Thursday, June 19, 2008

Smart ஜொள்ளு - Basics....
அட யாருங்க இந்த காலத்திலே ஜொள்ளுவிடாம இருக்கறா..? இதுல பசங்க என்ன பொண்ணுங்க என்ன எல்லாரும் ஒருத்தருக்கொருத்தர் சளைச்சவுகளா என்ன..? No.. Never.. ஆனா பாருங்க ஜொள்ளு வுட்டு நம்ம பசங்கதான் பச்சையா மாட்டிக்கிறாய்ங்க.. பொண்ணுங்க இந்த விசயத்திலே கொஞ்சம் சூட்டிகைதானுங்கோ... அவுக எப்போ எப்படி யாரைப் பார்த்து ஜொள்ளுவுடுராகன்னு அவ்ளோ சீக்கிரம் கண்டே பிடிக்க முடியாதுங்கோ... இப்படி நம்ம ஆண்குலங்கள் பச்சையா ஜொள்ளுவிட்டு அடிக்கடி ஜொள்ளுவாயோட மாட்டிகிறதை பார்க்க பார்க்க பாண்டியோட மனசு படற வேதனை கொஞ்ச நஞ்சமில்லீங்கோ... பாவம் அறியாத வயசு புரியாத சைஸ்ல நம்ம பசங்க கொஞ்சம் ஊட்டமும் வாட்டமுமா ஆரையாச்சும் பாத்தா கொஞ்சம் slip ஆகி ஆட்டோமேடிக்கா tongue வெளிய தள்ளி கொஞ்சம் கோக்குமாக்கா ஆய்ட்றாங்க... அட இதெல்லாம் பசங்க வேணும்னேவா பண்ணறாங்க..? அவுகளுக்கு ஆராச்சும் கொஞ்சம் சொல்லித்தந்தா தானே அக்கம் பக்கம் பார்த்து இடம் பொரும் ஏவல் உணர்ந்து சூதானமா ஜொள்ளு விடுவாக.? ஓகே Lions.. நாக்கு மூக்கா ஸ்டைல்ல அல்லாரும் கவனமா படிச்சு நல்லபடியா மாட்டிக்காம ஜொள்ளுவிட்டு பட்டைய கெளப்புங்கப்பு..

கண்ணுகளா நீங்க மானாவாரியா ஜொள்ளுவுட்டு போறவுக வரவுக அல்லாரும் வழுக்கி வுழுற அளவுக்கு ஜொள்ளணையின் கொள்ளளவு மீறி வழியற இடம் எதுன்னு பார்த்தீகன்னா இந்த ஷாப்பிங்க் மால்ஸ் தான்.. அதுவும் ஒரு சில பர்ஸை பதம் பார்க்கற மால்ஸ்ல வந்து போற அல்ட்றா மார்டன் அம்மணீஸ் பார்த்தீகண்னா ஏதோ FTV ல இருந்து direct ஆ import ஆன மாதிரி ட்ரெஸ் போட்டும் போடாம இப்பவோ அப்பவோ அவுந்துடுமோங்கர ரேஞ்சுல ட்ரெஸ்சை போட்டுகிட்டு ஃபேஷன்ல ஃபரேடு கெளப்பிகிட்டு நம்ம ஆண்குலங்கள் கண்ணை கன்னாபின்னானு கதறடிச்சுகிட்டு சுத்திகிட்டு இருப்பாக. இங்கதான் பசங்களா சூதானமா இருக்கணும். இப்படி அமெரிக்கன் corn மாதிரி ஊட்டமா சுத்திகிட்டு இருக்குறவுகளைப் பார்த்தா நாக்கு உங்களை மீறி 'டண்டனக்கா' னு துள்ளும். ஆனா இந்த மாதிரி சமயத்திலே ஆழமா மூச்சை இழுத்து வுடீங்கன்னா உங்க மனசு கொஞ்ச சாந்தம் ஆகும் அப்படியே அந்த அம்மணி போட்டிருக்கற செண்ட் டை மோப்பம் புடிச்ச மாதிரியும் இருக்கும்.. ஹிஹிஹிஹி... எப்படி..???


அடுத்த வகையறா எப்படீன்னா உங்க ஆபீஸிலேயே இருக்கற அல்லு சில்லு கெளப்புற பொண்ணுங்க.. இவுக பேசறப்போ பார்த்தீகன்னா அப்படியே ஏதோ இப்போத்தான் UKG ல இருந்து அள்ளிகிட்டு வந்து ஆபீஸ்ல வுட்ட மாதிரி கொஞ்சி கொஞ்சி மழலைத்தமிழ் பேசி உங்க நெஞ்சை கொள்ளை அடிப்பாக. இவுக கிட்டே பேசறப்போ உங்களை அறியாமலே வாயில இருந்து ஜலம் வழிய ஆரம்பிச்சுடும்.. உங்களால உணரவே முடியாதுங்க.. உங்களுக்கு என்னவோ நீங்க ஸ்டடியா பேசிகிட்டு இருக்கற மாதிரிதான் தெரியும் ஆனா உங்ககூட வேலை செய்யுற சக normal அம்மணீஸ் முகத்தைப் பார்த்தே நீங்க ரெண்டு பேரும் பேசிகிட்டு இருக்கற climatic conditions ஐ மோப்பம் பிடிக்கலாம்.. இந்த வகை ஆளுக கிட்டே நீங்க பேசறப்போ கொஞ்சம் நிதானமா மத்தவங்களுக்கு அதிகம் கேட்காத மாதிரி பேசுங்கப்பூ.. பேசற விசயம் ‘சப்பை’ மேட்டரா இருந்தாக் கூட ‘ என்ன காந்திய சுட்டுட்டாங்களா..? “ ங்கற மாதிரி மூஞ்சில ஒரு RED ரியாக்சனை வச்சுகிட்டு பேசுனீங்கன்னா ஏதோ நீங்க ரெண்டு பேரும் project delivery பத்தி deep டிஸ்கசன்ல இருக்கறதா நெனச்சுக்குவாக ... ஒகேவா.?


சில சமயம் எசகு பிசகா உங்க சம்சாரம் கூடவோ இல்லை சம்சாரம் ஆகப்போற அம்மணிக கூடவோ அவுகளுக்கு துணியோ இல்லை கழுத்துல காதுல போட்டுக்கற மணியோ வாங்க போறப்போ அங்கன வாங்க வர்ற சக அம்மணீஸ் சிலபேரு உங்க நாக்கோட நீளத்தை இஞ்ச் டேப் வைக்காக கொறறயா சோதிப்பாக. கொஞ்சம் ஏமாந்து நீங்க அவுக அழகுலே லயிச்சு லேசா லோகத்தை மறந்தீங்கன்னு வைங்க... அந்த சமயத்திலே உங்க அம்மணி எசகுபிசக்கா நீங்க பார்க்கிறதை பார்த்துட்டாகன்னு வைங்க அவ்ளோ தான் .. உங்க இமேஜ் சொல்லாம கொள்ளாம ' பப்பரக்கா' னு டேமேஜ் தான்.. இந்த மாதிரி சமயத்திலேதான் நீங்க பாண்டியோட " கொல கொலயா முந்திரிகா " formula வை follow பண்ணனும். எப்படீன்னா.. உங்க அம்மணிகிட்டே எடுக்கற பொருளும் நீங்க பார்க்கற பிகரும் ஒரே ஆங்கிள்ள இருக்கர இடமா கொஞ்சம் மெனகெட்டு தேடி புடிச்சு நின்னுகிட்டு அப்ப அப்ப அம்மணி கேட்கற " நல்லாருக்கா..? " கேள்விக்கு " இது கலர் சரி இல்லை.. இது அது நல்லா இல்லை.. இருக்கு.." இப்படி ramdom ஆ மாத்தி மாத்தி பதில் சொல்லிகிட்டே இருந்தீங்கனா போதும். எப்படியும் அவுக நீங்க சொல்லுறதை வாங்கப்போறது கெடையாது... ஆனாலும் உங்க கருத்து வேணும்... அதனால நீங்க பேசிகிட்டே உங்க வேலையையும் பார்த்துக்கலாம்.. நல்ல பேரும் side ல வாங்கிகிட்டு உங்க மனசுக்கு புடிச்ச ' வல்லிய ' ஜொள்ளும் மானாவாரியா விடலாம்... !!! எப்படி..?


என்னா சிங்கங்களே அசிங்கப்படாம ஜொள்ளுவுடுறது எப்படின்னு ஏதோ என்னோட சிற்றறிவுக்கு தெரிஞ்ச விசயத்தை சொல்லி இருக்கேன்.. அல்லாரும் சத்தம் காட்டாம படிச்சுபுட்டு practicals க்கு கெளம்புங்கப்பூ...

அப்படியே போற போக்கிலே உங்களுக்கு தெரிஞ்ச டிப்ஸையும் அள்ளி வீசிட்டு போங்கப்பூ... சரியா..?

64 பேர் வளைச்சு வளச்சு ஜொள்ளிருக்காங்க:

said...

\\இவுக பேசறப்போ பார்த்தீகன்னா அப்படியே ஏதோ இப்போத்தான் UKG ல இருந்து அள்ளிகிட்டு வந்து ஆபீஸ்ல வுட்ட மாதிரி கொஞ்சி கொஞ்சி மழலைத்தமிழ் பேசி உங்க நெஞ்சை கொள்ளை அடிப்பாக.\\


ROTFL:))

said...

\\ஒரு RED ரியாக்சனை வச்சுகிட்டு பேசுனீங்கன்னா \\

அதென்ன கலர் கலரா ரியாக்ஷன்??

\\நம்ம ஆண்குலங்கள் பச்சையா ஜொள்ளுவிட்டு \\

பச்சை கலர் ல ஜொள்ளு,
ரெட் கலர் கவர்-அப் ரியாக்ஷனா??

நல்லாதான் கலர் கலரா சொல்லிதரீங்க , உருபட்டாப்ல தான்:))

said...

\\பாண்டியோட " கொல கொலயா முந்திரிகா " formula\\

அடபாவி, உங்க formula வுக்கு பேரு வேரையா??

said...

\\பொண்ணுங்க இந்த விசயத்திலே கொஞ்சம் சூட்டிகைதானுங்கோ... \\

இந்த சூட்டிகை எல்லாம் கூடவே பொறந்ததுங்கோ.....நீங்க எம்புட்டு கோச்சிங் கொடுத்தாலும் உங்க ஆளுங்களுக்கு வராதுங்க:))

said...

வந்துட்டேன்...

said...

///அப்படியே போற போக்கிலே உங்களுக்கு தெரிஞ்ச டிப்ஸையும் அள்ளி வீசிட்டு போங்கப்பூ... சரியா..?///

அண்ணே இந்த விசயத்துல நான் சின்னப்பையன் எனக்கு ஜொள்ளுன்னா என்னான்னே தெரியாதண்ணே...

said...

////உங்க ஆபீஸிலேயே இருக்கற அல்லு சில்லு கெளப்புற பொண்ணுங்க.. இவுக பேசறப்போ பார்த்தீகன்னா அப்படியே ஏதோ இப்போத்தான் UKG ல இருந்து அள்ளிகிட்டு வந்து ஆபீஸ்ல வுட்ட மாதிரி கொஞ்சி கொஞ்சி மழலைத்தமிழ் பேசி உங்க நெஞ்சை கொள்ளை அடிப்பாக////

ஆபீஸ் பொண்ணுங்க மட்டுமில்லைண்ணா பொதுவாவே இந்த பொண்ணுங்க எப்டித்தான் இப்படி பேசுறாளுங்களோ தெரியாது

இருந்தாலும் அந்த அழகே தனி அண்ணே...:)

said...

பாண்டித் தம்பி!

அற்புதமனா டிப்ஸ்களைக் கொடுத்து அசத்திட்டீங்க!

said...

//\\இவுக பேசறப்போ பார்த்தீகன்னா அப்படியே ஏதோ இப்போத்தான் UKG ல இருந்து அள்ளிகிட்டு வந்து ஆபீஸ்ல வுட்ட மாதிரி கொஞ்சி கொஞ்சி மழலைத்தமிழ் பேசி உங்க நெஞ்சை கொள்ளை அடிப்பாக.\\//

ச்சோ ஜுவீட்டு :))))

said...

//என்ன காந்திய சுட்டுட்டாங்களா..? “ ங்கற மாதிரி மூஞ்சில ஒரு RED ரியாக்சனை வச்சுகிட்டு பேசுனீங்கன்னா ஏதோ நீங்க ரெண்டு பேரும் project delivery பத்தி deep டிஸ்கசன்ல இருக்கறதா நெனச்சுக்குவாக ... ஒகேவா.//

ஒ.கே :)

said...

கொல கொலயா முந்திரிக்கா
நிறைய நிறைய பார்த்துவா

இந்த டெக்னிக்கு சூப்பரா இருக்கும்போல தெரியுது! :))))

said...

ரொம்ப அனுபவமா ?ஆனாலும் ரசனையாதான் எழுதிருக்கிங்கோ

said...

ரொம்ப அனுபவமா ?ஆனாலும் ரசனையாதான் எழுதிருக்கிங்கோ

said...

//பேசற விசயம் ‘சப்பை’ மேட்டரா இருந்தாக் கூட ‘ என்ன காந்திய சுட்டுட்டாங்களா..? “ ங்கற மாதிரி மூஞ்சில ஒரு RED ரியாக்சனை வச்சுகிட்டு பேசுனீங்கன்னா ஏதோ நீங்க ரெண்டு பேரும் project delivery பத்தி deep டிஸ்கசன்ல இருக்கறதா நெனச்சுக்குவாக ... ஒகேவா.? //

கொஞ்சம் கஷ்டம்தான்...
இருந்தாலும் ட்ரை பண்ணிட்டு பதில நாளைக்கி சொல்றேன்...

said...

எப்படியும் அவுக நீங்க சொல்லுறதை வாங்கப்போறது கெடையாது... ஆனாலும் உங்க கருத்து வேணும்.nice.enga jj madhavan idea eppdi.-isthripotti

said...

அண்ணா கலக்கிட்டிங்க......!

said...

பாண்டி என்னமா டிப்ஸ் சொல்லுரிங்க!!!

பசங்க இதைலாம் கடைப்பிடிக்கிறது கஷ்டம் தான்....

உங்க அளவுக்கு பொருமை இல்லைங்க
அவங்களுக்கு எல்லாம்!!!!

பாண்டி அண்ணா நாங்களாம் இந்த பதிவ படிச்சு உஷாரா இருப்போம்ல
அப்போ பசங்க எப்படி ஜொள்ளுவிட்டாலும் தெரிஞ்சுப்போம்ல.....

said...

எடுறா வண்டிய..
வுடுடா சாப்பிங்க் மாலுக்கு..
இன்னிக்கு புதுசா ஜொள்ளு வுட்டு பாத்துடுவோம் :))

said...

:))))))))))

said...

பாண்டி கெட்ட பசங்களைதான் பொண்ணுங்களுக்கு புடிக்குமாம் அதனால இனிமே தைரியமா டைரக்டாவே ஜொள்ளு ஊத்தலாம்

:))))

said...

/
நாமக்கல் சிபி said...

பாண்டித் தம்பி!

அற்புதமனா டிப்ஸ்களைக் கொடுத்து அசத்திட்டீங்க!
/

இருங்க சிபி அண்ணிக்கு ஒரு போன் போட்டுட்டு வரேன்

:)))))))))))

said...

ஜொள்ளுவிட்டவரைக்கும் போதும் எல்லாரும் செயல் புயலா மாறுங்கப்பு!!!

:)))))))))))

said...

\\இதுல பசங்க என்ன பொண்ணுங்க என்ன எல்லாரும் ஒருத்தருக்கொருத்தர் சளைச்சவுகளா என்ன..?\\
ஆனா, எந்தப் பொண்ணும் ஒத்துக்காது

\\அல்லாரும் வழுக்கி வுழுற அளவுக்கு ஜொள்ளணையின் கொள்ளளவு மீறி வழியற இடம் எதுன்னு பார்த்தீகன்னா இந்த ஷாப்பிங்க் மால்ஸ் தான்.. \\
நாங்கள்லாம் ஷாப்பிங் மாலுக்குப் போறதே ஜொள்ளத்தானே. :)

\\அந்த சமயத்திலே உங்க அம்மணி எசகுபிசக்கா நீங்க பார்க்கிறதை பார்த்துட்டாகன்னு வைங்க அவ்ளோ தான் .. \\
அந்த வயித்தெரிச்சலையெல்லாம் கேக்காதீங்கப்பா. என்ன தான் நானும் நிறைய ட்ரிக் வச்சு பார்த்தாலும் நம்ம அம்மணி கண்டு புடிச்சுடுதுப்பா. அதுவும் கூடவே அந்த பின்க் கலர் சுடியைப் பார்த்தது போதும்'னு ஓபனாவே சொல்லுவாங்க. எம்புட்டு tactical strategy கடைபுடிச்சாலும் மாட்டிக்கிறோம்யா.

said...

//Divya said...
\\இவுக பேசறப்போ பார்த்தீகன்னா அப்படியே ஏதோ இப்போத்தான் UKG ல இருந்து அள்ளிகிட்டு வந்து ஆபீஸ்ல வுட்ட மாதிரி கொஞ்சி கொஞ்சி மழலைத்தமிழ் பேசி உங்க நெஞ்சை கொள்ளை அடிப்பாக.\\


ROTFL:)) //

வாங்க திவ்யா..:))

இப்படி நீங்க உழுந்து பொறண்டு சிரிக்கறதைப் பார்க்க நெம்ப சந்தோசமா இருக்குங்கோ.... ;)))))

said...

//Divya said...
\\ஒரு RED ரியாக்சனை வச்சுகிட்டு பேசுனீங்கன்னா \\

அதென்ன கலர் கலரா ரியாக்ஷன்?? //

ஏன்னா கலர் பார்க்கறப்போ ரியாக்சனையும் கலர்ல போட்டாட்த்தானே ஒரு 'கிக்' இருக்கும்.. என்ன சொல்லுறீய..?? ;))))

\\நம்ம ஆண்குலங்கள் பச்சையா ஜொள்ளுவிட்டு \\

பச்சை கலர் ல ஜொள்ளு,
ரெட் கலர் கவர்-அப் ரியாக்ஷனா??

நல்லாதான் கலர் கலரா சொல்லிதரீங்க , உருபட்டாப்ல தான்:))//

அட என்னமோ உங்களுக்கு ஒண்ணுமே தெரியாத மாதிரி ஏன் திவ்யா, பாப்பா வேசம் கட்டுறீய..?? ;)))) நல்லா தான் சொல்லிதாறேனா..?? ஹிஹிஹிஹிஹி.. டாங்கீஸ்....

;))))

said...

// Divya said...
\\பாண்டியோட " கொல கொலயா முந்திரிகா " formula\\

அடபாவி, உங்க formula வுக்கு பேரு வேரையா?? //

அட என்ன திவ்யா எல்லாம் ஒரு வெள்ளம்பரத்துக்காகதேன்... கண்டுகிடாதீய.... சரியா..?? ;)))

said...

// Divya said...
\\பொண்ணுங்க இந்த விசயத்திலே கொஞ்சம் சூட்டிகைதானுங்கோ... \\

இந்த சூட்டிகை எல்லாம் கூடவே பொறந்ததுங்கோ.....நீங்க எம்புட்டு கோச்சிங் கொடுத்தாலும் உங்க ஆளுங்களுக்கு வராதுங்க:))//

ஹலோ கொஞ்சம் அடங்குக்கம்மா... நாங்களும் எங்களுக்குத்தெரிஞ்ச உங்களுக்குத் தெரியாத ரூட்டு வச்சு இருக்கோம் தெரியும்லா..??;)))))

said...

//தமிழன்... said...
வந்துட்டேன்... //

வாப்பா உடன் பொறப்பே வந்தாச்சா,...?? ;)))

said...

// தமிழன்... said...
///அப்படியே போற போக்கிலே உங்களுக்கு தெரிஞ்ச டிப்ஸையும் அள்ளி வீசிட்டு போங்கப்பூ... சரியா..?///

அண்ணே இந்த விசயத்துல நான் சின்னப்பையன் எனக்கு ஜொள்ளுன்னா என்னான்னே தெரியாதண்ணே... //

அடடா என்னே ஒரு ஆதங்கம் என் உடன்பிறப்புக்கு...!!!! :))))

மீன்குஞ்சுக்கு நீச்சல் கத்துத்தரணுமா என்ன..? No.... Never...

யாரங்கே... ?? தமிழனை பேட்டைக்கு அள்ளிட்டு வாங்கப்பூ... !!! ;))))

said...

//தமிழன்... said...
////உங்க ஆபீஸிலேயே இருக்கற அல்லு சில்லு கெளப்புற பொண்ணுங்க.. இவுக பேசறப்போ பார்த்தீகன்னா அப்படியே ஏதோ இப்போத்தான் UKG ல இருந்து அள்ளிகிட்டு வந்து ஆபீஸ்ல வுட்ட மாதிரி கொஞ்சி கொஞ்சி மழலைத்தமிழ் பேசி உங்க நெஞ்சை கொள்ளை அடிப்பாக////

ஆபீஸ் பொண்ணுங்க மட்டுமில்லைண்ணா பொதுவாவே இந்த பொண்ணுங்க எப்டித்தான் இப்படி பேசுறாளுங்களோ தெரியாது

இருந்தாலும் அந்த அழகே தனி அண்ணே...:) //

ஆஹா உடன் பிறப்பே அவ்ளோ தாண்பா.. அவ்ளோ தான்.... இதுதான் ஜொள்ளுன்னு பேரு.. ஓகேவா..??

[போன பின்னூட்டதிலே அப்படி சொல்லிட்டு இங்கே இப்படி சொல்லி ஏன்கண்ணு மாட்டிக்கணும்...?? ]

;))))))

said...

//நாமக்கல் சிபி said...
பாண்டித் தம்பி!

அற்புதமனா டிப்ஸ்களைக் கொடுத்து அசத்திட்டீங்க! //

அண்ணா சிபியண்ணா வாங்க வாங்க.... உங்களுக்கு தெரியாததா நான் சொல்லிபுட்டேன்...??

ஆமா அண்ணே கையிலே சூப்பரா ஒரு கேமரா வச்சு போஸ் கொடுக்கறீயளே.. நம்மளையும் ரெண்டு க்ளிக்கரது...!!! ??

;)))))))

said...

//ஆயில்யன் said...
//\\இவுக பேசறப்போ பார்த்தீகன்னா அப்படியே ஏதோ இப்போத்தான் UKG ல இருந்து அள்ளிகிட்டு வந்து ஆபீஸ்ல வுட்ட மாதிரி கொஞ்சி கொஞ்சி மழலைத்தமிழ் பேசி உங்க நெஞ்சை கொள்ளை அடிப்பாக.\\//

ச்சோ ஜுவீட்டு :)))) //

வாங்க ஆயில்யன் எப்படி இருக்கீய..??

ஜ்வீட்டு அங்கன அதிகமோ....??

;))))))

said...

//ஆயில்யன் said...
//என்ன காந்திய சுட்டுட்டாங்களா..? “ ங்கற மாதிரி மூஞ்சில ஒரு RED ரியாக்சனை வச்சுகிட்டு பேசுனீங்கன்னா ஏதோ நீங்க ரெண்டு பேரும் project delivery பத்தி deep டிஸ்கசன்ல இருக்கறதா நெனச்சுக்குவாக ... ஒகேவா.//

ஒ.கே :) //

அட இங்க பார்றா.... ஆயில்ஸ்... என்னமோ புதுசா கேட்குற மாதிரியே முகத்தை வாச்சுகிட்டு கேக்குறீயளே... I like it !! :)))))))

said...

//ஆயில்யன் said...
கொல கொலயா முந்திரிக்கா
நிறைய நிறைய பார்த்துவா

இந்த டெக்னிக்கு சூப்பரா இருக்கும்போல தெரியுது! :)))) //

அண்ணே ஆயில்ஸ்...

நீங்க எங்கியோ போய்ட்டீக... ;)))))

said...

//knrhameed said...
ரொம்ப அனுபவமா ?ஆனாலும் ரசனையாதான் எழுதிருக்கிங்கோ///

வாங்க ஹமீத்.. :)))
அட நான் ரொம்ப சின்னப்பையங்கோ.. அனுபவம் எல்லாம் கெடையவே கெடையாது....
ஹிஹிஹிஹிஹிஹி...

பேட்டைப் பக்கம் வந்ததுக்கு நொம்ப டேங்கீஸ்... ;))))

said...

//எப்படியும் அவுக நீங்க சொல்லுறதை வாங்கப்போறது கெடையாது... ஆனாலும் உங்க கருத்து வேணும்.nice.enga jj madhavan idea eppdi.-isthripotti //

வாங்க இஸ்திரி... :))))
அட ஜேஜே மாதவன் ஐடியாவா..? :)))) நல்லாதேன் இருக்கு.. ;))))

said...

//jeba said...
அண்ணா கலக்கிட்டிங்க......! //

வாங்கண்ணா ஜெபா... :)))
அட கலக்கல் எல்லாம் பெரிய வார்த்தைங்கோ... :)))

டேங்யூ...டேங்யூ...

said...

//எழில்பாரதி said...
பாண்டி என்னமா டிப்ஸ் சொல்லுரிங்க!!!

பசங்க இதைலாம் கடைப்பிடிக்கிறது கஷ்டம் தான்.... //

வாங்க எழில்.. :))
பசங்களில் திறமையை குறைத்து மதிப்பிட்ட எழிலை வன்மையாக கண்டிக்கிறேன்..
;)))))))

//உங்க அளவுக்கு பொருமை இல்லைங்க
அவங்களுக்கு எல்லாம்!!!! //

ஆஹா பாசங்களுக்கு பொறுமை இல்லாம இல்லைங்கோ....
"ஸ்கூட்டி வரும் வரையில் காத்து நிற்குமாம் பல்சர்" ன்ணு பழமொழி கேள்விப்பட்டது இல்லீங்களா நீங்க..???? ;))))

//பாண்டி அண்ணா நாங்களாம் இந்த பதிவ படிச்சு உஷாரா இருப்போம்ல
அப்போ பசங்க எப்படி ஜொள்ளுவிட்டாலும் தெரிஞ்சுப்போம்ல..... //

அட நாங்க எல்லாம் கழுவற மீன்ல நழுவற கேடி கோஷ்டியாக்கும்... ஹிஹிஹிஹிஹி...

:)))))))

said...

//சென்ஷி said...
எடுறா வண்டிய..
வுடுடா சாப்பிங்க் மாலுக்கு..
இன்னிக்கு புதுசா ஜொள்ளு வுட்டு பாத்துடுவோம் :)) //

வாங்க சார்... :)))
எப்படி இருக்கீய..? நானே கூட்டிட்டு போட்டுமா உங்களை...?? ;))))))

said...

// மங்களூர் சிவா said...
:))))))))))
//

வாங்க சிவா வாங்க...
எப்படி இருக்கீய...?? ;)))

said...

//மங்களூர் சிவா said...
பாண்டி கெட்ட பசங்களைதான் பொண்ணுங்களுக்கு புடிக்குமாம் அதனால இனிமே தைரியமா டைரக்டாவே ஜொள்ளு ஊத்தலாம்

:))))
//

வாங்க சிவாண்ணே...
அட புதுசா தகவலை என்னோட டேட்டாபேஸ் ல ஏத்துறீயளே.. ;)) அப்படியா என்ன...?? ;)))))

said...

// மங்களூர் சிவா said...
/
நாமக்கல் சிபி said...

பாண்டித் தம்பி!

அற்புதமனா டிப்ஸ்களைக் கொடுத்து அசத்திட்டீங்க!
/

இருங்க சிபி அண்ணிக்கு ஒரு போன் போட்டுட்டு வரேன்

:))))))))))) //

அட என்னாங்க சிவா..
அண்ணன் சிபி நம் இனம்... புரிஞ்சுதோ..? ;)))) பாவம் விடுங்க... ஒகே..?? ;))))

said...

சூப்பர்மா, உங்க ஐடியாவ மைண்டுல வச்சுருக்கேன்

said...

பாண்டிண்ணே,

வழக்கம் போலே கலக்கீட்டிங்கண்ணே.... :))

said...

அடடா..நீங்க எங்கேயோ இருக்க வேண்டியவரு JP :P

\\பொண்ணுங்க இந்த விசயத்திலே கொஞ்சம் சூட்டிகைதானுங்கோ\\

கூடவே பொரந்தது..தானா இருக்கறது..அவங்கள மாட்ச்பன்ன பராக்டீஸ் தேவை ;)

\\‘ என்ன காந்திய சுட்டுட்டாங்களா..? “ ங்கற மாதிரி மூஞ்சில ஒரு RED ரியாக்சனை வச்சுகிட்டு பேசுனீங்கன்னா ஏதோ நீங்க ரெண்டு பேரும் project delivery பத்தி deep டிஸ்கசன்ல இருக்கறதா நெனச்சுக்குவாக ... ஒகேவா.?\\

அட இப்படி எல்லாம் சின்ன பொண்ணுகளை கலர் கலரா ஏமாத்தரதா??

said...

தலைவா, நீங்க பேசாம ஒரு காலேஜ் ஆரம்பிக்கலாம். அடுத்த தலைமுறை உங்ககிட்ட கத்துக்க வேண்டியது நிறைய இருக்கு.

said...

தலைவா, நீங்க பேசாம ஒரு காலேஜ் ஆரம்பிக்கலாம். அடுத்த தலைமுறை உங்ககிட்ட கத்துக்க வேண்டியது நிறைய இருக்கு.

said...

ஜொல்லுப்பாண்டியண்ணே,
வெட்டிப்பயல் அவர்களே,

உங்க ரெண்டு பேரயும் தலையா வச்சிக்கிட்டு நான் ஒரு வலைப்பூ ஆரம்பிச்சுருக்கேன்,

என்ன வாழ்த்துங்கண்ணே

நன்றி,
போக்கிரி பையன்
http://pokkiripayan.blogspot.com/

said...

//அதுவும் ஒரு சில பர்ஸை பதம் பார்க்கற மால்ஸ்ல வந்து போற அல்ட்றா மார்டன் அம்மணீஸ் பார்த்தீகண்னா ஏதோ FTV ல இருந்து direct ஆ import ஆன மாதிரி ட்ரெஸ் போட்டும் போடாம இப்பவோ அப்பவோ அவுந்துடுமோங்கர ரேஞ்சுல ட்ரெஸ்சை போட்டுகிட்டு ஃபேஷன்ல ஃபரேடு கெளப்பிகிட்டு நம்ம ஆண்குலங்கள் கண்ணை கன்னாபின்னானு கதறடிச்சுகிட்டு சுத்திகிட்டு இருப்பாக//

இது நெசந்தானுங்க மாம்ஸு:))

said...

//இவுக பேசறப்போ பார்த்தீகன்னா அப்படியே ஏதோ இப்போத்தான் UKG ல இருந்து அள்ளிகிட்டு வந்து ஆபீஸ்ல வுட்ட மாதிரி கொஞ்சி கொஞ்சி மழலைத்தமிழ் பேசி உங்க நெஞ்சை கொள்ளை அடிப்பாக//


Arumai
:))

said...

// உங்க சம்சாரம் கூடவோ இல்லை சம்சாரம் ஆகப்போற அம்மணிக கூடவோ அவுகளுக்கு துணியோ இல்லை கழுத்துல காதுல போட்டுக்கற மணியோ வாங்க போறப்போ அங்கன வாங்க வர்ற சக அம்மணீஸ் சிலபேரு உங்க நாக்கோட நீளத்தை இஞ்ச் டேப் வைக்காக கொறறயா சோதிப்பாக.//

// இந்த மாதிரி சமயத்திலேதான் நீங்க பாண்டியோட " கொல கொலயா முந்திரிகா " formula வை follow பண்ணனும். எடுக்கற பொருளும் நீங்க பார்க்கற பிகரும் ஒரே ஆங்கிள்ள இருக்கர இடமா கொஞ்சம் மெனகெட்டு தேடி புடிச்சு நின்னுகிட்டு// அப்ப அப்ப அம்மணி கேட்கற " நல்லாருக்கா..? " கேள்விக்கு " இது கலர் சரி இல்லை.. இது அது நல்லா இல்லை.. இருக்கு.." இப்படி ramdom ஆ மாத்தி மாத்தி பதில் சொல்லிகிட்டே இருந்தீங்கனா போதும். எப்படியும் அவுக நீங்க சொல்லுறதை வாங்கப்போறது கெடையாது... ஆனாலும் உங்க கருத்து வேணும்... அதனால நீங்க பேசிகிட்டே உங்க வேலையையும் பார்த்துக்கலாம்.. நல்ல பேரும் side ல வாங்கிகிட்டு உங்க மனசுக்கு புடிச்ச ' வல்லிய ' ஜொள்ளும் மானாவாரியா விடலாம்... !!! எப்படி..? //

அதுசரி!! ஜொள்ளுப்பாண்டிக்கு நோ எக்ஸ்பீரியன்ஸ் ஆஃப் சம்சாரம்? ஏற்கனவே பர்சுக்கு டேஞ்சர் ஏரியாவான ஜிஆர்டி/நல்லிக்குள்ளே டேஞ்சர் பார்ட்டியான சம்சாரத்தின் முன்னிலையிலேயே அட்ஜஸ்டிங் ஆங்கிள் ஜொள்ளு???

சம்சாரம் கட் பண்ணிய.. (ஜொள்ளிய) நம்ம நாக்கை கடைக்காரர்கிட்ட சைகையில் இரவல் வாங்கின இஞ்ச் டேப் வச்சு நாமளே அளந்து பாக்கணுமா??


ஜொள்ளு டோண்ட் மிஸ் லீட் பீப்புள் லைக் மி டு எண்ட் அப் சீயிங்/பிரிங்கிங் சொர்ணாக்கா அவுட் ஆஃப் சம்சாரம்!!
(ஈவன் ஆப்டர் ஸ்பெண்டிங் மச் மணி ஃபார் சம்சாரம் ஆன் ஜூவல்லரி/ பர்ச்சேஸ் )

கேன் எனிபடி வாண்ட் / இன்வைட் டோட்டல் செல்ஃப் டாமஜ்?

கல்யாணமான ஆண்குலத்தை சம்சாரம் பிரிச்சு மேயும்படியான ஐடியாவா இருக்கு ஜொள்ஸ்!

எலிஜிபிள் பேச்சுலர் ஜொள்ளர்ஸ் என்சாய்! மேரிடு மென் பிவேர்!

said...

//"ச்ச்சும்மா 'கும்' முன்னு இருக்கற
பொண்ண விட 'கம்'முன்னு
இருக்கற பொண்ணைக்
கல்யாணம் பண்ணு....
வாழ்க்கை ச்ச்சும்மா
'ஜம்' முன்னு இருக்கும்.... "//

சரி இருக்கட்டும்.
ஆனா கல்யாணத்துக்கு அப்புறம் அதுவரை "கம்"முன்னு (இருக்கிறமாதிரி) இருந்த பொண்ணு 'ஜம்'முன்னு எகிறிக் கும்முகும்முனு 'கும்'முனா என்னா செய்யறதுன்னும் சொல்லுங்க ஜொள்ளானந்தா! பாவம் (மாட்டிக்கிட்ட/மா(வா)ட்டப்போற பசங்க.

said...

//விஜய் said...
\\இதுல பசங்க என்ன பொண்ணுங்க என்ன எல்லாரும் ஒருத்தருக்கொருத்தர் சளைச்சவுகளா என்ன..?\\
ஆனா, எந்தப் பொண்ணும் ஒத்துக்காது//

வாங்கண்ணா விஜய்...:)))))
அட என்னிக்கு அவுக ஒத்துகிட்டு இருக்காக...?? கவலைப் படாதீங்க.... :)))

\\அல்லாரும் வழுக்கி வுழுற அளவுக்கு ஜொள்ளணையின் கொள்ளளவு மீறி வழியற இடம் எதுன்னு பார்த்தீகன்னா இந்த ஷாப்பிங்க் மால்ஸ் தான்.. \\
நாங்கள்லாம் ஷாப்பிங் மாலுக்குப் போறதே ஜொள்ளத்தானே. :)

\\அந்த சமயத்திலே உங்க அம்மணி எசகுபிசக்கா நீங்க பார்க்கிறதை பார்த்துட்டாகன்னு வைங்க அவ்ளோ தான் .. \\
அந்த வயித்தெரிச்சலையெல்லாம் கேக்காதீங்கப்பா. என்ன தான் நானும் நிறைய ட்ரிக் வச்சு பார்த்தாலும் நம்ம அம்மணி கண்டு புடிச்சுடுதுப்பா. அதுவும் கூடவே அந்த பின்க் கலர் சுடியைப் பார்த்தது போதும்'னு ஓபனாவே சொல்லுவாங்க. எம்புட்டு tactical strategy கடைபுடிச்சாலும் மாட்டிக்கிறோம்யா.//

அடடா விஜய் என்ன இப்படி ஒரு நொந்த அனுபவமா சொல்லுறீய...??
உங்க ஜொள்ளு டெக்னிக்கை லேசா fine tune பண்ணவேண்டி இருக்குங்க... லேசா உங்க தங்கமணி இல்லாதப்போ homework பண்ணி பாருங்களேன்.. :)))) ஆல் த பெஸ்ட்.. !!

said...

//போக்கிரி பையன் said...
சூப்பர்மா, உங்க ஐடியாவ மைண்டுல வச்சுருக்கேன் //

வாங்க போக்கிரிப்பையன்.. :)))
ஓஓஒ மைண்ட்ல வச்சு இருக்கீயளா... சரியால சமயத்துல சிக்ஸர் அடிங்க.... ஓகேவா....?? :))))

said...

//இராம்/Raam said...
பாண்டிண்ணே,

வழக்கம் போலே கலக்கீட்டிங்கண்ணே.... :)) //

வாங்க ராம் ....
எப்படி இருக்கீய...?? :))) மதுரைப் பக்கம் கூட்டிட்டு போங்கண்ணா.. கோனார் கடைக்கு போய் வருசமாச்சு... :)))))))

said...

// Ramya Ramani said...
அடடா..நீங்க எங்கேயோ இருக்க வேண்டியவரு JP :P //

வாங்க ரம்யா.. :)))

அட என்னைய பத்தி உங்களுக்கு தெரியுது... நம்ம புஷ்சுக்கு தெரியலையே...... என்ன பண்ணுவேன்?? :)))))

\\பொண்ணுங்க இந்த விசயத்திலே கொஞ்சம் சூட்டிகைதானுங்கோ\\

கூடவே பொரந்தது..தானா இருக்கறது..அவங்கள மாட்ச்பன்ன பராக்டீஸ் தேவை ;) //

நெசமாலுவேவா ரம்யா..??? எனக்கு கொஞ்சம் ட்யூசன் எடுங்களேன்... அப்புறம் நம்ம பசங்களுக்கு அந்த கலையை பரப்பிடறேன்.. :))))

\\‘ என்ன காந்திய சுட்டுட்டாங்களா..? “ ங்கற மாதிரி மூஞ்சில ஒரு RED ரியாக்சனை வச்சுகிட்டு பேசுனீங்கன்னா ஏதோ நீங்க ரெண்டு பேரும் project delivery பத்தி deep டிஸ்கசன்ல இருக்கறதா நெனச்சுக்குவாக ... ஒகேவா.?\\

அட இப்படி எல்லாம் சின்ன பொண்ணுகளை கலர் கலரா ஏமாத்தரதா?? //

அட சின்னப் பொண்ணுங்க தாங்க ஏமாத்தராங்க.... நாங்க எல்லாம் 24 காரட் Gold... ஓகே..??? :))))

said...

// Valli Nayagam said...
தலைவா, நீங்க பேசாம ஒரு காலேஜ் ஆரம்பிக்கலாம். அடுத்த தலைமுறை உங்ககிட்ட கத்துக்க வேண்டியது நிறைய இருக்கு. //

வாங்கண்ண வள்ளிநாயகம்.. :)))
அட பெரியவுக நீங்க என்னைய போய் தலைவானு கூப்புகிட்டு...
அட இதுகெல்லாம் காலேஜ் ஆரம்பிச்சா என்ன ஆவுறது..???

"ஜொள்ளித்தெரிவதில்லை
ஜொள்ளுக் கலை " னு
பெரியவுக சொல்லி இருக்காக இல்லை..??? :)))))

said...

//போக்கிரி பையன் said...
ஜொல்லுப்பாண்டியண்ணே,
வெட்டிப்பயல் அவர்களே,

உங்க ரெண்டு பேரயும் தலையா வச்சிக்கிட்டு நான் ஒரு வலைப்பூ ஆரம்பிச்சுருக்கேன்,

என்ன வாழ்த்துங்கண்ணே

நன்றி,
போக்கிரி பையன்
http://pokkiripayan.blogspot.com/ //

அஹா போக்கிரி இப்படி புல்லரிக்க வச்சிட்டீயளே... வாழ்க... வளர்க... வந்துட்டேன்.... :))))

said...

// ரசிகன் said...
//அதுவும் ஒரு சில பர்ஸை பதம் பார்க்கற மால்ஸ்ல வந்து போற அல்ட்றா மார்டன் அம்மணீஸ் பார்த்தீகண்னா ஏதோ FTV ல இருந்து direct ஆ import ஆன மாதிரி ட்ரெஸ் போட்டும் போடாம இப்பவோ அப்பவோ அவுந்துடுமோங்கர ரேஞ்சுல ட்ரெஸ்சை போட்டுகிட்டு ஃபேஷன்ல ஃபரேடு கெளப்பிகிட்டு நம்ம ஆண்குலங்கள் கண்ணை கன்னாபின்னானு கதறடிச்சுகிட்டு சுத்திகிட்டு இருப்பாக//

இது நெசந்தானுங்க மாம்ஸு:)) //

வாங்க மாம்ஸ்..:)))
சொல்லற ரேஞ்சைப் பார்த்தா பலதடவை மால்ஸ் உங்களைக் கதறடிச்சு இருக்கும் போல இருக்குங்களே.. :)))))))

said...

//கைப்புள்ள said...
//இவுக பேசறப்போ பார்த்தீகன்னா அப்படியே ஏதோ இப்போத்தான் UKG ல இருந்து அள்ளிகிட்டு வந்து ஆபீஸ்ல வுட்ட மாதிரி கொஞ்சி கொஞ்சி மழலைத்தமிழ் பேசி உங்க நெஞ்சை கொள்ளை அடிப்பாக//


Arumai
:)) //

வாங்க தல... :)))
எப்படி இருக்கீய..?? நல்லா இருக்கீயளா..?? பேட்டை பக்கம் ஒதுங்குனதுக்கு நெம்ம தேங்ஸ்... :)))))

said...

niraya experience irukum pola sight adikirathula....
y dont u open a tutorial centre to coach the people on how to sight?

said...

டிப்ஸெல்லாம் நம்பி களத்துல இறங்களாமா ஜொள்ளுபாண்டி?

பதிவு சூப்பராயிருக்கு:-)

said...

ஜொல்லுரத நல்லா ஜொல்லி இருக்கீங்க!
ஜொல்லத்தான் நினைக்கிறேன்னு...

நெறய வச்சிருப்பீங்க!
மனசில வச்சிக்காம
அடுத்து அடுத்து சொல்லிக்கொடுத்துருங்க
அப்பு!!!!
சூப்பர்.

said...

I agree with your first para of this post