ஃபேஷன் Passion ஸ்ஸ்....
ஆஹா ஜொள்ளுபாண்டியோட திறமையபத்தி இப்படி ஒருத்தன் காரிதுப்பாத கொறையா சொல்லிட்டு போய்ட்டானேன்னு உடனே நமக்குள்ள தூங்கிட்டு இருந்த சிங்கம் சிங்கிளா தெறிச்சி ஓடி ஆராய்ச்சி பண்ணிச்சு. இதோ ஒரு சிட்டியோட மார்டனிட்டிய எப்படியா தீர்மானிக்கிராய்ங்க ங்கர அளப்பறியா உண்மைகளை குற்றம் நடந்தது என்ன பாணியில் பல இன்னல்களுக்கு மத்தியில் உங்க முன்னாடி சொல்லிகிடறேன். என்னடா புண்ணாக்கு இன்னல்னு நீங்க கேட்கறது கேட்குது.உங்களுக்கு என்ன தெரியும்..? ரெண்டே ரெண்டு கண்ணை வச்சுகிட்டு நான் இந்த ஆராய்சிய பண்ண எவ்ளோ கஷ்டப்பட்டேன்னு உங்களுக்கு தெரியாதுங்கோவ்.

பெண்கள் நாட்டின் கண்கள் ன்னு பெரியவுக எந்த அர்த்தத்திலே சொன்னாகளோ எனக்கு தெரியாதுங்க. ஆனா பொண்ணுகள வச்சித்தான் ஒரு ஊரோட மார்ட்டனிடிய தீர்மானிக்கறாங்க தெரியுமா..? அட என்ன பாக்குறவுக ? ஆமாங்க. நம்ம பொண்ணுங்க இருக்காவளே ஒரு காலத்திலே பாவாடை சட்டை அப்புறம் தாவணி அப்புறம் சேலைன்னு படிப்படியா வயசுக்கு தகுந்த மாதிரி கட்டிகிட்டு இருந்தாக !
என்ன அப்படியான்னு எல்லாரும் வாயப்பொளந்துகிட்டு படிக்காதீக. இதெல்லாம் போன நூற்றாண்டின் மத்திய காலத்தில் நடந்த ஒரு ஹாரப்பா மொஹஞ்சதாரோ ல இருந்த சிந்துச்சமவெளி நாகரிகம் மாதிரி ஒரு புதைஞ்சு போன கலாச்சரங்க. இந்த சமயத்திலே நம்ம பசங்க எல்லாம் பேண்ட் போட்டு சட்டைய பேண்டுக்குள்ள விட்டுகிட்டு சுத்திகிட்டு இருப்பாய்ங்க.
இப்படியேக்கா கொஞ்ச வருசத்தை பல்லை கடிச்சிகிட்டு நம்ம அம்மணிக ஓட்டிகிட்டு இருந்தாவளா ? அப்போதான் பார்த்தாக. எத்தனை நாளைக்குதான் இந்த சுரிதார் கருமாந்தரத்தை இப்படியே போட்டுகிட்டு இருக்கிறதுன்னு என்ன பண்ணலாம்னு?? அதான் மூக்கு சிந்த கைல கர்சீப் இருக்கு இதிலே எதுக்குடா இவ்ளோ பெரிய துப்பட்டான்னு திடீனு போதி மரத்தடியிலே புத்தருக்கு ஞானோதயம் வந்த மாதிரி நம்ம அம்மணிகளுக்கு வந்து தூக்கி கடாசீட்டாங்க துப்பட்டாவை. இன்னும் எவ்ளோ நாளைக்கு தான் இந்த இத்துப்போன துணியிலே சுரிதாருக்கு பேண்டை போடுறதுன்னு பார்த்தங்க. அட இந்த பசங்க எல்லாம் சும்ம கோணித்துணியிலே ஜீன்ஸ் சை போட்டுகிட்டு தானே நம்ம கிட்டே பெரிய சீனைப் போருறாவ உருவுடா அவனுக ஜீன்ஸை ன்னு நம்ம அம்மணிக ரகசிய தீர்மானம் நிறைவேத்தி இந்த ஜீன்ஸை மட்டுமே வச்சு ஆட்டம் போட்டுகிட்டு இருந்த பசங்க பேட்டரிய ப்யூஸ் புடுங்கிட்டாங்க. இந்த கால கட்டத்திலேயும் நம்ம பசங்க பேண்ட்டை போட்டு சட்டைய இன் பண்ணிகிட்டுதான் சுத்திகிட்டு இருக்கானுவ. கொஞ்சம் பேரு வெளிய சட்டைய விட்டுகிட்டு இருக்காணுவ.

இப்படி பசங்க கிட்டே இருந்து ஜீண்ஸை தங்களோட உரிமையா உறுவிகிட்டு வந்ததோட திருப்தி அடையாம அவுகளோட shirt , Tshirt, short kurtha, ன்னு மனசாட்சியே இல்லாம எதையுமே விட்டு வைக்காம உருவிகிட்டு ஒடிவந்துடாக. கேட்டா இதுதாண்டா எங்க பேஷ்ன்னு தெலுங்கு ராஜசேகர் பட டைட்டில் கணக்கா நம்ம கிட்டே உருமிகிட்டு போறாக. இதிலே நம்ம அம்மணிக பார்த்தீகண்னா பழசையெல்லாம் அவ்ளோ சீக்கிரம் மறக்க மாட்டாக. தாவணி . சேலைன்னு கற்கால பேஷன் எல்லாம் இவுகளுக்கு திடீர் திடீர்னு ஞாபகம் வந்து எங்கினயாச்சும் அவுக display பண்ணற மாதிரி ஒரு கல்யாணமோ ஆபிஸ் ஃபங்ஷனோ வந்தா போதும் கட்டத்தெரியாம கட்டிகிட்டு வந்து பரிதாபமா இருக்குற பசங்க உசுரை எடுக்கிறதுல இவுகளுக்கு ஒரு அலாதி ப்ரியம் போங்க. இதிலே பசங்களோட முண்டா பனியன் கூட்ட தப்பலைங்க.. அதைய மட்டுமே போட்டுகிட்டு நம்ம அம்மணிக ஸ்லீவ்லெஸ் பனியன்னு அலப்பறை வுடுகிட்டு இருக்காவ,, அது மட்டுமா ஸ்கூல பசங்களோட டவுசரைக்கூட விடலையே.... அதையும் போட்டுகிட்டு விடலைப் பசங்க மனச கன்னா பின்னானு அலைபாயவிடுறாக...
என்னதான் சொல்லுங்க முக்கி முக்கி தேடி போட்டாலும் இந்த பசங்களுக்கு பேகி, பெல் பாட்டம் தவிர என்ன இருக்குங்க..? நம்ம அம்மணிகள பாருங்க..? இப்போ சொல்லுங்க ஒரு ஊரு மார்ட்டனா இருக்குரதும் இல்லாததும் நம்ம அம்மணிககிட்டே தான் இருக்கு இல்ல..?



