Wednesday, April 01, 2009

நூவண்ட சாலா இஷ்டம்... !!

கொஞ்ச நாளா என்னோட மவுசு ஆபீசிலே கன்னா பின்னானு ஏறிகிட்டே போகுது.. என்னான்னே தெரியலை... ஆபீஸ்ல அவனவன் என்னைய தேடிகிட்டு வந்து பேசரானுங்க... அப்படியே போற போக்குல "பாண்டி எப்படி இருக்கே" ன்னு கேட்டுட்டு பதிலுக்கு காத்துகிட்டு இருக்காம 'ங்கொய்யா' ன்னு போய்கிட்டு இருக்குற பயலுவள்லாம் என் கேபினுக்கு வந்து என்கிட்டே நின்னு.. நிதானமா.. ஏண்டா பண்டி எப்படி இருக்க்க்க்கே??? " ன்னு பாசத்தை கன்னா பின்னானு பொழிஞ்சு தள்ளிகிட்டே இருக்கானுவா.. எனக்கா தல கால் புரியலை...ஆஹா இந்த வருசம் ஆரம்பமே நமக்கு அசத்தலா இருக்கும் போல...பயபுள்ளக அல்லாருக்கும் திடீர்னு நம்ம மேல ஹோல்சேலா பாசம் கூரையப் பிச்சுகிட்டு கன்னா பின்னான்னு வந்துடுச்சுடோய்.. என்ன தவம் செய்தாய் பாண்டின்னு எனக்கு நானே கண்ணுபோட்டுகிட்டு இறுமாப்பா மப்பில்லாம‌ உக்கார்ந்து இருந்த ஒரு மத்தியானத்தில தான் கரண் வந்து கேட்டான் " ஏண்டா பாண்டி அவுங்க வரலையா இன்னிக்குன்னு...??"

எவங்கடா வரலை...? அதான் நான் வந்து இருக்கேனே... , அட உன்னைய யாரு கேட்டா..? உன் பக்கத்து கேபின்ல உட்கார்ந்து
இருப்பாங்களே... அதான் அந்த ஆந்திரா பொண்ணு...அவங்களை கேட்டேன்... வரலையா பாண்டி..?? ந்னு கேட்டவன் மூஞ்சில 'டன்'
கணக்கா சோகம்...குட்டிய தொலைச்ச‌ பூனை கணக்கா கண்ணு அங்கிட்டும் இங்கிட்டும் அலை பாய்ஞ்சுகிட்டு கெடக்கு.....

அடங் கொய்யால... இதுதான் என்னைய ஒவ்வொரு பயலும் தேடித் தேடி வந்து பேசறதுக்கு காரணமா..? அடப்பாவிகளா... என் பைக்ல எனக்கே வீலிங் காட்டறீங்கடா..?? அப்பதான் யோசிக்கறேன் என்னைய பாக்க வர்ற பயபுள்ளக ஒருத்தனும் உக்கார சேரை இழுத்துப் போட்டா கூட உக்கார மாட்டாய்ங்க... அட இருக்கட்டும் பாண்டின்னு நின்னுகிட்டே இருப்பாய்ங்க... அட என்னா மருவாதைடா பாண்டி உனக்குக்குன்னு எனக்குள்ள பெருமை உடுக்கையடிக்கும் பாருங்க... இப்ப அதெல்லாம் நெனச்சா...மனசுக்குள்ள
உறியடிக்குது....டேய் டேய் இதெல்லாம் எங்க ஏரியாடா... எங்க டெக்னாலஜிய எனக்கிட்டவே டெஸ்டிங் பண்ணீட்டியளாடா... ஏதோ கொஞ்சம் வேலை ஜாஸ்தில அப்படியே அக்கம் பக்கம் என்ன நடக்குதுன்னு பாக்காம கொஞ்சம் நம்ம வெப்பன்ஸ்சை எல்லாம் 'லைட்' டா துருப்புடிக்க விட்டுட்டா கண்ட கண்ட கவாலிப்பயபுள்ளக எல்லாம் நம்ம கிட்டவே அருவா சுத்தறானுக... விடக்கூடாதுடா களம் இறங்குடா சிங்கமேன்னு உள்ளுக்குள்ள காதல்பறை ஒலிக்குது...

பக்கத்துலயே ஒரு ஃபிகர் இருந்தும் கவனிக்காம கடமைய செஞ்சுகிட்டு இருக்கியேடா பாண்டிண்ணு உள்ளுக்குள்ள சிவாஜி கணக்கா ஜொள்ளுபாண்டிய கட்டபொம்மு ஆனந்த கண்ணீரை போட்டாலும் அட பக்கத்துலயே இருக்கற கோதாவரிய விட்டுட்டு நீ தாமிரபரணிக்கு நூல் விட்டு என்ன பயன் கோயானே" னு மனசாட்சி கன்னாபின்னானு திட்டுது... சரி சரி..ன்னு அதைய அடக்கிட்டு அப்படியே பக்கத்து கேபினை நோட்டம் விட்டா கண்ணாடி போட்ட ஒக்க அம்மாயி... ( அம்மாயின்னா பாட்டி இல்லீங்கோ.. பொண்ணு னு தெலுங்குல அர்த்தம்.. தெலுசா..? )

பொண்ணு ச்சும்மா குதிரக்குட்டி கணக்கா ஓங்கு தாங்கா இருக்கு...!! ஏண்டா ஆபீஸ்ல இருக்குற பயபுள்ளக அல்லாம் நவகிரகத்தை சுத்திவர்ற மாதிரி நம்ம கேபினையே சுத்தி சுத்தி வர்றானுவன்னு தெரிஞ்சு போச்சு... அப்படி ஒரு பர்சனாலிட்டி... பொண்ணுக்கு முகம் மட்டும் தான் கொஞ்சம் சின்னது... பாக்கறவன எல்லாம் வாய் லையும் வயித்துலயும் "எனக்கில்லை எனக்கில்லை"னு அடிச்சுக்க வைக்கிற மாதிரி ஒரு அழகு... என்ன பண்ண நம்ம அப்படியெல்லாம் அடிச்சுக்க முடியுமா.??
ஆபீஸ்ல நமக்கு நல்லபுள்ள இமேஜ் வேற நம்மள கேட்காமலே டெவலப் ஆய்டுச்சு.... இதையெல்லாம் மறச்சுகிட்டு அப்படியே எதாச்சும் டவுட் கேட்கற மாதிரி நம்ம 'பிட்' டைப் போட்டேன்... பார்த்தா பொண்ணு ரொம்ப ஃப்ரெண்ட்லி...!!

மொதல்ல நமக்கு தெரிஞ்ச இங்கிலிபீஸ்ல ஆரம்பிச்சு அப்படியே கியரைப் போட்டேன்... என்னதான் இங்கிலிபீஸ்ல கடலையப் போட்டாலும் ஒரு deep fry க்கு போணும்னா பொண்ணோட mother tongue இல்லாம நமக்கு லாய்க்கிபிடாதுன்னு அப்படியே அவுக லாங்குவேஜ்லயே பேசி அம்மாயியஅம்மாயியோட பரந்த மனசுல 'பச்ச்சக்க்' குன்னு ஒட்டிக்கலாம்னு நம்மளோட ஆறாது அறிவு கதறுது... அப்பபோ அந்தப் பாப்பா வாயில இருந்து சுந்தரத் தெலுகு வேற அப்படியே மேகி நூடுல்ஸ் மாதிரி கொட்டுது... கேக்கறப்போ "அப்படியே ச்ச்சாப்பிடலாம்" போல இருக்குன்னா பார்த்துக்கோங்களேன்..!! நமக்கும் தெலுகுக்கும் தான் காத தூரம் ஆச்சே... சரி நம்ம உயிர் நண்பன் கிட்டே போனைப் போட்டு ஒண்ணு ரெண்டு வார்த்தை தெலுகுல கேட்டு வச்சுகிட்டு அப்பபோ எடுத்து உடலாமேன்னு கேட்டேன்.. சகா.. தெலுகும் இங்கிலீசும் கலந்து அப்படியே ஒரு ஸ்டைலிஷா இருக்கனும்டா.. நம்ம தெலுக கேட்ட உடனேயே அம்மாயி ஆஹா இவரல்லவோ நம்ம அல்லுடுன்னு ஆரத்தழுவிக்கனும்டே பார்த்துக்கோன்னு கேட்டா அவனும் லேசா பிகு பண்ணிகிட்டு சொல்லிக்கொடுத்தான்...

"எனக்கு தெலுங்குன்னா நெம்ம ஆசை... நீ எனக்கு அப்பப்போ கத்துக்கொடு" ன்னு கேட்கணுடா.. இதைய அப்படியே தெலுகுல சொல்லி கொடுடான்னு சொல்லி கேட்டு மனப்பாடம் பண்ணிகிட்டேன்...

"கோதாவரி ( இதே அம்மாயி பேராக்கும்..) நாக்கு தெலுகுல மாட்லாட நேர்பிச்சு .. நாக்கு நூவண்ட சாலா இஷ்டம் !!" னு சொல்லிட்டு சுந்தரத் தெலுங்கை என்னோட மழலை மொழியிலே கேட்டுட்டு அப்ப்டியே பூரிச்சு நிக்கப் போறான்னு பார்த்தா அப்படியே " U too Pondy..?? " அப்படிங்கற பார்வை பார்த்துட்டு மூஞ்சை திருப்பினவ தான்..திரும்ப பேசவே மாட்டேங்கறா..!! அட பாவமே நாம என்னடா தப்பு பண்ணுனேன்னு இன்னோருத்தன் கிட்டே போய் verify பண்ணினா... சொல்றான் நான் சொன்னது..." எனக்கு தெலுங்கு கத்துக்கொடு.. நீன்னா எனக்கு ரொம்ப ஆசை...னு சொல்லி இருக்கேடா பாண்டின்னு... ச்ச்ச்சேசே... தெலுங்கு பேச ஆசைனு தானே சொல்ல வந்தேன்.. லைட்டா tongue slip ஆகி லாங்குவேஜ் மாறினதுக்கு எவ்ளோ அர்த்தம் மாறிடிச்சு... ஆராச்சும் நாக்கு சுந்தரத் தெலுகு நேர்பிச்சி ப்ளீஸ்.... நாக்கு அம்மாயி காவால.......