Wednesday, September 23, 2009

Laws of "ஜொள்"ளோ dynamics..
ஜென் குரு ரேஞ்சுக்கு இல்லாட்டியும் நம்ம "ஜொள்" குரு கொஞ்சம் கோக்கு மாக்கான ஆளுதாங்ககோ....சொல்ற தத்துவம் புரிஞ்சா புரிஞ்சுக்குங்க... புரியாட்டியும் நீங்களே ஏதாசும் புரிஞ்சுக்குங்கப்பூ....

ஜொள்LAW #1
"காதல் பண்ணுறவனுக்கு காதலிதான் அழகு...
காதல் பண்ணாதவனுக்கு அழகானவ எல்லாம் காதலி..."

ஜொள்LAW #2
"காதலிக்கற பொண்ணையே கல்யாணம்
பண்ணிக்க முடியும்னு சொல்ல முடியாது..
கல்யாணம் பண்ணினவன் எல்லாம்
பொண்டாட்டியத்தான் காதலிப்பான்னு
சொல்ல முடியாது..."

ஜொள்LAW #3
"எல்லா பொண்ணும் அழகா தெரிஞ்சா
அது ஜொள்ளுடா...
ஒரு பொண்ணு மட்டும் அழகா தெரிஞ்சா
அது காதல்டா...."

ஜொள்LAW #4
"பொண்டாட்டிய மட்டும் காதலிக்கனும்னு
நெனைக்கறது பொம்பள புத்தி...
காதலிக்கர எல்லாரையும் பொண்டாட்டியா
நெனக்கறது ஆம்பளை புத்தி..."

ஜொள்LAW #5
"காதலிச்ச பொண்ணையே கல்யாணம் பண்ணுறவன் அதிஷ்டசாலி
கல்யாணம் பண்ணுன பொண்ணையே காதலிக்கறவன் புத்திசாலி..."

ஜொள்LAW #6
"ஏன்னா அவ அழகுன்னு சொல்லறவன் லோக்கல் லவ்வர்..
ஏன்னா அவ என் காதலின்னு சொல்லறவன் True லவ்வர்..."

ஜொள்LAW #7
"காதலிய பொண்டாட்டி ஆக்க
முடியலைனா பொண்டாட்டிய
காதலி ஆக்கிக்குங்கப்பூ...."

ஜொள்LAW #8
"கல்யாணத்துல காதல் முடியலாம்... ஆனா
காதல் கல்யாணத்துலதான் முடியனும்னு இல்லை..."

ஜொள்LAW #9
"அதிகமான பொண்ணுக பின்னாடி சுத்துனவனும்
ஒரே பொண்ணோட செட்டில் ஆனவனும்
சந்தோசமா இருந்ததா சரித்திரம் இல்லை..."

Wednesday, April 01, 2009

நூவண்ட சாலா இஷ்டம்... !!

கொஞ்ச நாளா என்னோட மவுசு ஆபீசிலே கன்னா பின்னானு ஏறிகிட்டே போகுது.. என்னான்னே தெரியலை... ஆபீஸ்ல அவனவன் என்னைய தேடிகிட்டு வந்து பேசரானுங்க... அப்படியே போற போக்குல "பாண்டி எப்படி இருக்கே" ன்னு கேட்டுட்டு பதிலுக்கு காத்துகிட்டு இருக்காம 'ங்கொய்யா' ன்னு போய்கிட்டு இருக்குற பயலுவள்லாம் என் கேபினுக்கு வந்து என்கிட்டே நின்னு.. நிதானமா.. ஏண்டா பண்டி எப்படி இருக்க்க்க்கே??? " ன்னு பாசத்தை கன்னா பின்னானு பொழிஞ்சு தள்ளிகிட்டே இருக்கானுவா.. எனக்கா தல கால் புரியலை...ஆஹா இந்த வருசம் ஆரம்பமே நமக்கு அசத்தலா இருக்கும் போல...பயபுள்ளக அல்லாருக்கும் திடீர்னு நம்ம மேல ஹோல்சேலா பாசம் கூரையப் பிச்சுகிட்டு கன்னா பின்னான்னு வந்துடுச்சுடோய்.. என்ன தவம் செய்தாய் பாண்டின்னு எனக்கு நானே கண்ணுபோட்டுகிட்டு இறுமாப்பா மப்பில்லாம‌ உக்கார்ந்து இருந்த ஒரு மத்தியானத்தில தான் கரண் வந்து கேட்டான் " ஏண்டா பாண்டி அவுங்க வரலையா இன்னிக்குன்னு...??"

எவங்கடா வரலை...? அதான் நான் வந்து இருக்கேனே... , அட உன்னைய யாரு கேட்டா..? உன் பக்கத்து கேபின்ல உட்கார்ந்து
இருப்பாங்களே... அதான் அந்த ஆந்திரா பொண்ணு...அவங்களை கேட்டேன்... வரலையா பாண்டி..?? ந்னு கேட்டவன் மூஞ்சில 'டன்'
கணக்கா சோகம்...குட்டிய தொலைச்ச‌ பூனை கணக்கா கண்ணு அங்கிட்டும் இங்கிட்டும் அலை பாய்ஞ்சுகிட்டு கெடக்கு.....

அடங் கொய்யால... இதுதான் என்னைய ஒவ்வொரு பயலும் தேடித் தேடி வந்து பேசறதுக்கு காரணமா..? அடப்பாவிகளா... என் பைக்ல எனக்கே வீலிங் காட்டறீங்கடா..?? அப்பதான் யோசிக்கறேன் என்னைய பாக்க வர்ற பயபுள்ளக ஒருத்தனும் உக்கார சேரை இழுத்துப் போட்டா கூட உக்கார மாட்டாய்ங்க... அட இருக்கட்டும் பாண்டின்னு நின்னுகிட்டே இருப்பாய்ங்க... அட என்னா மருவாதைடா பாண்டி உனக்குக்குன்னு எனக்குள்ள பெருமை உடுக்கையடிக்கும் பாருங்க... இப்ப அதெல்லாம் நெனச்சா...மனசுக்குள்ள
உறியடிக்குது....டேய் டேய் இதெல்லாம் எங்க ஏரியாடா... எங்க டெக்னாலஜிய எனக்கிட்டவே டெஸ்டிங் பண்ணீட்டியளாடா... ஏதோ கொஞ்சம் வேலை ஜாஸ்தில அப்படியே அக்கம் பக்கம் என்ன நடக்குதுன்னு பாக்காம கொஞ்சம் நம்ம வெப்பன்ஸ்சை எல்லாம் 'லைட்' டா துருப்புடிக்க விட்டுட்டா கண்ட கண்ட கவாலிப்பயபுள்ளக எல்லாம் நம்ம கிட்டவே அருவா சுத்தறானுக... விடக்கூடாதுடா களம் இறங்குடா சிங்கமேன்னு உள்ளுக்குள்ள காதல்பறை ஒலிக்குது...

பக்கத்துலயே ஒரு ஃபிகர் இருந்தும் கவனிக்காம கடமைய செஞ்சுகிட்டு இருக்கியேடா பாண்டிண்ணு உள்ளுக்குள்ள சிவாஜி கணக்கா ஜொள்ளுபாண்டிய கட்டபொம்மு ஆனந்த கண்ணீரை போட்டாலும் அட பக்கத்துலயே இருக்கற கோதாவரிய விட்டுட்டு நீ தாமிரபரணிக்கு நூல் விட்டு என்ன பயன் கோயானே" னு மனசாட்சி கன்னாபின்னானு திட்டுது... சரி சரி..ன்னு அதைய அடக்கிட்டு அப்படியே பக்கத்து கேபினை நோட்டம் விட்டா கண்ணாடி போட்ட ஒக்க அம்மாயி... ( அம்மாயின்னா பாட்டி இல்லீங்கோ.. பொண்ணு னு தெலுங்குல அர்த்தம்.. தெலுசா..? )

பொண்ணு ச்சும்மா குதிரக்குட்டி கணக்கா ஓங்கு தாங்கா இருக்கு...!! ஏண்டா ஆபீஸ்ல இருக்குற பயபுள்ளக அல்லாம் நவகிரகத்தை சுத்திவர்ற மாதிரி நம்ம கேபினையே சுத்தி சுத்தி வர்றானுவன்னு தெரிஞ்சு போச்சு... அப்படி ஒரு பர்சனாலிட்டி... பொண்ணுக்கு முகம் மட்டும் தான் கொஞ்சம் சின்னது... பாக்கறவன எல்லாம் வாய் லையும் வயித்துலயும் "எனக்கில்லை எனக்கில்லை"னு அடிச்சுக்க வைக்கிற மாதிரி ஒரு அழகு... என்ன பண்ண நம்ம அப்படியெல்லாம் அடிச்சுக்க முடியுமா.??
ஆபீஸ்ல நமக்கு நல்லபுள்ள இமேஜ் வேற நம்மள கேட்காமலே டெவலப் ஆய்டுச்சு.... இதையெல்லாம் மறச்சுகிட்டு அப்படியே எதாச்சும் டவுட் கேட்கற மாதிரி நம்ம 'பிட்' டைப் போட்டேன்... பார்த்தா பொண்ணு ரொம்ப ஃப்ரெண்ட்லி...!!

மொதல்ல நமக்கு தெரிஞ்ச இங்கிலிபீஸ்ல ஆரம்பிச்சு அப்படியே கியரைப் போட்டேன்... என்னதான் இங்கிலிபீஸ்ல கடலையப் போட்டாலும் ஒரு deep fry க்கு போணும்னா பொண்ணோட mother tongue இல்லாம நமக்கு லாய்க்கிபிடாதுன்னு அப்படியே அவுக லாங்குவேஜ்லயே பேசி அம்மாயியஅம்மாயியோட பரந்த மனசுல 'பச்ச்சக்க்' குன்னு ஒட்டிக்கலாம்னு நம்மளோட ஆறாது அறிவு கதறுது... அப்பபோ அந்தப் பாப்பா வாயில இருந்து சுந்தரத் தெலுகு வேற அப்படியே மேகி நூடுல்ஸ் மாதிரி கொட்டுது... கேக்கறப்போ "அப்படியே ச்ச்சாப்பிடலாம்" போல இருக்குன்னா பார்த்துக்கோங்களேன்..!! நமக்கும் தெலுகுக்கும் தான் காத தூரம் ஆச்சே... சரி நம்ம உயிர் நண்பன் கிட்டே போனைப் போட்டு ஒண்ணு ரெண்டு வார்த்தை தெலுகுல கேட்டு வச்சுகிட்டு அப்பபோ எடுத்து உடலாமேன்னு கேட்டேன்.. சகா.. தெலுகும் இங்கிலீசும் கலந்து அப்படியே ஒரு ஸ்டைலிஷா இருக்கனும்டா.. நம்ம தெலுக கேட்ட உடனேயே அம்மாயி ஆஹா இவரல்லவோ நம்ம அல்லுடுன்னு ஆரத்தழுவிக்கனும்டே பார்த்துக்கோன்னு கேட்டா அவனும் லேசா பிகு பண்ணிகிட்டு சொல்லிக்கொடுத்தான்...

"எனக்கு தெலுங்குன்னா நெம்ம ஆசை... நீ எனக்கு அப்பப்போ கத்துக்கொடு" ன்னு கேட்கணுடா.. இதைய அப்படியே தெலுகுல சொல்லி கொடுடான்னு சொல்லி கேட்டு மனப்பாடம் பண்ணிகிட்டேன்...

"கோதாவரி ( இதே அம்மாயி பேராக்கும்..) நாக்கு தெலுகுல மாட்லாட நேர்பிச்சு .. நாக்கு நூவண்ட சாலா இஷ்டம் !!" னு சொல்லிட்டு சுந்தரத் தெலுங்கை என்னோட மழலை மொழியிலே கேட்டுட்டு அப்ப்டியே பூரிச்சு நிக்கப் போறான்னு பார்த்தா அப்படியே " U too Pondy..?? " அப்படிங்கற பார்வை பார்த்துட்டு மூஞ்சை திருப்பினவ தான்..திரும்ப பேசவே மாட்டேங்கறா..!! அட பாவமே நாம என்னடா தப்பு பண்ணுனேன்னு இன்னோருத்தன் கிட்டே போய் verify பண்ணினா... சொல்றான் நான் சொன்னது..." எனக்கு தெலுங்கு கத்துக்கொடு.. நீன்னா எனக்கு ரொம்ப ஆசை...னு சொல்லி இருக்கேடா பாண்டின்னு... ச்ச்ச்சேசே... தெலுங்கு பேச ஆசைனு தானே சொல்ல வந்தேன்.. லைட்டா tongue slip ஆகி லாங்குவேஜ் மாறினதுக்கு எவ்ளோ அர்த்தம் மாறிடிச்சு... ஆராச்சும் நாக்கு சுந்தரத் தெலுகு நேர்பிச்சி ப்ளீஸ்.... நாக்கு அம்மாயி காவால.......


Wednesday, March 25, 2009

அம்மணீஸ் of Southindia...
இப்போ இருக்குற சாஃப்வேர் கல்சர்ல எல்லா ஆபீஸயும் இந்தியாவுல இருக்குற எல்லா ஸ்டேட் ஆளுகளும் இருக்காக.. காரைக்குடில படிச்ச 'கண்ணாத்தாள்' களும் இருக்காவ.. வைசாக்ல படிச்ச 'வத்ஸலா வரிகொண்டா' களும் இருக்காக... பாவம் நம்ம பசங்க பாஷை புரியாம இந்த Sugar Coated Babies ஸை எப்படி கரெட் பண்ணறதுன்னு "பீரை"ப் போட்டு யோசனை பண்ணிகிட்டு இருக்காக ஏதாச்சு யோசனை சொல்லுடா பாண்டின்னு நம்ம மெயில் பாக்ஸல பல மெயில்கள் கதறிகிட்டு இருக்குக... சரின்னு ஆனது ஆவடும்னு களத்தில இறங்கிட்டான் பாண்டி....!!!


என்னதான் சொல்லுங்க இந்த பொண்ணுங்களை இப்படி மானாவாரியா மாநில வாரியா பிரிக்கறதுக்கு மனசுக்கு ரொம்ப கஷ்ட்டமாத்தேன் இருக்கு... எந்த ஸ்டேட்டா இருந்தா என்ன.. நம்ம டேஸ்ட்டுக்கு தக்க மாதிரி இருக்கான்னு பார்க்குறதுதானே பசங்க புத்தி...!! என்னாதான் ஸ்டேட் உட்டு ஸ்டேட் தாவி தாவி பார்த்தாலும் நம்மளைப் பார்க்குறது தானே பார்க்கும்னு நெனச்சு மல்லாக்க படுத்து மெயில் அனுப்பி மயிலை கரெட் பண்ணலாம்னு நெனச்சுகிட்டு
இருக்கீயளா... மாங்கா தோப்புல கல்ல கொண்டு எறிஞ்சு காயோ பழமோ இல்லை
அட்லீஸ்ட் மாவடுவோன்னு உழுகரதை பொறுக்கிட்டு போலாம்னு காத்துகிட்டு இருக்கீயளா ..? No .. Never... இப்போ எல்லாம் technology has improved மக்கள்ஸ்.... அப்படியே லைட்டா உங்க knowledge Base ஐ update பண்ணிட்டீங்கன்னா போதுங்கோ... மல்கோவா.. பங்கனபள்ளி... கிளிமூக்கு... ன்னு சொல்லி வச்சு மாங்கா அடிக்கலாம்.... கல்லோட நான் ரெடி...நீங்க ரெடியா..?

[ கல்லக் கண்டா நாயக் காணோம்னு நாயக்கண்டா கல்லைக் காணோம்னு ஒண்ணுமே இல்லைனு நம்மளைப் போட்டுப் பொளந்துறதீங்கண்ணா...! ]
ஆந்திரா...


இந்த ஊருகாரவுக ரொம்ப காரம் ஜாஸ்தியா சாப்பிடுவாகளா... பொண்ணுகளும் பாக்கறதுக்கு
அப்படியே பச்சமொளகாய கடிச்சா ....ச்ச்சும்ம... ஜிவ்வ்....வுன்னு மண்டைக்குள்ள ஏறுமே.. அந்த மாதிரி
ச்ச்சும்ம ஓங்குதாங்க இருப்பாக... அதுவும் இவுக கொஞ்சி கொஞ்சி பேசுர தெலுகு இருக்கே..
ஹப்பா.. ஒரு எழவும் வெளங்காட்டியும் சும்மா ஒக்கார்ந்து நாளெல்லாம் கேட்டுகிட்டே இருக்கலாம்..
என்ன நடுவால வண்டி வண்டியா பல ஏவண்டிய போட்டுகிட்டு அப்படியே தமிழ் பேசாமா தமிலு
பேசினா போதும்... ஏவண்டி மீக்கு தெலுகு தெலுசா ன்னு ஆச்சரியமா கேட்டுகிட்டு பக்கத்துல
வருவாகல்லா..? அப்படியே "நாக்கு தெலுகு தெல்லேது" ன்னு நாக்கு தள்ள தள்ள பரிதாபமா மூஞ்ச வச்சுகிட்டு சொன்னீகன்னா போதும் ... தெலுகு தெரியாட்டியும் இவன் ஏதோ Try பண்ணறானேன்னுஅம்மாயி அவுக பரந்த மனசுகுள்ள நிச்சயமா இடம் தரதுக்கு பிரகாசமான வாய்ப்பு இருக்கு... தெலுசா..?? :))கர்நாடகா...

இது நம்ம ஊருங்கோ... இந்த பொண்ணுக எல்லாம் கொஞ்சம் சித்து பொண்ணுங்க... ஆனா கடுகு சிறுத்தாலும் காரம் கொறையாதுங்கர மாதிரி சித்து பொண்ணுங்கன்னாலும் பார்த்தாலே பச்ச்சக்குன்னு மன்சுல ஒட்டிக்கிற அழகு இருக்கும்... ஏனோ தெரியலை இங்க பெரும்பாலான பொண்ணுக முடிய தோளுக்கு கீழ வளரவுடுரதே இல்லை... அப்படியே அல்லேக்குன்னு அள்ளி தூக்கி குதிரைவால் போட்டுகிட்டு ச்சும்மா சலக்கு சலக்குன்னு நடந்து வர்ரதை பாத்தாலே உங்களுக்கு ஒரு மைல்ட் ஹார்ட் அட்டாக் கேரண்டி... இவுககிட்டா மொழிப்பிரச்சனையே வராதுங்கோ... ஏன்னா இவுகளும் நம்ம தமிழ் பொண்ணுக மாதிரி தான்... தாய்மொழி கன்னடான்னாலும் இங்கிலிபீஸ்ல தான் அதிகம் பேசுவாக... கன்னடா பேசுனா நம்ம பொண்ணுக மாதிரியே மதிக்க மாட்டாக... அதனால இவுக பக்கதுல போறப்போ கையிலே எதுக்கும் ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் புத்தகத்தை கடன் வாங்கியாச்சும் "ஹேய் ட்யுட்" ன்னு ஏதோ ஒரு அர்த்தம் தெரியாத எழவை பேசிகிட்டே போய் மனச லவட்டப் பாருங்க... ஓகேவா..??
கேரளா...


என்ன ஸ்டேட் பேரைப்பார்த்தாலே மூஞ்சில பல்பு எரியுது..?? ஆனா நீங்க நெனக்கராப்ல
சினிமோவில் காட்டுற மோதிரி இங்கன பெண்குட்டிக அல்லாரும் முண்டு கட்டிகிட்டு
அலைஞ்சான் இல்ல... ஆனா ஏதோ ஒண்ணு ரெண்டு பாட்டிக ( Note the point பாட்டிக Not குட்டிக )
பாரம்பரியமா அப்படி இருக்குறாவ.. அவ்ளோதான்... சரியா..? ஆனாலும் என்ன மாயமோ என்ன
மந்திரமோ இந்த பொண்ணுகளுக்கு அவ்ளோ பெரிய.. கண்ணுங்க... பார்த்தாலே அப்படியே ஓடிப்போய் லவ் லெட்டர் கொடுக்கத்தோணும்... இவுகளப் பார்க்க நீங்க கேரளாவுக்குத்தான் போகணும்னு
அவசியமே இல்ல... "ஆராணு" னு லேசா கொரலு உட்டு பாருங்கோ... "எந்தா" ன்னு ஒரு எசப்பாடு உங்க பக்கத்து கேபின்ல இருந்து கூட வரலாம்..... அந்த அளவுக்கு உலகம் முச்சூடும் வெரவி பரவி கெடக்குர பரம்பரைங்க இது... இந்த ஊரு தேங்காயும் பெருசு... அதனால அங்க வளந்த பொண்ணுக முடியும் ரொம்ப பெரிசு... ( தேங்கா எண்ணெய்தான் காரணம்னு சொல்ல வாரேன்.. சரியா..? இவுக முடில அப்படியே தூரியாடலாம்... தெரியுமா....? இவுகளையும் இவுக பேசர மலையாளத்தையும் புரியுதோ இல்லையோ... அப்படியே பார்த்துகிட்டே இருக்கலாம்.. அவ்ளோ அழகா இருக்கும்... பேசரப்போ இவுக மூக்கும் முழியும்... முகமும்... வாரணம் ஆயிரம் சூரியா மாதிரி நெஞ்சு நெஞ்சா குத்திகிட்டே இருக்க போங்க....
ஹிஹிஹிஹி... ( ரொம்ப வழியுதோ எனக்கு..? )

தமிழ்நாடு...


நம்ம அம்மணிகளப் பத்தி என்னாத்த சொல்லுறது..? அப்படியே ஆந்திரா... கேரளா... கர்நாடகான்னு
அல்லா ஸ்டேட் பொண்ணுகளையும் ஒண்ணா ஒரு பெரிய அண்டாவிலே போட்டு ஒரு கலக்கு கலக்கி..
அப்படியே அதிலே ஒரு நூறு கிராம் எடுத்து செஞ்சது மாதிரி பல ஹைட்டு வெய்ட்டிலே வெரைட்டி
காட்டுறதுல நல்ல அம்மணிகளுக்கு நிகர் நம்ம அம்மணிக தான் போங்க... அப்படியே தமிழ் தெரிஞ்சாலும் ஆங்கில புலமைய நிரூபிக்க நாக்க போட்டு நாலா மடக்கி Crazy Guys பத்தி தெனமும் பத்து வார்த்தையாச்சும் பேசாட்டி இவியளுக்கு பொழுதே போகாதே... இவுக பண்ணுறது மட்டும் தான் லூசுத்தனமா இருக்குங்கோ ஆனா இவுக போடுறது அல்லாமே 'டைட்' Tshirt தான்... !! இவுகளை மடக்கி போட நீங்க கொஞ்சம் மெனக்கெட
வேண்டிதான் இருக்கும்... லேசா லவ்வு....லேசா லொள்ளு.... லேசா ஜொள்ளுன்னு கலந்து கட்டி அடிச்சீங்கன்னா உங்களுக்கு மாங்கா உழுக பிரகாசமான சான்ஸ் இருக்குதுங்கோ.... !!மத்த ஸ்டேஸ் பத்தி ஏண்டா சொல்லலைன்னு பாக்குறீயளா..? பொதுவா இந்த நாலு ஸ்டேட் பொண்ணுவ தானே சாஃப்ட்வேர் முச்சூடும் சடை பின்னி... பின்னாம 'கோடிங்' க கொத்தி போட்டு சுளுக்கெடுத்துகிட்டு இருக்காவ....?
படிச்சுட்டு அப்படியே போய்டாதீக கண்ணுகளா... சீக்கிரம் ப்ராக்டிகல்ஸ்சை ஆரம்பிங்க... கமான் ஜூட்ட்ட்ட்.....

Monday, March 23, 2009

Am Back !! - ஜொள்ளு பாண்டி அழைக்கிறார் !!
என் இனிய தமிழ் மக்களே...
உங்கள் தங்கம், மக்கள் மனம் போற்றும் மாவீரன், ஜல்லிக்கட்டுகாளை, ஃபிகர் பிளிறும் பிஸ்தா, பாப்பாக்களின் லாலிப்பாப்... கன்னியர் கனாகாணும் சிக்ஸ்பேக் கம்மர்கட்..., பினோபாஃர்ம்கள் கொஞ்சிடும் ஸ்வீட் டெட்டி..., தாவிவரும் தாவணித் தோழன்....,மினி ஸ்கர்ட்டுகளின் மில்கிவே... பெண்கள் புகழும் டிவி சீரியல்...., பார்த்தாலே பற்றிக்கொள்ளும் டரியல் டக்ளஸ்...,மகளிர் மானம் காக்க வந்த மன்மதன்...., கோபியர் கொஞ்சிடும் கோக்ககோலா... சின்னக் குட்டிகளின் ஜிகர்தண்டா...., 'ஜாரி' கள் சிலிர்க்கும் சிங்கக்குட்டி....,பாட்டிமார்களின் பாக்குவெட்டி... பின்னி பெடல் எடுக்கும் கூகுள் காளை ...காதல் கணைதொடுக்கும் காளிமார்க் சோடா... பார்த்தாலே பற்றிக்கொள்ளும் மினி மில்க் பேடா... சீறி வரும் சிங்கக்குட்டி... பாயும் புலி...
திமிறி வரும் திமிங்கலம்...மல்லுகளின் கொழாபுட்டு... சேட்டுகளின் ஷாருக்கான்... கொல்ட்டிகளின் அல்லாரி அல்லுடு...


ராஜாதி ராஜ, ராஜ மார்த்தாண்ட, ராஜ கம்பீர, ராஜ குலோதுங்க,ராஜ பராக்கிரம, மதன காம ராஜன், உங்கள் வீட்டுப்பிள்ளை..தி....,னவெடுத்த தோளான்...., அருமை அண்ணன் ஜொள்ளுப்பாண்டியார் மக்களின்
வேண்டுகோளுக்கிணங்க இங்கே மீண்டும் தன் ஜொள் புராணங்களைம், இடையிடையே தன் புஜபல பராக்கிரம வித்தைகளையும்
கற்றுத்தர கருணையுள்ளத்தோடு உங்கள் இல்லம் தேடி வர இருக்கிறார். அனைவரும் தங்கள் டெஸ்க் டாப்புக்களையும் ஜீன்ஸ்சு டாப்புகளையும் துடைத்து துவைத்து சுத்தபத்தமாக வந்து அமர்வீர் !!!!