Tuesday, May 27, 2008

ஸ்கூட்டி Beauty...

நீங்க அப்படியே பைக்ல நிதானமா ட்ராபிக்கை நொந்துகிட்டே போய்க்கிட்டு இருக்கீங்க.. எவ்வளவு நேரந்தான் இப்படி இத்துப்போன ட்ராபிக்ல மனசு நொந்து போய் க்ளச்சைப் புடுச்சு கியரை மாத்திகிட்டு இருப்பீக..? ஒரு சுவாரஸ்யம் வேணாமா..? அப்படியே குதிரைக்கு சேணம் கட்டின மாதிரி ரோட்டை மட்டும் பார்க்காம அப்படியே பைக் ‘கேப்’ புல பார்த்தீங்கன்னா சும்மா கூந்தல் அலைபாய ஒரு ஸ்கூட்டியோ இல்லை ஹோண்டா ஆக்டிவாவோ உங்க முன்னாடியோ சைட்லயோ நிக்கும்.. பார்த்த உடனே மனசு ‘சல்சா” ஆடிகிட்டு இருக்கும்.. அப்படியே அந்த வண்டிய நீங்க Follow பண்ணுனீங்கன்னு வைங்க அப்புறம் ரோட்டிலே உங்க பைக் பயணம் உய்யலாலா தான்... அடிக்கற வெயி்லு ட்ராபிக்கு எல்லாம் மறந்து போய் ' "குய்ய்யோ " னு ஒரு feel பண்ணுவீங்க பாருங்க.. ஆஹா... அதெல்லாம் அனுபவிச்சாத்தான் தெரியும்..

ஆனா திடுதுப்புன்னு ஒரே நாள்ல நீங்க இந்த வித்தைய கத்துகிட முடியாதுங்கோவ்.. சில டெக்னிக்ஸ் இருக்கு.. அதைய அனுபவப்பூர்வமா பல பேருகிட்டே இருந்து கஷ்ட்டப்படு கத்துகிட்டு உங்களுக்கு tips களை அள்ளித்தெளிப்பது உங்கள் பாண்டி... ( கேப்ல நாங்களும் பிட்டை போடுவோம்ல..)

இந்த ஸ்கூட்டி குட்டிக இருக்காவளே அவிய எல்லாம் நம்ம நரேன் கார்த்திகேயன் தங்கச்சி ரேஞ்சுக்கு சும்மா ஆக்ஸிலேட்டரை முறுக்கி புடுச்சாங்கன்னா கூட வர்ற வண்டிகள எல்லாம் பிரிச்சு பின்னாடி தள்ளிட்டு ராக்கெட்டு கணக்கா பின்னாடி வர்ற உங்க முகத்திலே புகைஅடிச்சுட்டு "அல்பமே" னு ஒரு லுக்கோட உங்களை ரியர் வ்யூ மிரர்ல நக்கலு விக்கலோட பார்ப்பாங்க பாருங்க.. அப்போ நீங்க மனசு ஒடஞ்சு போய் ஒரமா 3ட் கியர்ல வண்டில வாக்கிங் போகக்கூடாது கண்ணுகளா.. வரணும்... வீரம் வரணும்!!!! கொஞ்சமாச்சும் வண்டில படம் போடனும் Boss... எப்படின்னு கேட்க்குறீயளா..? அதுக்கு முன்ன உங்க வண்டி கண்டிஷனா இருக்கானு பார்த்துகறது நெம்ப முக்கியம்... உங்க வண்டிய பேரிச்சம் பழக்காரங்க எல்லாம் காதலோட சுத்தி சுத்தி வர ரேஞ்சுக்கு இருந்தா இந்த ஸ்கூட்டி சேஸிங்கை இப்போவே மறந்துட்டு ஓரமா நின்னு எளநியோ ஜிங்ஞ்சர் பீர் ரோ குடிச்சுட்டு நடையக்கட்டுங்கப்பூ...

நம்ம பொண்ணுக எல்லாம் சரியான வெவரங்க.. ஏதோ ஒரு பையன் ஃபாலோ பண்ணறான்னு தெரிஞ்சா போதும்.. ஓவர் ஸ்பீடுல பொளந்து கட்டுவாக.. நீங்களும் மாட்டு வாலைப் புடிச்சு திருகி ரேக்லா ரேஸ்ல ஒட்டுற மாதிரி உங்க பைக்கோட ஆக்ஸிலரேட்டரைத் திருகி அய்யோ அம்மானு பைக் கதறக் கதற உயிரக் கொடுத்து ஒட்டிகிட்டு இருப்பீக.. அப்போதான் நம்ம அம்மணிக தங்களோட 7th sense ஐ பயன் படுத்தி நீங்க பக்கத்திலே வர்றப்போ ஸ்குட்டியோட ஸ்பீடை கபால்னு ரொம்ப கம்மி பண்ணுடுவாங்க.. நீங்க உடனே உங்க பைக்கை நிறுத்த முடியாம அவுகளை முந்திகிட்டு போய்டுவிகளா..? அப்புறம் அவ்ளோதான்.. நீங்க வண்டிய நிறுத்தி உருட்டிகிட்டு போனாலும் உங்க கண்ணுல சிக்க மாட்டாவ. மறந்து கூட உங்க வண்டிய ஓவர் டேக் பண்ண மாட்டாகளே!!!

அதுக்குத்தான் ஒரு நிதானமான வேகம் இருக்கணும் உங்ககிட்டே.. உணர்ச்சி வசப்பட்டு வண்டிய முறுக்கினா இப்படி பிகரை கோட்டை விட்டுட்டு “அடடா வடை போச்சே “ னு வடிவேலு கணக்கா ஓரமா நின்னு புலம்பலை போட்டுகிட்டு இருக்கணும் .. இல்லை நம்ம ட்ராபிக் சார்ஜெண்ட் கிட்டே ஓவர் ஸ்பீடுன்னு தெண்டம் கட்டணும் பார்த்துக்கோங்க.. ஆனா இந்த சார்ஜெண்டுகளுக்கு நம்ம பசங்க இப்படி ‘பிய்ய்யோ’ னு வண்டி ஓட்டுறது தாங்க கண்ண உறுத்துது.. ஆனா இந்த பொண்ணுங்க வாலண்டினா ரேஞ்சுக்கு ரோட்டுல ராக்கெட் வேகத்துக்கு வண்டிய ஓட்டுனா ஏதோ இவுக சானியா மிர்சா அக்கா ரேஞ்சுக்கு ரசிச்சு பார்க்க வேண்டியது.... அதுகளை நம்ம சார்ஜெண்டுக புடிச்சா கூட “ சாரி சார் “ னு ஹஸ்கி வாஸ்ய்ல நம்ம சார்ஜெண்டுகளோட மனச க்ளீண் போல்ட் ஆக்கிட்டு அப்பீட் ஆய்டுறாங்க..என்ன பண்ண? எல்லாம் ஜொள்ளு மயம்...

ஆனா பார்த்துக்கோங்கப்பூ இதெல்லாம் நீங்க ஆபீஸ் போறதுக்குள்ள ஒரு சின்ன குஜால்ஸுக்குத்தான்... அப்படியே பார்த்தமா பதமா ஃபாலோ பண்ணுனமா ஆபீஸை ரீச் பண்ணுனமான்னு நல்ல புள்ளைகளா இருக்கணும் இந்த சுவாரஸ்யத்திலே உங்க வேலைய மறந்து போய்டாதீக...

இப்படித்தாங்க ஒருதடவை நான் பாட்டுக்கு தேமேனு வண்டிய ஓட்டிகிட்டு இருந்தேன்.. திடீர்னு பின்னாடி ஒக்கார்ந்துகிட்டு இருந்த என் ப்ரெண்டு “டேய் மச்சான் சீக்கிரம் அந்த பஸ்ஸ follow பண்ணுடா அதுல உகார்ந்துகிட்டு இருக்குறது என் ஆளு மாதிரி தெரியுதுடானு “ அடித்தொண்டையிலே இருந்து FM ஜாக்கி மாதிரி அலர்றான்.. நமக்குத்தான் இந்த காதல் பொறா வா இருக்குறது ஒரு வீக்னெச் ஆச்சே.. உடனே நம்ம வண்டிய அப்படியே கியரை டவுன் பண்ணி ஆஃப் க்ளச் புடுச்சி ஒரு முறுக்கு முறுக்கி ‘வீலிங்’ பண்ணிட்டு கஷ்ட்டப்பட்டு பஸ்சைப் புடிச்சிட்டு அப்படியே அவன் ஆளு இருக்குர பக்கமா வண்டிய புஃல் ‘த்ராட்டில் ‘ல விரட்டிகிட்டு போறேன். திடீர்னு எங்கயோ இருந்து வந்த வில்லப்பய வண்டி நம்ம வண்டியிலே வந்து மோதி ‘ பப்பரக்கா’ னு ரெண்டு பேரும் ரோட்டிலே விழுந்து சில்லறை பொறுக்கிட்டு இருக்கோம்,.. நம்ம பய அப்பத்தான் சொல்லறான் ‘ மச்சான் அது என் ஆளு இல்லைடா.. ஆனா நாம விழுகறதைப் பார்த்து ரெண்டு கன்னத்திலையும் கைய வச்சு அய்யோனு ஒரு பார்வை பார்த்தா பாரு... அஹா சூப்பருடா.. !! “ இவனையெல்லாம் என்ன பண்ண சொல்லுங்கப்பூ...???!!!!

59 பேர் வளைச்சு வளச்சு ஜொள்ளிருக்காங்க:

said...

பாண்டிண்ணே, என் பொறந்தநாளுக்கு வாழ்த்து 'பேன்னர்' எல்லாம் போட்டு அசத்திபுட்டீக, ரொம்ப தாங்க்ஸுங்கண்ணா:))

said...

ரொம்ப நாளிக்கு அப்புறமா பாண்டியோட ஒரிஜினல் டச்சோட ஒரு பதிவு.........பட்டைய கிளப்புறீக பாண்டி!!

said...

\\திடீர்னு எங்கயோ இருந்து வந்த வில்லப்பய வண்டி நம்ம வண்டியிலே வந்து மோதி ' பப்பரக்கா' னு ரெண்டு பேரும் ரோட்டிலே விழுந்து சில்லறை பொறுக்கிட்டு இருக்கோம்,.\\

. -> இதை நம்புறேன்,

\\ஆனா நாம விழுகறதைப் பார்த்து ரெண்டு கன்னத்திலையும் கைய வச்சு அய்யோனு ஒரு பார்வை பார்த்தா பாரு... அஹா சூப்பருடா.. !! \

"-> இதை ஏனோ நம்பவே முடியலீங்கண்ணா!!!

said...

\\அப்போதான் நம்ம அம்மணிக தங்களோட 7th sense ஐ பயன் படுத்தி நீங்க பக்கத்திலே வர்றப்போ ஸ்குட்டியோட ஸ்பீடை கபால்னு ரொம்ப கம்மி பண்ணுடுவாங்க.. நீங்க உடனே உங்க பைக்கை நிறுத்த முடியாம அவுகளை முந்திகிட்டு போய்டுவிகளா..? அப்புறம் அவ்ளோதான்.. நீங்க வண்டிய நிறுத்தி உருட்டிகிட்டு போனாலும் உங்க கண்ணுல சிக்க மாட்டாவ. மறந்து கூட உங்க வண்டிய ஓவர் டேக் பண்ண மாட்டாகளே!!! \\

அடடா.......பாண்டிக்கும் இதெல்லாம் புரிஞ்சுப்போச்சா:))))
நல்லாத்தேன் 7th sense எல்லாம் புரிஞ்சு வைச்சுருக்கிறீக!!

said...

Konjam Jollu kammiyadichu. Pongalukku Trisha scooty la ponatha partheengalaa'

said...

ரொம்ப நாள் அப்புறம் பாண்டி வந்திருக்கார் வாங்க பாண்டி(உங்க வீட்டுக்கு வந்து உங்களையே வரவேற்கிறேன்).....

பாண்டி driving schoolல் கூட இப்படி சொல்லிக் கொடுக்க மாட்டாங்க

சூப்பர் பாண்டி......

இவ்வளவு சில்லரை கிடைத்தது பாண்டி அண்ணா!!!!

said...

வாங்க பாண்டியண்ணே ரொம்ப நாளைக்கப்புறமா ஒரு ஜீப்பர் யொள்ளு சாரி பதிவு....:)

said...

நேற்றே சொல்லணும்னு இருந்தேன் தல கப்பியோட அண்ணனோட பதிவில ரொம்ப நாளைக்கப்புறம் பாண்டியண்ணனோட கமன்ட பாக்க முடிஞ்சுது அதுல சந்தோசப்பட்டவங்கள்ள நானும் ஓருத்தன்...

said...

///நம்ம பொண்ணுக எல்லாம் சரியான வெவரங்க.. ஏதோ ஒரு பையன் ஃபாலோ பண்ணறான்னு தெரிஞ்சா போதும்.. ஓவர் ஸ்பீடுல பொளந்து கட்டுவாக//
//அப்போதான் நம்ம அம்மணிக தங்களோட 7th sense ஐ பயன் படுத்தி நீங்க பக்கத்திலே வர்றப்போ ஸ்குட்டியோட ஸ்பீடை கபால்னு ரொம்ப கம்மி பண்ணுடுவாங்க.. நீங்க உடனே உங்க பைக்கை நிறுத்த முடியாம அவுகளை முந்திகிட்டு போய்டுவிகளா..? அப்புறம் அவ்ளோதான்.. நீங்க வண்டிய நிறுத்தி உருட்டிகிட்டு போனாலும் உங்க கண்ணுல சிக்க மாட்டாவ. மறந்து கூட உங்க வண்டிய ஓவர் டேக் பண்ண மாட்டாகளே!!!///

அதுங்க எப்பவும் விவரமாத்தான் இருக்குதுங்க...
நம்மாளுங்கதான் தொங்கிடறானுங்க...

said...

///அதுகளை நம்ம சார்ஜெண்டுக புடிச்சா கூட “ சாரி சார் “ னு ஹஸ்கி வாஸ்ய்ல நம்ம சார்ஜெண்டுகளோட மனச க்ளீண் போல்ட் ஆக்கிட்டு அப்பீட் ஆய்டுறாங்க..என்ன பண்ண? எல்லாம் ஜொள்ளு மயம்...///

:):))

என்ன பண்ண பாண்டியண்ணே எல்லோரும் உங்களை மாதிரி தெளிவா இருப்பாங்களா என்ன..

said...

divya..said...

\திடீர்னு எங்கயோ இருந்து வந்த வில்லப்பய வண்டி நம்ம வண்டியிலே வந்து மோதி ' பப்பரக்கா' னு ரெண்டு பேரும் ரோட்டிலே விழுந்து சில்லறை பொறுக்கிட்டு இருக்கோம்,.\\

. -> இதை நம்புறேன்,

\\ஆனா நாம விழுகறதைப் பார்த்து ரெண்டு கன்னத்திலையும் கைய வச்சு அய்யோனு ஒரு பார்வை பார்த்தா பாரு... அஹா சூப்பருடா.. !! \

"-> இதை ஏனோ நம்பவே முடியலீங்கண்ணா!!!////

ரிப்பீட்டு...

said...

அடிக்கடி வாங்கண்ணே...

said...

பாண்டிண்ணே,

நாமே எவ்வளவுதான் விழுந்து சில்லரை அள்ளினாலும் மறுக்கா வீலிங் பண்ணாமே, வெள்ளை சொக்கா போட்ட மாமாவுக்கு தட்சிணை வைக்கமே இருக்கமுடியுமா??

ஆனா இதெல்லாம் நமக்காகதான் செய்யுறங்கன்னு பெண்குலங்கள் உணர்ந்தும் தங்களோட 7th sense யூஸ் பண்ணாமயே இருக்காங்களா???

அப்போ ஆண் குலங்கள் தான் அப்பாவியா??? :)

said...

:))

அண்ணாச்சி..இப்படி வண்டியில பின்னாடி உட்கார்ந்துட்டு உசுப்பேத்தறவன்ட்டதான் ரொம்ப ஜாக்கிரதையா இருக்கோனும் :)))

வழக்கம் போல கலக்கல்ஸ் ஆஃப் மெட்ராஸ் :))

said...

// Divya said...
பாண்டிண்ணே, என் பொறந்தநாளுக்கு வாழ்த்து 'பேன்னர்' எல்லாம் போட்டு அசத்திபுட்டீக, ரொம்ப தாங்க்ஸுங்கண்ணா:))//

வாம்மா ஜாலி ஜில்லு....:))
அட இதுக்கெல்லாம் தாங்ஸு வேண்டி இருக்கா..??? ஏதோ ஏழைக்கு தகுந்த எள்ளுருண்டை... என்னால முடிஞ்சது... ;)))))

//Divya said...
ரொம்ப நாளிக்கு அப்புறமா பாண்டியோட ஒரிஜினல் டச்சோட ஒரு பதிவு.........பட்டைய கிளப்புறீக பாண்டி!!//

அயராத களப்பணிகளின் காரணமாக பாண்டி எதையுமே டச் பண்ண முடியலை... அதான்.... :)))

said...

// Divya said...
\\திடீர்னு எங்கயோ இருந்து வந்த வில்லப்பய வண்டி நம்ம வண்டியிலே வந்து மோதி ' பப்பரக்கா' னு ரெண்டு பேரும் ரோட்டிலே விழுந்து சில்லறை பொறுக்கிட்டு இருக்கோம்,.\\

. -> இதை நம்புறேன்,//

திவ்யாவோட நம்பிக்கை நல்லாத்தேன் இருக்கு... ;))))

\\ஆனா நாம விழுகறதைப் பார்த்து ரெண்டு கன்னத்திலையும் கைய வச்சு அய்யோனு ஒரு பார்வை பார்த்தா பாரு... அஹா சூப்பருடா.. !! \

"-> இதை ஏனோ நம்பவே முடியலீங்கண்ணா!!! //

அதானே.... ஒரு பொண்ணு என்னைய பார்த்துச்சுன்னு சொன்னா மட்டும் நம்ப முடியலையா..?? என்ன கொடுமை பாண்டி இது...? பாண்டி ஃபுல் pant போட்டா கஜினிக்கே டஃப் 'பைட்' கொடுப்பான் தெரியும்ல..?? ;)))

said...

//Divya said...
\\அப்போதான் நம்ம அம்மணிக தங்களோட 7th sense ஐ பயன் படுத்தி நீங்க பக்கத்திலே வர்றப்போ ஸ்குட்டியோட ஸ்பீடை கபால்னு ரொம்ப கம்மி பண்ணுடுவாங்க.. நீங்க உடனே உங்க பைக்கை நிறுத்த முடியாம அவுகளை முந்திகிட்டு போய்டுவிகளா..? அப்புறம் அவ்ளோதான்.. நீங்க வண்டிய நிறுத்தி உருட்டிகிட்டு போனாலும் உங்க கண்ணுல சிக்க மாட்டாவ. மறந்து கூட உங்க வண்டிய ஓவர் டேக் பண்ண மாட்டாகளே!!! \\

அடடா.......பாண்டிக்கும் இதெல்லாம் புரிஞ்சுப்போச்சா:))))
நல்லாத்தேன் 7th sense எல்லாம் புரிஞ்சு வைச்சுருக்கிறீக!! //

என்ன அம்மணி அக்குரமமா இருக்கு..?? உங்களுக்கு 7 த் சென்ஸ் இருந்தா அதை புரிஞ்சுக்கற 6 த் சென்ஸ்சை கடவுள் எங்களுக்கு கொடுத்துட்டாரே என்ன பண்ண..?? ;)))))

said...

//padippavan said...
Konjam Jollu kammiyadichu. Pongalukku Trisha scooty la ponatha partheengalaa'//

வாங்க படிப்பவரே... ;))))
அட ஜொள்ளு கம்மி ஆய்டுச்சா...?? அப்படியா சொல்லுறீய..?? ( பாண்டி நேட் த பாயிண்ட் ) ;)))) அடுத்த தடவை இன்னும் கொஞ்சம் முயற்சிக்கிறேனுங்க... திரிஷாவா..??பொங்கலுக்கா...?? நான் அவுகளை எல்லாம் பார்கறது இல்லீங்கோ.... நம்ம ரேஞ்சு எல்லாம் ஏஞ்சலினா... ஸ்கார்லட் னு கொஞ்சம் கம்மிதானுங்கோ..;))))

said...

// எழில்பாரதி said...
ரொம்ப நாள் அப்புறம் பாண்டி வந்திருக்கார் வாங்க பாண்டி(உங்க வீட்டுக்கு வந்து உங்களையே வரவேற்கிறேன்)..... //

வாம்மா மின்னல் ங்கர ரேஞ்சுக்கு சிங்கத்தை அதோட குகையிலயே வந்து உரசிப்பாக்குறீயளே எழில் பயமா இல்லையா..?? ;))))))

//பாண்டி driving schoolல் கூட இப்படி சொல்லிக் கொடுக்க மாட்டாங்க

சூப்பர் பாண்டி......

இவ்வளவு சில்லரை கிடைத்தது பாண்டி அண்ணா!!!!//

அட சில்லரை நெறையா கெடைச்சது அம்மணி எவ்வளவுன்னு எண்ணறதுக்கு ஆளைத் தேடிகிட்டு இருக்கேன்... கொறச்சு ஹெல்ப் செய்யண்டி... ;))))))

said...

//ரேக்லா ரேஸ்ல ஒட்டுற மாதிரி உங்க பைக்கோட ஆக்ஸிலரேட்டரைத் திருகி அய்யோ அம்மானு பைக் கதறக் கதற உயிரக் கொடுத்து ஒட்டிகிட்டு இருப்பீக..//

ஆமாம்!
ஆமாம்!!

(அனுபவித்தில் சொல்லைலங்கறத ஒரு உபரி தகவலாக தெரிவித்துக்கொள்கிறேன்!)

said...

//.. நமக்குத்தான் இந்த காதல் பொறா வா இருக்குறது ஒரு வீக்னெச் ஆச்சே//
உங்களுக்கும் இதே மாதிரி ஒரு காதல் பொறா எங்க பறந்துக்கிட்டிருக்கோ??

said...

//ரெண்டு கன்னத்திலையும் கைய வச்சு அய்யோனு ஒரு பார்வை பார்த்தா பாரு... அஹா சூப்பருடா.. !! “ இவனையெல்லாம் என்ன பண்ண சொல்லுங்கப்பூ...???!!!! //

ஒண்ணும் செய்யப்படாது ரசிக்கணும்
அவரோட ஃபீலிங்க்ஸ ரசிக்கணும்ங்கோ

said...

//வாம்மா மின்னல் ங்கர ரேஞ்சுக்கு சிங்கத்தை அதோட குகையிலயே வந்து உரசிப்பாக்குறீயளே எழில் பயமா இல்லையா..?? ;))))))//

பாண்டி அண்ணா இங்க யாரு சிங்கம்!!! கொஞ்சம் சொல்லுங்க!!!
எங்களுக்கெல்லாம் பயம்ன்னா என்னானே தெரியாது!!!

//அட சில்லரை நெறையா கெடைச்சது அம்மணி எவ்வளவுன்னு எண்ணறதுக்கு ஆளைத் தேடிகிட்டு இருக்கேன்... கொறச்சு ஹெல்ப் செய்யண்டி... ;))))))//

அதான் பக்கத்துல ஒரு அம்மணி கன்னதுல்ல கையவைச்சிக்கிட்டு இருக்காங்களே அவங்ககிட்ட உதவி கேளுங்க!!!!

said...

//தமிழன்... said...
வாங்க பாண்டியண்ணே ரொம்ப நாளைக்கப்புறமா ஒரு ஜீப்பர் யொள்ளு சாரி பதிவு....:)//

வாங்க தமிழன் வாங்க..:)))
ஆமாம் அயராத களப்பணிகளின் காரணமா இங்கே தலைகாட்ட முடியலை.. :)))

said...

// தமிழன்... said...
நேற்றே சொல்லணும்னு இருந்தேன் தல கப்பியோட அண்ணனோட பதிவில ரொம்ப நாளைக்கப்புறம் பாண்டியண்ணனோட கமன்ட பாக்க முடிஞ்சுது அதுல சந்தோசப்பட்டவங்கள்ள நானும் ஓருத்தன்...//

ஆஹா தமிழன் இப்படி பாசத்திலே என்னை நனைய வைக்குறீயளே... என்ன தவம் செய்தேன் நான்.... ??!!! நன்றி மிக்க நன்றி....
:)))))

said...

// தமிழன்... said...
///நம்ம பொண்ணுக எல்லாம் சரியான வெவரங்க.. ஏதோ ஒரு பையன் ஃபாலோ பண்ணறான்னு தெரிஞ்சா போதும்.. ஓவர் ஸ்பீடுல பொளந்து கட்டுவாக//
//அப்போதான் நம்ம அம்மணிக தங்களோட 7th sense ஐ பயன் படுத்தி நீங்க பக்கத்திலே வர்றப்போ ஸ்குட்டியோட ஸ்பீடை கபால்னு ரொம்ப கம்மி பண்ணுடுவாங்க.. நீங்க உடனே உங்க பைக்கை நிறுத்த முடியாம அவுகளை முந்திகிட்டு போய்டுவிகளா..? அப்புறம் அவ்ளோதான்.. நீங்க வண்டிய நிறுத்தி உருட்டிகிட்டு போனாலும் உங்க கண்ணுல சிக்க மாட்டாவ. மறந்து கூட உங்க வண்டிய ஓவர் டேக் பண்ண மாட்டாகளே!!!///

அதுங்க எப்பவும் விவரமாத்தான் இருக்குதுங்க...
நம்மாளுங்கதான் தொங்கிடறானுங்க...//

என்னாங்க தமிழன் ரொம்ப நொந்து போய் பேசறியளே... என்ன விடயம்....?? உங்களுக்காகவே ஜொள்ளுபாண்டி ஒரு தனி பதிவு ரெடி பண்ண போறான் கவலைய விடுங்க... ;))))

said...

//தமிழன்... said...
///அதுகளை நம்ம சார்ஜெண்டுக புடிச்சா கூட “ சாரி சார் “ னு ஹஸ்கி வாஸ்ய்ல நம்ம சார்ஜெண்டுகளோட மனச க்ளீண் போல்ட் ஆக்கிட்டு அப்பீட் ஆய்டுறாங்க..என்ன பண்ண? எல்லாம் ஜொள்ளு மயம்...///

:):))

என்ன பண்ண பாண்டியண்ணே எல்லோரும் உங்களை மாதிரி தெளிவா இருப்பாங்களா என்ன..//

அஹா தமிழன் நான் ரொம்ப தெளிவு எல்லாம் இல்லிங்கண்ணா....நாம அந்த இடத்திலே இருந்தாலும் இதே கதை தான்... ;))))))

said...

//தமிழன்... said...
divya..said...

\திடீர்னு எங்கயோ இருந்து வந்த வில்லப்பய வண்டி நம்ம வண்டியிலே வந்து மோதி ' பப்பரக்கா' னு ரெண்டு பேரும் ரோட்டிலே விழுந்து சில்லறை பொறுக்கிட்டு இருக்கோம்,.\\

. -> இதை நம்புறேன்,

\\ஆனா நாம விழுகறதைப் பார்த்து ரெண்டு கன்னத்திலையும் கைய வச்சு அய்யோனு ஒரு பார்வை பார்த்தா பாரு... அஹா சூப்பருடா.. !! \

"-> இதை ஏனோ நம்பவே முடியலீங்கண்ணா!!!////

ரிப்பீட்டு...//

அஹா....
You Tooooo நண்பா.... ?????

;))))))))))))

said...

//இராம்/Raam said...
பாண்டிண்ணே,

நாமே எவ்வளவுதான் விழுந்து சில்லரை அள்ளினாலும் மறுக்கா வீலிங் பண்ணாமே, வெள்ளை சொக்கா போட்ட மாமாவுக்கு தட்சிணை வைக்கமே இருக்கமுடியுமா??

ஆனா இதெல்லாம் நமக்காகதான் செய்யுறங்கன்னு பெண்குலங்கள் உணர்ந்தும் தங்களோட 7th sense யூஸ் பண்ணாமயே இருக்காங்களா???

அப்போ ஆண் குலங்கள் தான் அப்பாவியா??? :)//

வாங்க ராம் வாங்க.. :)))

அதெல்லாம் அவியளுக்கு நல்லாவே தெரியும்... இருந்தும் ஒரு 'கெத்து' மெயிண்டெய்ண் பண்ணறதுல அவியளுக்கு ஒரு அல்ப ஆசை .. என்ன பண்ண...?? ;)))))

உங்க ஆதங்கத்தை பாண்டி நோட் பண்ணி வச்சுக்கறான் ... ;)))))

said...

// கப்பி பய said...
:))

அண்ணாச்சி..இப்படி வண்டியில பின்னாடி உட்கார்ந்துட்டு உசுப்பேத்தறவன்ட்டதான் ரொம்ப ஜாக்கிரதையா இருக்கோனும் :)))

வழக்கம் போல கலக்கல்ஸ் ஆஃப் மெட்ராஸ் :))//

வாங்கண்ணா கப்பி The Super Star !!
:))))))
முதல்ல ஸ்டாருக்கு வாழ்த்துகள்....

அட ஆமாங்க கப்பி... பலதடவை அண்ணன் கப்பிய பலபேரு உசுப்பேத்தி வுட்டுருப்பாக போல....???

ரொம்ம டேங்கீஸ்... இவ்ளோ பிஸிலயும் வந்ததுக்கு.... :)))))

said...

//ஆயில்யன் said...
//ரேக்லா ரேஸ்ல ஒட்டுற மாதிரி உங்க பைக்கோட ஆக்ஸிலரேட்டரைத் திருகி அய்யோ அம்மானு பைக் கதறக் கதற உயிரக் கொடுத்து ஒட்டிகிட்டு இருப்பீக..//

ஆமாம்!
ஆமாம்!!

(அனுபவித்தில் சொல்லைலங்கறத ஒரு உபரி தகவலாக தெரிவித்துக்கொள்கிறேன்!)//

வாங்கண்ணா ஆயில்யன்.. :)))
அட உடுங்க பாஸ்... நம்மக்கு அனுபவன் இல்லைனு எவ்ளோதான் கூவுனாலும் யாருங்க நம்பபோறா.... அரசியல் வாழ்க்கையிலே இதெல்லாம் ஜகஜம் பாஸ்.. லூஸ்ல விடுங்க...
:)))))))))))))

said...

//ஆயில்யன் said...
//.. நமக்குத்தான் இந்த காதல் பொறா வா இருக்குறது ஒரு வீக்னெச் ஆச்சே//
உங்களுக்கும் இதே மாதிரி ஒரு காதல் பொறா எங்க பறந்துக்கிட்டிருக்கோ??//

அட பொறாவாவது .. காக்காயாவது... நீங்க வேற ஏங்க வெறுப்பேத்தறீங்க... :)))))

said...

//ஆயில்யன் said...
//ரெண்டு கன்னத்திலையும் கைய வச்சு அய்யோனு ஒரு பார்வை பார்த்தா பாரு... அஹா சூப்பருடா.. !! “ இவனையெல்லாம் என்ன பண்ண சொல்லுங்கப்பூ...???!!!! //

ஒண்ணும் செய்யப்படாது ரசிக்கணும்
அவரோட ஃபீலிங்க்ஸ ரசிக்கணும்ங்கோ//

அஹா வந்துடீயளா.. அண்ணாத்தே ரத்தக்களறியா நின்னுகிட்டு இருக்குறப்போ என்னாத்த ரசிக்கிறது சொல்லுங்க.... ;)))))

said...

// எழில்பாரதி said...
//வாம்மா மின்னல் ங்கர ரேஞ்சுக்கு சிங்கத்தை அதோட குகையிலயே வந்து உரசிப்பாக்குறீயளே எழில் பயமா இல்லையா..?? ;))))))//

பாண்டி அண்ணா இங்க யாரு சிங்கம்!!! கொஞ்சம் சொல்லுங்க!!!
எங்களுக்கெல்லாம் பயம்ன்னா என்னானே தெரியாது!!!//

ஆஹா இபப்டி சொல்லி நம்மளை அசிங்கப்படுத்தீட்டீயளே எழில்... :))))) ஒத்துக்கறேன் நீங்க சிங்கத்தேன்.... ;)))) போதுமா..??

//அட சில்லரை நெறையா கெடைச்சது அம்மணி எவ்வளவுன்னு எண்ணறதுக்கு ஆளைத் தேடிகிட்டு இருக்கேன்... கொறச்சு ஹெல்ப் செய்யண்டி... ;))))))//

அதான் பக்கத்துல ஒரு அம்மணி கன்னதுல்ல கையவைச்சிக்கிட்டு இருக்காங்களே அவங்ககிட்ட உதவி கேளுங்க!!!!//

அட கன்னத்திலே கை வச்சிகிட்டு யாருமே இல்லீங்களே இங்கன...??? ஆர சொல்லுறீய...?? நாங்களே எங்களுக்கு உதவி செஞ்சுகிட்டாத்தான் உண்டு போல... ;))))))

said...

aana naama vilutha nalu payru than varuvan but avinga viluntha 400 payru varuvan
enna kodumai pandi anna.......

said...

அதுகளை நம்ம சார்ஜெண்டுக புடிச்சா கூட “ சாரி சார் “ னு ஹஸ்கி வாஸ்ய்ல நம்ம சார்ஜெண்டுகளோட மனச க்ளீண் போல்ட் ஆக்கிட்டு அப்பீட் ஆய்டுறாங்க..என்ன பண்ண? எல்லாம் ஜொள்ளு மயம்...
ithai naan amothikkiren.kadaisila kettinkale. mmm onum pannamudiyathu
-isthripotti

said...

//ஆஹா இபப்டி சொல்லி நம்மளை அசிங்கப்படுத்தீட்டீயளே எழில்... :))))) ஒத்துக்கறேன் நீங்க சிங்கத்தேன்.... ;)))) போதுமா..??//

பாண்டி அண்ணா உங்கள அசிங்கப்படுத்த முடியுமா நீங்க தான் தொப்பிலாம் போட்டு அழகா இருக்கேளே!!!..

நான் சிங்கமா பாண்டி ஏன் இந்த கொலவெறி!!!

//அட கன்னத்திலே கை வச்சிகிட்டு யாருமே இல்லீங்களே இங்கன...??? ஆர சொல்லுறீய...?? நாங்களே எங்களுக்கு உதவி செஞ்சுகிட்டாத்தான் உண்டு போல... ;))))))//

நான் யாரையும் சொல்லையே ஏன் யாரும் இருக்காங்களோ!!!

said...

//ஆனா பார்த்துக்கோங்கப்பூ இதெல்லாம் நீங்க ஆபீஸ் போறதுக்குள்ள ஒரு சின்ன குஜால்ஸுக்குத்தான்... அப்படியே பார்த்தமா பதமா ஃபாலோ பண்ணுனமா ஆபீஸை ரீச் பண்ணுனமான்னு நல்ல புள்ளை//

இது மேட்டரு:P

said...

அண்ணாத்த ரொம்ப நாளைக்கப்புறம் ஒரு ஜில் பதிவு!!

said...

சென்னை ட்ராபிக்ல கழுதையும் ஒன்னுதான் குதிரையும் ஒன்னுதான்!!

பல்சர் டிடிஎஸ்ஐயும் ஒன்னுதான் ஹெர்குலஸ் எம்டிபியும் ஒன்னுதான்!!!

இது அனுபவ பூர்வமான உண்மை.

said...

அதனால ஆண்குலங்களே ரொம்ப கவலைப்படாதீங்க!!

:)))))

said...

/
கப்பி பய said...

:))

அண்ணாச்சி..இப்படி வண்டியில பின்னாடி உட்கார்ந்துட்டு உசுப்பேத்தறவன்ட்டதான் ரொம்ப ஜாக்கிரதையா இருக்கோனும் :)))
/

இதுக்கு ஒரு ரிப்பீட்டு போட்டுக்கிறேன் ஏன்னா எத்தினி பேரை நாம உசுப்பேத்தியிருக்கோம்!!!!

:)))))))))))

said...

Pandy'nne.... pattaiya kelapitteeha...

Unga pettaila kaththukittta paadaththaala thaan'ne naangalum vandi ottikittu irukkoam :)))

said...

திரு ஜொள்ளுப்பாண்டி அவர்களுக்கு,
கொஞ்சம் தாமதமாத்தான் உங்க பதிப்பை படிக்க நேர்ந்தது. ஆஹா இவளவு நாள் இப்படி ஒரு அருமையான பதிப்பைப் பார்க்க்காம விட்டுட்டோமேன்னு ரொம்பவே வருத்தப்பட்டேன்.
உங்க பதிப்பைப் படிக்கறச்சே பொறாமையாவும் இருக்கு. இப்படியெல்லாம் நானும் வலைப்பதிவும் எழுதினேன்னா, பின் விளைவுகள் பயங்கரமா இருக்கும். ஹ்ம்ம் நடத்துங்க.

அன்புடன்,
விஜய்

said...

//kadalai karthi said...
aana naama vilutha nalu payru than varuvan but avinga viluntha 400 payru varuvan
enna kodumai pandi anna.......//

வாங்கண்ணா கடலை கார்த்தி....
தீய தீய கடலை வறுப்பீங்களாண்ணா நீங்க...?? ;)))))
நீங்க சொன்னது சரிதானுங்க.. பாவம் பொண்ணுங்களுக்கு ஹெல்ப் பண்ணறது புண்ணியம் இல்லீங்களா..?? அதான் எல்லாரும் ஆளாப் பறக்கறாகளோ என்னவோ.... ;))))))

said...

//அதுகளை நம்ம சார்ஜெண்டுக புடிச்சா கூட “ சாரி சார் “ னு ஹஸ்கி வாஸ்ய்ல நம்ம சார்ஜெண்டுகளோட மனச க்ளீண் போல்ட் ஆக்கிட்டு அப்பீட் ஆய்டுறாங்க..என்ன பண்ண? எல்லாம் ஜொள்ளு மயம்...
ithai naan amothikkiren.kadaisila kettinkale. mmm onum pannamudiyathu
-isthripotti //

வாங்க இஸ்திரிபொட்டிண்ணா... :)))
என்ன இப்படி சலிச்சுக்கறீய..?? ஒன்னும் பண்ணமுடியாதுன்னா என்ன அர்த்தம்...?? அந்நியன் ரேஞ்சுக்கு யாராச்சும் கெளம்புவாங்களோ என்னவோ...?? ;)))))

said...

// எழில்பாரதி said...
//ஆஹா இபப்டி சொல்லி நம்மளை அசிங்கப்படுத்தீட்டீயளே எழில்... :))))) ஒத்துக்கறேன் நீங்க சிங்கத்தேன்.... ;)))) போதுமா..??//

பாண்டி அண்ணா உங்கள அசிங்கப்படுத்த முடியுமா நீங்க தான் தொப்பிலாம் போட்டு அழகா இருக்கேளே!!!.. //

வாங்க எழில்...

இந்த நக்கலுக்கு ஒன்னும் கொறச்சல் இல்லை... :)))))

//நான் சிங்கமா பாண்டி ஏன் இந்த கொலவெறி!!!//

அட கொஞ்சம் கூட பொய் சொல்ல விட மாட்டீயளோ...?? ;)))))

//அட கன்னத்திலே கை வச்சிகிட்டு யாருமே இல்லீங்களே இங்கன...??? ஆர சொல்லுறீய...?? நாங்களே எங்களுக்கு உதவி செஞ்சுகிட்டாத்தான் உண்டு போல... ;))))))//

நான் யாரையும் சொல்லையே ஏன் யாரும் இருக்காங்களோ!!! //

அந்த பயம் இருக்கட்டும்...
:))))))))))))

said...

//ரசிகன் said...
//ஆனா பார்த்துக்கோங்கப்பூ இதெல்லாம் நீங்க ஆபீஸ் போறதுக்குள்ள ஒரு சின்ன குஜால்ஸுக்குத்தான்... அப்படியே பார்த்தமா பதமா ஃபாலோ பண்ணுனமா ஆபீஸை ரீச் பண்ணுனமான்னு நல்ல புள்ளை//

இது மேட்டரு:P //

வாங்க ரசிகன்....:)))
ஊடால நாங்க அப்படியே கொஞ்சூண்டு மேட்டரை வச்சாலும் கண்டுபிடிச்சு சொல்லறீயளே அப்பூ....சூப்பரு.... :))))

said...

//மங்களூர் சிவா said...
அண்ணாத்த ரொம்ப நாளைக்கப்புறம் ஒரு ஜில் பதிவு!! //

வாங்க சிவாண்னா...

அட அப்படீங்களா ..?? நன்றி நன்றி.... :))))

said...

// மங்களூர் சிவா said...
சென்னை ட்ராபிக்ல கழுதையும் ஒன்னுதான் குதிரையும் ஒன்னுதான்!!

பல்சர் டிடிஎஸ்ஐயும் ஒன்னுதான் ஹெர்குலஸ் எம்டிபியும் ஒன்னுதான்!!!

இது அனுபவ பூர்வமான உண்மை.//

அஹா சிவாண்ணா...

அனுபவமா....??? :)))
ட்ராபிக்ல ஓட்டறதுக்குன்னு சில டிஜிடல் டெக்னிக் எல்லாம் இருக்குங்கண்ணா... வேணும்னா சொல்லுங்க ஸ்பெசல் ட்ரெய்னிங் கொடுத்துடுவோம்.... ;)))))

said...

// ஜி said...
Pandy'nne.... pattaiya kelapitteeha...

Unga pettaila kaththukittta paadaththaala thaan'ne naangalum vandi ottikittu irukkoam :))) //

வாங்க ஜி.... :))))
எபப்டி இருக்கீய...?? நல்லா இருக்கீயளா..?? அட என் பேட்டையிலே கத்துகிடீயளா...?? அட என்ன ஒரு தன்னடகம் !!!! ஜி உங்கள மாதிரி எல்லா field லயும் கலக்கனும்னு தான் ஆசை... முடியலையே.... என்ன பண்ணுவான் பாண்டி.... ;)))))))

said...

உங்க வண்டிய பேரிச்சம் பழக்காரங்க எல்லாம் காதலோட சுத்தி சுத்தி வர ரேஞ்சுக்கு இருந்தா இந்த ஸ்கூட்டி சேஸிங்கை இப்போவே மறந்துட்டு ஓரமா நின்னு எளநியோ ஜிங்ஞ்சர் பீர் ரோ குடிச்சுட்டு நடையக்கட்டுங்கப்பூ...
----------

ROTFL:))

Post is full of laughter, very nice:))

said...

//விஜய் said...
திரு ஜொள்ளுப்பாண்டி அவர்களுக்கு,
கொஞ்சம் தாமதமாத்தான் உங்க பதிப்பை படிக்க நேர்ந்தது. ஆஹா இவளவு நாள் இப்படி ஒரு அருமையான பதிப்பைப் பார்க்க்காம விட்டுட்டோமேன்னு ரொம்பவே வருத்தப்பட்டேன்.
உங்க பதிப்பைப் படிக்கறச்சே பொறாமையாவும் இருக்கு. இப்படியெல்லாம் நானும் வலைப்பதிவும் எழுதினேன்னா, பின் விளைவுகள் பயங்கரமா இருக்கும். ஹ்ம்ம் நடத்துங்க.

அன்புடன்,
விஜய் //

வாங்கண்ணா விஜய்....:))))
பேட்டைக்கு முதல் தடவையா வாறீகளா...?? வாங்க வாங்க ஏலேய் அண்ணனுக்கு பெப்சி ராவா கொண்டுவாப்பா...

//திரு .ஜொள்ளுபாண்டி//

அண்ணே வந்த உடனெயே என்னைய இப்படி கூப்பிட்டு கலாய்ச்சுட்டிங்களே... என்ன இது கலாட்டா..??

அட நீங்களும் தாராளமா எழுதுங்க... வேணாம்னா சொல்லபோறேன்... :))))

வந்து கலக்குங்கப்பூ சீக்கிரம்... :))))

said...

//Shwetha Robert said...

உங்க வண்டிய பேரிச்சம் பழக்காரங்க எல்லாம் காதலோட சுத்தி சுத்தி வர ரேஞ்சுக்கு இருந்தா இந்த ஸ்கூட்டி சேஸிங்கை இப்போவே மறந்துட்டு ஓரமா நின்னு எளநியோ ஜிங்ஞ்சர் பீர் ரோ குடிச்சுட்டு நடையக்கட்டுங்கப்பூ...
----------

ROTFL:))

Post is full of laughter, very nice:))//

வாங்கக்கா ஸ்வேதா..:))))
அட உழுந்து பொறண்டு சிரிச்சீயளா..???? கேட்கவே பரவசமா இருக்கே... ;)))))
நல்லா சிரிங்க... பேட்டை பக்கம் ஒதுங்குனதுக்கு நெம்ப தேங்ஸ்ஸுங்கோ.... ;))))))

said...

// மங்களூர் சிவா said...

அதனால ஆண்குலங்களே ரொம்ப கவலைப்படாதீங்க!!

:)))))//

அதானுங்களே கவலைப் பட்டு என்ன ஆவப்போவுது..?? ;))))

said...

//மங்களூர் சிவா said...

/
கப்பி பய said...

:))

அண்ணாச்சி..இப்படி வண்டியில பின்னாடி உட்கார்ந்துட்டு உசுப்பேத்தறவன்ட்டதான் ரொம்ப ஜாக்கிரதையா இருக்கோனும் :)))
/

இதுக்கு ஒரு ரிப்பீட்டு போட்டுக்கிறேன் ஏன்னா எத்தினி பேரை நாம உசுப்பேத்தியிருக்கோம்!!!!

:)))))))))))//

அடங்கோ அப்படீங்களா..?? உசுப்பேத்தி உசுப்பேத்தியே பலரோட உடம்பை ரணகளமாக்கி இருப்பீக போல இருக்குங்களே.... :)))))

said...

பாண்டியண்ணே...சொன்னது...

//// தமிழன்... said...
நேற்றே சொல்லணும்னு இருந்தேன் தல கப்பியோட அண்ணனோட பதிவில ரொம்ப நாளைக்கப்புறம் பாண்டியண்ணனோட கமன்ட பாக்க முடிஞ்சுது அதுல சந்தோசப்பட்டவங்கள்ள நானும் ஓருத்தன்...//

ஆஹா தமிழன் இப்படி பாசத்திலே என்னை நனைய வைக்குறீயளே... என்ன தவம் செய்தேன் நான்.... ??!!! நன்றி மிக்க நன்றி....
:)))))///

பாண்டியண்ணே இந்த பாசக்கார தம்பி வீட்டுக்கு ஒரு வாட்டி கூட வரலையேண்ணே ஆனா உங்க கடைமையை மட்டும் சரியா செய்யுற மாதிரி இருக்கு (அதாண்ணே ஜொள்ளுறது:):):))

எதை சொல்லுறோம்னு...
புரிஞ்சுகிட்டா சரி...:):))