Monday, March 03, 2008

1000 தான் இருந்தாலும் பொண்ணுங்கன்னா..

சில விசயம் எல்லாம் சிலவங்க தாங்க பண்ணனும். ஒரு உதாரணத்துக்கு நம்மள க்ராஸ் பண்ணற ஸ்கூட்டின்னாலே அதை ஓட்டரது ஒரு cute பெண்குட்டின்னாலே ஒரு ‘கிக்’ குத்தான் இல்லையா..? அதே ஸ்கூட்டிய ஒரு பையன் ஒட்டுனா காண சகிக்காது. ஏன்னா அப்படி ஆகிப்போச்சு. என்னதான் புல்லட்டை ஒரு அம்மணி ஒட்டுனாலும் அதையவே ஒரு பையன் ஓட்டுனாத்தேன் ‘கிக்’ னு பாக்குற நம்ம அம்மணிக எல்லாம் நம்மள மாதிரியே பொலம்பராங்கப்பு... ‘ காளை ’ சிம்பு கணக்கா
முடிய வளர்த்துகிட்டு ஹேர் போண்ட் எல்லாம் போட்டுகிட்டு சில பசங்க ‘ டோனி’’ ரேஞ்சுக்கு சீனைக் கொடுத்தாலும் நம்ம அம்மணிக போடுற ‘ போனி ’ ஸ்டைலுகுக்கு முன்னால நிக்க முடியுமா. என்ன..?

அதே மாதிரி பசங்க அரைக்கால் பேண்ட் கால் கால்பேண்ட் போட்டுகிட்டு இல்லை வெறும் சட்டைய மட்டும் போட்டுகிட்டு வந்தாலும் எவன் கண்டுப்பான் சொல்லுங்க? நம்ம சூப்பர் ஸ்டாரா இருந்த்தாலும் அது காமெடி சீன்னா தான் காட்டுவாக ..ஆனா அதுவே நம்ம நமீதா ஒரே ஒரு ஸ்வெர்ட்டரைப் போட்டுகிட்டு லேசா கீழே இழுத்து மட்டும் வுட்டுகிட்டு ( பாவம் அவுகளுக்கு பாவாடை வாங்க காசே இல்லை போல) மஸ்த்தானா மஸ்தானாவுக்கு வந்து பிஸ்த்து கெளப்புனா அதையப்பத்தி பத்திரிக்கையிலே பத்தி பத்தியா எழுதுவாய்ங்க... ம்ம்ம் எல்லாம் அம்மணிக உலகம் ஆகிப்போச்சு என்ன பண்ண..? ஏண்டா பாண்டி இப்படி பொலம்பரேண்ணு கேக்குறீயளா..? என்ன சொல்ல..? பாருங்கப்பு பொண்ணுங்க புடிச்ச இடத்துக்கு பக்கத்துல கூட என்னதான் முக்கி முனகினாலும் இந்த ஆம்பிளைங்க நெருங்க முடியாதுங்கோ...என்ன பார்த்தீயளா...?? என்ன சொல்லுறீய..?

58 பேர் வளைச்சு வளச்சு ஜொள்ளிருக்காங்க:

said...

Photos ல் Car நல்லாயிருக்குதுங்கண்ணா :))

said...

\\என்னதான் புல்லட்டை ஒரு அம்மணி ஒட்டுனாலும் அதையவே ஒரு பையன் ஓட்டுனாத்தேன் ‘கிக்’ னு பாக்குற நம்ம அம்மணிக எல்லாம் நம்மள மாதிரியே பொலம்பராங்கப்பு...\\

இப்பெல்லாம் புல்லட் ஓட்டுற 'மெஜஸ்டிக்' ஆண்களை பார்கவே முடியலீங்க பாண்டியண்ணா:))

said...

//Divya said...
Photos ல் Car நல்லாயிருக்குதுங்கண்ணா :))//

ஓஓஒ அப்படீங்களா...?? அது சரி....;)))))

said...

// Divya said...
\\என்னதான் புல்லட்டை ஒரு அம்மணி ஒட்டுனாலும் அதையவே ஒரு பையன் ஓட்டுனாத்தேன் ‘கிக்’ னு பாக்குற நம்ம அம்மணிக எல்லாம் நம்மள மாதிரியே பொலம்பராங்கப்பு...\\

இப்பெல்லாம் புல்லட் ஓட்டுற 'மெஜஸ்டிக்' ஆண்களை பார்கவே முடியலீங்க பாண்டியண்ணா:))//

அப்படியா..? அங்கே இருக்கறதால தான் இப்படி பொலம்பறீங்க... இங்கே எங்க ஊருக்கு வாங்க அம்மணி சரியா..?? ;))))))

said...

என்னத்தங்க சொல்ல? நாலு நமீதா போட்டோவுக்கு நடு நடுவுல சிம்பு போட்டோ போட்டது கணக்கா, நல்ல நல்ல போட்டோக்களுக்கு நடுவால ஆம்பளப்புள்ளங்க போட்டோவ போட்டு வெச்சிருக்கீங்க.

said...

அட பத்து லட்சம் கூட இருக்கட்டுமே ஜொள்ளு...
பொண்ணுங்கன்னா பொன்னு
ஆம்பளன்னா மண்ணு

said...

//பாருங்கப்பு பொண்ணுங்க புடிச்ச இடத்துக்கு பக்கத்துல கூட என்னதான் முக்கி முனகினாலும் இந்த ஆம்பிளைங்க நெருங்க முடியாதுங்கோ...//

இந்தப் பதிவுல போட்டிருக்குற ரெண்டு ஜோடி படங்களையும் கம்பேர் பண்ணிப் பாக்கும் போது அப்படித் தான் தெரியுது
:)

said...

அண்ணா இங்க எனக்கு பொண்ணுகள தவிர வேறு ஏதும் தெரியவில்லை என் கண்ணில் பிரச்சினையா? இல்லை திவ்யா கண்ணில் பிரச்சினையா?

///Divya said...
Photos ல் Car நல்லாயிருக்குதுங்கண்ணா :))//

said...

அவாஅவா அவாளோட காரியத்தை செய்யனுங்குறேளா !!

said...

என்ன பாண்டி ?
1 லட்சம் காருக்கு ஆம்பள
பல லட்சம் காருக்கு அம்மனிங்க...
காரு விக்கனும் இல்ல..
:)

said...

:)

said...

பாண்டியண்ணா,பாண்டியண்ணா
கிக் கிக்ன்னு சொல்லுறீங்களே.அது ஆங்கிலத்தில் kick தானே,அப்படியென்றால் உதைக்குறதுதானே?இப்படி எல்லாம் ஜொள்ளு விட்ட உதைப்படனும் என்று மறைமுகமாக சொல்லுறீங்களா?
இப்படிக்கு,
அப்பாவி சிறுமி துர்கா

said...

ஏற்கனவே பார்த்த மெயிலானாலும் உங்க ஸ்டைல்ல எழுதுனது ரொம்ப நல்லா இருக்கு. ;-)

said...

//
ஒரு டாக்டர் வேலைய
இன்சினியர் செய்ய முடியுமா இல்லை

இல்ல இன்சினியர் வேலைய
டாக்டர்தான் செய்ய முடியுமா

அவங்கவங்க அவங்கவங்க வேலைய
பாத்தாதான் அது சரியா இருக்கும்

என்னப்பு புரியலையா
சரி இந்த லிங்க் பாருங்க புரியுதான்னு

said...

//
குசும்பன் said...

அண்ணா இங்க எனக்கு பொண்ணுகள தவிர வேறு ஏதும் தெரியவில்லை என் கண்ணில் பிரச்சினையா? இல்லை திவ்யா கண்ணில் பிரச்சினையா?
//
ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்ய்

said...

இனையதளங்களில் சுற்றித்திரியும் வீரமங்கைகளே உங்கள்ள யாராச்சும் வந்து இந்த படத்துல இருக்க ஆம்பளைங்களுக்காவாவது சப்போட் பண்ண கூடாதா?? :(

said...

//Prakash said...
என்னத்தங்க சொல்ல? நாலு நமீதா போட்டோவுக்கு நடு நடுவுல சிம்பு போட்டோ போட்டது கணக்கா, நல்ல நல்ல போட்டோக்களுக்கு நடுவால ஆம்பளப்புள்ளங்க போட்டோவ போட்டு வெச்சிருக்கீங்க.//

வாங்க Prakash :)))

ஆஹா உங்க ஆதங்கம் எனக்குப் புரியுதுங்கண்ணா... :))) கவலைப் படாதைங்க காளைய தூக்கி கடாசீட்டு ஒரு போட்டோ போட்டுடறேன்... திருப்தியா...?? ;))))

said...

// தம்பி said...
அட பத்து லட்சம் கூட இருக்கட்டுமே ஜொள்ளு...
பொண்ணுங்கன்னா பொன்னு
ஆம்பளன்னா மண்ணு //

என்னாங்க தம்பி இப்படி சொல்லிபுட்டீக..??? ;)))) பொண்ணுங்கன்னா பொன்னு தான் ஆனா ஆம்பிளைன்னா மண்ணுன்னு எப்படி சொல்லறீங்க...??? ஓஓஓ இந்த பொன்னு எல்லாம் மண்ணுக்குள்ள இருக்கறதால தானே...?? என்னே ஒரு சிந்தனை... ;)))))

[ யப்பா தம்பி.... எப்படியெல்லாம் 'பிட்'டைப் போட்டு ஆம்பிளைங்களை ஒப்பேத்த வேண்டி இருக்கு....ய்ப்பா.... ]

said...

//கைப்புள்ள said...
//பாருங்கப்பு பொண்ணுங்க புடிச்ச இடத்துக்கு பக்கத்துல கூட என்னதான் முக்கி முனகினாலும் இந்த ஆம்பிளைங்க நெருங்க முடியாதுங்கோ...//

இந்தப் பதிவுல போட்டிருக்குற ரெண்டு ஜோடி படங்களையும் கம்பேர் பண்ணிப் பாக்கும் போது அப்படித் தான் தெரியுது ///

ஆஹா ஆஹா வாங்க தல வாங்க... நெம்ம நாள் கழிச்சு நம்ம பக்கம் வந்து இருக்கீய.. எலே மொக்க ராசு நம்ம தல க்கு சீக்கிரம் பீர் ரெடி பண்ணுங்கடா opps am sorry தல.. மோர்னு தான் சொல்ல வந்தேன் tongue slip ஆகி...ஹிஹிஹி...

கம்பேர் பண்ணி பார்த்துட்டீங்களா...நீங்களே பாருங்க அநியாத்தைன்னு காட்டத்தேன்..இப்படி.:)))))))

said...

//குசும்பன் said...
அண்ணா இங்க எனக்கு பொண்ணுகள தவிர வேறு ஏதும் தெரியவில்லை என் கண்ணில் பிரச்சினையா? இல்லை திவ்யா கண்ணில் பிரச்சினையா?

///Divya said...
Photos ல் Car நல்லாயிருக்குதுங்கண்ணா :))////

வாங்க குசும்பன் :)))))
அட கண்ணிலே எல்லாம் பிரச்சனை இல்லீங்க... அழகு கண்ணை மறைக்கத்தானே செய்யும்..?? ;))))) நீங்க ஒண்ணும் கவலைப்படாதீங்க..

யப்பா நம்ம அண்ணன் குசும்பரை அப்படியே சங்கர நேத்ராயலா முன்னாடி இருக்குர WCC ய பார்க்குற மாதிரி கூட்டிட்டு போங்கப்பூ.... சரியா.....????? ;)))))

said...

// இளைய கவி said...
அவாஅவா அவாளோட காரியத்தை செய்யனுங்குறேளா !!//

வாங்கண்ணா இளைய கவி :)))
அதே தாங்கோ.....ஹிஹிஹிஹி :)))

said...

//Pondy-Barani said...
என்ன பாண்டி ?
1 லட்சம் காருக்கு ஆம்பள
பல லட்சம் காருக்கு அம்மனிங்க...
காரு விக்கனும் இல்ல..//

வாங்க பாண்டி பரணீ :)))
சூப்பரா இருக்குங்கண்ண பேரு.... அஹா என்ன ஒரு தத்துவம் சொல்லிபுட்டீயளே... சூப்பரப்பூ....;)))))

said...

//வசந்தம் ரவி said...
:)//

வாங்க வசந்தம் ரவி..:)))
உங்க பேரே வித்தியாசமா இருக்குங்க !!! :))) பேட்டை பக்கம் ஒதுங்குனதுக்கு டேங்ஸுங்கோ....:)))

said...

//துர்கா said...
பாண்டியண்ணா,பாண்டியண்ணா
கிக் கிக்ன்னு சொல்லுறீங்களே.அது ஆங்கிலத்தில் kick தானே,அப்படியென்றால் உதைக்குறதுதானே?இப்படி எல்லாம் ஜொள்ளு விட்ட உதைப்படனும் என்று மறைமுகமாக சொல்லுறீங்களா?
இப்படிக்கு,
அப்பாவி சிறுமி துர்கா//

வாம்மா துர்கா :)))
அப்பாவின்னு சொல்லிகிட்டு 'அடிப்பாவி' ங்கற ரேஞ்சுக்கு ஒரு கேள்வியக் கேட்டா என்ன அர்த்தம்ங்கறேன்...?? :)))

ஜொள்ளுவிட்டா உதை படணும்னு எல்லாம் இல்லையே...உதைபடாமயும் ஜொள்ளு விடறதுன்னு ஒரு க்ளாஸ் எடுத்துடறேன்...வந்து அட்டெண்ட் பண்ணுங்க சரியா..?? ;)))))

said...

//:: மை ஃபிரண்ட் ::. said...
ஏற்கனவே பார்த்த மெயிலானாலும் உங்க ஸ்டைல்ல எழுதுனது ரொம்ப நல்லா இருக்கு. ;-)//

வாங்க மைப்ரெண்ட் :)))
அட எனக்கும் மெயில்ல தான் வந்துச்சு... அப்படியே மானே தேனே போட்டு ஒப்பேத்தி வச்சு இருக்கேன்... சத்தம் போடாதீக... சரியா..:))))))

said...

//கருப்பன்/Karuppan said...
இனையதளங்களில் சுற்றித்திரியும் வீரமங்கைகளே உங்கள்ள யாராச்சும் வந்து இந்த படத்துல இருக்க ஆம்பளைங்களுக்காவாவது சப்போட் பண்ண கூடாதா?? :( //

அடடா என்னங்க கருப்பன் இப்படி பப்ளிக்கா எல்லாம் கெஞ்சிகிட்டு இருக்கீங்க...?? நாம எல்லாம் ஆம்பளை சிங்கங்கள் தெரியும்ல... கெஞ்ச எல்லாம் கூடாது எல்லாருக்கும் தெரியர மாதிரி...ஹிஹிஹிஹிஹிஹி
யாருக்கும் தெரியாம வேணா கெஞ்சி கொஞ்சமாச்சும் 'கெத்'து மெயிண்டெய்ன் பண்ணுங்கப்பூ... :)))))

said...

//தே மாதிரி பசங்க அரைக்கால் பேண்ட் கால் கால்பேண்ட் போட்டுகிட்டு இல்லை வெறும் சட்டைய மட்டும் போட்டுகிட்டு வந்தாலும் எவன் கண்டுப்பான் சொல்லுங்க?///
அட கொடுமையே !!
எவன் கண்டுக்கவானுமா?இது ரொம்ப தப்பு :P
என்ன நீங்க வர வர ஜொள்ளு கிளாஸ் எல்லாம் தப்ப எடுக்குறீங்க...

said...

வாம்மா துர்கா :)))
அப்பாவின்னு சொல்லிகிட்டு 'அடிப்பாவி' ங்கற ரேஞ்சுக்கு ஒரு கேள்வியக் கேட்டா என்ன அர்த்தம்ங்கறேன்...?? :)))

ஜொள்ளுவிட்டா உதை படணும்னு எல்லாம் இல்லையே...உதைபடாமயும் ஜொள்ளு விடறதுன்னு ஒரு க்ளாஸ் எடுத்துடறேன்...வந்து அட்டெண்ட் பண்ணுங்க சரியா..?? ;)))))///


பாண்டியண்ணா,பொண்ணுங்க ஜொள்ளு விட்டால் எந்த ஊரிலும் உதைப்பட மாட்டாங்க ;)
இந்த கிளாஸ் எல்லாம் எங்களுக்குத் தேவையே இல்லைன்னு சில பேரு சொன்னாங்க.எனக்குத் தெரியாது சாமீ...நான் ஒரு அப்பாவி சிறுமி

said...

:)))

said...

//மங்களூர் சிவா said...
//
ஒரு டாக்டர் வேலைய
இன்சினியர் செய்ய முடியுமா இல்லை

இல்ல இன்சினியர் வேலைய
டாக்டர்தான் செய்ய முடியுமா

அவங்கவங்க அவங்கவங்க வேலைய
பாத்தாதான் அது சரியா இருக்கும்

என்னப்பு புரியலையா
சரி இந்த லிங்க் பாருங்க புரியுதான்னு//

hahahaha வாங்க அண்ணாத்தே !!!
:)))) ஏற்கனவே நீங்க இந்த போட்டோவ போட்டுடீங்களா..?? அடடடா 'வடை' போச்சே..... :)))) பார்க்கவே இல்லையே நான்... சரி லூஸ்ல வுடுங்க சரியா..?? :))))))

said...

//துர்கா said...
//தே மாதிரி பசங்க அரைக்கால் பேண்ட் கால் கால்பேண்ட் போட்டுகிட்டு இல்லை வெறும் சட்டைய மட்டும் போட்டுகிட்டு வந்தாலும் எவன் கண்டுப்பான் சொல்லுங்க?///
அட கொடுமையே !!
எவன் கண்டுக்கவானுமா?இது ரொம்ப தப்பு :P
என்ன நீங்க வர வர ஜொள்ளு கிளாஸ் எல்லாம் தப்ப எடுக்குறீங்க...//

:)))))) துர்கா.... ஏதோ tongue 'ஸ்லிப்' ஆகி ஏதோ 'எவ; ன்னு சொல்ல வந்து 'எவன்' னு ஆகி போச்சு.. அட விடுங்களேன்... நீங்க எல்லாம் 'அலெர்ட்' டா இருக்கீங்களான்னு பார்த்தேன்...:)))
[ஹப்பா எப்படியெல்லாம் சமாளிக்க வேண்டியிருக்கு... ] :))))

said...

//துர்கா said...
வாம்மா துர்கா :)))
அப்பாவின்னு சொல்லிகிட்டு 'அடிப்பாவி' ங்கற ரேஞ்சுக்கு ஒரு கேள்வியக் கேட்டா என்ன அர்த்தம்ங்கறேன்...?? :)))

ஜொள்ளுவிட்டா உதை படணும்னு எல்லாம் இல்லையே...உதைபடாமயும் ஜொள்ளு விடறதுன்னு ஒரு க்ளாஸ் எடுத்துடறேன்...வந்து அட்டெண்ட் பண்ணுங்க சரியா..?? ;)))))///


பாண்டியண்ணா,பொண்ணுங்க ஜொள்ளு விட்டால் எந்த ஊரிலும் உதைப்பட மாட்டாங்க ;)
இந்த கிளாஸ் எல்லாம் எங்களுக்குத் தேவையே இல்லைன்னு சில பேரு சொன்னாங்க.எனக்குத் தெரியாது சாமீ...நான் ஒரு அப்பாவி சிறுமி //

துர்கா..:)))
இந்தக் க்ளாஸ் எல்லாம் உங்களுக்கு தேவை இல்லையா..??? :))) ஆஹா அப்போ நீங்க தாங்க ஜொள்ளு ப்ரொபசர்... வந்து ஜொள்ளுப்பேட்டையிலே ஒரு லெக்சர் கொடுத்திங்கண்ணா பசங்களுக்குநெம்ம உபயோகமா இருக்குங்க.... என்ன சொல்லுறீய..?? ;)))))

said...

//
ஒரு டாக்டர் வேலைய
இன்சினியர் செய்ய முடியுமா இல்லை

இல்ல இன்சினியர் வேலைய
டாக்டர்தான் செய்ய முடியுமா

அவங்கவங்க அவங்கவங்க வேலைய
பாத்தாதான் அது சரியா இருக்கும்//ம்ம்... அதுதான் சரி...

said...

//Photos ல் Car நல்லாயிருக்குதுங்கண்ணா //

ரிப்பீட்டேய்!

said...

//இப்பெல்லாம் புல்லட் ஓட்டுற 'மெஜஸ்டிக்' ஆண்களை பார்கவே முடியலீங்க பாண்டியண்ணா:))//

இதை நான் வழிமொழிகிறேன்!

said...

//அப்படியா..? அங்கே இருக்கறதால தான் இப்படி பொலம்பறீங்க... இங்கே எங்க ஊருக்கு வாங்க அம்மணி சரியா..?? ;))))))
//

இதை நான் கலாய்க்கிறேன்!

said...

பாண்டித்தம்பி!

கதைல ஹீரோவோட பஞ்ச் டயலாக் சூப்பரு!

said...

//)))))) துர்கா.... ஏதோ tongue 'ஸ்லிப்' ஆகி ஏதோ 'எவ; ன்னு சொல்ல வந்து 'எவன்' னு ஆகி போச்சு.. அட விடுங்களேன்... நீங்க எல்லாம் 'அலெர்ட்' டா இருக்கீங்களான்னு பார்த்தேன்...:)))
[ஹப்பா எப்படியெல்லாம் சமாளிக்க வேண்டியிருக்கு... ] :))))//


ஜொள்ளுப் பாண்டி சார்,இப்படி எல்லாம் சமாளித்தால்,குற்றம் குற்றமில்லை என்று ஆகிவிடாது ;)

said...

என்ன கதை இல்லையா!

ஹிஹி சரி சரி

எங்க பாண்டித்தம்பி எழுதும் கவிதையைக் கூட நாங்க கதையா ரசிச்சிப் படிப்போம்!

said...

//துர்கா..:)))
இந்தக் க்ளாஸ் எல்லாம் உங்களுக்கு தேவை இல்லையா..??? :))) //

அப்பாவி சிறுமியான எனக்கு இப்படி ஜொள்ளு கிளாஸ் தேவை இல்லை :P

//வந்து ஜொள்ளுப்பேட்டையிலே ஒரு லெக்சர் கொடுத்திங்கண்ணா பசங்களுக்குநெம்ம உபயோகமா இருக்குங்க..///

என்னை மாதிரி சின்ன குழந்தைகள் கிட்ட பேசுற பேச்சா இது :(
எங்க அப்பா கிட்ட சொல்லுறேன்.அவர் வந்து உங்களைக் கவனிக்க வேண்டிய விதத்தில் கவனிப்பார்.

said...

//ஜொள்ளுப்பேட்டையிலே ஒரு லெக்சர் கொடுத்திங்கண்ணா பசங்களுக்குநெம்ம உபயோகமா இருக்குங்க.... என்ன சொல்லுறீய..?? ;)))))
//

ஜொள்ளுத் தம்பி!

உங்க பேட்டைல லெக்சர் கொடுக்க என் பொண்ணுதான் கிடைச்சாளா?

பேட்டைக்கு ஆட்டோ கீட்டோ அனுப்பணுமா என்ன?

said...

//ஜொள்ளுவிட்டா உதை படணும்னு எல்லாம் இல்லையே...உதைபடாமயும் ஜொள்ளு விடறதுன்னு ஒரு க்ளாஸ் எடுத்துடறேன்...வந்து அட்டெண்ட் பண்ணுங்க சரியா..?? ;)))))///

அண்ணன் பொண்ணுகிட்டே சித்தப்பன் பேசுற பேச்சாய்யா இது?

பிச்சிப்பிடுவேன் பிச்சி!

said...

//அரைக்கால் பேண்ட் கால் கால்பேண்ட் போட்டுகிட்டு இல்லை வெறும் சட்டைய மட்டும் போட்டுகிட்டு வந்தாலும் எவன் கண்டுப்பான் சொல்லுங்க?///
//

எங்க ஊர் தெருவிலே நாய் துரத்தும்! அப்புறம் அரை கிலோ வெயிட் குறையும்!
(ஓடினதுல கால் கிலோ! நாய்க்கு இறைச்சி தானம் கால் கிலோ) பரவாயில்லையா?

said...

//ஆஹா ஆஹா வாங்க தல வாங்க... நெம்ம நாள் கழிச்சு நம்ம பக்கம் வந்து இருக்கீய.. எலே மொக்க ராசு நம்ம தல க்கு சீக்கிரம் பீர் ரெடி பண்ணுங்கடா opps am sorry தல.. மோர்னு தான் சொல்ல வந்தேன் tongue slip ஆகி...ஹிஹிஹி...//

எவன்யா அவன் என் மச்சானுக்கு பீர் வாங்கி ஊத்தப் பாக்குறது?

ஒண்ணும் தெரியாத பச்சைப் புள்ளைய கெடுத்துக் குட்டிச் சுவராகுறதே இந்த பாண்டிதானா?

said...

சிபி அப்பா,ஜொள்ளு சித்தப்பா என்னை பார்த்து என்ன சொல்லுறாருன்னு பாருங்க?வந்து அவரு நடு மண்டையில நச்சுன்னு நாலு குட்டு குட்டுங்க

said...

இதன் மூலம் அறிவிக்கப் படுவது என்னவென்றால்

ஜொள்ளுப் பேட்டையில் கடும் வறட்சி என்பது விஷமிகளால் கிளப்பிவிடப்பட்ட வசந்தியே! வசந்தியே! வசந்தியே! (ச்சே இங்கெ வந்து நின்னா நமக்கும் பேச்சு கொழறுதுப்பா)

வதந்தியே! வதந்தியே! வதந்தியே!

said...

:)))

இதுல ஜொள்ளு அதிகமா இல்ல ஆதங்கம் ஆதிகமா பாண்டி :)))

said...

ennathu ellarum boys,carnu etho solranga?enaka girls mattum thaan THERIYUTHU.
-ISTHRI POTTI

said...

கம்ப்பாரிசன் பட்டைய கெளப்புதுங்க மாம்ஸ்..:))

said...

கலக்கல் பாண்டினா...

said...

adadey,
ipdi oru superu jollu olugum blog irukiradhu theriyama pochuthey:)
divyaakka blog commentla irunthu nool pudichu ingey vanthein ,nalla ...romba nalla jollu poliyuthu unga blogil:)

will read other posts shortly:)

natpodu
Nivisha

said...

ரொம்ப நாளைக்கப்புறம் மெனக்கெட்டு ஜொள்ளியிருக்கிறாங்கப்பா...

said...

இப்பெல்லாம் புல்லட் ஓட்டுற 'மெஜஸ்டிக்' ஆண்களை பார்கவே முடியலீங்க பாண்டியண்ணா:))

எலே யாருப்பா புல்லட்டோட ஒரு ரவுண்டு வாங்கப்பு (தவிக்கிறாய்ங்க...)

said...

கம்ப்பாரிசன் பட்டைய கெளப்புதுங்க மாம்ஸ்..:))


ஆமாப்பா ஆறா பெருகி ஓடுது...

said...

supera soneenga..

inga scootyum illa. bikeum kammi.
elaam carla poi mugame theriya matengudhunganna :(

said...

eppadi pandi uppadi think pannringa

ambutu g(b)rainaaaa...........

said...

eppadi naaaa
pullarikuthu.....

said...

வாங்க இஸ்திரி பொட்டி..சதிஷ்.. ரசிகன்.. நிவிஷா...JK,, தமிழன்.. கிட்டு...அப்புறமா கடலைக் கார்த்திக் எல்லாருக்கும் மிக்க நன்றி !!! அண்ணாத்தே தனித்தனியா பின்னூட்டம் போடனும்னு தான் ஆசை என்ன பண்ணறது..சில நேரம் முடியாம போய்டுறது.. கோச்சுகுடாதீங்க்கப்பூ...