Wednesday, September 23, 2009

Laws of "ஜொள்"ளோ dynamics..




ஜென் குரு ரேஞ்சுக்கு இல்லாட்டியும் நம்ம "ஜொள்" குரு கொஞ்சம் கோக்கு மாக்கான ஆளுதாங்ககோ....சொல்ற தத்துவம் புரிஞ்சா புரிஞ்சுக்குங்க... புரியாட்டியும் நீங்களே ஏதாசும் புரிஞ்சுக்குங்கப்பூ....

ஜொள்LAW #1
"காதல் பண்ணுறவனுக்கு காதலிதான் அழகு...
காதல் பண்ணாதவனுக்கு அழகானவ எல்லாம் காதலி..."

ஜொள்LAW #2
"காதலிக்கற பொண்ணையே கல்யாணம்
பண்ணிக்க முடியும்னு சொல்ல முடியாது..
கல்யாணம் பண்ணினவன் எல்லாம்
பொண்டாட்டியத்தான் காதலிப்பான்னு
சொல்ல முடியாது..."

ஜொள்LAW #3
"எல்லா பொண்ணும் அழகா தெரிஞ்சா
அது ஜொள்ளுடா...
ஒரு பொண்ணு மட்டும் அழகா தெரிஞ்சா
அது காதல்டா...."

ஜொள்LAW #4
"பொண்டாட்டிய மட்டும் காதலிக்கனும்னு
நெனைக்கறது பொம்பள புத்தி...
காதலிக்கர எல்லாரையும் பொண்டாட்டியா
நெனக்கறது ஆம்பளை புத்தி..."

ஜொள்LAW #5
"காதலிச்ச பொண்ணையே கல்யாணம் பண்ணுறவன் அதிஷ்டசாலி
கல்யாணம் பண்ணுன பொண்ணையே காதலிக்கறவன் புத்திசாலி..."

ஜொள்LAW #6
"ஏன்னா அவ அழகுன்னு சொல்லறவன் லோக்கல் லவ்வர்..
ஏன்னா அவ என் காதலின்னு சொல்லறவன் True லவ்வர்..."

ஜொள்LAW #7
"காதலிய பொண்டாட்டி ஆக்க
முடியலைனா பொண்டாட்டிய
காதலி ஆக்கிக்குங்கப்பூ...."

ஜொள்LAW #8
"கல்யாணத்துல காதல் முடியலாம்... ஆனா
காதல் கல்யாணத்துலதான் முடியனும்னு இல்லை..."

ஜொள்LAW #9
"அதிகமான பொண்ணுக பின்னாடி சுத்துனவனும்
ஒரே பொண்ணோட செட்டில் ஆனவனும்
சந்தோசமா இருந்ததா சரித்திரம் இல்லை..."

10 பேர் வளைச்சு வளச்சு ஜொள்ளிருக்காங்க:

said...

ஈரமான பதிவு .....

அருமை தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்

said...

நன்னாயிட்டு இருக்கு... ஈ சிந்தனைய தஞ்சாவூர் கல்வெட்டில் பதிக்க ஞான் HELP செய்யும்... பேடிக்கண்டா பாண்டி...

said...

//"அதிகமான பொண்ணுக பின்னாடி சுத்துனவனும்
ஒரே பொண்ணோட செட்டில் ஆனவனும்
சந்தோசமா இருந்ததா சரித்திரம் இல்லை..."///

பாஸ் தத்துவம் கன்னாபின்னான்னு இருந்தாலும் டக்கராக்கீது :))))))

said...

கல...கல...கலக்கல்....

said...

கலக்கல் தலைவா

said...

:))

said...

யாருய்யா சொன்னது பாண்டிக்கு வயசாயி காணாம போயிட்டார்னு!

said...

பாண்டி...,ராசா...,வந்துட்டியா...

சீக்கிரம் பழைய ஃபார்முக்கு வந்து
நல்லா அடிச்சு ஆடு ராசா....

மீள்வருகைக்கு வாழ்த்துக்கள்.

ஜொள்ளுப்பேட்டை மீண்டும் ஜொலிக்கட்டும்...

said...

ஆகா ஆகா - அன்பின் ஜொள்ளுப்பாண்டி

விதி ஒன்பது சூப்பரப்பூ

நல்வாழ்த்துகள்

said...

"அதிகமான பொண்ணுக பின்னாடி சுத்துனவனும்
ஒரே பொண்ணோட செட்டில் ஆனவனும்
சந்தோசமா இருந்ததா சரித்திரம் இல்லை..//

ஏயப்பா!!! தாங்காது சாமி!!