒரு அம்மணி ஒட்டுனாலும் அதையவே ஒரு பையன் ஓட்டுனாத்தேன் ‘கிக்’ னு பாக்குற நம்ம அம்மணிக எல்லாம் நம்மள மாதிரியே பொலம்பராங்கப்பு... ‘ காளை ’ சிம்பு கணக்கா
முடிய வளர்த்துகிட்டு ஹேர் போண்ட் எல்லாம் போட்டுகிட்டு சில பசங்க ‘ டோனி’’ ரேஞ்சுக்கு சீனைக் கொடுத்தாலும் நம்ம அம்மணிக போடுற ‘ போனி ’ ஸ்டைலுகுக்கு முன்னால நிக்க முடியுமா. என்ன..?

அதே மாதிரி பசங்க அரைக்கால் பேண்ட் கால் கால்பேண்ட் போட்டுகிட்டு இல்லை வெறும் சட்டைய மட்டும் போட்டுகிட்டு வந்தாலும் எவன் கண்டுப்பான் சொல்லுங்க? நம்ம சூப்பர் ஸ்டாரா இருந்த்தாலும் அது காமெடி சீன்னா தான் காட்டுவாக ..ஆனா அதுவே நம்ம நமீதா ஒரே ஒரு ஸ்வெர்ட்டரைப் போட்டுகிட்டு லேசா கீழே இழுத்து மட்டும் வுட்டுகிட்டு ( பாவம் அவுகளுக்கு பாவாடை வாங்க காசே இல்லை போல) மஸ்த்தானா மஸ்தானாவுக்கு வந்து பிஸ்த்து கெளப்புனா அதையப்பத்தி பத்திரிக்கையிலே பத்தி பத்தியா எழுதுவாய்ங்க... ம்ம்ம் எல்லாம் அம்மணிக உலகம் ஆகிப்போச்சு என்ன பண்ண..? ஏண்டா பாண்டி இப்படி பொலம்பரேண்ணு கேக்குறீயளா..? என்ன சொல்ல..? பாருங்கப்பு பொண்ணுங்க புடிச்ச இடத்துக்கு பக்கத்துல கூட என்னதான் முக்கி முனகினாலும் இந்த ஆம்பிளைங்க நெருங்க முடியாதுங்கோ...























என்ன பார்த்தீயளா...?? என்ன சொல்லுறீய..?